வெள்ளி, 12 டிசம்பர், 2014

தாய்க்கு பின் தாரம்!

அலை பேசி அலறியது...

ஹலோ.. விசு பேசுறேன்..

வாத்தியாரே .. தண்டபாணி பேசறேன். உன்னிடம் ஓர் முக்கியமான விஷயம் பேசணும். இப்ப பேசலாமா? இல்லை அப்புறம் கூப்பிட்டா?

இப்ப கொஞ்சம் பிசி தான் தண்டம், இருந்தாலும் இப்பவே சொல்லு. அப்புறம்ன்னு சொல்லுன்னு போனாலும்...மனசெல்லாம் நீ என்ன பேச வந்தே என்ற எண்ணத்திலேயே இருக்கும் .. விஷயத்தை சொல்லு.



நன்றி வாத்தியாரே.. இந்த "தாய்க்கு பின் தாரம்" என்பதின் அர்த்தம் என்னான்னு   தெரியுமா வாத்தியாரே?

இது என்ன தண்டம் .. கம்பசூத்திரமா? ஒவ்வொரு ஆம்பிளைக்கும் அம்மாவிற்கு அடுத்து தான் மனைவி ... சரி,,, நான் இந்த அர்த்தத்த சொன்னேன்னு  உன் மனைவிக்கும் என் மனைவிக்கும் சொல்லிடாதே.. அப்புறம் நம்ப ரெண்டு பேருக்கும் பால் தான்...

என்ன வாத்தியாரே...நீ கூட இதுக்கு அர்த்தத தவற புரிந்து கொண்டு இருக்கிற ?

இல்ல தண்டம்.. கூட்டி கழிச்சி பாரு .. அது தான் அர்த்தம் .
.
வாத்தியாரே.. கூட்ட கழிச்சி பார்க்கிறதா விட்டு விட்டு ... ஒரு சேஞ்சுக்கு பெருக்கி வகுத்து பார், இதன் உண்மையான அர்த்தம்.

தண்டம் நான் கணக்கில் கொஞ்சம் வீக் ..நீயே பெருக்கி வகுத்து சொல்லு.

என்ன வாத்தியாரே.. கணக்கு பிள்ளை நீ கணக்கில் வீக்ன்னு சொல்ற ?

டேய் .. கணக்கில் சிறு பிள்ளையாக இருப்பதால் தான் எங்களுக்கு "கணக்கு பிள்ளை" என்ற பெயர் வந்தது.

என்ன சொன்னாலும் ஒரு பதில் வச்சினு இருப்பியே.. எதோ சொல்ல வந்தேன், இப்ப மறந்துட்டென்..

சொல்ல வந்தத மறந்தா .. அது ரொம்ப முக்கியமான மேட்டர் இல்லன்னு அர்த்தம் தண்டம்..

ரொம்ப முக்கியமான கண்டுபிடிப்பு ? வாத்தியாரே, நான் என்ன சொல்ல வந்தேன்... கொஞ்சம் எடுத்து கொடேன்..

டேய்.. "தாய்க்கு பின் தாரம்" என்பதற்கு நான் கொடுத்த அர்த்தம் தவறு என்றும் நீ என்னமோ புதுசா பெருக்கி வகுத்து ஒரு அர்த்தம் தயார் பண்ணி வச்சி இருப்பதை பத்தி சொல்ல வந்த..

நன்றி வாத்தியாரே.. உனக்கு தான் என்ன நல்ல ஒரு நல்ல ஞாபக சக்தி..ஆமா  வாத்தியாரே.. அதற்க்கான அர்த்தமே வேறு..

கொஞ்சம் விலகி சொல்லு தண்டம்..

வாத்தியாரே.. சின்ன வயதில் இருந்தே ...ஒரு சில காரியத்த நம்ப அம்மா எப்படி டீல் பண்ணுவாங்க .. அதே காரியத்த மனைவி எப்படி டீல் பண்றாங்கன்னு கொஞ்சம் ஒப்பிட்டு பாரு...

புரியில...

வாத்தியாரே..வீட்டிலே மேசையில் சாப்பிடறோம் .. நம்ம தட்டு காலியா இருப்பதை அம்மா பார்த்தால் ..

என்ன மகனே.. கொஞ்சமா தானே போட்டேன்.. இன்னும் கொஞ்சம் போட்டு சாப்பிடு..

ஆமா தண்டம்.. அப்படித்தானே சொல்லுவாங்க.. அம்மாவாயிற்றே.. அன்பே தனி தான்.

வாத்தியாரே.. இதே காரியம் நேத்து எங்க வீட்டில் நடந்தது.. என் தட்டு காலியா இருப்பதை பார்த்த சுந்தரி..

என்னங்க .. தட்டு காலியா இருக்கு. இன்னும் கொஞ்சம் சோறு தான் இருக்கு .. அதை காலி பண்ணிடுங்க.. இல்லாட்டி அதை நாய்க்கு தான் போடனும்னு சொல்லிடிச்சு..

அட பாவி.. நாய்க்கும் உனக்கும் ஒரே சமையலா?

என்ன கேள்வி வாத்தியாரே... இப்படி கேட்டுட.. நாய்க்கு ஸ்பெஷல் சமையல்.. எனக்கு சாதாரணம் தான்.

சரி, இப்ப நீ சொன்னதுக்கும் இந்த "தாய்க்கு பின் தாரத்திற்கும்" என்ன சம்மந்தம்?

வாத்தியாரே.. ஒரு ஆம்பிளைய ஒழுங்கா கவனிப்பதில் " தாய்க்கு பின் தான் தாரம்" வாத்தியாரே.. என்ன நான் சொல்றது உண்மையா?

அப்படி தான் தெரியுது தண்டம். இவ்வளவு நாளா இதை நான் தவறாபுரிந்து கொண்டு இருக்கேனே... விளக்கத்திற்கு நன்றி..

சரி... அப்புறம் சந்திக்கலாம் வாத்தியாரே...

ஓகே..

பிறகு வீட்டில் ...

என்ன மா.. நீ தான் தமிழ் அழகா பேசுவியே ... இந்த "தாய்க்கு பின் தாரம்" அதற்க்கு என்ன அர்த்தம்?.

அது ஒன்னும் இல்லங்க... ஒரு பெண் என்னவா இருந்தாலும்.. தாய் ஆனவுடன் அவள் செய்யவேண்டிய முக்கிய வேலை "தாய் வேலை". அதற்க்கு பின் தான் தாரம்..

புரியிலே..

அது எப்படி புரியும்?. தூங்குறவன எழுப்பிடலாம்.. தூங்குற மாதிரி பாசாங்கு பண்றவனை எப்படி எழுப்புவது?

உதாரணம் சொல்லறேன்னு என்னை அவன் இவன் என்று அழைக்க வேண்டாமே.. ப்ளிஸ்.

சரி.. விளக்கி சொல்றேன்.. கணவன் என்ன கேட்டாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு .. பிள்ளைகளுக்கு தேவையானவைகளை முதலில் செய்வதின் அர்த்தம் தான்  "தாய்க்கு பின் தாரம்"

.ஒ... அப்படியா... சொல்லவே இல்லையே...


www.visuawesome.com

இந்த பதிவின் தொடர்ச்சியை படிக்க இங்கே சொடுக்கவும் ....

தாய்க்கு பின் தாரம் .... தொடர்ச்சி!



7 கருத்துகள்:

  1. தாய்க்கு பின் தாரம் என்ற பழமொழிக்கு உண்மையான அர்த்தம் அறியவைத்தீர்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  2. புதுவிதமான ரெண்டு விளக்கமும் சூப்பர்! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ஹை! தாய்க்குப் பின் தாரம் என்பதற்கு அருமையான விளக்கம்! ஏனென்றால் இதே அர்த்தத்தைத்தான் இங்கும்.....அதான்...அருமை !! நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. தாய்க்குப் பின் தாரம் பற்றி புதிய விளக்கம் அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. தமிழ் எழுத்துக்கள் படியும்.. தாய் பின் தாரமே.. ர ய் பிறகே வரும்.. ;-)

    பதிலளிநீக்கு