வியாழன், 11 டிசம்பர், 2014

லிங்காவும் வேண்டாம்.. மலிங்காவும் வேண்டாம்..

ஐந்து மணிக்கு அலுவலகத்தை விட்டு வீட்டிற்க்கு வரும் வழியில்...அலை பேசி அலறியது..

விசு...

சொல்லு பாணி..

என்ன பண்ற?

ஒன்னும் இல்ல பாணி...மாடு கட்டி போரடித்தா பத்தாதுன்னு யானை வாங்கலாமான்னு யோசித்து கொண்டு இருக்கேன். நீ என்னா நினைக்கிற? மாடே போதுமா ? இல்ல யானை வாங்கலாமா? இல்லை உங்க ஊர் ஸ்டைலில் ரோட்டில் போட்டு விட்டு போற வர வண்டியை வச்சி இலவசமா போரடிக்கலாமா?



வாத்தியாரே.. மதுரை குசும்பு எனக்கே வா? சரி, ஒரு எட்டு மணி போல் வீட்டுக்கு வரேன், உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.

என்ன தண்டம்.. இஸ் எவ்ரிதிங் ஓகே?

எல்லாம் ஓகே தான் விசு.. நீ ஒரு ரெண்டு மணிநேரம் "ப்ரீயா" வச்சிக்க, ஒரு வேலை நம்ம ரெண்டு பெரும் வெளியே போக வேண்டி வரும்.

பாணி.. 8 மணிக்கு சரியான மழையாம்... வீட்டிலே உட்கார்ந்து பேச முடியாதா? நான் வேண்டும் என்றால் அங்கே வரட்டுமா?

வேணா விசு.. நீ இங்கே வந்தா காரியம் கேட்டு விடும்.. நானே அங்கே வரேன்..
நீ மாமிட்ட மட்டும் ஒரு ரெண்டு மணி நேரம் தண்டபாணியோட வெளியே எங்கேயோ போறன்னு சொல்லி "பெர்மிசன்" வாங்கி வச்சிக்க.

சரி பாணி .. அப்புறம் பார்க்கலாம்.

வீட்டை அடைந்தவுடன்..

நம்ம தண்டபாணி மனைவி சுந்தரி உன்னை கூப்பிட்டாங்களா?

இல்லைங்க .. ஏன் ..

பாணி கூப்பிட்டான், எதோ என்னிடம் பேசவேண்டுமாம், ரெண்டு மணி நேரம் வெளியே போக வேண்டும் என்று வேற சொன்னான்.

நீங்க ரெண்டு பெரும் ஒன்னா போய் பண்ண காரியம் என்ன தான் உருப்பட்டது?

இன்னும் போகவே இல்லை, நீ இந்த மாதிரி சொன்னா எப்படி உருப்படும்?

என்று மனைவியோடு அன்பாக பேசிவிட்டு..அடே டே இன்று  NFL அருமையான ஆட்டம் இருகின்றதே. இந்த பாவி தண்டபாணி எங்கேயோ வெளியே போகவேண்டும் என்று சொல்றான். போற இடத்தில இந்த மேட்ச் தொலை காட்சியில் காட்டினார்கள் என்றால், பாணியிடம் பேசிய மாதிரியும் இருக்கும், அதே நேரத்தில் புட்பால் மாட்ச்சும் பார்த்த மாதிரியும் இருக்கும் என்று ஒரு உண்மையான ஆண்மகனை போல் யோசித்து  கொண்டு இருக்கையில்...

டிங் டாங்... வீட்டின் காலிங் பெல் ஒலித்தது ..

வா பாணி..

வாத்தியாரே சீக்கிரம் கிளம்பு..

எங்கேடா ?

நீ வந்து வண்டியில் ஏறு சொல்லுறேன்..

பாணி.. ஒரு நிமிஷம் இரு வீட்டில் சொல்லிட்டு வரேன்..

ஏம்மா .. தண்டத்தோடு ஒரு ரெண்டு மணி நேரம் வெளியே போற வேலை இருக்கு.. நான் வரட்டா...

எங்க போறீங்க...?

தண்டம் .. எங்க போறோம்..?

மாமி ஒரு ரெண்டு - மூணு மணி நேரம் தாங்க.. விசு வந்து சொல்லுவாரு..

சரி கிளம்புங்க...

வண்டியில் ஏறியவுடன்...

தண்டத்தின் வாயெல்லாம் பல்.. திடீரென்று பாக்கெட்டில் கையை விட்டு ... "டொன் டொ டைன்" என்ற சத்தத்துடன்... எதோ ஒரு காகிதத்தை எடுத்தான்.

என்ன பாணி.. ஏதாவது லாட்டரி டிக்கட்டா ? என்னாப்பா பெருசா ஏதாவது பரிசு விழுந்ததா?

அது எங்க நமக்கு விழ போது? இது அதை விட பெரிய விஷயம்.
அப்படி என்ன பெரிய விஷயம் ?

விசு.. இது " லிங்கா" படத்து டிக்கட் விசு.. எப்படியாவது ஒரு ரஜினி படத்தையாவது உன்னோடு சேர்ந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை .. அதுதான் .. சுந்தரியிடம் கூட சொல்லாமல் உன்னோடு பார்க்கலாம் என்று வந்தேன்.

அட பாவி.. சுந்தரி தலைவர் ரசிகை ஆச்சே பாணி.. அவங்கள கூட்டிக்கொண்டு போ!

அவங்கள இந்த சனி கிழமை  கூட்டிக்கொண்டு போறேன்னு சொல்லி இருக்கேன், நீ வா விசு... நம்ப கிளம்பலாம்.

பாணி.. நீ ரொம்ப ஆர்வமா இருக்க ? அதனால் உன்னை "அப்செட்" பண்ண விரும்பவில்லை. நான் இந்த படம் பார்ப்பதை எல்லாம் விட்டு விட்டேன் பாணி.

என்ன விசு.. தலைவர் படம்... இப்படி சொல்லிட்டியே..

ஆமா .. தலைவர் படம் தான், இருந்தாலும் ... நான் படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

வெளிநாடு வந்தவுடன் நீ என்ன வெள்ளை காரன் ஆயிட்டியா? ஆங்கில படம் மட்டும் தான் பார்ப்பாயா?

டேய்.. நான் ஆங்கில படம் கூட பார்ப்பதை விட்டு விட்டேன்.

ஏன் விசு..

மாப்பிள்ளை ...எல்லா படமும் ஒரே மாதிரியான கதை.. விட்டால் "கிராபிக்ஸ்". இசை என்று சொல்லி தலை வலி வர மாதிரி சத்தம்.. அதுமட்டும் அல்லாமல் நடை முறைக்கு ஒத்துவராத பாத்திரங்கள். இது நமக்கு ஒத்து வராது ..

விசு.. மூன்று முடிச்சு படத்தில் இருந்து தலைவர் படம் ஒவ்வொன்றையும் குறைந்த பட்சம் பாத்து முறையாவது பார்த்து இருப்பாயே ..

சரியா சொன்ன பாணி.. ஆனால் மூன்று முடிச்சு ஆரம்பித்து படையப்பாவோடு நிறுத்தி கொண்டேன்.

படையப்பாவோடா? அப்ப இந்த சிவாஜி - சந்திரமுகி - எந்திரன் எதுவுமே பார்க்கவில்லையா?

இல்ல பாணி.. படையப்பா முடிந்தவுடன் அடுத்த படம் "பாபா" போனேன். "ஓவர் பில்ட் அப்" கொடுத்தாங்கன்னு அந்த படம் போய் நொந்து நூலாகி வந்தேன். அதோடு முடிவு பண்ணிட்டேன் .. நம்ம வாழ்க்கையில் மிஞ்சிய  நாட்களுக்கு தேவையான படத்தை எல்லாம் கல்லூரி நாட்களிலே  முடித்தாகி விட்டது. இனிமேல் இதற்கு நேரம் இல்லை.

பாபா, ஒரே படத்தில் இந்த முடிவா?

அப்படி என்றும் சொல்ல முடியாது பாணி ...உன்னை போல் நண்பன் ஒருவனின் அன்பு தொல்லையால் சந்திரமுகி என்ற ஒரு படம் போனேன். வாசு அவர்களின் படம் தானே.. அது வேலைக்கு ஆகாதுன்னு நல்லா தெரியும், இருந்தாலும் நட்ப்புகாக போனேன். 15 நிமிஷம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.

வாசு படம் நல்ல இருக்குமே விசு.. சின்ன தம்பி பாத்தியா?

டேய், வாசு படம் எதுடா நல்ல இருந்தது. சின்ன தம்பி ஹிட் ஆனதற்கு ஒரே காரணம் இளையராஜாவின் இசை, அதுக்கும் மேலே நம்ம தமிழருக்கு நடிகை கொஞ்சம் பெருசா இருந்தா போதும். படம் ஹிட்..

சரி நீ இப்ப வரியா, இல்லையா?

நான் வரவில்லை. .நீ ஒரு காரியம் பண்ணு. நேர வீட்டிற்க்கு போய் சுந்தரிய கூட்டி கொண்டு படத்திற்கு கிளம்பு.

என்ன விசு?

டேய் .. நீ கிளம்பு..போற வழியில் என்னை பக்கத்தில் உள்ள நல்ல ஹோட்டேலில் இறக்கி விட்டு போ ..

ஏன்...

இன்றைக்கு ஒரு நல்ல மேட்ச் இருக்கு.

ஏன் விசு.. கேடு கேட்ட கிரிக்கெட் பாக்குற .. தலைவர் படத்த பார்க்க மாட்டியா?

மாப்பு .. நீயே சொல்லிட்ட கேடு கேட்ட கிரிக்கெட் என்று ... அதை போய் நான் பார்ப்பேனா? "எனக்கு லிங்காவும் வேண்டாம்.. மலிங்காவும் வேண்டாம்.."
நான் சொல்றது.. புட்பால்.  Cardinals Vs Rams...
Picture courtesy ; Google
அட பாவி விசு.. சொல்லவே இல்லையே.. அந்த மேட்ச் இன்னிக்கா?  நானும் உன்னோட வரட்டா?

அப்ப இந்த டிக்கட்டை என்ன பண்றது?

என்னத்த பண்றது? போறவழியில் நம்ம சாரதியிடம் கொடுத்துவிட்டு போலாம் வா.


டிங்.. டாங்..

வா விசு..

என்ன திடீரென்று..?

ஒன்னும் இல்ல.. உனக்கு "லிங்கா" படம் போக ஆசையா?

மெதுவா பேசு விசு.. மனைவியும் அவங்க அம்மாவும் போகணும்ன்னு ஆசை படறாங்க.. ஆனால் எனக்கு வேற வேலை இருக்கு.

இந்தா ரெண்டு டிக்கட்.. அவங்கள உடனே கிளம்ப சொல்லு..

அடுத்த பத்து நிமிடத்தில் அவன் மனைவியும் - மாமியாரும் கிளம்ப...

சாரதி... என்னமோ வேலை இருக்குன்னு சொன்னீயே... என்ன வேலை..?

ஒன்னும் இல்லை விசு .. இன்றைக்கு அருமையான மேட்ச்.. புட்பால்.  Cardinals Vs Rams...இவங்க ரெண்டு பேரும் இருந்தா என்னை பார்க்க விட மாட்டார்கள். அதனால் தான் வெளியே வேலை இருக்குன்னு இவர்களிடம் சொல்லி வைத்து பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு கிளம்பினேன். அப்ப தான் நீ வந்த..

சரி.. நாங்களும் அங்கே ஹோட்டலுக்கு தான் போறோம்.. வா, வந்து
வண்டியில் ஏறு.

முட்டாள் தனமா பேசுறியே விசு.. இப்ப தான் இவங்க ரெண்டு பெரும் கிளம்பிடாங்களே... வா மூணு பெரும் நடு வீட்டில் உட்கார்ந்து ...ஆம்பிளைகள் போல கால் மேல் கால் போட்டு பார்க்கலாம்..

என்று சொல்லி ... என்சாய் மாடினோம்..

பின் குறிப்பு ;
என்ன விசு, பட்டிமன்றத்தில் பேசுகின்றாய் . பதிவுகள் எழுதுகின்றாய். பின்னே இந்த மாதிரி படங்கள் பார்த்தால் தானே உனக்கு இன்னும் நன்றாக எழுத பேச முடியும் என்று சொல்பவர்களுக்கு ..

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. லிங்கா படம் வந்து இன்னும் 12 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அந்த படத்தின் விமர்சனம் ஆயிரம் இடத்தில வந்து விட்டது. அதில் ஐந்து படித்தால் போதும்.. முழு படமும் பார்த்த மாதிரி.. அதை வச்சி நம்ம டெவெலப் பண்ணி கொள்ளலாம்.


www.visuawesome.com

7 கருத்துகள்:

  1. வணக்கம்
    நாலு விடயத்தை பார்த்தால்தான் நாலு பெருக்கு மத்தியில் நாலு சொல் வைத்து பேசலாம்.
    லிங்கா படம் பார்க்க வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  2. Muttaal rajini padathai skip panninaa 3 mani neram, & $ 20 savings. James

    பதிலளிநீக்கு
  3. //வா மூணு பெரும் நடு வீட்டில் உட்கார்ந்து ...ஆம்பிளைகள் போல கால் மேல் கால் போட்டு பார்க்கலாம்..///
    ஆகா

    பதிலளிநீக்கு
  4. ஹஹஹஹ்ஹ்ஹ்....மிக மிக சரியே! 4, 5 கூடா வேண்டாம் நண்பா.....2 வாசிச்சாலே போதும்....டெவலப் பண்ணிக்கலாம்...னம்ம மக்கள் புட்டு புட்டு வைச்சிருவாய்ங்க.....கடைசி பஞ்ச் பாருங்க....கால் மேல கால் போட்டு, அதுவும் நடு வீட்டுல...ம்ம்ம்ம்ம் உங்க லூட்டிக்கு அளவே இல்லப்பா...ஹஹஹ்....

    இன்னொன்று சந்திரமுகி வாசு படம் இல்லை நண்பா...உங்களுக்கும் தெரிஞ்சுருக்கும்,.....அது மலையாளப் படத்தின் ரீமேக்...மலையாளப்படம் மணிச்சித்திரத்தாழ்......பாத்ருக்கீங்களா...மிகவும் அருமையான படம்....அதை தமிழ்ல கொலை பண்ணிருக்காங்க......ஒரிஜனல் பாத்துருந்தீங்கன்னா தமிழ் பார்த்து இன்னும் நொந்து போயிருவீங்க....

    ரொம்பவே ரசிச்சோம் உங்க பதிவை...

    பதிலளிநீக்கு
  5. டெவெலப் செய்து விடலாம்...! இது நல்ல ஐடியாவா இருக்கே...!

    பதிலளிநீக்கு
  6. ஓ....இதைத்தான் டெவெலப் டெவெலப்ன்னு சொல்றாங்களா.....?

    பதிலளிநீக்கு