திங்கள், 26 ஜூன், 2017

சிம்புவுக்கு ஒரு ....

சிம்புவுக்கு ஒரு ....

சிலம்பரசன்.. இதை எழுத ஆரம்பிக்கும் முன் ஒரு உண்மை. இதுவரை நீ நடித்த எந்த படத்தையும் நன் பார்த்ததில்லை. தொழில் நுட்ப வளர்ச்சியினால் தமிழ் திரை உலகின் பாடல் அல்ல சிரிப்பு காட்சி ஏதாவது பார்க்கலாம் என்று யு டுயூப் பக்கம் சென்று தட்டினால் அங்கே நீ நடித்த படங்களின் காட்சிகளும் வரும். அதில் கூட இதுவரை உன் நடிப்பை ஒரு நிமிடத்திற்கு மேல் பார்த்தது இல்லை.

ஏன் பார்ப்பதில்லை?

என்  கல்லூரி நாட்களில் தான் உன் தந்தை கொடி கட்டி பறந்தார். ஆரம்பத்தில் அவரின் இரண்டு படங்களை ரசித்தேன்.. ஆனால், அதன் பின்னால் வந்த படத்தில் படத்தில் அவரின் காட்சிகள் அதிகமாக வருவதால் அவர் படத்தையும் பார்ப்பதை தவிர்த்து விட்டேன்.

இனிய தளத்தில்  எங்கே சென்றாலும் டி ராஜேந்தர் அவர்களின் பேச்சை பார்த்தால் முக்கால் சுளிக்க தோன்றும். ஒரு மனிதன் எப்படி கொஞ்சமும் கூச்சமில்லாமல் தன்னை தானே இப்படி போற்றி கொள்ள இயலும் என்று வியந்த  நாட்கள் உண்டு. TR போல் சுயஸ்துதி யாராலும் பாட இயலாது என்ற எண்ணம் உன் பேச்சை  கேட்டதும் தவிடு பொடியாகியது.



TR கொஞ்சம் பரவாயில்லை. தற்பெருமை பேசினாலும் ஆரம்ப காலத்தில் அவரிடம் சிறிது சரக்கு இருந்தது. அதனால் அவரை கூட சற்று பொறுத்துக்கொள்ளலாம்.

உன்னிடம் என்ன உள்ளது? TR என்பவரின் மகன் என்ற ஒரே காரணத்திற்க்காக சினிமா உலகத்தில் வர நேர்ந்தது. சிறிய வயதிலே உன்னை கொஞ்சமும் கண்டித்து வளர்க்காமல். ... லிட்டில் சூப்பர் ஸ்டார் .. லொட்டு  லொசுக்கு என்று உன் தந்தை உன் புகழ் பாடி வளர்த்ததால் உன் ஆட்டம் தலை கால் புரியாமல் போய்விட்டது.  அதன் விளைவு தான் கடைசியாய் வந்த பீப் சாங்.

35 வயதாகிய உன் அறிவு தன்மை இன்னும் 18 வயது பிள்ளை போல் தான் உள்ளது. உனக்கு கிடைத்த இந்த "சில்வர் ஸ்பூன்" வேறு யாருக்காது கிடைத்து இருந்தால் அவர்களின் வளர்ச்சி சொல்லி மாளாது. அப்படி இருந்து இருக்கும்.

AAA படத்தின் ட்ரைலர் பார்க்கையில் வாந்தி வந்தது என்று தான் சொல்லவேண்டும். இந்த ட்ரைலர் பார்க்கும் போதே... எப்படி ஒரு இயக்குனர் மற்றும் நடிகனால் இவ்வளவு முட்டாள் தனமாக இருக்க முடியும் என்ற எண்ணம் தான் வந்தது.

"நெற்றிகண்" என்ற ஒரு படம். ரஜினி அவர்கள் வெற்றியின் உச்ச கட்டத்தில் இருக்கையில் வெளிவந்த ஒரு படம். அதில் ரஜினி ஒரு வயதானவர் வேடத்தில் வருவார். என்ன ஒரு படைப்பு.. நடிப்பு.. கொஞ்சமும் சிதறாமல் ரசிகர்களை சுண்டி இழுப்பார். அப்படி ஒரு ஈர்ப்பு. பன்ச் லைன் என்று ஒரு மண்ணாங்கட்டியும் அவருக்கு தேவை இல்லை.

ஆனால்.. உன் ட்ரைலரில்.. தற்புகழ்ச்சி.. தற்புகழ்ச்சி.. தற்புகழ்ச்சி.. கொமட்டுகின்றது.

நீயாக கட்டி கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த தற்புகழ்ச்சி மண்கோட்டையில் இருந்து வெளிய வா. நானும் ஒரு சராசரி நடிகன் தான் என்ற மனநிலைக்கு திரும்பி நல்ல கதைகளை கேட்டு "பன்ச் " லைன் இல்லாத படங்களில் நடி. மக்கள் வரவேற்பார்கள்.

மீண்டும் .. மீண்டும்.. நான் யார் தெரியுமா.. எங்க அப்பா யார் தெரியுமா .. நல்லவன்.. கெட்டவன் . கேடு கெட்டவன்.. உதடை  கடிப்பவன்.. உயிரை கொடுப்பவன் என்ற வசனம் எல்லாம் வேலைக்கு ஆகாது.

மற்றும்.. எங்கே எதை படித்தாலும் நீ ஒழுங்காக ஷூட்டிங்குக்கு போவது இல்லை என்று சொல்கின்றார்கள். அது உண்மையா பொய்யா என்று எனக்கு எதெரியாது. ஆனால் அது உண்மை என்று நீயே கூறுவதையும் எங்கேயோ கண்டேன். மாற்றி கொள். தொழில் சுத்தம் வேண்டும்.

AAA படத்தின் கதாபாத்திரத்திற்காக நீ நிறைய எடை கூடினாய் என்று இன்னொரு கதை. நிறைய எடை கூடுவது என்னமோ பெரிய தியாகம் போல் பேச்சு. எடை கூடுவதை விட எளிதான காரியம் எதுவும் இல்லை. அதை நன்கு அறிந்தவன் நான். ( 30 ல் 65  கிலோ 35  தாண்டும்  போது 85  ஆனது. ஆனால் நான் நடிகன் அல்ல .. ஆதலால் அது என்னை மட்டுமே பாதிக்கும்.. என்னை சார்ந்தவர்களை அல்ல ) ஒரு கதாபாத்திரத்திற்க்காக எடையை 20  கிலோ குறைப்பது  தான் பெரிய காரியம்.

மீண்டும் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றால் சற்று  எடையை குறைக்கவும்.

உனக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியப்படுத்த வைத்தாலும், குஷ்பூவுக்கே கோவில் அமைத்த கூமுட்டைகள் வாழும் ஊர் தானே நம்ம ஊர் .. அங்கே எதுவும் நடக்கலாம்.

பாவம் அந்த ரசிகர்களுக்காக உன்னை கொஞ்சம் மாற்றி கொள்.

அடங்கி இரு..
ஆபாசமில்லாதவனாய் இரு..
அடக்கமாய் இரு..

மீண்டும் ஒரு வலம் வரலாம்.

2 கருத்துகள்:

  1. நான் இவர் குடும்பம் சம்பத்தப்பட்டவர்கள் பற்றிய செய்திகளினூடு, புரிந்து கொண்டது இவர் மொத்தக் குடும்பத்துக்குமே ஒருவகை மனநோய், இவருக்கோ அது மிக அதிகம்.
    இனி மாற்றுவது கடினம். சிலசமயம் முற்றி தற்கொலையில் முடியலாம்.
    இதுக்கும் ஒரு ரசிகர் கூட்டம், படம் பார்த்து விட்டு வரும் போது; சுப்பர், செம என்று வேறு சொல்லுதுகளே! ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
    இப்படியே போனால், எஸ்.ஜே.சூரியா போல் விலாசமில்லாமல் போகும் வாய்ப்பு அதிகம்.

    பதிலளிநீக்கு