திங்கள், 3 ஆகஸ்ட், 2015

பம்பர கண்ணாலே காதல் சங்கதி ...

சூறாவளி சுற்று பயணம் .....


15 நாட்களில் பல நாடுகள்- பயணங்கள்- விமானங்கள்-பேருந்துங்கள்  மற்றும் நடராஜா சர்விஸ் என்று கழிந்தாலும்... கடந்த ரெண்டு வாரங்களில் நிறைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை காண ஆண்டவன் கொடுத்த அருளுக்கு நன்றி.


பயணத்தின் நடுவில் நாம் அனைவரும் அறிந்த உயர்ந்த மனிதர் அப்துல் கலாம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்று அறிந்தபோது எதோ நம் இல்லத்தில் ஒருவர் தவறியது போல் ஒரு உணர்ச்சி.  அறிந்த மனிதர். அடக்கமானவர். தலைமுறைக்கு ஒருவர் தான். இவர் நம் தலைமுறை.  எளிய ஆரம்பம் ஆனால் " உன்னால் முடியும் தம்பி" என்று அனைவருக்கும் சொல்லி -செய்து காட்டியவர்.


அவரை அனைவருக்கும் அறிமுகபடுத்திய "அணு" ஆக்கத்திர்க்கு மட்டுமே, என்றுமே அழிவிற்கு அல்ல என்று பிரார்த்திப்போம்.


இந்த பயணங்களில்  என் அம்மணியின் உறவினர்கள் தோழர் தோழிகளை  நிறைய சந்தித்தேன். அனைவரும் மிகவும் அன்பானவர்கள். அவர்கள் கதைக்கும் போது ஈழத்து தமிழை ரசித்தேன்.

அவர்களின் சுந்தர தமிழை மிகவும் ரசித்தேன்.  அனேக தமிழ் வார்த்தைகள் நினைவிற்கு வந்தாலும், ஒரு குறுப்பிட்ட நிகழ்ச்சி மனதில் தங்கி விட்டது.


சுவிஸ் நாட்டில் ஒரு நீர்வீழ்ச்சி அருகே நடந்து கொண்டு இருக்கையில் ... உறவினரின் 14 வயது மகள்.. அருமையான தமிழில்..

ஓடி கொண்டு இருக்கும் அருவியை பார்த்து.. மிக உற்சாகத்தோடு என்னிடம் ...

இங்கே நான் சற்று "துள்ளலாமா"?


என்று கேட்க்க ..நானோ மகிழ்ச்சியில் அமர்ந்தே விட்டேன். என்ன ஒரு அருமையான தமிழ் வாக்கியம்.. நீரில் துள்ளுவது "மீன்"  தானே . அதுவும் இந்த பிள்ளை சுவிஸ் நாட்டிலே பிறந்து இங்கேயே வளர்ந்தவள். பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழியை தாய் மொழி போல் பேசி வரும் ஒரு பலமொழி பேசும் பெண். இப்பெண்ணின் வாயில் இருந்து இப்படி ஒரு செந்தமிழ் ...


இந்த பயணத்தில் அடியேனின் ஐம்பதாவது  பிறந்த நாளை லண்டன் நகரில் உறவினர்கள் நண்பர்களுடன் கழித்ததை மறக்க முடியாது. எப்படியும் 100வது பிறந்த நாளுக்கு திரும்பி வருவேன் என்று சொல்லி விட்டு தான் வந்தேன் .


பின்னர் சுவிஸ் நாட்டில் மனைவியின் சகோதரி வீட்டில் அடியேன் செய்த சமையல்... அவர்கள் அனைவரும் ரசித்து உண்டது (உண்மையாகவே ரசித்தார்கள் என்று தான் நினைக்கின்றேன்) மறக்க முடியாது. சகோதரியின் கணவரும்  பிள்ளைகளும் எங்களிடம் காட்டிய அன்பு.. .ஒருக்காலும் மறக்க முடியாது.


அங்கு இருந்து பாரிஸ் நகரில்... ஐபில் கோபுரம் மற்றும் அரண்மனை ..


ஜெர்மனியில் என் அருமை அக்கா - மாமா வீட்டில் அன்பான உபச்சாரம் .. விருந்தோம்பல் .. மற்றும் மாமா பெரிய வண்டியை எடுத்து கொண்டு கொஞ்சமும் சோராமல் சிறித்து கொண்டே எங்களை போலந்து வரை அழைத்து சென்றது


போலந்தின்  பரோகி...


இவை எல்லாவற்றையும் பதிவுகளாக எழுதினேன், படித்து இருப்பீர்கள்.

போலந்து நாட்டில் இருந்து மீண்டும் லண்டன் வந்து அங்கே என் அக்காவின்  பிள்ளைகளின் வீட்டில் மூன்று நாள் கொண்டாட்டம் .. பின்னர் மூத்த ராசாத்தியின் 16ம் பிறந்த நாள் விழா ...

லண்டன் நகரில் இருந்த மூன்று நாட்களை பற்றி பதிவு எழுதலாம் என்று யோசித்து பின் ... வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

விடுமுறையின் கடைசி நாளன்று மூத்த ராசாத்தியின் பிறந்தநாள் விழாவை லண்டொன் நகரில் ஒரு சிறப்பான இந்தியா -இலங்கை உணவகத்தில்...

அதுசரி.. லண்டன் நகரில்.. பிறந்தநாள் விழாவா ? பதிலுக்கு அவர்கள் வீட்டை எழுதி வாங்கி இருப்பார்களே ... நல்ல கேள்வி தான்.

அந்த பில்லையும் அம்மணியின் தோழி ஒருவர் ஏற்றது மட்டும் அல்லாமல் ... எங்கள் அனைவரயும் ஒரு வாடகை வண்டியில் வேறு ஏற்றி விட்டு அவரே அந்த வாடகையும் கட்டினார்.

இந்த கொண்டாட்டத்தின் போது .. அருகில் இருந்தவர்களின் அன்பு கட்டளையினால் அம்மணிக்கு ஒரு பாடல் அர்ப்பணிப்பு.. நேரம் இருந்தால் கேளுங்கள்..



பம்பர கண்ணாலே காதல் சங்கதி ...

5 கருத்துகள்:


  1. எனக்கும் ஈழத்து தமிழ் மிகவும் பிடிக்கும் சார்.
    சிலரை கவனித்ததில் பேச்சில் இருக்கும் தமிழ் எழுத்தில் இருக்காது. சென்னை தமிழ் போல எழுதுவாங்க. அந்த குழந்தையின் தமிழ் அழகு.

    ***
    belated happy birthday wishes sir
    உங்களுக்கும் உங்கள் மூத்த ராசாத்திக்கும்.
    ***
    லண்டன் சுற்று பயணம் (பார்த்த இடங்கள்) சுருக்கமாக்அ எழுதி இருக்கலாம் சார்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்,
    நல்லவேளை நடனம் மட்டும் தான் பார்க்க முடிந்தது, பாட்டு கேட்கல,
    அப்பாடா,,,,, பயணம் தாங்கள் விரும்பிய வண்ணம் அமைந்தது மகிழ்ச்சியே, வாழ்த்துக்கள்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இடையில் சில பகுதிகளை விட்டுவிட்டேனோ? போய் பார்த்துவருகிறேன்! துள்ளலாமா? அருமையான தமிழினை நானும் ரசித்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. இலங்கைத் தமிழ் என்றுமே அழகுதான். நாங்கள் மிகவும் ரசிப்போம். உங்களுக்கு ஒன்ரு தெரியுமா இலங்கைத் தமிழும், கேரள மலையாளத்திற்கும் நிறைய ஒற்றுமை உண்டு. நிறைய தூய தமிழ் சொற்கள் + பேச்சுத் தமிழ் சொற்கள் மலையாளத்தில் பேசப்படுகின்றன அதெ அர்த்தத்தில். தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்த மொழிதானே மலையாளம் அதனால். அந்தத் தூய தமிழ் சொற்களை தமிழராகிய நாம் கூட பேசுவதில்லை...

    எப்படியும் 100வது பிறந்த நாளுக்கு திரும்பி வருவேன் என்று சொல்லி விட்டு தான் வந்தேன் .// வெரி பாசிட்டிவ்...மிகவும் ரசித்தோம்...இதுதான் நாம் வாழ்க்கையை அனுபவிப்பதற்கான அர்த்தம்...

    இனிதான் உங்கள் முந்தைய பயணப் பதிவுகளையும் வாசிக்க வேண்டும்....வாசிக்கின்றோம்...

    பதிலளிநீக்கு