செவ்வாய், 30 டிசம்பர், 2014

பொறுமையின் நிறம் சிவப்பு !

டிசம்பர் 30, மாலை 6:30க்கு...

டாடி...

எப்ப  வீட்டுக்கு வருவிங்க..?

தெரியவில்லை மகளே, அலுவலகத்தில் நிறைய வேலை இருக்கு, என்ன விஷயம்?

நாளைக்கு இரவு புத்தாண்டிற்கு கோயிலுக்கு போக வேண்டும் அல்லவா அதற்கு நான் ஒரு டிரஸ் வாங்க வேண்டும்.. எப்ப வருவிங்க?



ரொம்ப வேலை இருக்கு ராசாத்தி... உங்க அம்மா எங்க?

அம்மா வெளியே போய் இருக்காங்க.. இந்த மாதிரி திடீரென்று "டிரஸ்" வாங்க வேண்டும் என்று கேட்டால் அவர்கள் கோபபடுவார்கள்.. ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்.

மகள்..ரொம்ப கஷ்டம். இங்கே எல்லாரும் வேலையில் இருக்கும் போது நான் மட்டும் எழுந்து போனால் நல்லா இருக்காது. அது மட்டும் இல்லாமல், வேலையின் நிமித்தம் நானும் இங்கே இருக்க வேண்டிய கட்டாயம்.

ஏன் டாடி.. ஊரில் இருக்கும் எல்லாரும் விடுமுறையில் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி இன்றைக்கு வேலை?

மகள்.. அது நல்ல கேள்வி. நான் கணக்கு பிள்ளை ஆச்சே! வருட இறுதியில் தான் எனக்கு வேலை அதிகம், அதனால் தான்.

ஏன் டாடி .. வருடத்திற்கு 365 நாள் தானே. அது என்றைக்கு முடியபோதுன்னு முன்னமே தெரியும் அல்லவா? ஒழுங்கா "பிளான்" பண்ணி வேலை செய்வதில்லையா ?

நல்ல கேள்வி, வருடம் எப்ப முடிய போதுன்னு உனக்கும் தெரியும் அல்லவா? பின் ஏன் கடைசி நாள் வரை "டிரஸ்" வாங்காமல் இருந்தாய்?

ஐயோ டாடி! டிரஸ் போன வாரமே வாங்கிட்டேன், ஆனால் அதை போட முடியாது.

ஏன்.

அதே நிறத்தில் என் தோழி ஒருத்தி ஒரு டிரஸ் வாங்கிட்டா. நாங்க   ரெண்டு பெரும் ஒரே டிரஸில் போனால்  நல்லா இருக்காது.

சரி.. ஒரு அரை மணி நேரம் கொடு , ஆனால் ஒன்று, நான் 15 நிமிடத்திற்கும் மேல் கடையில் இருக்க முடியாது. உனக்கு அதை வாங்கி கொடுத்து விட்டு உடனே மீண்டும் அலுவலதிற்கு வர வேண்டும்.

ஓகே டாடி.. ஐ லவ் யு..

அரை மணி நேரம் கழித்து கடையில்..

டாடி.. இந்த கலர் நல்லா இருக்கா ? இல்ல, இந்த கலர் நல்லா இருக்கா?
மகள்.. ரெண்டுமே ஒரே கலர் தானே..

ஏன்னா டாடி.. உங்களுக்கு கண் தெரியவில்லையா ?

இது ரெண்டுமே வேற வேற கலர்.

மகள். இது எல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம், ஆண்களை பொறுத்தவரை நீலம்- சிவப்பு - பச்சை.. இது மூணு மட்டும் தான் கலர். மற்றது எல்லாம் பழம் இல்லாவிடில் இனிப்பு.

(இதை படிக்கும் மகளிர்கள் மனதை தொட்டு சொல்லுங்கள். இதில் மொத்தமே மூன்று நிறம் தானே உள்ளது.. நீளம் - சிவப்பு - பச்சை.)

அப்படியா டாடி... அப்பா அம்மா செய்யும் கொழம்பை மட்டும் சாப்பிட்டு பார்க்காமால் கலரை பார்த்தே குறை சொல்றிங்களே அது மட்டும் எப்படி..

அது வந்து.. வந்து...

பொய் சொல்ல நினைக்காதீர்கள் டாடி...

சரி மகள்.. ரெண்டில் ஏதாவது ஒன்றை எடுத்து கொண்டு கிளம்பு..

15 நிமிடம் கழித்து வீட்டில்...இளையவள்..

டாடி... உடனே வண்டி எடுங்க? என் ஷூஸ் மாற்றவேண்டும்..

ஏன்டி ராசாத்தி, இது நல்லாதானே இருக்கு..

டாடி, என் தோழி ஒருத்தி இதன் டிசைன் வாங்கிட்டா..

மகள் , அவள் இதே வாங்கியது உனக்கு எப்படி தெரியும்.?

இப்ப தான் அவள் ஷூஸ் படத்த எனக்கு " வாட்ஸ் அப்பில் " அனுப்பினாள்

எங்க காட்டு அந்த படத்த.

ஏன் டாடி ?

இல்ல, அதுவும் உன்னுடையதும் ஒரே மாதிரி இருக்கான்னு பார்த்து சொல்றேன்.

டாடி.. நீங்க?.. ப்ளீஸ்..

ஏன் மகள்? என்னால சொல்ல முடியாதா?

டாடி .. நீங்களும் சரி எந்த ஒரு ஆணுக்கும் சரி.. தெரிந்த மூன்றே கலர்  நீலம்சிவப்பு பச்சை.. அதனால் நீங்க இந்த ஆட்டதிற்கு வராதீர்கள்.

சரி கிளம்பு.. நான் வேலைக்கு திரும்ப போக வேண்டும்..

வண்டியில் கடையை நோக்கி போய் கொண்டு இருக்கும் போது, அலுவலகத்தில் இருந்து ஒரு போன், சக பணியாளரிடம் இருந்து..

விசு.. எங்க இருக்கீங்க?

"சோ சாரி", நான் இன்னும் ஒரு 30 நிமிடத்தில் வந்து விடுவேன்,

"நோ நீட்" விசு.. நானும் இப்ப அவசரமா கொஞ்சம் வெளியே போக வேண்டும், நாளைக்கு சந்திப்போம், ஓகே?

என்ன ஆச்சி? நான் வெளிய வந்தது எல்லார் நேரத்தையும் வீணடித்து விட்டதா?

இல்ல விசு..இப்ப தான் என் மகளிடம் இருந்து போன் வந்தது. எதோ "டிரஸ்" மாற்ற வேண்டுமாம்.. என்னனமோ கலர் சொல்றா, எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. எனக்கு தெரிஞ்சதெல்லாம் நீலம்சிவப்பு பச்சை.. மீதியெல்லாம் பழம் மற்றும் இனிப்பு தான்.

பின் குறிப்பு;

நண்பர்களே, 2014 ஆரம்பிக்கும் போது நான் எனக்கே போட்டு கொண்ட ஒரு  ஒப்பந்தம், இந்த வருடத்தில் என் அருமை குடும்பத்திடம் சென்ற வருடத்தை விட அதிகமாக செலவு (நேரம் மட்டும் தான்) செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான். இதை நிறைவேற்றினேன் என்று நினைக்கின்றேன்.  இதே ஒப்பந்தம் தான் இந்த 2015க்கும்... நீங்களும் அதே செய்யுங்கள்.

Wish you all  a very Happy and Prosperous New Year!


www.visuawesome.com

11 கருத்துகள்:

  1. நல்ல ஒப்பந்தம்! குடும்பாத்துடன் நேரத்தை செலவிடுவதை விட மகிழ்ச்சி ஏதும் இல்லை! தொடருங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. நல்ல புத்தாண்டு உறுதிமொழி.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும் நட்புடனும்

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  6. ஹஹஹ்ஹ்ஹ மிகவும் ரசித்தோம்.....மூணு கலரை வைச்சுக்கிட்டு இந்தப்பாடா,.....நல்ல தீர்மானம்!

    பதிலளிநீக்கு
  7. அந்தக் கலர் டிஃப்ரன்ஸ் எல்லாம் பெண்கள் கண்களுக்கு மட்டுமே தெரியும் ரகசியம்....ஆண்களுக்கு இல்லை நண்பரே!..ஆண் களின் கண்களுக்கு அந்த ட்ரெஸ்ஸின் ஓரத்தில் ஒட்டப்பட்டிருக்கும் விலை லேபலின் மீது ரகசியமாகக் கண்கள் செல்லுமே! அது பெண்களின் கண்களுக்கு மறைந்து போகும் ரகசியம் தெரியாதா என்ன உங்களுக்கு.....

    பதிலளிநீக்கு
  8. அந்த காலம் ல எவ்ளோ கலர்ஸ் இருக்கு !! போங்க அண்ணா உங்களுக்கு தெரிஞ்சது ப்ளூ, கிரீன்,ரெட்:)))) அண்ணனுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான எண்ணம்...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

    வலைப் பூ நண்பரே!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு