சனி, 20 டிசம்பர், 2014

மின்சாரம் அது சம்சாரம்

விசு ... வீட்டு சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சி.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி குடும்பத்தோடு வாயேன், இங்கே இருக்க இந்தியன் ஹோட்டல் எங்கேயாவது போய்  சாப்பிட்டு வரலாம்.

தண்ட பாணி! உனக்கு பேரு வைச்சவங்க வாய்க்கு சக்கரை தாண்ட போடணும். பாவி மவனே, மெதுவா பேசு. எங்க வீட்டு அம்மாவிற்கு நீ இப்ப சொன்னது கேட்டுச்சி ... எனக்கு பால் தான் !

என்ன விசு , ஆள்மட்டும் ஆறு அடி ரெண்டு அங்குலம், ஆத்துகாரிட்ட மட்டும் இவ்வளவு பயம் !



டேய் தண்டம், இது பயம் இல்லடா, மரியாதை.

சரிதான் போ விசு , நான் 6 ன்னு சொல்றேன் நீ அரை டசன்    என்று சொல்லுற.

நீ சொல்றதும் சரிதான் தண்டம்.  ஆத்து தண்ணீரிலே முழுவுனா ஏன்னா மொண்டு ஊத்திக்கினா என்ன? குளியல் ஒன்னு தான். இருந்தாலும் இந்த மாதிரி விஷயத்த சத்தமா சொல்லாதா தண்டம். கேட்க்க கூடாதவுங்களுக்கு கேட்டு விட்டால், பிறகு படாத இடத்தில் அடிபட்ட கதை ஆகிவிடும்.

Picture Couretesy : Google

சரி நீ  என்ன சொல்ற விசு , வெளிய போய் சாப்பிடலாமா வேணாமா ?

தண்டம் , ரெண்டு விஷயம்.

விசு , நீ ஒரு விஷயம் சொன்னாலே விடிஞ்சிடும், இதில் ரெண்டா? எப்படியாவது ஏதாவது சொல்லி கூட்டிக்கொண்டு வா, சாப்பிட்டு கொண்டே பேசலாம்.

தண்டம், நான் வெளிய போய் இந்தியா ஹோட்டேலில் சாப்பிடலாம் என்று சொன்னால் என் மனைவி நம்ப மாட்டாள்.

ஏன்! இதுவரை நானும் சரி என் மனைவியும் சரி, எந்த இந்தியா ஹொட் டலுக்கும்   போய் சாப்பிட்டு சந்தோசமா வந்ததே இல்லை .

விசு, உன் மனைவி கொஞ்சம் நல்லா  சமைப்பார்கள் , அதுதான் அப்படி !
இங்க  என் வீட்டில் கதை கந்தல் ஆச்சே !

கூழானாலும் கசக்கி குடின்னு சும்மாவா சொன்னாங்க, தண்டம்!

விசு, நீ இந்த பழமொழிய தப்பா  சொல்றேன்னு நினைக்கிறன்.

ரொம்ப முக்கியம் தண்டம். விஷயத்திற்கு போலாம் வா !

சரி, முதல் விஷயம் " உன் வீட்டு சமையல் தூள், அதனால் உனக்கு அங்கே போக விருப்பமில்லை, ரெண்டாவது என்ன ?

தண்டம், இந்த  ரெண்டாவது விஷயம் ரொம்ப மோசம். அங்கே இந்திய ஹோட்டேலில் ரொம்ப ஏமாத்துறாங்க தண்டம் !

என்ன சொல்ற விசு ?

டேய் , ஒரு 10 வருஷதுக்கு முன்னால்  உன் 38 வது பிறந்த நாளுக்கு ஒரு ஹோட்டல் போனோம் நினைவு இருக்கா ?


விசு , ஒன்னு பத்து வருஷம்னு சொல்லு இல்லை , 38 வது பிறந்த நாளுன்னுசொல்லு , ரெண்டையும் சேர்த்து சொல்லாத. மக்கள் கூட்டி கழிக்க ஆரம்பித்து  விடுவார்கள.

ரொம்ப முக்கியம் தண்டம் !  சரி அன்றைக்கு நம்ப ஒரு 10  பேர் குடும்பத்தோடு போனோம்

ஆமா விசு, எல்லாருடைய பில்லை  நான்தானே கட்டினேன், நன்றாக நினைவு இருக்கு!

டேய் தண்டம் , அது உன் பிறந்தநாள், பில்லை நீ தான் கட்டவேண்டும்!

சரி விஷயத்துக்கு வா விசு ...போனோம் என்ன ஆச்சி?

அங்கே அன்னிக்கு கொஞ்சம் கூட்டம் அதிகமா இருந்தது. அதினால் நம்ம கொடுத்த ஆர்டர் வர 45 நிமிஷம் என்று சொன்னான் !

ஆமா ! நினைவு இருக்கு!

ஒரு  ஐந்து நிமிடம் கழித்து இன்னொரு ஆள் ரெண்டு தட்டில் சிக்கன் கபாப் எடுத்து கொண்டு வந்தான்.

ஆமா! என்ன விசு சின்ன வயதில் படிச்ச திருக்குறள் மாதிரி தெளிவா சொல்ற?

அவன் நம்ம இடத்திற்கு வந்து சிக்கன் கபாப்  நீங்கள் ஆர்டர் பண்ணிங்களா கேட்டான்... அதற்க்கு நான் இல்லைன்னு சொன்னேன். நீ உடனே குறுக்கில் வந்து பரவாயில்லை அதை நாங்களே வாங்கிகிரோம்ன்னு சொன்னே !

ஆமா விசு , இதில் என்ன ஏமாற்றம். நம்ம சாப்பாடு வர 45 நிமிஷம் ஆகுமே, அதுவரை இத சாப்பிடலாமன்னு வாங்கி கொண்டேன் !

தண்டம் அதுவரை தான் நீ கவனிச்ச ? அதுக்கு பிறகு அவன் என்னா பண்றான்னு நீ கவனிக்கவில்லை !

முட்டாள்தனமா பேசாத விசு, எதிரில்  கபாப்  இருக்கும் போது எவனாவது மற்றதை கவனிப்பானா?

டேய் தண்டம் ,... அவன் வர எல்லாரிடமும் சாப்பாடு வர 45 நிமிஷம் ஆகும்ன்னு சொல்லிட்டு, அங்கே மெதுவா போறா எல்லாத்தையும் ஒவ்வொரு மேசைக்கா போய் நீங்க ஆர்டர் பநீங்கலான்னு கேட்ப்பான் . அங்கே வந்தவங்களும் அவங்க சாப்பாடு வர 45 நிமஷம் ஆகுமேன்னு சொல்லி இதை வாங்கி கொள்வார்கள்.  அம்புட்டுதான்.

அடே ஏன்னா விசு.. இப்படியுமா பண்ணுவாங்க.

இதை கூட மன்னிச்சிடலாம் தண்டம். அன்னிக்கு நம்ம பிள்ளை என்ன ஆர்டர் பண்ணான் நினைவு இருக்கா?

இல்லை விசு, நீதான் சொல்லு.

செட்டிநாடு சிக்கன்...

ஆமா, அது அவனுக்கு ரொம்ப பிடிக்கும் .அதுல என்ன தப்பு.

தண்டம், இங்க இருக்க இந்தியா ஹோட்டலில் இந்த மாதிரி விஷயம் எல்லாம் ஆர்டர் பண்ண கூடாது தண்டம்.

ஏன் விசு?

டேய், அந்த செட்டிநாடு சிக்கன் பண்ணவன் பேரு "அசோக்பாய் படேல்" சுத்தாமான நெய்யினால் செய்யப்பட்ட குஜராத்தி. அதுமட்டும் இல்லாமல் சுத்த சைவம் வேற. அவன் பண்ண செட்டிநாட் சிக்கன் எப்படிடா நல்லா இருக்கும்?

பின் குறிப்பு ;
உண்மையாக சொல்கிறேன். இதுவரை நான் அமெரிக்காவில்  எந்த ஒரு இந்திய ஹோட்டலிலும் சாப்பிட்டு விட்டு நன்றாக இருந்தது என்று கூறியது இல்லை. கொஞ்சம் சாயம் போட்டு வைத்து இருந்தால் பிரியாணி. கூடவே கொஞ்சம் லேசா நெருப்பில் தீய்ந்து இருந்தால் சிக்கன் கபாப்.

இங்கே போவதற்கு பதில் நான் வீட்டில் அம்மணியிடம் ... " உன் சமையல் அறையில் ... உப்பும்மாவா .. கிச்சிடியா... யாவா என்று பாடி கொண்டே .....என்சாயிங் தான்
www.visuawesome.com

12 கருத்துகள்:

  1. //உண்மையாக சொல்கிறேன். இதுவரை நான் அமெரிக்காவில் எந்த ஒரு இந்திய ஹோட்டலிலும் சாப்பிட்டு விட்டு நன்றாக இருந்தது என்று கூறியது இல்லை///
    அட நீங்களும் என் கட்சிதானா...

    ஆனா உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு நானே சமைச்சுக்குவேன். ஏன்னா ஹோட்டல் சாப்பாட்டை விட என் சமையல் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, உமக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லை! நான் கூட வெளியே சென்று சாப்ப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பவன். என் சமையல் நன்றாக உளது என்று உண்ட நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கின்றேன்!

      அப்படியே என்றாவது அவசரத்தினால் வெளியே சாப்பிட நேர்ப்பாட்டாலும், நேராக சீன உணவகத்திற்கு செல்வேன். அங்கே நல்ல சாப்பாடு. நேர்த்தியான கட்டணம்.

      நீக்கு
  2. ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவை மிளிர்கிறது
    "அசோக்பாய் படேல்" சுத்தமான நெய்யினால் செய்யப்பட்ட குஜராத்தி.//
    அட்டகாசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா ஊக்கவிக்கும் பின்னோட்டம். என்னைபொருத்தவரை மற்றவரை சிரிக்க செய்வது ஒரு புண்ணியம். யார் மனதையும் புண் படுத்தாம நம்மை நாமே கேலி செய்து கொள்வதில் உள்ள சுகமே தனி தான்.

      வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. ஹா... ஹா...

    நிழலின் அருமை வெளியி[யிலி]ல்...!

    பதிலளிநீக்கு
  4. ஹஹஹஹஹஹஹ நண்பரே! கீதாவும், துளசியும் தனித்தனியாக வாசித்து ரசித்து சிரித்து .....மெயிலில் பகிர்ந்து.....அருமை !

    கூழானாலும் கசக்கி குடின்னு சும்மாவா சொன்னாங்க// ..அருமை...

    அசோக்பாய்படேல் சுத்தமான னெய்யினால் செய்யபட்ட குஜராத்தி.//ஹஹ்

    நகைச்சுவை சுவையான விருந்து படைத்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களே சொல்லுங்கள் துளசி - கீதா ! அசோக்பாய் செய்யும் செட்டிநாட் சிக்கன் வேலைக்கு ஆகுமா ? வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி.

      நீக்கு
  5. நானும் இரண்டு திங்கள் கலிபோர்னியாவிலும் லுசியானவலும் இருந்தேன! அங்கு இந்திய உணவகங்களுக்குச சென்றதுண்டு! நான் சுத்த சைவம்! அதனால் தொல்லையில்லை!

    பதிலளிநீக்கு
  6. Jack your thinking is marvelous. " un Samayail araiyil Uppuma kicchaiya" ella Kiss adiya

    பதிலளிநீக்கு