புதன், 19 ஆகஸ்ட், 2015

உன்னை ஒன்று கேட்பேன்...

புதனும் அதுவுமா ஒரு பதிவு போடலாம்னு உட்கார்ந்தேன். வேலையை முடித்து வீட்டிற்கு வரும் போது .. அடேங்கப்பா, இன்றைக்கு எழுத எவ்வளவோ இருக்கே என்று வந்தேன். இங்கே வந்து அமர்ந்து எழுத ஆரம்பிக்கையில்... ஒன்றுமே எழுத இல்லாததை போல் ஒரு உணர்வு.


நேற்று நண்பன் தண்டபாணியுடன் நடந்த நிகழ்ச்சியை பற்றி எழுதலாமா?

பிரதமர் மோடி அவர்களின் "என்னோட வா துபாய் .. ஏராளம் தான் ருபாய்" பற்றி எழுதலாமா?

இளங்கோவன் அவர்களின் ... " யாகாவாராயினும் நா காக்க" பற்றி எழுதலாமா ?

மதுவிலக்கை பற்றி பேச அறிந்தோர் அத்தனை பேர் இருக்க அதிமுக "மயில்சாமியை" பேச வைப்பதை பற்றி எழுதலாமா ?

பதிவர் வருண் அவர்கள் எழுதிய ஹோண்டா சிவிக் 5 மில்லியன் என்ற பதிவை படித்ததும் ... விமானத்தின் மேல் எனக்கு இருந்த காதலையும், முதல் முறையாக விமானம் ஏறி உயர சென்ற போது அந்த காதல் "ஒரு தலை காதலாக" மாறியதையும் பற்றி எழுதலாமா ?

தேங்க்ஸ் இன் அட்வான்ஸ்.. யு ராக் .

"சுப்ரமணிய சுவாமியின் அமைதி"யை பற்றி எழுதலாமா ?

என் அருமை தோழன் - கோயில் பிள்ளையின்  செதுக்கல்கள் ... சத்தமே காணவில்லையே .. என் என்று எழுதலாமா?

ராசாதிக்களின் பள்ளிக்கூடம் அடுத்த திங்கள் துவங்க போகின்றது.. அமெரிக்க பள்ளி வாழ்க்கையை பற்றி எழுதலாமா ?

ஐம்பதாவது பிறந்தநாளை ஐரோப்பாவில் கொண்டாடிவிட்டு மீண்டும்  வீடு திரும்புகையில்.. இங்கே உள்ளே நண்பர்கள் செல்லமாக கோவித்து கொண்டு பார்ட்டி கேட்கின்றார்களே ...அவர்களுக்கு பார்ட்டி இல்லை என்று எப்படி சொல்ல போகிறேன்... அதை பற்றி எழுதலாமா?

"வாலு" படம் வெளிவந்து அடுத்த நாளே "வெற்றி விழா" கொண்டாடினார்களே.. அதை பற்றி எழுதலாமா?

புதுகோட்டையில் நடக்கும் பதிவர் சந்திப்பை பற்றி எழுதலாமா?

பிலிம் இன்ஸ்டிடுட் தலைமையில் நீல பட கலைஞர் இன்னும் தலைமை அதிகாரியாக இருப்பதை பற்றி எழுதலாமா ?

அதை எதிர்த்து போராடும் மாணவர்களை நள்ளிரவில் கைது செய்த போலிஸ்  பற்றி எழுதலாமா ?

ஸ்மிர்தி இராணி அவர்கள் BAவா அல்ல BComமா என்று அலசி ஆராய்ந்து எழுதலாமா ? (நன்றி.. மதுரை தமிழா :)

புளி குழம்பு ஒன்றை வைத்து விட்டு அதை "வத்த குழம்பு " (சைவ பிரியர்களுக்கு) அல்ல "வாளை மீன்" குழம்பாக எப்படி மாற்றுவது என்று ஒரு சமையல் குறிப்பை எழுதலாமா?

அமெரிக்காவின் அடுத்த தேர்தலில் மீண்டும் "புஷ் - கிளிண்டன் " போட்டியிட வாய்ப்பு வரும் போல் இருகின்றதே .. அதை பற்றி எழுதலாமா ?

எதை பற்றி எழுதலாம்...எதை பற்றி எழுதலாம்?

நீங்கள் தான் சொல்லவேண்டும். தேங்க்ஸ் இன் அட்வான்ஸ்.. யு ராக் ..

www.visuawesome.com

10 கருத்துகள்:

  1. உங்களிடம் தற்சமயம் 15 சப்ஜெட்டுகள் உள்ளன. அத்தனையைப் பற்றியும் ஒவ்வொரு பதிவாக எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி அமுதவன். கண்டிப்பாக எழுதலாம்.

      நீக்கு
  2. எதை எழுதுவது என்று யோசித்து அனைத்தையும் சுருக்கமாக ஆரம்பித்துள்ள விதம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி ஐயா. அனைத்தை பற்றியும் சுருக்கமாக எழுதிவிட்டேன். இனிமேல் ஆராமர்ந்து நிதானமாக ஒவ்வொன்றாக எழுத வேண்டும். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. நீங்கள் எழுதியுள்ள எல்லா தலைப்புகளிலுமே எழுதலாம். ஏனெனில் நீங்கள் எல்லாவற்றையுமே சுவாரஸ்யமாய் எழுதக்கூடியவர். எழுதுங்கள் படிக்க காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே. பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி. தாம் கூறியதை போலவே .. அனைத்தை பற்றியும் ஒவ்வொன்றாக அடுத்த சில நாட்களில் எழுத திட்டமிட்டுள்ளேன் .

      நீக்கு

  4. ஹஹஹஹஹ

    அல்ரெட்ய் யு ராக்! நண்பரே! ஐயோ அத ஏன் கேக்கறீங்க நாங்களும் இப்ப என்ன எழுதனு தெரியாமத்தான் முழிச்சுக்கிட்டு ...எழுதிகிட்டுருக்கோம்...துளசி கேப்பாரு..கீதா பதிவு ஏதாவது இருக்கானு கேட்டு எழுதாம இருக்க....அண்ட் வைஸ் வெர்சா இப்படித்தான் போய்க்கிட்டுருக்கு....உங்கள் மாதிரி இங்கயும் நிறைய தலைப்புகள் பிள்ளையார் சுழியோட கிடப்புல இருக்கு...ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளையார் சுழி போட்டு கிடப்பில் போட
      கூடாது. கடை தேங்காய் வழி பிள்ளையார் பாணியில் அதை இங்கே உடைக்கணும். தேங்காய் சில்லிய போருக்க நாங்கள் தயார்.

      நீக்கு
  5. நேற்று எனக்கும் இப்படி ஓர் குழப்பம்! சிறுகதை ஒன்று எழுதலாம் என்று நினைத்து சரிபட்டு வரவில்லை! வழக்கம் போல கதம்பசோறு பதிவு இடலாமா என்றால் நிறைய குழப்பமாக இருந்தது. மூன்று முறை இணையம் வந்து எதுவும் எழுதாமல் சென்றுவிட்டேன்! இன்றும் ஜோக் எதுவும் தோணவில்லை! பிள்ளைகளுக்கு உடல் நலம் சரியில்லை! அதனால் மனசும் சரியில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராசாதிக்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் எல்லாமே நின்று விடும். முதலில் அவர்களை கவனியுங்கள். அவர்கள் சரியான பின் சிறுகதை என்ன தொடர்கதையே எழுதலாம்.

      நீக்கு