திங்கள், 22 டிசம்பர், 2014

மனைவிக்கு "கிப்ட்" வாங்குவதெல்லாம்...இறைவன்,!

அலை பேசி அலறியது...

ஹலோ ... விசு பேசுறேன்..

வாத்தியாரே ... பிள்ளை பேசுறேன்.

சொல்லு மாப்பு.. எங்கயா? ஆளையே காணோம்..

கழுதை கெட்டா குட்டி சுவர், இங்கதான் பொண்டாட்டி பிள்ளைங்கள சந்தோசமா வச்சிக்க பாடு பட்டுன்னு இருக்கிறேன்.

என்ன பிள்ளை? என்னமோ உலகத்திலேயே நீ தான் பொண்டாட்டி   புள்ளைங்கள சந்தோசமா வச்ச்சிக்க பாடு பற்ற மாதிரி பேசுற? ஆம்பிளையா பொறந்த எல்லா அப்பாவிகளும் இதை தானே செய்கிறோம்.



நல்லா சொன்ன விசு. எவ்வளவோ செய்யறோம், இருந்தாலும் நம்ம ஒண்ணுமே செய்யாத மாதிரி தானே சொல்றாங்க.

பிள்ளை, அது அவங்க தப்பு இல்ல, பிள்ளை, ஆண்டவன் அவங்கள அப்படி படைச்சிட்டான்.

புரியிலே விசு..

பிள்ளை, எந்த மனைவியாவது அவங்க அப்பாவ சோம்பேறின்னு சொல்லி கேள்வி பட்டு இருக்கியா?

என்ன கேள்வி இது விசு? அது நடக்காத விஷயம் ஆச்சே. என் மனைவி அவங்க அப்பாவ பத்தி பேசுறத கேட்டா அவர் என்னமோ ' மகாத்மா காந்தியோட சகலபாடி" நம்ம யோசித்திடுவோம். அந்த மாதிரி பில்ட் அப் கொடுப்பா.

அம்புட்டுதேன் .. அப்பா ஒரு தியாகி, ஆத்துகார் ஒரு துரோகி. அப்படி தான் பேசுவாங்க. அதை எல்லாம் நீ "டேக் இட் ஈசி" பாலிசியில் எடுத்துக்கோ.
நாளைக்கு நம்ப ராசத்திக்கள் நம்ம பத்தி பெருமையா பேசும் போது, சரி, பட்ட கஷ்டம் நல்ல பலன தான் தந்து இருக்குனு சந்தோஷ படலாம்.

விசு, அதுக்கு கூட எனக்கு வாய்ப்பு இல்லையே விசு, உனக்கு ரெண்டு ராசாத்திக்கள், இங்கே வெறும் பையன்கள் ஆச்சே.

பிள்ளை, பையனா இருந்தா என்ன ? பெண்ணா இருந்தா என்ன?

என்ன விசு, எந்த காலத்தில் பையன் ஒருத்தன் அவங்க அப்பா அம்மாவை கவனித்தான்? தாலிய கட்டியவுடன் தான் மாமனார் -மாமியாரை இவன் தத்து எடுதுக்குவானே?

பிள்ளை, நீ ரொம்ப டென்சனா இருக்க, ரிலாக்ஸ் ப்ளீஸ்!

அதை விடு விசு, நீ ஏன் கூப்பிட்ட? அந்த விஷயத்த சொல்லு.

பிள்ளை, நல்லா கேட்ட போ! நான் எங்க கூப்பிட்டேன்? நீ தானே என்னை கூப்பிட்ட?

என்னாது? நான் கூப்பிட்டனா? என்ன சொல்ற விசு?

டேய், நீதான் கூப்பிட்ட, வேணும்னா லைன கட் பண்ணிட்டு செக் பண்ணி பாத்துட்டு திரும்பவும் கூப்பிடு.

நீ சொன்னா சரியாதான் இருக்கும் விசு, நான் தான் கூப்பிட்டு  இருப்பேன். என்னமோ கேட்க்க வேண்டும்னு தான் கூப்ட்டு இருப்பேன்? ஆனால் என்னன்னு மறந்துட்டேன். என்னவா இருக்கும் விசு?

கிறிஸ்துமஸ்க்கு எனக்கு என்ன கிப்ட் வேனும்னு கேட்க்க ஒரு வேளை போன் பண்ணி இருப்பியோ?

நல்லா கேட்ட போ, விசு?   "ஆத்தா தவுட்டு பிச்சைக்கு அலைஞ்சதாம், பிள்ளை தொங்க தொங்க தங்கத்தில் கேட்டுச்சாம்"!

பழமொழி புரியில்ல பிள்ளை, கொஞ்சம் அர்த்தம் சொல்லு!

உனக்கு?, பழமொழி புரியில்ல? நல்லா சொன்ன போ!

சரி பிள்ளை, நீ கேட்க வந்தது நினைவிற்கு வந்தால், திரும்பவும் கூப்பிடு.

ஓகே விசு.. இரு இரு... இப்பதான் ஞாபகம் வந்துச்சி! மனைவிக்கு கிறிஸ்மஸ்க்கு ஒரு "கிப்ட"   வாங்க வேண்டும். "சீப் அண்ட் பெஸ்டா" ஒரு நல்ல ஐடியா கொடேன்.

இப்படி பண்ணேன். ஒரு "அரை டசன் பொறையும் பாதி ப்ளாஸ்க் டீயும்" வாங்கிக்கோ, ஊத்தி ஊத்தி .. ஊதி ஊதி .. ஊற வச்சி சாப்பிடலாம் பாரு.

வேணா விசு, போன வருஷம் நீ இதையே தான் சொன்னே. நானும் நீ சொன்ன மாதிரியே இது  ரெண்டையும் வாங்கின்னு போய் .. ரொம்ப கோவிச்சிக்கினது மட்டும் இல்லாமால், என் பரம்பரையவே கொஞ்சம் கேவலமா பேசிட்டா?

அட பாவி.. நான் சும்மா தாமாசுக்கு சொன்னேன், பிள்ளை ! அதை போய்  நீ சீரியஸா எடுத்து கொண்டு?

நிஜமாவே தமாசுக்கு சொன்னியா விசு? நான் என்னமோ உங்க வீட்டில் பண்டிகைக்கு இப்படிதான் செய்யறேன்னு யோசித்தேன். ஆனாலும் சும்மா சொல்ல கூடாது விசு, இந்த "பொறை - டி" ஐடியா நல்லா தான் இருக்கு.

மாப்பு, இந்த மாதிரி மனைவிக்கு "கிப்ட்" வாங்குற விஷயம் எல்லாம் மத்தவங்களிடம் கேக்க கூடாது? நீயே அவங்களுக்கு என்ன வேண்டும் என்று யோசித்து  வாங்க வேண்டும்.

அவ்வளவு அறிவு இருந்தா தான் நான் எங்கேயோ போய் இருப்பேனே விசு, சரி .. அப்புறம் பார்க்கலாம்!

பிள்ளை, ஒரு விஷயம். நீதான் கூப்பிட்ட, அதை கூட மறந்துட்ட. அவ்வளவு பிசி. இந்த பண்டிகை நேரத்திலாவது கொஞ்சம் "ரிலாக்ஸ்" பண்ணு பிள்ளை. ஒரு வாரம் விடுமுறை போட்டு குடும்பத்தோடு "என்சாய் மாடி" பிள்ளை.

நல்லா சொன்ன விசு, நீ எத்தனை நாள் "லீவ்" போட்ட?

நல்ல கேட்ட போ, பிள்ளை .. நான் கணக்கு பிள்ளை ஆச்சே. வருட கடைசியில் எப்படி எனக்கு "லீவ்". இந்த கணக்க எல்லாம் கூட்டி கழித்து முடிக்கையில் .. மார்ச் மாசம் வந்துரும். அதுக்கு அப்புறம் தான் எனக்கு "லீவ்".

www.visuawesome.com


5 கருத்துகள்:

  1. ரெண்டு பேரும் பேசி முடிச்சி கிப்ட் வாங்கியிருப்பீங்கன்னு பார்த்தா வெறும் அரட்டைக் கச்சேரிதானா?....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க கஷ்டத்தை நாங்கள் பேசி கொண்டு இருந்தால் அது உங்களுக்கு அரட்டை கச்சேரி போல் தெரிகின்றதா? நடக்கட்டும்.. நடக்கட்டும்.

      நீக்கு
  2. ஆண்கள் எப்போவும் வாய் பேச்சு தான். வெகு மதி எல்லாம் வராது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயந்தி.. வடக்கன் குளத்தில் இருந்து மேற்கு பகுதிக்கு வந்து அங்கு இருந்து தம்மக்கும் தெற்க்கே உள்ள என்னை நோக்கி முதல் முறையாக ஒரு கருத்தை சொல்லி உள்ளீர்கள்.

      நீங்கள் சொல்வது போல் ஆண்கள் வாய் பேச்சு தான், அதை மறுக்க நான் யார்? திருமதிக்கு ஏன் வெகுமதி ? ஆண்களாகிய நாங்களே தான் கொஞ்சமும் மதி இல்லாமல் பெண்களிடம் அடிமைகள் ஆகி விட்டோமே?

      நீக்கு
  3. அங்கும் அப்படித்தானா...? க்கும்... ஹிஹி...

    பதிலளிநீக்கு