வியாழன், 27 ஆகஸ்ட், 2015

நண்பனே .. .எனது உயிர் நண்பனே....


விசு, கொஞ்சம் நாளா உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்... ஆனால் பேச முடியில்லை!

வா, தண்டபாணி, கொஞ்ச நாளா பேசவேண்டும் என்று நினைத்தாய், ஆனால் பேச முடியவில்லை என்றால், அது ஒரு நல்ல விஷயமாய் இருக்காதே.. ஏதாவது பிரச்சனையா?

விசு, நீ கோவித்து கொள்ளாவிட்டால் உன்னிடம் ஒன்று கேட்க்க வேண்டும்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

யார் இந்த "மதன் கார்க்கி"...

ஆகஸ்ட் 25ம் தேதி இன்று. இந்த வருடத்தின் இன்னொரு முக்கியமான நாள். இரண்டு ராசாதிக்களுக்கும் இன்னொரு வருட பள்ளி ஆரம்ப நாள். காலையில் சீக்கிரமாக எழுந்து அடித்து பிடித்து இருவரையும் பள்ளிகூடத்திற்கு அனுப்ப வண்டியில் ஏறி போய் கொண்டு இருக்கையில், இருவர் கையிலேயும் ஒரு விண்ணப்பம்.. அதில் நீ வளர்ந்தவுடன் என்ன துறையில் வேலை செய்ய ஆசை படுகின்றாய்.

மூத்தவள் அதற்கு "தணிக்கையாளர் துறை" என்று எழுத இளையவளோ "மருத்துவ துறை " என்று எழுதி இருந்தாள்.

சனி, 22 ஆகஸ்ட், 2015

பாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா ?

அப்படி என்ன தப்பு பண்ணிட்டார் " பிரகாஷ் ராஜ்"

சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் மேல் ஒரு பெண்மணி வழக்கு போட்டு இருந்தார்கள். அந்த விளம்பரத்தில் "கல்யாண வயதில் பெண் இருந்தாலே டென்சன் தானே" என்ற ஒரு வாக்கியம் உள்ளது . இந்த வாக்கியத்தினால் பெண்கள் பெண் இனத்தையே பிரகாஷ் ராஜ் அவமதித்ததாக இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார்கள்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

ஆண்களுக்கு மட்டும் .. ஒரு மெக்சிக்கன் ரகசியம்

வெள்ளி கிழமை மாலை வீடு வந்து சேர்ந்தவுடன்.. ராசாதிக்கள் இருவரும் ... மாலை உணவை பற்றி விசாரிக்க ... (அம்மணி வேளையில் இருந்ததால்) ..என்ன செய்ய சொல்கின்றீர்கள் என்று கேட்க்க ..அவர்கள் இருவரும்... ஒன்றாக சேர்ந்து ...

வாங்க டாடி வெளிய போய் "மெக்சிக்கன் டாக்கோஸ்" போய் சாப்பிடலாம்.

அதுக்கு ஏன்  வெளியே போகவேண்டும். நாமே செய்யலாமே ..

என்னது ... நீங்க... டாக்கோஸ் .. டாடி.. இது என்ன இட்லி தோசையா ? மெக்சிக்கன்..

நான் பெத்த ராசாத்தி.. இட்லி தோசை செய்ய தெரிந்த ஒருவனுக்கு இந்த மெக்சிக்கன் டாக்கோஸ் ... ஜுஜுபி..


இப்படி நாமே நமக்கு சொல்லிக்க வேண்டியது தான்..  

என்று சொல்லி விட்டு நேராக அருகில் உள்ள பலசரக்கு ... (சரக்கு என்றவுடனே டாஸ்மாக் என்று நினைத்து விடாதீர்கள் ) சென்று தேவையானவைகளை வாங்கினேன்.

இந்த டாக்கோஸ் பொதுவாக அசைவத்தை கொண்டு செய்யப்படும். இன்று " இறால் டாக்கோஸ்" செய்யலாம் என்று நினைத்து ..

ஒரு பாக்கட் இறால்
குடை மிளகாய்
கொத்தமல்லி

வாங்கி கொண்டு இல்லத்திற்கு திரும்பினேன். இந்த மூன்றை தவிர இதற்கு "வெங்காயம்- இஞ்சி - பூண்டு- பச்சை மிளகாய்- கடலை மாவு -மிளகு தூள் - தயிர் - எலுமிச்சை "தேவை படும். ஆனால் இந்த பொருள்கள் இல்லத்தில் உள்ளதால் அவற்றை வாங்காமல் வந்து சேர்ந்தேன்.

முதலில் கடலை மாவை தேவையான அளவிற்கு ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு பெரிய கரண்டி தயிர் ஊத்தினேன். பின்னர் அதில் அரைத்த இஞ்சி - பூண்டு ஒரு டீ ஸ்பூன்- ஒரு சிட்டிக்கை மஞ்சள் - மிளகாய் -மிளகு- உப்பு)  எல்லாவற்றையும் போட்டு கலவையாக (நம்மஊர் பஜ்ஜி பாணியில் ) சேர்த்து இறால் உள்ள பாத்திரத்தில் இந்த கலவையை சேர்த்தேன்.

(உடனே ..கலவையை அதில் ஊற்றுவதருக்கு பதில் இறாலை இதில் போட்டு இருக்கலாமே என்று "லொள்ளு" பண்ண கூடாது. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான்)

பிறகு கடாய் ஒன்றை அடுப்பில் ஏற்றி அதில் எண்ணையை ஊற்றி ஒன்றோடு ஒன்று ஒட்டாதவகையில் பொரிக்க ஆரம்பித்தேன். இது பொரித்து கொண்டு இருக்கையில் இன்னொரு அடுப்பில் இன்னொரு கடாய் வைத்து நெருப்பை குறைவாக வைத்து ..



ஒரு அடுப்பில் இறால் அடுத்த அடுப்பில் "வெங்காயம் மிளகாய்" வதக்கல்...

இரண்டு பூண்டு மற்றும் ஒரு சிறு துண்டு இஞ்சியை மிகவும் சிறிய சிறிய துண்டாக வெட்டி அதை இரண்டாவதாக குறைந்த நெருப்பில் உள்ள கடையில் போட்டு வதக்க ஆரம்பித்தேன். அடுத்து சில நிமிடங்களில்  இரண்டு வெங்காயத்தை நீள நீளமாகவும் மற்றும் அந்த குடை மிளகாயை அதே போல வெட்டி அதை அந்த இஞ்சி - பூண்டோடு சேர்த்து வதக்கினேன்.  அதை இறக்கும் முன் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும்  கொத்தமல்லி போட்டு இறக்கினேன்.


இறாலின் பதம் மிகவும் முக்கியம் 

ஒரு பக்கம் இறால் பொரிக்க அடுத்த பக்கம் வெங்காயம் - மிளகாய் பொரிக்க .. அவகோடா (Avocado) என்று அழைக்கப்படும் ( இதை இந்தியாவில் "பட்டர் ப்ருட்" என்பார்கள் ) ஒன்றை ஆரஞ்சு சுளை வடிவில் வெட்டி அடுத்த பாத்திரத்தில் வைத்து கொண்டேன்.

பின்னர் பொறித்த இறால் மற்றும் வெங்காயத்தை தனி தனி தட்டில் போட்டு மேசையில் வைத்து விட்டு .. ரெடி மேட் சப்பாத்தியை சூடு செய்து  மேசையில் வைக்கையில்..

வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் சத்தத்தை கேட்டு..

வாத்தியாரே.. என்ன சூப்பர் வாசனை..

வா, தண்டம்.. என்ன சொல்லிக்காமல் கொல்லிகாமல்..

இல்ல வாத்தியரே.. பிள்ளைகள் வெள்ளியும் அதுவுமா வெளிய போய் சாப்பிடலாமான்னு   கேட்டாங்க, அதுவும் "மெக்சிக்கன்" தான் வேணுமாம்..
அதுதான் வாங்கினு போகலாம்னு வந்தேன். வழியில் உன்னையும் பார்த்துட்டு .. அது சரி என்ன.. உன்வீடு மெக்சிக்கன் வீடு மாதிரி வாசனை..?

பாணி .. உனக்கு ரொம்ப ராசி..தேவையான அளவு எடுத்துக்குனு, அந்த மெக்சிக்கன் கடையில் குடுக்க வேண்டிய டாலரை கொடுத்துட்டு போ.

சோக்கா சொன்ன.. ஆனா, சுந்தரி இன்றைக்கு சைவம் ..

 அதுக்கு.. கவலையே இல்லை தண்டம்.. அஞ்சு நிமிஷம் கொடு ..

என்று சொல்லி அங்கே மீதி இருந்த கடலை மாவு கலவையில் வெங்காயத்தை வட்டமாக வெட்டி போட்டு சில வெங்காய பஜ்ஜி.. மேலும்  இரண்டு பச்சை மிளகாயை போட்டு மிளகாய் பஜ்ஜி...

மீதி மாவில் சைவ ப்ரியர்களுக்கான வெங்காயம் மற்றும் மிளகாய் பஜ்ஜி..

இந்த பாணி ... வைச்சிக்க நீ...

நன்றி வாத்தியாரே..

என்று கூறி பாணி விடை பெற.. அருமை ராசாத்தியோ..

டாடி.. அங்கே மெக்சிக்கன் கடையில் செய்யுற மாதிரியே இருக்கு.. எப்படி டாடி.. ?

மகள்.. நான் தான் சொன்னேனே, இட்லி தோசை செய்யுற ஆளுக்கு இடது ஜுஜுபி...

என்று மனதில்..

என்ன விசு.. ? இப்படி தாக்குறியே .. என்ன வந்தாலும் பிச்சி பிச்சி.. இடஞ்ச்சூட்டி  பொருள் விளக்குறியே என்று என்னையே நான் மெச்சி கொண்டு அதற்கும் மேலே ஒரு படி போய்.. " Visu- Awesome Dad" என்று இருக்கையில் ... ராசாத்தி எனக்கும் ஒரு "டாக்கோஸ்" தயார் பண்ணி கொடுத்தாள்.


                                                      இறால் டாக்கோஸ் தாயார் ..

அது சரி.. சமையல் குறிப்பு தானே இதுக்கு ஏன் இந்த தலைப்பு .."ஆண்களுக்கு மட்டும் .. ஒரு மெக்சிக்கன் ரகசியம்..."

ஒன்னும் இல்ல, இது ரொம்ப சுலபமா செய்ய முடியும். கற்று கொண்டு அசத்துங்கள்.

பின் குறிப்பு :

அண்ணே .. சுந்தரி பேசுறேன்..

சொல்லு சுந்தரி.. தண்டம் வந்தாரா ?

வந்துட்டார் அண்ணே.. சாப்பாடிற்கு   ரொம்ப நன்றி..

 பரவாயில்லை...

அண்ணே ...இருந்தாலும் இவர் உங்களை ரொம்ப புரிஞ்சு வைச்சி இருக்கார்.

புரியல..

இல்ல, சாயங்காலம் உங்களை அந்த கடையில் மறைஞ்சி நின்னு  பார்த்தோம். நீங்கள் வாங்கிய சாமான எல்லாத்தையும் கணக்கு போட்டு கூட்டி கழித்து பார்த்த இவர் ...

நீங்க கண்டிப்பா "பஜ்ஜி இல்லாட்டி டாக்கோஸ்" தான் செய்ய போறீங்கனு அடிச்சி சொன்னார்.

அப்படியா... அப்புறம்..?

நாங்க எல்லாரும் எங்களுக்கும் வேணும்னு அடம் பிடிக்க .. இவர் கவலையே படாதீங்க .. அரை மணி நேரத்தில் வரேன்னு சொல்லிட்டு உங்க வீட்டுக்கு வந்து வாங்கினு வந்தாரு.. ரொம்ப தேங்க்ஸ்.

www.visuawesome.com

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

சந்தன காற்றே … எங்கே தவறினோம்…?

 ஒரு மீள் பதிவு ...


சென்ற வாரம் முழுவதும் இந்தியாவில் இருக்கையில் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் பல காண – கேட்க நேர்ந்தது. இவற்றில் பெரும்பாலானவை அதிக மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்ச்சியாக இருந்தது. இருந்தாலும் சில நிகழ்ச்சிகள் மனதை சோகத்தில் ஆழ்த்தியது.

அவற்றில் ஒன்று.

புதன், 19 ஆகஸ்ட், 2015

உன்னை ஒன்று கேட்பேன்...

புதனும் அதுவுமா ஒரு பதிவு போடலாம்னு உட்கார்ந்தேன். வேலையை முடித்து வீட்டிற்கு வரும் போது .. அடேங்கப்பா, இன்றைக்கு எழுத எவ்வளவோ இருக்கே என்று வந்தேன். இங்கே வந்து அமர்ந்து எழுத ஆரம்பிக்கையில்... ஒன்றுமே எழுத இல்லாததை போல் ஒரு உணர்வு.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

வாழும்மட்டும் நன்மைக்காக......



"டேய் ... பஸ்சுல ஏறும் போது கண்டக்டர் என்ன வயசுன்னு கேட்டா என்ன சொல்லணும்!!?"

"13....அப்பா"

"முட்டா பயலுக்கு பிறந்தவனே...  நான் என்ன சொல்லி கொடுத்தேன்..?""


"11...ப்பா"

"மறந்துடாத..!!

"சரி.. இப்ப நான் தான் கண்டக்டர் .. நீ பஸுல ஏற போற.."

"தம்பி, உனக்கு என்ன வயசு...?"

13 சார்..


"அட பாவி.. 11ன்னு சொல்லுன்னு எத்தனை தரவை சொல்றது...மர மண்டை.. மர மண்டை...!!!"

புதன், 12 ஆகஸ்ட், 2015

சொன்னது நீ தானா . சொல் ! Cell ! செல்! ...

வா வாத்தியாரே.. ஐரோப்பா பயணம் எல்லாம் எப்படி ?

நல்ல போச்சி தண்டம்... நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க.

நல்லா இருக்கோம் வாத்தியாரே..

என்று பேசி கொண்டே இருக்கும் போதே.. தண்டபாணியின் மனைவி திருபுரசுந்தரி அங்கே வந்து சேர்ந்தார்கள்.

ஹலோ சுந்தரி.. எப்படி இருக்கீங்க ..?

நல்லா இருக்கோம் .. அண்ணா.. நீங்க, அக்கா ராசாத்திங்க எப்படி?

எல்லாம் நல்லா இருக்கோம்.

இந்தா,சுந்தரி ஐரோப்பா மில்க் சாக்லேட்...

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

கைக்கு எட்டியது .....? (மாமாவுக்கு குடுமாவின் தொடர்ச்சி..)

 ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்குங்கள் ...


மாமாவுக்கு குடுமா ... குடுமா...


காதை கடித்த ராஜு மாமா அப்படி என்ன சொன்னார் என்பது இருக்கட்டும், அதை கேட்ட நானோ பயந்து போய்

ஆனால் இந்த விஷயம் வீட்டிலே மாமிக்கு தெரிய வந்தா...?

டேய்..நீயே பயத்துள்ள போட்டு கொடுத்துடுவ போல இருக்கே.. இது வீட்டுக்கு வீடு நடக்கிற காரியம் தான்.  நீ இருட்டறதுக்கு முன் சீக்கிரம் போய் நான் சொன்ன வேலைய முடிச்சின்னு வா.

மாமா..

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

அறுபதிலும் ஆசை வரும்... (மாமாவுக்கு குடுமாவின் தொடர்ச்சி..)

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்குங்கள் ....

கல்யாணம் அவர்களின் வீட்டின் உள்ளே....மாமாவின் நண்பர்கள் கிட்ட தட்ட 7-8 பேர் அமர்ந்து கொண்டு ... "சோம பானம்" - "சுறா பானம்" என்று அருந்தி கொண்டு இருந்தனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த ஒரு பெண்மணியும் அங்கே இல்லை. நமக்கு தான் எப்போதுமே ஆர்வ கோளாறு  தாராளமாயிற்றே..

என்ன மாமா.. இது ஒரு "பேச்சிலர்" திருவிழா போல இருக்கே... இங்கே என்ன நடக்குது ?

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

வயதும் வாழ்வும் ... (மாமாவுக்கு குடுமாவின் தொடர்ச்சி..)



தங்கி இருந்துட்டு நாளைக்கு போ .. "யு வோன்ட் ரிக்ரெட்" என்று ஒரு குறும்பு சிரிப்போடு சொல்ல...

என்ன மாமா பிளான் ?

டேய் ... நம்ம கடற்கரைக்கு போய் மீன் பிடிக்கலாம் .. இது தான் சீசன் .. வா நம்ப ரெண்டு பெரும் போய் அள்ளின்னு வரலாம்..

ஏன் மாமா. .இதுக்கு போய்..நேர மார்க்கெட்டுக்கு போய் நமக்கு வேண்டியத வாங்கிக்கலாமே,...

சனி, 8 ஆகஸ்ட், 2015

மாமாவுக்கு குடுமா ... குடுமா...

விடுமுறை முடிந்து இல்லம் வந்த முதல் வார இறுதி. குளிர் சாதன பெட்டியில் "வெட்டு குத்தும் "இல்லை.. "புள் பூண்டும்" இல்லை. சனிகிழமை காலை 5  மணிக்கு அலாரம் வைத்து எழுந்து நேராக கடற்கரையை நோக்கி வண்டியை விட்டேன்.  என் இல்லத்தில் இருந்து ஒரு 20 மைல் தொலைவில் உள்ள ஒரு மீன் சந்தை (எங்க ஊர் காசிமேடு) என்று கூட சொல்லலாம்.

சுட சுட ஒரு காப்பியை போட்டு கொண்டு .. எனக்கு பிடித்த பாடலையும் தட்டிவிட்டு .. வண்டியை உருட்டினேன்.... மனதும் உருண்டது... ஒவ்வொரு நாளும் ஆண்டவன் போட்ட பிச்சை என்று வாழ்பவன் நான். அவன் புண்ணியத்தில் ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன.

புதன், 5 ஆகஸ்ட், 2015

ஒரு கோப்பையிலே என் ....

விடுமுறை முடித்து ஆண்டவன் புண்ணியத்தில் பதினைந்து  நாட்கள் கழித்து இல்லத்தை வந்து சேர்ந்தோம். மணி இரவு 10, திங்கள். அடுத்த நாள் வேலைக்கு போக வேண்டும் என்ற நினைப்பு சற்று பேரு மூச்சை அளித்தாலும், போவதற்கு வேலை உள்ளதே என்ற ஒரு ஆறுதலோடு உறங்க சென்றோம்.

பல மணிநேர பயண களைப்பினால் நான் விட்ட குறட்டை யாருக்கும் கேட்க்கவில்லை.  காலையில் அம்மணியின் குரல்...

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

ஆறு மனமே ஆறு...

என்னடா  இப்ப தான் ஊருக்கு வந்துட்டாரே... மீண்டும் இந்த பயண பதிவு அவசியமா என்று நினைக்க வேண்டாம்.

பதினைந்து நாட்களில் நான்கு பட்டிணங்கள் ...ஜெனீவா- பாரிஸ்-பெர்லின்-லண்டன். இந்த நான்கு பட்டினங்களும் மிகவும் பழமை வாய்ந்தவை.  வெவ்வேறு நாடுகளில் அமைந்து இருந்தாலும் இந்த நான்கு பட்டினங்களுக்கும் சில ஒற்றுமை உண்டு.

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

பம்பர கண்ணாலே காதல் சங்கதி ...

சூறாவளி சுற்று பயணம் .....


15 நாட்களில் பல நாடுகள்- பயணங்கள்- விமானங்கள்-பேருந்துங்கள்  மற்றும் நடராஜா சர்விஸ் என்று கழிந்தாலும்... கடந்த ரெண்டு வாரங்களில் நிறைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை காண ஆண்டவன் கொடுத்த அருளுக்கு நன்றி.


பயணத்தின் நடுவில் நாம் அனைவரும் அறிந்த உயர்ந்த மனிதர் அப்துல் கலாம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்று அறிந்தபோது எதோ நம் இல்லத்தில் ஒருவர் தவறியது போல் ஒரு உணர்ச்சி.  அறிந்த மனிதர். அடக்கமானவர். தலைமுறைக்கு ஒருவர் தான். இவர் நம் தலைமுறை.  எளிய ஆரம்பம் ஆனால் " உன்னால் முடியும் தம்பி" என்று அனைவருக்கும் சொல்லி -செய்து காட்டியவர்.


அவரை அனைவருக்கும் அறிமுகபடுத்திய "அணு" ஆக்கத்திர்க்கு மட்டுமே, என்றுமே அழிவிற்கு அல்ல என்று பிரார்த்திப்போம்.


இந்த பயணங்களில்  என் அம்மணியின் உறவினர்கள் தோழர் தோழிகளை  நிறைய சந்தித்தேன். அனைவரும் மிகவும் அன்பானவர்கள். அவர்கள் கதைக்கும் போது ஈழத்து தமிழை ரசித்தேன்.

அவர்களின் சுந்தர தமிழை மிகவும் ரசித்தேன்.  அனேக தமிழ் வார்த்தைகள் நினைவிற்கு வந்தாலும், ஒரு குறுப்பிட்ட நிகழ்ச்சி மனதில் தங்கி விட்டது.


சுவிஸ் நாட்டில் ஒரு நீர்வீழ்ச்சி அருகே நடந்து கொண்டு இருக்கையில் ... உறவினரின் 14 வயது மகள்.. அருமையான தமிழில்..

ஓடி கொண்டு இருக்கும் அருவியை பார்த்து.. மிக உற்சாகத்தோடு என்னிடம் ...

இங்கே நான் சற்று "துள்ளலாமா"?


என்று கேட்க்க ..நானோ மகிழ்ச்சியில் அமர்ந்தே விட்டேன். என்ன ஒரு அருமையான தமிழ் வாக்கியம்.. நீரில் துள்ளுவது "மீன்"  தானே . அதுவும் இந்த பிள்ளை சுவிஸ் நாட்டிலே பிறந்து இங்கேயே வளர்ந்தவள். பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழியை தாய் மொழி போல் பேசி வரும் ஒரு பலமொழி பேசும் பெண். இப்பெண்ணின் வாயில் இருந்து இப்படி ஒரு செந்தமிழ் ...


இந்த பயணத்தில் அடியேனின் ஐம்பதாவது  பிறந்த நாளை லண்டன் நகரில் உறவினர்கள் நண்பர்களுடன் கழித்ததை மறக்க முடியாது. எப்படியும் 100வது பிறந்த நாளுக்கு திரும்பி வருவேன் என்று சொல்லி விட்டு தான் வந்தேன் .


பின்னர் சுவிஸ் நாட்டில் மனைவியின் சகோதரி வீட்டில் அடியேன் செய்த சமையல்... அவர்கள் அனைவரும் ரசித்து உண்டது (உண்மையாகவே ரசித்தார்கள் என்று தான் நினைக்கின்றேன்) மறக்க முடியாது. சகோதரியின் கணவரும்  பிள்ளைகளும் எங்களிடம் காட்டிய அன்பு.. .ஒருக்காலும் மறக்க முடியாது.


அங்கு இருந்து பாரிஸ் நகரில்... ஐபில் கோபுரம் மற்றும் அரண்மனை ..


ஜெர்மனியில் என் அருமை அக்கா - மாமா வீட்டில் அன்பான உபச்சாரம் .. விருந்தோம்பல் .. மற்றும் மாமா பெரிய வண்டியை எடுத்து கொண்டு கொஞ்சமும் சோராமல் சிறித்து கொண்டே எங்களை போலந்து வரை அழைத்து சென்றது


போலந்தின்  பரோகி...


இவை எல்லாவற்றையும் பதிவுகளாக எழுதினேன், படித்து இருப்பீர்கள்.

போலந்து நாட்டில் இருந்து மீண்டும் லண்டன் வந்து அங்கே என் அக்காவின்  பிள்ளைகளின் வீட்டில் மூன்று நாள் கொண்டாட்டம் .. பின்னர் மூத்த ராசாத்தியின் 16ம் பிறந்த நாள் விழா ...

லண்டன் நகரில் இருந்த மூன்று நாட்களை பற்றி பதிவு எழுதலாம் என்று யோசித்து பின் ... வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

விடுமுறையின் கடைசி நாளன்று மூத்த ராசாத்தியின் பிறந்தநாள் விழாவை லண்டொன் நகரில் ஒரு சிறப்பான இந்தியா -இலங்கை உணவகத்தில்...

அதுசரி.. லண்டன் நகரில்.. பிறந்தநாள் விழாவா ? பதிலுக்கு அவர்கள் வீட்டை எழுதி வாங்கி இருப்பார்களே ... நல்ல கேள்வி தான்.

அந்த பில்லையும் அம்மணியின் தோழி ஒருவர் ஏற்றது மட்டும் அல்லாமல் ... எங்கள் அனைவரயும் ஒரு வாடகை வண்டியில் வேறு ஏற்றி விட்டு அவரே அந்த வாடகையும் கட்டினார்.

இந்த கொண்டாட்டத்தின் போது .. அருகில் இருந்தவர்களின் அன்பு கட்டளையினால் அம்மணிக்கு ஒரு பாடல் அர்ப்பணிப்பு.. நேரம் இருந்தால் கேளுங்கள்..



பம்பர கண்ணாலே காதல் சங்கதி ...

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

பரோகி என்னும் துரோகி

இந்த ஆறு எங்கே போகின்றது என்று கேட்டதற்கு என் அக்கா சொல்லிய பதில் என்னை பேய் அறைந்தவான்  (பேய் அறைந்த கதையை கூடிய சீக்கிரம் சொல்லுகிறேன், பொறுமை ப்ளீஸ்) போல் ஆகியதும் என் வீட்டு அம்மணியை சந்தோசமாகியதையும் சென்ற பதிவில் படித்தோம் அல்லவா ..

அக்கா .. இந்த ஆறு எங்கேசென்று கொண்டு இருகின்றது ..?

போலந்து...

அக்கா, மெதுவா சொல்லுங்க.. அம்மணிக்கு கேட்டுட போது..

ஏங்க அக்கா இந்த ஆறு போலந்து  போதுன்னா சொன்னாங்க...

சீ.. சீ .... சந்து பொந்துன்னு சொன்னாங்க...

சனி, 1 ஆகஸ்ட், 2015

தரை மேல் பிறக்க வைத்தான் ...

ஜெர்மனியில் இன்னொரு நாள்....

பெர்லின் நகரை சுற்றி பார்த்து வீட்டை வந்து சேரும் போது இரவு 10 மணி ஆகிவிட்டது. ஐரோப்பாவில் தான் கோடை நாட்களில் இரவு 10:30 வரை சூரிய வெளிச்சம் உள்ளதே.. அதனால் தினமும் வீட்டை வந்து அடையும் போது மணி பத்துக்கும் மேல் ஆகி விடும்.

அக்கா.. நாளை என்ன பிளான் ...?

இங்கே அருகில் உள்ள நெய்தற்பினோ (Niederfinow )என்ற ஒரு பட்டிணம் அங்கே பாய்ந்து ஓடும்  ஒரு ஆற்றிற்கு போகலாம் என்று ஒரு எண்ணம்..

அக்கா..ஐரோப்பாவில் நிறைய ஆறு பார்த்து விட்டோம். வேறு எங்கேயாவது...?

இது ஒரு வித்தியாசமான ஆறு..

என்ன வித்தியாசம்..