வெள்ளி, 2 ஜனவரி, 2015

லிங்கா ரஜினியின் கடைசி படமா?

எனக்கு தேவையா இந்த பதிவு, என்ற கேள்வி சற்று என்னை உறுத்த தான் செய்கின்றது. வளரும் நாட்களில் ரஜினியின் பரம விசிறி ஆயிற்றே நான், என்ன செய்வது?

பரட்டை ஆரம்பித்து படையப்பா வரை ரஜினியை ரசித்தவன் ஆயிற்றே. இந்த ரஜினி -ரசிகன் உறவு கிட்ட தட்ட 30 வருடங்கள் தாண்டி ஓடி கொண்டு இருக்கின்றது.
இது எப்படி இருக்கு?
நான் ஏற்கனவே பல பதிவுகளில் எழுதியது போல் ரஜினி படங்களில் நான் பார்த்த கடைசி படம் படையப்பாதான். பாபா என்ற படத்தை பார்க்க சென்றேன் ஆனால் படம் துவங்கி 20 நிமிடத்தில் துண்டை காணோம் துணியை காணோம் என்று எழுந்து ஓடி வந்து விட்டேன்.

அதற்கு பின் ரஜினியின் எந்த படத்தையும் பார்க்கவில்லை (சந்திரமுகியின் முதல் ஐந்து நிமிடத்தை தவிர) . ஏன்? ரஜினி அவர்கள் தனது வயதிற்கு தகுந்தது  போலான பாத்திரங்களில் நடிக்காதாதால்.

இருந்தாலும் ரஜினியின் ரசிகன் ஆயிற்றே, அதனால் எனக்கு நேரம் கிடைக்கும் போது  ரஜினியின் பழைய படங்களை போட்டு பார்த்து ரசிப்பேன். மீண்டும் மீண்டும் பார்ப்பேன் .

அந்த காலங்களில் ரஜினி நடித்து வெளி வந்த படங்களை ரசித்து பார்ப்பேன்.  " கழுகு  என்ற ஒரு படம், அருமையான இசை அட்டகாசமான பாடல்கள்... எனக்கு பிடித்த கதை அமைப்பும் கூட. படம் ஒரு சில  நாட்கள் கூட ஓட வில்லை, இருந்தாலும் இன்றும் கூட நான் அந்த படத்தை ரசித்து பார்ப்பேன்.


சரி .. இப்போது தலைப்பிற்கு வருவோம்.

"லிங்கா"  அநேகமாக  ரஜினி அவர்கள் தன பேத்தி போன்றவர்களோடு ஆடி பாடி நடிக்கும் கடைசி படமாக இருக்கும். இனி வரும் ரஜினி படங்கள் அவர் வயதிற்கு  ஏற்றார் போல் அமைந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ரஜினி மீண்டும் தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாக இன்னொரு வலம் வர வேண்டும் என்றால் வயதுக்கேற்ற பாத்திரமாக நடிக்க வேண்டும்.

இன்னும் சொல்ல போனால்,  தன் திரை உலக வாழ்க்கையை வில்லனாக ஆரம்பித்த ரஜினி அவர்கள்,  மீண்டும் ஒரு நல்ல வில்லனாக  வரவேண்டும் என்பதே என் ஆசை .

வருவாரா ?

பின் குறிப்பு:
ஒன்றும் பெரிதாக இல்லை. இனிமேல் வரும் ரஜினியின் ஒரு படத்தையாவது  பார்க்கவேண்டும் என்ற நப்பாசையால் எழுதிய பதிவு இது.

15 கருத்துகள்:

  1. நப்பாசை நடக்குமா...? என்பதும் சந்தேகம் தான்...

    பதிலளிநீக்கு
  2. விசு,

    புத்தாண்டு வாழ்த்துக்களுடன் துவக்குகிறேன்.

    வயதுக்கேற்ற கதைகளில் நடிப்பதற்கு நமது நாயகர்கள் (எம் ஜி ஆர், சிவாஜி, கமல் ,ரஜினி etc ) பெரும்பாலும் விரும்புவதில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கேமரா அவர்களையே சுற்றிக்கொண்டிருக்க வேண்டும். எனவே உங்களின் கனவு உண்மையாகும் வாய்ப்பு ரொம்பவும் கம்மி என்று நினைக்கிறேன்.

    கழுகு படம் பற்றி சொல்லியிருந்தீர்கள். நானும் மிகவும் ரசித்துப் பார்த்த படம் அது. உறவினர் கூட்டமாக சென்று பார்த்ததால் அந்தப் படத்தை இன்னும் என்னால் மறக்க முடியாது. படத்தின் டைட்டில் இசை அபாரமாக இருக்கும். உண்மையில் கழுகு Race with the devil என்ற 1975 இல் வந்த ஹாலிவுட் படத்தின் பிரதி. அந்தப் படத்தில் ஹீரோ உட்பட எல்லோருமே இறுதியில் கொல்லப்பட்டுவிடுவார்கள். தமிழில் அது எப்படி சாத்தியம்?

    மீண்டும் சந்திக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காரிகன்,
      புத்தாண்டு வாழ்த்துக்கள் ..
      கண்டு பல நாளாகியது. இளையராஜாவின் இசைஅமைப்பில் உருவான படங்களிலே எனக்கு மிகவும் படித்த படகங்களில் ஒண்டு கழுகு. ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்பதை இப்போது தான் அறிந்தேன்.
      என் கனவு நனவாகாது என்று சொல்லி விட்டீரே?

      நீக்கு
  3. 250 பதிவு அல்லவா இது. வாழ்த்துக்கள்.
    அமிதாப் போல வயதுக்கேற்ற வேடத்தில் நடிப்பதுதான் அவருக்கு பெருமை சேர்க்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 250வது பதிவா? நீங்கள் எப்படி ஐய்யா கண்டுபிடித்தீர்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்... வருகைக்கு நன்றி. அமிதாப் அவர்கள் கூட விரலை சுட்டு கொண்ட பின் தான் வயதிற்கேற்ப நடித்தார். மஞ்சள் நோட்டிஸ் விட்ட பிறகு தான் அவருக்கு உத்தி வந்தது. இங்கேயும் அப்படி ஆகாமல் இருந்தால் சரி.

      நீக்கு
  4. ரஜினி ரசிகர்கள் பலரது விருப்பமும் அதுவே.. ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருப்பம் தான்.. இருந்தாலும் நடக்குமா? காலம் தான் பதில் சொல்லும் .

      நீக்கு
  5. //ரஜினி அவர்கள், மீண்டும் ஒரு நல்ல வில்லனாக வரவேண்டும் என்பதே என் ஆசை .///
    கூடிய சிக்கிரம் காவி உடையுடுத்தி அரசியலில் ஒரு வில்லனாக வருவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் ஐயா? அடுத்தவன் வயிற்றில் பாலை வார்க்காவிட்டாலும் பரவாயில்லை, நெருப்பை கொட்டாதேயும்...:)

      நீக்கு
  6. thalaivar eppadi nadiththaalum paarpathaRku ennai pool kodi per undu.. thalaivar fan enkinra poorvaiyil ulara vendaam..

    பதிலளிநீக்கு
  7. ரஜினியின் பின் வரிசைப்படங்கள் நீங்கள் சொல்வது போல பாபா மிகவும் சகிக்கவில்லை! அவரது வாய்சும் மாறிவிட்டிருந்தது. வயசுக்கேத்தபடி அவர் நடிப்பாரா? நடிக்கத்தான் நமது இயக்குனர்களும் ரசிகர்களும் விட்டு விடுவார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட விடுங்க தளிர்... நம்ம ஆசையை நம்ம இங்கே சொன்னா, அருள் போல் ஆட்கள் வந்து நம்ப தான் எதோ உளறு கின்றோம்ன்னு சொல்றாங்க.

      நீக்கு
  8. எனக்கு தேவையா இந்த பதிவு என்று தலைப்பை வைத்து vittu..ஒரு பொது இடத்தில் தனது கருத்தை பதிவிடும்பொழுது மற்றவர் கருத்துக்களும் வரத்தான் செய்யும் நண்பா! நீங்கள் வேண்டுமானால் intellectual ஆ இருங்கள் நாங்க "ignorantes" இருந்து விட்டு pogirom.. ரஜினி சார் சொன்ன maathiri.. "மக்ககளுக்கு ஒரவர் நடிப்பு எப்பொழுது போர்ரடிக்குதுன்னு ஒரு நடிகருக்கு தெரியும்" அப்பொழது அவர் நடிப்பை நிறுத்தி விட vendum.." நிச்சியமாக ரஜினி சாருக்கு theriyumm..மேலும் அவர் எங்களை சந்தோஷ படுத்த தான் நடிக்கிறாரே thavira..இன்னும் panam.per,புகழ் பெருவதற்கு alla..அவர் இப்படி நடிப்பது தான் எங்களுக்கு pidichurukku..LION ALWAYS BE LION

    பதிலளிநீக்கு