செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

ஆறு மனமே ஆறு...

என்னடா  இப்ப தான் ஊருக்கு வந்துட்டாரே... மீண்டும் இந்த பயண பதிவு அவசியமா என்று நினைக்க வேண்டாம்.

பதினைந்து நாட்களில் நான்கு பட்டிணங்கள் ...ஜெனீவா- பாரிஸ்-பெர்லின்-லண்டன். இந்த நான்கு பட்டினங்களும் மிகவும் பழமை வாய்ந்தவை.  வெவ்வேறு நாடுகளில் அமைந்து இருந்தாலும் இந்த நான்கு பட்டினங்களுக்கும் சில ஒற்றுமை உண்டு.


அவற்றில் சில ..

தனி மனித ஒழுக்கம் ... சாலையில் நடக்கையிலும் சரி, சோலையில் அமருகையிலும் சரி,  போக்கு வரத்து விதிகளை கடைபிடிப்பதிலும் சரி  ஒருவருக்கொருவர் உதவுவதிலும் சரி ஒவ்வொரு பட்டிணமும் ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

சரி, மேலே சொன்ன காரியங்கள் இந்நகரின் மக்களை பற்றியது. இப்போது இந்த பட்டிணங்களை பற்றி சில..

இந்த நான்கு நகரமும் முன்னேறிய நாடுகளின் தலை நகரம் (பெர்லின் தவிர) இந்நாட்டின் பொருளாதாரங்கள் இந்நகரில் தான் அடங்கி உள்ளன.

இந்த நான்கு நகரங்களிலும் நான் கண்டு ரசித்த ஒரு காரியம்.. இங்கே பாய்ந்து ஓடும் ஆற்றை இவர்கள் பராமரிக்கும் விதம்.  இந்த நான்கு நகரமும் சரி, இன்னும் பல நகரங்களும் சரி, தங்களுக்கும் ஒரு பாய்ந்து ஓடும் ஆற்றை வைத்து இருப்பதால் தான் மனித இனம் இங்கே தங்கி தான் இனத்தை பெருக்கியது என்று சொல்லலாம்.

ஒரு நாட்டின் இயற்க்கை வளத்தை காப்பாற்றினால் மற்றவை எல்லாம் தானாக நடைபெறும் என்ற வாக்கியதிர்க்கு இந்த நான்கு நகரங்களும் அத்தாட்சி.

இந்த ஆறுகளை பாருங்களேன்..



ஜெனீவா


பாரிஸ்

பெர்லின்

லண்டன்


நான்கு ஆற்றிலுமே தண்ணீர் பொங்கி அடித்து ஓடி கொண்டு உள்ளது.  இந்த ஆற்று நீர் தான் மொத்த நகரத்திற்கும் குடிநீராக பதபடுத்தி வருவதால், குடிமக்கள் அனைவரும் இந்த ஆற்றை சுத்தமாக வைத்துள்ளார்கள்.

இந்த ஆறுகள் எங்கே இருந்து புறப்பட்டு வருகின்றன என்று நான் கேட்க்க அவர்கள் சொன்ன பதில் என்னை பேய் அறைந்த்தவன் போல் மாற்றியது (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக இன்னொரு நாள் சொல்கிறேன்) . உதாரணத்திற்கு சுவிஸ் நாட்டில் பாயும் இந்த ஆறு ஏழு நாடுகள் கடந்து வருகின்றதாம்.

அட பாவிகளே.. எனக்கு தெரிந்தவரை மாநிலத்தில் இருந்து மாநிலத்திற்கே நாம் தண்ணீர் தரமாட்டோம், இங்கே எப்படி நாட்டை  தாண்டி நாட்டிற்கு என்று வியந்தேன்.

இந்த ஆற்றில் தண்ணீர் அடித்து கொண்டு புரண்டு ஓடி வர இன்னொரு காரணம் இங்கே உள்ள மரங்கள். ஒவ்வொரு நகரத்திலேயும் விமானத்தில் இருந்து இறங்குகையில், நிறைய கட்டிடங்கள் இருந்தாலும் அதற்கு சமமாக நிறைய காடுகள் - புல்வெளிகள்- என்று பார்க்க முடிந்தது.

இந்த நகரங்களை பார்க்கையில் நான் வாழ்ந்து வந்த சில நகரங்களும் நினைவிற்கு வந்தது...

www.visuawesome.com

5 கருத்துகள்:

  1. இருந்தாலும் அதற்கு சமமாக நிறைய காடுகள் - புல்வெளிகள்- என்று பார்க்க முடிந்தது.
    இந்த நகரங்களை பார்க்கையில் நான் வாழ்ந்து வந்த சில நகரங்களும் நினைவிற்கு வந்தது...///

    அவ்லோதானா இந்த பதிவு?
    கற்பனை குதிரை தட்டி ஆற்றோடு பயணம் செய்ய ஆரம்பிக்கும்போது
    என்ன சார் இப்படி பாதியிலே முடிச்சிட்டீங்க?
    இன்னும் கொஞ்சம் பெருசா எழுதி இருந்தா வாசிக்க சுவையா இருக்குமேனு வாசித்து முடிச்சதும்
    தோனிச்சு.
    ம்ம் பதிவே அம்பிட்டுதானா:-) அவ்வ்

    பெசாம நீங்க அடுத்து உங்க Europe trip அனுபவத்தை புக்கா போட்டா செமையா போகும்னு நினைக்கிறேன்:)
    all the best.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்,
    வாருங்கள் அடுத்த வெளியீடு எப்போ,,,,,,
    அழகான புகைப்படங்கள், அருமையான நடை,
    உண்மைதான் நாம் சரியாக எதையும் பராமரிப்பது இல்லை,,,,,,,,,,
    அது சரி எத்தனை பேய்க் கதைகள் இருக்கு, ஏற்கனவே ஒன்னு,,,,,,,,,,
    வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இயற்கையை நேசித்தால் எல்லாம் நன்றாகவே இருக்கும்! இங்குள்ளவர்கள் இயற்கையை அழிக்க அல்லவா செய்கிறார்கள்! அப்புறம் எப்படி ஆற்றில் தண்ணீர் ஓடும்?

    பதிலளிநீக்கு
  4. மனிதன் இயற்கையோடு ஒன்று வாழப் பழகிவிட்டால் சுகம் சுகமே!

    நண்பரே! இப்படி எல்லாம் எழுதி எங்க வயித்தெரிச்சலைக் (1) கிளப்பாதீங்க...!!!! ஹஹஹஹ...படத்தையும் போட்டு....சரி 7 நாடுகள் பாயுந்தும் சண்டை வரலை....டச் வுட்! (வ.எ. 2) நம்ம நாட்டுல மாநிலம் டு மாநிலமே பிரச்சனைதான்..

    (கீதா: இந்தியா உருப்படாது என்ற எண்ணத்தை, எனது டெல்லிப் பயணம் உறுதிப்படுத்தியது...என்னவோ எல்லோரும் எழுதறாங்க வலைத்தளத்தில் நாம் நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும்...இந்தியா விரைவில் முன்னேறிவிடும் என்று..நானும் அப்படித்தான் சென்றேன் தலைநகரத்திற்கு..ஆனா...நிச்சயமா முன்னேற சான்ஸ் இல்லை...பல முறை சென்று வந்தாயிற்று டெல்லிக்கு. எப்பொதும் அப்படியேதான் இருக்கின்றது. ஒன்றே ஒன்று..நிறைய மால்கள் வந்துள்ளன. பல நகரங்கள் பணக்கார நகரங்களாகவும் ஏரியாக்களாகவும், பொது போக்குவரத்தே இல்லாமலும் இருக்கின்றன.....மறு பக்கம் இன்னும் ரிக்ஷா வாலாக்கள் (மிதிவண்டி) இருக்கின்றார்கள்....இந்தியா முன்னேறாது....நல்லவர்கள் ஆட்சிக்கு வராத வரை....)

    பதிலளிநீக்கு
  5. எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயம் இந்தியா முன்னேறி விடும். என் கொள்ளுப்பேரன் காலத்திலோ, அல்லது அவனுடைய கொள்ளுப்பேரன் காலத்திலோ.... நிச்சயம் முன்னேறி விடும்.

    பதிலளிநீக்கு