ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

வயதும் வாழ்வும் ... (மாமாவுக்கு குடுமாவின் தொடர்ச்சி..)



தங்கி இருந்துட்டு நாளைக்கு போ .. "யு வோன்ட் ரிக்ரெட்" என்று ஒரு குறும்பு சிரிப்போடு சொல்ல...

என்ன மாமா பிளான் ?

டேய் ... நம்ம கடற்கரைக்கு போய் மீன் பிடிக்கலாம் .. இது தான் சீசன் .. வா நம்ப ரெண்டு பெரும் போய் அள்ளின்னு வரலாம்..

ஏன் மாமா. .இதுக்கு போய்..நேர மார்க்கெட்டுக்கு போய் நமக்கு வேண்டியத வாங்கிக்கலாமே,...

விசு.. மீன் பிடிப்பதே ஒரு தனி சுகம் தான். அதில் காத்து இருப்பது.. பொறுமை.. கடலின் அழகு.. இதை எல்லாம் ரசிக்க கத்துக்க..  சரி உள்ளே போய் 
அத்தையிடம்... தூண்டில், மற்றும் பக்கட் ..

பக்கட் எதுக்கு ?

பிடித்த மீனை போடணும் இல்ல .. அதுக்கு தான்,. சும்மா கூட கூட பேசாதே,

என்ன மாமா?. "யு வோன்ட் ரிக்ரெட் .. "யு வோன்ட் ரிக்ரேட்ன்னு" நீங்க சொன்னவுடன் நான் கூட எதோ நாளைக்கு காலையில் பருப்பு வடை போலன்னு நினைச்சு..

டேய்.. நீயும் உன் பருப்பு வடையும்... அமைதியா கிளம்பி வா .. "யு வோன்ட் ரிக்ரெட் ..."

இரண்டு தூண்டில், பக்கட்.. ஒரு பேக்கட்இறால் ( தூண்டிலில் உள்ள கொக்கியில்  மாட்டுவதர்க்கு தான்) மற்றும் சாப்பிட காலையில் செய்து மீந்த உளுந்த வடை , சில பழவகைகள் எடுத்து கொண்டு .. வீட்டை விட்டு கிளம்பும் போது .. மணி 11.

ஏங்க எப்ப திரும்பி வருவீங்க...

அது நாங்க பிடிக்க போற மீனை பொருத்து இருக்கு.

ஆமா..கடல் மீன்கள் கமலஹாசன்.. வாளி வாளியா பிடிச்சு அதை மணலில் போட போறீங்க.. எப்ப வருவிங்க...

சாயங்காலம்..

அப்ப இரவு சமையல்?

வஞ்சிரம்  கொழம்பு ... மத்தி வறுவல்.. 

அது எல்லாம் ஒன்னும் வீட்டிலே இல்ல..

அபிஷ்ட்டு அபிஷ்ட்டு .. நாங்க புடிச்சின்னு வருவோம் இல்ல .. அதை வச்சி பண்ணலாம்..

நீங்க.. வஞ்சிரம்.. மத்தி.. !? கூடவே ரெண்டு சுராவும் தேடி பிடிங்க.. "சுறா புட்டு" சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சி..

நீ எங்கள கிண்டல் பண்ற மாதிரி தெரியுது. இப்படி நக்கலா பேசாத.. "யு வில்  ரிக்ரெட்.."

என்று சொல்லி விட்டு கடற்கரையை நோக்கி வண்டியை விட்டோம்...

என்ன விசு.. முகம் கொஞ்சம் வாடி இருக்கு ?

(மனதில்... வாடிய பயிரை கண்டேன்.. அது தான்..) ஒன்னும் இல்ல..

டேய்.. அகத்தின் அழகு தெரியுது .. முகத்தில.. உனக்கு மீன் பிடிப்பதில் விருப்பம் இல்லையா ?

என்ன மாமா..? தேவையானத கடையில் வாங்கி சமைப்பதை விட்டுவிட்டு.. கடற்கரையில் போய் மணி கணக்கில் உட்க்கார்ந்து கொண்டு.. இதை எப்படி தான் நீங்க விரும்பி ...

விசு.. இந்த மீன் பிடிக்கிரத்தில் எனக்கும் விருப்பம் இல்ல..

பின்ன.. இந்த தூண்டில்.. பக்கட்.. இறால்......

பொறுமை ... ப்ளீஸ்.. என்று மாமா வண்டியை கடற்கரைக்கு நேர் எதிராக உள்ள திசையில் திருப்பினார்..

மாமா.. எங்கே போறீங்க.. என்று நன் கேட்க்கும் முன்னரே.. 

ஒரு வீட்டின் முன் வண்டி நிற்க .. மாமாவின் வயதை ஒட்டிய இன்னொருவர் கதவை திறக்க....

மாமா வாயெல்லாம் பல்...

விசு.. மீட் மை ப்ரெண்ட் ...கல்யாணம் , கல்யாணம்,  மீட் விசு.. 

ஹலோ மிஸ்டர்.. கல்யாணம்..

ஹலோ விசு.. வாங்க உள்ளே 

என்று அவர் அழைக்க .. அவர் பின்னாலே மற்றொருவர் வர.. கல்யாணம் அவர்கள்..

விசு, மீட் மை  தம்பி .. இவருடைய பெயர சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க...நீங்களே கெஸ் பண்ணுங்க பாப்போம் ...

இவர் உங்க சொந்த தம்பியா ..?

ஆமா .. சொந்த தம்பி தான்.. பின்ன என்ன கடனா வாங்க முடியும்.? (மிஸ்டர் கல்யாணம்.. எனக்கே கிண்டலா.. .. இருக்கட்டும் இருக்கட்டும்... ) எங்க இவர் பெயர கெஸ் பண்ணுங்க.

நிச்சயதார்த்தம் ...

என்ன விசு.. "வ்ராங் கெஸ்.." அதுமட்டும் இல்லாமல் ... நிச்யதார்த்தம்ன்னு  எந்த மடையன் பெயர் வைப்பான்?

(மனதில்...உங்களுக்கு கல்யாணம்னு பெயர் வைச்சாரே.. அதே மடையர் தான் ...) 

நல்ல வேளை, இவர் என் தம்பி.. இதுவே அண்ணன்னு சொல்லி பெயரை கேட்டு இருந்தா... "விவாகரத்து"ன்னு சொல்லி இருப்பீங்க போல இருக்கே..

(மனதில்.. தப்பு தப்பா பேசுறேள் மிஸ்டர் கல்யாணம். இதுவே அண்ணனா இருந்தா.. அவர் பெயர் "முகூர்த்தம் ".. அக்காவா இருந்தா .. "சாந்தி முகூர்த்தம்" அவருக்கும் பெரிய அண்ணன் இருந்தாதான் .. விவாகரத்து ...)

சாரி... நான் "நிச்சயம் தெரியாது"ன்னு  சொன்னேன். உங்களுக்கு "நிச்சயதார்த்தம்"ன்னு கேட்டுடிச்சி..அப்படி என்ன இவர் பெயர்..?

இவர் பெயரும் விசுதான் விசு..

நைஸ் நேம், மிஸ்டர் விசு... 

என்று பேசி கொண்டே அவர் வீட்டின் உள்ளே சென்ற நான் அங்கே பார்த்த காட்சியை கண்டு...பேய் அறைந்ததை போல் ஆகி விட்டேன் ( பேய் அறைந்த கதையை கண்டிப்பாக இன்னொரு நாள் சொல்கிறேன்...)

அப்படி என்ன பார்த்தேன்.. அங்கே...

தொடர்ச்சியை படிக்க இங்கே சொடுக்குங்கள் ...

அறுபதிலும் ஆசை வரும்... (மாமாவுக்கு குடுமாவின் தொடர்ச்சி..)

தொடரும் ... தொடருங்கள்...

www.visuawesome.com

5 கருத்துகள்:

  1. mm. svarasyamaa pokuthu ...

    thodarkiren ...

    ---நல்ல வேளை, இவர் என் தம்பி.. இதுவே அண்ணன்னு சொல்லி பெயரை கேட்டு இருந்தா... "விவாகரத்து"ன்னு சொல்லி இருப்பீங்க போல இருக்கே..

    (மனதில்.. தப்பு தப்பா பேசுறேள் மிஸ்டர் கல்யாணம். இதுவே அண்ணனா இருந்தா.. அவர் பெயர் "முகூர்த்தம் ".. அக்காவா இருந்தா .. "சாந்தி முகூர்த்தம்" அவருக்கும்
    பெரிய அண்ணன் இருந்தாதான் .. விவாகரத்து ...)///


    hahahha

    பதிலளிநீக்கு
  2. பெயரை கெஸ் பண்ண சொன்னதற்கு நீங்கள் கெஸ் பண்ணிய பெயர்கள் பிரமாதம்! ரசித்து தொடர்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ஹஹஹஹ் நல்ல பெயர் கெஸ்...ரசித்தோம்...தொடர்கின்றோம்....

    பதிலளிநீக்கு
  4. சுத்தி சுத்தி விடுறீங்களே :)
    ஆனால் அருமை!

    பதிலளிநீக்கு
  5. இரசித்துப்படித்தேன்
    அதனால் விடாது தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு