வெள்ளி, 5 டிசம்பர், 2014

கண் கெட்ட பின்னே...

மற்றொரு நாள்.. மற்றொரு செய்தி.. பொதுவாக செய்தி தாளை படித்தாலே அந்த நாள் ஓர் சோகமான நாளா மாறும். இப்படி ஆகும் என்று தெரிந்தும் ... ஏதாவது ஒரு நல்ல செய்தி வராதா என்ற நப்பாசையில் "சொந்த செலவில் சூனியம்" வைத்து கொள்வதை போல் செய்தித்தாளை படித்து விடுவேன்.

இன்றைக்கான செய்தி ....



பஞ்சாப் மாநிலத்தில் இலவச கண் சிக்கிசை பெற்ற அறுபது பேர் கண் பார்வையை நிரந்தரமாக இழந்தனர்.

என்ன ஒரு அந்நியாயம். இந்த அட்டூழியத்தை கேட்க யாருக்குமே நாதி இல்லையா?

இதை கொஞ்சம் விசாரித்து பார்த்ததில் தெரிய வந்த செய்தி.

இந்த மாதிரியான சிக்கிசை முகாம்கள் நடத்துகையில், இதை நடத்தும் நிறுவனங்களும் மற்றும் மருத்துவமனைகளும் சில பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமாம். இந்த பரிசோதனை எதுவுமே இங்க நடத்த படவில்லையாம்.

அதுமட்டும் அல்லாமல், இந்த சிக்கிசைகள் நடத்தப்படும் இடங்கள் இவ்வாறான சிக்கிசைக்கு கொஞ்சமும் தகுதியானது இல்லை என்று தெரிய வந்து உள்ளது. இங்கே சுத்தம் மருந்துக்கும் இல்லை என்பது தெரியவந்ததாம்.


அட பாவிகளே... இலவசம் இலவசம் என்று சொல்லி ஆண்டவன் அவனுக்கு கொடுத்த இலவசமான பார்வையையும் பறித்து விட்டீர்களே..
ஏற்கனவே இவர்கள் அன்றாட காய்ச்சிகள், இருந்த கண் பார்வையை வைத்து கூலி வேலை செய்து பிழைத்து, பிள்ளை குட்டிகளுக்கு மூன்று வேலை கஞ்சியை கொடுத்து வந்தார்கள். அவர்கள் வயிற்றில் அடித்து விட்டீர்களே.

இந்த தவறை சேர்ந்த நீங்கள் ஒரு நாள் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இந்த சோகமான நிகழ்ச்சியில் என் மனதை நெருடிய இன்னொரு விஷயம்...

இதற்க்கு காரணமான அரசியல்வாதிகளை நான் ஒன்றும் சொல்ல முடியாது. ஏன் என்றால் அவனிடம் இருந்து எந்த ஒரு நல்ல காரியத்தையும் நான் எதிர்பார்ப்பதில்லை.

இதை நடத்திய நிர்வாகிகள், அதிகாரிகள்.. அவனுக்கு ஒன்னாம் தேதி ஆனால் சம்பளம். அதற்காக எதையும் எங்கேயும் செய்வான்.


இதை நடத்திய மருத்துவர்கள்... மருத்துவன் என்பவன் உயிர் காப்பவன், ஆண்டவனுக்கும் அடுத்தவன். அவனுக்கு எங்கே போனது அறிவு.
Picture Courtesy : Google
சென்ற வாரம் குடும்ப கட்டுப்பாடு என்று அழைத்து சென்று நிறைய பெண்களை பிணமாக அனுப்பி வைத்தார்கள் என்று படித்தேன். இந்தியனின் உயிரின் விலை என்ன அவ்வளவு மலிவா?

பின் குறிப்பு ;

யாராவது நம் நாட்டு பிரதமருக்கு இந்த மாதிரி காரியங்கள் நடப்பதை எடுத்து சொல்ல வேண்டும். ஆஸ்திரேலியாவில் மூட கிடக்கும் நலிந்து போன சுரங்கங்களை ஒரு பில்லியன் டாலர் கடன் வாங்கி மீட்க மனதுள்ள அவர் , நம்ம ஊரில் சாக கிடக்கும் இந்த நலிந்த மக்களை மீட்க கண்டிப்பாக செய்வார் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

www.visuawesome.com

6 கருத்துகள்:

  1. இந்த கொடுமையை என்னவென்று சொல்வது...? சே...

    பதிலளிநீக்கு
  2. எங்களுக்கு அதுக்கு எல்லாம் டைம் இல்ல.. இன்னும் சுத்தி பார்க்க வேண்டிய நாடுகள் நிறைய இருக்கு.. அண்டார்டிக்கா, ஆர்டிக், சாம்பியா, etc (A-Z) பெரிய லிஸ்டே இருக்கு..

    பதிலளிநீக்கு
  3. இந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.. :-)
    ஏழைக்கு என்றால் நீதி, கருணை, எதுவும் இல்லை..

    பதிலளிநீக்கு
  4. கொடுமை கொடும நண்பரே! அதே போல ராஜஸ்தான்ல் ஐந்த காப் பஞ்சாயத்து பண்ணுற அட்டாகாசத்த படிச்சுருப்பீங்களே! ஒரு பதிவு எங்க தளத்துல இருக்கு நண்பரே!.....மோடிக்கு இதுக்கெல்லாம் டைம் இருக்கோ?!!

    பதிலளிநீக்கு