வெள்ளி, 30 ஜூன், 2017

தண்டத்துடன் ஒரு XXX பதிவு....

வெள்ளி மாலை....

அலுவலகத்தை விட்டு வெளியே வந்து வண்டியை  எடுக்கையில்......அலறியது அலை பேசி...

வாத்தியாரே...

சொல்லு தண்டம்...

ஜூலை 4  ...இப்பதான் போன மாதிரி இருந்தது வந்துடுச்சி ...

எங்கே இருந்து பேசுற... நவம்பரில் தானே வரேன்னு சொன்ன...

பசங்க தொந்தரவு வாத்தியாரே. பத்து நாள் லீவ் போட்டு வந்து இருக்கேன். ஜூலை 4 க்கு என்ன பண்ற?

இதுவரை ஒன்னும் பிளான் இல்ல .. என்ன பண்ணலாம் சொல்லு?

சுந்தரி வரும் போதே ஒரு கண்டிஷனோடு தான் வந்தா..

என்ன கண்டிஷன்...

இந்த பத்து நாளும் கிச்சனில் நுழைய மாட்டாளாம்..

கொடுத்துவைச்சவன் தண்டம் நீ.. அடுத்த பத்து நாள் உனக்கு ருசியான  சாப்பாடு...

புதன், 28 ஜூன், 2017

எஸ் வீ க்கு சுப வீயின் பதில் என் மூலம்..

சுப வீ அவர்களுக்கு எஸ் வீ சேகர் எழுதிய பதில் கடிதத்தை படித்தேன்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த நாடக நடிகரின் IQ என்னவாக இருக்கும் என்று வியந்தேன்.

ஏன் என்று பார்ப்போம்.

செவ்வாய், 27 ஜூன், 2017

அரளி !

அருகில் சென்றேன்
அதிர்ந்து நின்றேன்
அழகின் இலக்கணம்
அயர்ந்தேன் ஒரு கணம் .

அவளும் தமிழா
அசையில் உமிழா
அவளுக்கு என்றேன்
அருகே சென்றேன்

திங்கள், 26 ஜூன், 2017

சிம்புவுக்கு ஒரு ....

சிம்புவுக்கு ஒரு ....

சிலம்பரசன்.. இதை எழுத ஆரம்பிக்கும் முன் ஒரு உண்மை. இதுவரை நீ நடித்த எந்த படத்தையும் நன் பார்த்ததில்லை. தொழில் நுட்ப வளர்ச்சியினால் தமிழ் திரை உலகின் பாடல் அல்ல சிரிப்பு காட்சி ஏதாவது பார்க்கலாம் என்று யு டுயூப் பக்கம் சென்று தட்டினால் அங்கே நீ நடித்த படங்களின் காட்சிகளும் வரும். அதில் கூட இதுவரை உன் நடிப்பை ஒரு நிமிடத்திற்கு மேல் பார்த்தது இல்லை.

ஏன் பார்ப்பதில்லை?

என்  கல்லூரி நாட்களில் தான் உன் தந்தை கொடி கட்டி பறந்தார். ஆரம்பத்தில் அவரின் இரண்டு படங்களை ரசித்தேன்.. ஆனால், அதன் பின்னால் வந்த படத்தில் படத்தில் அவரின் காட்சிகள் அதிகமாக வருவதால் அவர் படத்தையும் பார்ப்பதை தவிர்த்து விட்டேன்.

இனிய தளத்தில்  எங்கே சென்றாலும் டி ராஜேந்தர் அவர்களின் பேச்சை பார்த்தால் முக்கால் சுளிக்க தோன்றும். ஒரு மனிதன் எப்படி கொஞ்சமும் கூச்சமில்லாமல் தன்னை தானே இப்படி போற்றி கொள்ள இயலும் என்று வியந்த  நாட்கள் உண்டு. TR போல் சுயஸ்துதி யாராலும் பாட இயலாது என்ற எண்ணம் உன் பேச்சை  கேட்டதும் தவிடு பொடியாகியது.

வியாழன், 22 ஜூன், 2017

முதல் முதலாக பார்த்த போது...


மூத்தவள் பிறந்த அன்று
முழுமையானேன் என்று இருந்த வேளையில்..
மூன்றே வருடத்தில்
முழுவாம இருக்கேன் என்று

முந்தானையில் முகத்தை துடைத்து கொண்டே
மூச்சு வாங்க
முணுமுணுத்தாள்
மூன்று முடிச்சி வாங்கியவள்..

முழுக்க பொய் தானே
முகத்தை பார்த்து சொல் என்றேன்..
முன்னே வந்தாள் சொல்லவில்லை..
முகத்திலே தெரிந்தது  அகத்தின் அழகு...

முன் ஏற்பாடு எதுவும் இல்லையே
முன்பின் உதவிக்கும் ஆள் இல்லையே
மூன்று பேர் என்று தானே இருந்தோம்
முதலுக்கே என்றேன் .. வாய் அடைத்தாள்..

மும்மாரி பொழிய மாதங்கள் கழிய
முழு கற்பிணியானாள்
முதலில் எனக்கு சொல்லுங்க
மூத்தவள் ஆசைக்கு அடுத்தது  ஆஸ்திக்கா?


மூடினேன்  வாயை
முகர்த்தேன் மூத்தவளை ஆஸ்தி எனக்கெதற்கு
முடிந்தால் ஆசைக்கு இரண்டு கொடு
முனங்கினேன்  அவள் காதில்

புதன், 21 ஜூன், 2017

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா ?

கோடை விடுமுறை ஆரம்பித்து ஒரு இரண்டாம் வாரம். மூத்த ராசாத்தி ஒரு வாரம் விடுமுறையை அனுபவித்து விட்டு இரண்டாவது வாரம் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டாள். அவள் பணி  புரியும் "கோல்ப் கோர்ஸ்" அவளுக்கு மிகவும் பரிச்சயமான இடம். 8 வயது முதல் வருடத்தில் பாதி நேரத்தை இங்கேயே செலவழித்தவள், அதனால் அனைவரையும் தெரியும்.

இளையவளுக்கு 14 வயது . முழு நேர வேலைக்கு செல்லாவிடிலும், அவளும் மூத்தவளோடு காலையில் கிளம்பி சென்று விடுவாள். அங்கே நடக்கும் சம்மர் கேம்பில் வாலெண்டியராக பணி புரிவாள். அதற்கு பணம் பெறாவிட்டாலும் உணவு கிடைக்கும்.

நாட்கள் இப்படி போக.. நேற்று இளையவளோடு ஒரு உரையாடல்..

டாடி .. போன  ஞாயிறு (Fathers Day)  நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் அவங்க அவங்க கல்யாணத்த பத்தி பேசினோம்.



சற்று அதிர்ந்தேன். சுதாரித்து ...



பதினைஞ்சு ஆக  இன்னும் ஒரு வாரம் இருக்கு. இப்ப கல்யாணத்த பத்தி என்ன அவசியம்? அப்படி என்ன பேசுனீங்க. யாரை கட்டிக்க போறேன்னு பேசுனீங்களா?

"வானம் பார்த்த விவசாயி"...!

காலை 4 மணிக்கு எழுந்து  நேற்றைய மிச்ச மீதியை "பழையது" என்ற பெயரில் உப்பை மட்டும் சேர்த்து பருகிவிட்டு , தன் கால்நடைகளோடு கால்நடையாக மொத்த நாளையும் வெயிலிலே தாரை வார்த்து விட்டு, தூவிய விதைகளால் வரும் விளைச்சலை கனவில் கொண்டு தூங்க செல்கிறான்.
பட உபயம் :புவனா கருணாகரன் 

தூக்கம் வரவில்லை .எப்படி வரும்? முகத்தில் அடிக்கும் காற்றை வைத்தே மனது சொல்லுகின்றது ... நாளை மழை வராது.  இரவு இரண்டு மணி, அருகில் இருந்த பசு, கன்று ஈனுகையில் உயிரை விட அதையும் தோண்டி புதைத்து விட்டு, ஐயகோ நாளையில் இருந்து பிள்ளைகளுக்கு பால் இல்லையே என்ற துக்கத்தோடு பெருமூச்சு விட... அருகில் இருந்த மனைவி கேட்கின்றாள்..

செவ்வாய், 20 ஜூன், 2017

ஏமாறாதே ஏமாறாதே..

1999 போல நினைக்கிறன். வளைகுடா பகுதியில் குப்பை கொட்டி கொண்டு இருந்த நாட்கள். அப்போது ஒரு நாள் வேலை விஷயமா மஸ்கட்டில் இருந்து துபாய் போக வேண்டி இருந்தது.

காலையில் ஐந்து மணிக்கு வீட்டை விட்டு நேராக மஸ்கட் விமான நிலத்திற்கு சென்று அங்கே வண்டியை பார்க் செய்து விட்டு  ஒரு மணி நேர விமான பயணம்.

துபாய் அடைந்து அங்கே ஏற்கனவே ஏற்பாடு செய்து  இருந்த வாடகை வண்டியை எடுத்து கொண்டு நேராக அலுவலகம், மற்றும் மதிய உணவு  அங்கே வாழும் நண்பர்களுடன்.. மீண்டும் அலுவலகம்.

மாலை ஆறு மணி போல் அங்கே இருக்கும் அஞ்சப்பர் உணவகத்தில் போய் அம்மணிக்கும் அடியேனுக்கும் .. பிரியாணி  மற்றும் சில உணவினை வாங்கி கொண்டு நேராக துபாய் விமான நிலையம்.

அங்கே வாடகை வண்டியை திருப்பி கொடுத்துவிட்டு, குடிவரவையும் கடந்து என் விமான கதவை நோக்கி செல்லும் போது.. எதிரில் இரு இந்தியர்கள் என்னை கடந்து செல்ல..

இவர்களை எங்கேயோ பார்த்து இருக்கிறேனே .. என்று நினைக்கையில்..

விமானம் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் இருக்கும் பட்சத்தில் அங்கே இருந்த டுயூட்டி பிரீ ஷாப் சென்று அம்மணிக்கு ஏதாவது வாங்கலாம் என்று நுழையும் போது அங்கே இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இருந்தனர்.

அப்போது தான் நினைவிற்கு வந்தது.. வழியில் பார்த்தது கங்குலி மற்றும் டேபாஷிஸ் மோன்டி  என்று.

அனைத்து கிரிக்கெட்டர்ஸ் அங்கே இருக்கையில் அங்கே வந்த சக இந்திய பிரயாணிகளின் முட்டாள் தானம் என்னை வியக்கவைத்தது.


அங்கே இருக்கும் விளையாட்டு வீரர்கள் ஆளுக்கு ஒரு பொருளை கையில் வைத்து விலை என்று பார்த்து கொண்டு இருக்க..  பயணம் செய்ய வந்துள்ள முட்டாள்களோ ..

Sir... Can I pay for your shoes.. bottle.. perfume ...

என்று ஏதோ பிறவி பயனை அடைந்தது போல் மகிழ்ந்தனர். நானோ  சற்று ஓரத்தில் அமர்ந்து அடுத்து நடக்கும் காட்சிகளை எடை போட்டேன்.

 நம் விளையாட்டு வீரர்கள் எந்த ஒரு பொருளையும் வாங்கினோமா.. விலை கொடுத்தோமா என்று இருக்கவில்லை. எவனாவது ஒரு  ஏமாந்த சோனாங்கிரி மாட்டுவான் என்று அந்த பொருளை கையில் வைத்து கொண்டு அங்கேயே காத்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் நினைத்ததை போல் எவனாவது ஒருவன் வருவான்..

Sir, can I buy this for you...?

சரி, வீரர்களுக்கு தான் இப்படி என்றால் .. வர்ணனையாளர்களுக்கும் இதே உபசரிப்பு தான்.

இந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் லட்ச கணக்கில் சம்பாதிப்பவர்கள்.. அவர்களுக்கு இந்த ஜந்துகள் ஏன் இப்படிபோட்டி போட்டு கொண்டு செலவு செய்கின்றார்கள் என்று நினைக்கையில்...

கடைசி அழைப்பு வர விமானத்தில் ஏறினேன்.

சில மாதங்களுக்கு பின் அந்த உலக கோப்பை  கூட முழுமையாக பிக்ஸ் செய்ய பட்டு  இருக்கலாம் என்று அறிந்தேன். அந்த செய்தியை படித்த இந்த ஏமாந்த சோனகிரிகள் எப்படி பீல் பண்ணி இருப்பார்கள்?

சனி, 17 ஜூன், 2017

அ(ர்)ப்பனுக்கு வாழ்வு வந்தால்...


அப்பா...
என்றாள்...


அடித்து பிடித்து ஓடி
மூச்சு வாங்க..
பல படி தாண்டி மேலே வந்தேன்.....

வழியில் அவள் அம்மா கேட்டாள்..
ஊரிலேயே உனக்கு மட்டும் தான் பிள்ளையா ..

நல்ல கேள்வி...

நினைவரியாத நாளில் அடுத்தவன் போல்..
அவன் தோளில் நிற்க முடியாத   பாக்கியம் ...

முதல் வகுப்பிற்கு அவனவன்
அவரின் அரவணைப்பில் வரும் போது...
அனாதை   போல் நின்ற துர்பாக்கியம்...


வியாழன், 15 ஜூன், 2017

குற்றம் புரிந்தவன்..

ஆர்டர் !ஆர்டர் ! ஆர்டர் !..

ஆல் ரைஸ்.. கோர்ட் இஸ் இன்  செஷன்..

என்று அந்த பணியாளர் சொல்ல ..நீதிபதியும் அங்கே வர...வழக்கு தொடர்ந்தது.

இன்றைக்கான வழக்கு?

வங்கி கொள்ளை!

இந்த நீதிபதிக்கென்று இங்கே நல்ல பெயர் உண்டு. ஒவ்வொரு வழக்கையும்   தீர விசாரித்து அதற்கான தீர்ப்பை சீராக வழங்குவது மட்டும் அல்லாமல் தீர்ப்பின் மூலம்  குற்றவாளி  மனம் திருந்தி  வாழ்க்கையை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்.

குற்றம் சாற்றபட்டவர்  கூண்டிற்குள் தலை குனிந்து கொண்டு நிற்க..

அரசு வக்கீல் வாதிட்டார்..

திங்கள், 12 ஜூன், 2017

பதிலே(லோ) காற்றில் உள்ளது ...

வருடம் 1963  .. வியட்நாம் போர் நடந்த வேளையில்.. பாடகர் .. பாப்  டிலான் (BOB DYLAN)  ஒரு மனித நேயமான பாடலுடன் வந்தார்.

ஒவ்வொரு வார்த்தையும் இசையும் நெத்தியடி. உணர்ந்து எழுதிய பாடல் அமைக்க பட்ட இசை.

இவ்வாறு பல பாடல்களை எழுதிய பாப்  டிலனுக்கு 2016  ம் வருடம் ஆங்கில இலக்கியத்திற்கான நோபிள் பரிசு கிடைத்தது, அடியேனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதோ அந்த பாடலின் தமிழாக்கம். அதை தொடர்ந்து அந்த பாடலின் ஆங்கில வரிகளும் உள்ளது. அந்த பாடலையும் கண்டிப்பாக அவரே பாட கேளுங்கள்.


எத்தனை பயணம் அவனுக்கு
அவனை மனிதன் என்று மற்றவர்  அறிய...
எத்தனை கடலை வெண்புறா கடக்க வேண்டும்
அது கரையை சேர்ந்து அடைய ...
எத்தனை குண்டுகள் வெடிக்கவேண்டும்
அவை இனி வெடிக்காமல் இருக்க..

பதிலோ தோழா,  காற்றில் உள்ளது...
பதிலே காற்றில் உள்ளது ...

எத்தனை வருடம்  மலை நிற்கும்
அது கடலில் மூழ்கும்  வரை



சனி, 10 ஜூன், 2017

பொன்னாங்கன்னி ...அது பொன்னான கன்னி..

சனி மதியம் ராசாத்திக்கள்  இருவரும் நட்புக்களோடு ஒரு "ம்யூசிக் கான்சர்ட்" செல்ல அம்மணியோ தம் பணி தொடர்பான ஒரு காரியத்தினிமித்தம் செல்ல.. அடியேனின் அம்மாவோ.. ரெண்டு நாளைக்கு உன் அண்ணன் வீட்டுக்கு போறேன் .. நீ திங்கள் வந்து என்னை கூட்டின்னு வந்துடு என்று கிளம்ப..


ஏங்க.. மதியம் முழுக்க வீட்டிலே தான் இருப்பீங்க.. கொஞ்சம் கூட்டல் பெருக்கல் பாத்துக்குங்க...

பிடித்த பாடல்களை சத்தமாக வைத்து வேலையை ஆரம்பித்தேன். சூப்பர்விஷன் செய்ய ஆள் இல்லாததால் வேலை வெகு சுலபமாக முடிந்தது.

மீண்டும் வந்து அமர்ந்து ஒரு பதிவு எழுதலாம் என்று யோசிக்கையில்..

சமையல் குறிப்பு போட்டு நெடு நாளாகிவிட்டதே.. ஒன்று போடலாம் என்று நினைத்து கொண்டு இருக்கையில்..அலை பேசி அலறியது.

ஏங்க...

சொல்லு..

வீடு..

சொர்க்கம் என்பது எனக்கு சுத்தம் உள்ள வீடு தான்..

தேங்க்ஸ்.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்களேன்.

வெள்ளி, 9 ஜூன், 2017

இஞ்சிரிங்கோ... இனிஜெரோ..

சென்ற வாரம் நண்பர் ஆரூர் பாஸ்கர் தாம் ஒரு எத்தோப்பிய  உணவகத்திற்கு சென்றதையும் அங்கே அவர் உண்ட "இனிஜெரோ"  என்ற ஒரு உணவை பற்றியும் எழுதி இருந்தார்.

நாம் தான் உணவு பிரியர் ஆயிற்றே.. எதிர்த்த வீட்டில் குழம்பு கொதித்தால் நம்ம வீட்டில் தட்டை எடுப்போமே..

நண்பரிடம் சற்று விசாரித்த பின் ... அம்மணியிடம்...

பிரென்ட் ஒருத்தர் பிளோரிடாவில் இருக்கார்..

என்ன .. உங்களுக்கு பிரெண்ட்ஸ் எல்லாம் இருக்காங்களா? சொல்லவேயில்லை.

ஜோக்.. இருக்கட்டும் இருக்கட்டும்..

சொல்லுங்க..

கோடை கால காற்றே..

  கோடை விடுமுறை விட்டு ஒரு வாரமாச்சி.. என் பிரச்சனை ஆரம்பிச்சிடிச்சி.

மூத்தவள் 12  வந்து  முடிச்சிட்டு கல்லூரிக்கு  போக தயாராகிட்டா.. செப் கடைசி வாரத்தில் கல்லூரி ஆரம்பிக்கும்.

இளையவள் 9ம் வகுப்பில்  இருந்து 10வது போறா.

விடுமுறை ஆரம்பிச்சி  ஒரு வாரம் ஆச்சி.  காலையில் வேலைக்கு போகும் போது  7  மணிக்கு  ரெண்டு பேரையும்  எழுப்ப போனா அடிக்கவே வந்துட்டாளுங்க.

ஆர் யு ஜோக்கிங்.. ப்ளீஸ் டெல் மீ யு ஆர் ஜோகிங்ன்னு .. கத்துறாளுங்க.

சரி.. அம்மணி பண்ண சுமதியை குடிச்சிட்டு வேலைக்கு போனேன். வழியில்..

விஷ்.. எங்கே இருக்க?

அலுவலகத்தில் இருந்து போன்.

இன்னும் 5  மினிட்ஸ்.. அங்கே இருப்பேன்.

ஒரு ஹெல்ப் பன்னு. பக்கத்தில் இருக்கும் டோனட் கடைக்கு போய் ப்ரேக்பாஸ்ட வாங்கினு வந்துடு. நாங்க ஏற்கனவே பெ பண்ணிட்டோம். ஜஸ்ட் பிக் இட் அப்.

வியாழன், 8 ஜூன், 2017

இது யாரு தெச்ச சட்டை...

என்ன ஒரு அநியாயம். தமிழனாக பிறந்தது இவ்வளவு பெரிய குற்றமா? என்ன தான் நடக்குது இங்கே.

இந்த சட்டையை பாருங்கள். தமிழக அரசாங்கத்தால் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு அளிக்க பட்ட சட்டை.

இதை  பார்த்தவுடனே நெஞ்செல்லாம் பற்றி எறிகின்றது. ஊழல் - லஞ்சம் - கமிசன் இவை மூன்றின் ஒட்டு மொத்த உருவமே  தமிழக அரசு தான்.

மக்களை பற்றி ஒரு சிறு துளி அளவிற்கு கூட அக்கறை இல்லை, இதில் ஆளும்  கட்சி எதிர் கட்சி என்றும் பிரித்து சொல்ல இயலாது. இருவருமே ஒன்று தான்.


படங்கள் : Palanivel Manickam  முகநூல் பக்கத்தில் இருந்து. 

என்னே ஒரு கேவலம். பிஞ்சு நெஞ்சங்களின் தன்னம்பிக்கையிலா ஊழல். வளரும் ஒரு உள்ளதை போற்றி அல்லவா வளர்க்க வேண்டும். இம்மாதிரியான கேவலமான ஆடையை கொடுத்தால் அவனுக்கு என்ன ஊக்கம் வரும்.

இதை மாணவர்களுக்கு இலவசமாக தந்தோம் என்று கோடி கணக்கில் கொள்ளை அடித்து இருப்பார்கள்.

இந்த சுயநலமிக்க வெறிபிடித்த நாய்களை அடித்து துரத்த வேண்டாமா? தங்களின்  பதவி எந்த நேரமும் பறி போகலாம் என்று இவர்கள் தற்போது செய்யும் ஊழலுக்கு அளவே இல்லை.

கொள்ளைக்காரி ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும் என்று எவ்வளவு தைரியமாக வெளிப்படையாக சொல்கின்றார்கள். வேறு எங்கேயாவது இப்படி சொல்ல முடியுமா?

அந்த திருடி இருந்து இருந்தால் இன்னேரம் சிறையில் தானே. அந்த ஆட்சி தொடரும் என்று சொல்வதின் மூலம் நாங்கள் தொடர்ந்து கொள்ளையடிப்போம்   என்று தானே சொல்லி வருகின்றார்கள்.

எதிர் கட்சியோ அதை விட மோசம். ஊழல் என்பதை தமிழகத்திற்க்கு அறிமுக படுத்தியது மட்டும் அல்லாமல்.. குடும்பம் முழுக்க கோட்டீஸ்வரர்கள்.

இந்த குடும்பத்தின் மொத்த சொத்தையும் சேர்த்தால் தமிழகம் உலகிலேயே செல்வந்த நாடாக வாய்ப்புண்டு. அவ்வளவு பேராசை .. அவ்வளவு மோசம்.

இந்த கேவலமான அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சாலையில் செல்லும் போது  பசியும் பட்டினியுமாய் அலையும் பொது ஜனங்களை பார்க்க மாட்டார்களா?

அவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து.. இவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை எல்லாம் நான் திருடி பதுக்கி வைத்து இருக்கின்றேன் என்று சற்றும் குற்ற உணர்ச்சி பட மாட்டார்களா?

நெஞ்சு பொறுக்குதில்லையே..


ஆசிரியர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

இந்த கேவலமான சீருடையை திருப்பி அனுப்புங்கள். இப்படி பட்ட ஊழல் நிறைந்த அமைப்பில் இருப்பதை விட பிள்ளைகள் நிர்வாணமாக பள்ளிக்கு வருவதே மேல்.

இனியும் பொறுக்காதே தமிழா.. 

புதன், 7 ஜூன், 2017

தோட்டத்துல பாத்தி கட்டி..

தண்டம்...

வாத்தியாரே.. என்ன இது.. மதியம் ரெண்டு மணிக்கு போன்? இன்னும் தூங்க போகல..?

இங்கே இப்ப ராத்திரி  ஒன்னரை  ஆவுது...

என்ன அவசரம் சொல்லு..

எப்ப தண்டம் திரும்ப வர?

ஒரு வருஷ ப்ராஜெக்ட் வாத்தியாரே.. கிளம்பும் போதே சொன்னேன் இல்ல.. நவம்பரில் வருவேன். இது அம்புட்டு அவசரமா?

இல்லை.

ஓ... ஒரு வேளை என் வலை தள பதிவு ரசிகர்கள்  என்னை மிஸ் பண்றங்களா?

நீ எப்ப பதிவு எழுதுன?

நான் எதுக்கு எழுதணும்.. நான் எழுதவேண்டியது எல்லாத்தையும் தான் நீ எழுதிரியே.. சரி விஷயத்தை சொல்லு.

நேத்து ஒரு விபரீதம் நடந்துடிச்சி தண்டம்.