செவ்வாய், 9 டிசம்பர், 2014

அவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி - 1)

இது ஒரு தொடர்ச்சி பதிவு, சென்ற பதிவை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இங்கே வருமாறு தயவுடன் கேட்டு கொள்கிறேன். சென்ற பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.


என்னடா இது.. விமானம் ஆரம்பித்து இன்னும் 20 நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் குறட்டையா என்று அந்த இருக்கையில் அமர்ந்து  இருந்தவர்களை பார்த்த நான் பேய் அறைந்தவன் போல் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்)  ஆனேன்.

விமானம் ஆரம்பித்து சில நிமிடங்கள் தான் ஆகின்றது. அதற்குள் தூக்கமா?  யார் இந்த கள்ளம் கபடம் இல்லாத ஆட்கள் என்று அவசர வழி வரிசையில் அமர்ந்து இருந்தோரை நோட்டமிட்டேன் அதில் அமர்ந்து இருந்த ஆறு பேரும் தாய்குலங்கள்.  இவர்கள் ஆறு பேருமே சராசரி மனிதர்களை விட சற்று எடை அதிகம் உள்ளவர்களாக காணப்பட்டனர்.



அப்போது தான் ஒரு உண்மை புரிந்தது. அடேங்கப்பா.. இவர்கள் .ஆறு பேருமே தங்கள் உடல் அமைப்பில் சற்று பெரியவர்கள் என்ற காரணத்தினால் சற்று தாராளமாக காலை நீட்டிக்கொண்டு அமர இந்த அவசர இருக்கையை கேட்டு வாங்கி உள்ளனர். மனதில் ஒரு விதத்தில் .. சரி, நமக்கு இந்த இடம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நம்மை விட ஒரு சுற்று பெருத்தவர்களுக்கு கிடைத்து உள்ளதே என்று நினைக்காமால், அட டே நமக்கு கிடைக்க வில்லையே என்று அமர்ந்து கொண்டு இருந்தேன்.

ஒரு ஐந்து நிமிடம் ஆகி இருக்கும். விமானம் சற்று சத்தம் போட்டு மேலே கீழே சிறிதாக ஆட, விமான ஒட்டி ஒரு சாதுவான குரலில்,

 "விமானம் ஒரு காற்று அழுத்த மண்டலத்தில் சென்று கொண்டு இருப்பாதால் சிறிது தடுமாறுகின்றது, அனைவரும் சீட் பெல்ட் அணியவும்"

என்று கூற, பணி பெண் ஒருவர் ..வரிசை வரிசையாக வந்து அனைவரும் சீட் பெல்ட் அணிந்து கொண்டு இருக்கின்றார்களா என்று சோதனை செய்தார்.

என் வரிசைக்கும் முன்னால் இருந்த அவசர வழியில் அமர்ந்து இருந்த ஆறு பேரும் குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்ததால் அவர்களை ஒவ்வொருவராக எழுப்பி சீட் பெல்ட் அணிய சொன்னார். அவர்கள் அனைவரும் முனகி கொண்டே எழுந்து பெல்ட் அணிந்து மீண்டும் தூக்க உலகம் செல்ல.. என் மனதோ கொஞ்சம் தடுமாறியது.

அட பாவி இந்த தூக்கம் தூங்கி கொண்டு இருக்கின்றார்களே, எதோ ஒரு அவசரம் என்றால் இந்த ஆறு பேரை எழுப்புவதே பெரிய காரியம் ஆயிற்றே  , இவர்கள் எப்படி இந்த அவசர கதவை திறப்பார்கள் என்று நினைத்தேன்.

இந்த அவசர கதவை திறக்க நாம் துரிதமாக செயல்படும் திறன் வேண்டும். அது இந்த ஆறு பேரிடம் இல்லையே என்று ,சரி.. எதோ ஒரு அவசரம் என்றால் நாம் தான் போய் இந்த காரியத்தை செய்ய வேண்டும் போல் இருகின்றதே  என்று எண்ணி அதை எப்படி திறப்பு என்பதற்கான வழிமுறைகளை படித்து தெரிந்து வைத்து கொண்டேன்.


சரி, ஊர் போய்  சேர்ந்ததும் இந்த விமான நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் எழுதலாம். இனிமேல் அவசர வழியில் அமர்பவர்கள் , அவசர காலத்தில் அதை உடனடியாக திறக்கும் உடல் பெலமும் ,அமைப்பும், வயதும் கொண்டவர்களாய் இருந்தால் நலமாய் இருக்கும் என்று கண்டிப்பாக எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டு எப்போது தூங்க போனேன் என்று எனக்கே தெரியாமல் தூங்கி விட்டேன்.


திடீரென்று ... "டமால்" என்ற சத்தம் கேட்டு ...பேய் அறைந்தவன் போல் (கண்டிப்பாக அந்த பேய் அறைந்த கதையை மற்றொரு நாள் சொல்கிறேன்)

பார்த்தால்.. விமானத்தில் ஒரே கூச்சல் குழப்பம். என்ன நடந்தது..?

 நாளை படிப்போமே..

தொடர்ச்சியை படிக்க இங்கே சொடுக்கவும் 

அவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி - 2)


www.visuawesome.com

8 கருத்துகள்:

  1. [[[அட பாவி இந்த தூக்கம் தூங்கி கொண்டு இருக்கின்றார்களே, எதோ ஒரு அவசரம் என்றால் இந்த ஆறு பேரை எழுப்புவதே பெரிய காரியம் ஆயிற்றே , இவர்கள் எப்படி இந்த அவசர கதவை திறப்பார்கள் என்று நினைத்தேன். ]]

    ===>உண்மை தான்! ஆனால், நிர்ணயிக்கும் அளவு கோல் என்ன? அல்லது அந்த பணிப்பெண்களுக்கு தான் அதை அளவிட முடியுமா? உண்மையில்..this is protocol that they have to follow--Nothing more nothing less.!
    tamilmanam +1

    பதிலளிநீக்கு
  2. பேய் அறைந்தது போல் ஆகி விட்டேன்... ஹிஹி...


    அடுத்து..... ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  3. நாளை வந்து கருத்து சொல்லுறேன்

    பதிலளிநீக்கு
  4. :-)..பாதி தூக்கத்தில் யாராவது கதவ திறந்து வெளிய வாக்கிங் போக ட்ரை செஞ்சாகளா?

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    தொடக்கம் நன்றாக உள்ளது.. அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன்.. பகிர்வுக்கு நன்றி த.ம 5
    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. அச்சச்சோ! என்னாச்சு?!! பேய் அறைன்ச போல ஆகிடுச்சு நண்பரே! (அந்தப் பேய் அறைன்ச கதைய நாங்க அப்புறம் சொல்லறோம் நண்பரே! நீங்க சொல்லவே மாட்டேன்றீய்ங்க! நாங்க முந்திக்கறோம்..ஹஹஹ்ஹ.)

    பதிலளிநீக்கு