வியாழன், 29 ஜனவரி, 2015

"அவளுக்கென்ன அழகிய முகம்"

இந்த வருடம் துவக்கத்தில் இருந்து நான் இங்கே பதிவகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டேன் . 

இப்போது என் பதிவுகள் என் மற்ற வலைத்தளமான 

www .visuawesome .com 

என்ற இடத்தில் வருகின்றது. தாங்கள் தொடர்ந்து அங்கே வந்து படித்து கருத்து கூறுமாறு கேட்டு கொள்கிறேன்.  





சிறு வயதில் இருந்து என்னை கவர்ந்த ஒரு பாடல். அவளுக்கென அழகிய முகம். இந்த பாடலை முதல் முதலாக கேட்கும் போது எனக்கு ஒரு 14-15 வயது இருந்து இருக்கும்.  என்றாவது ஒரு நாள் வானொலியில் வரும். இந்த காலத்தில் எப்போது எந்த பாடல் வேண்டும் என்றாலும் நொடிபொழுதில் கேட்டு - பார்த்து விடலாம், ஆனால் அந்த காலத்தில் ஒரு பாடலை பார்க்கவேண்டும் என்றால் சினிமா தியட்டர் போனால் தான் உண்டு.

இந்த பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தி அமைப்பில் சௌந்தராஜன் பாடிய பாடல்.  இந்த பாடலை பற்றி பேசும் முன் இந்த படம் வந்த கதையை பற்றி சில வரிகள்.

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ....

டாடி, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்கீங்களே..

என்னாடி ராசாத்தி.. நீயும் உங்க அம்மா மாதிரியே பேச ஆரம்பித்து விட்டாய்?
கதைய மாத்தாதிங்க டாடி, நான் ரொம்ப சீரியஸா பேசுறேன் ...இப்ப வந்து ஜோக் பண்ணிக்கிட்டு.

இப்ப என்ன ஆச்சி? இப்படி பதறுற?

எனக்கு எப்ப வண்டி ஓட்ட சொல்லி தர போறீங்க?

ஏன் மகள்? உனக்கு 6 வயது இருக்கும் போதே சொல்லி கொடுத்தேனே? மறந்துட்டியா?

6 வயதில் .. எனக்கு... என்ன சொல்றிங்க?

வெள்ளி, 23 ஜனவரி, 2015

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்....

என்ன சாரதி ... டைட்டானிக் கப்பலில் மாமியார அனுப்பி வச்ச மாதிரி "பீலிங்கா" இருக்க .....?

சித்தப்பூ.. நொந்து போய் இருக்கேன், நீ வேற இந்த நேரத்தில் ...

என்ன ஆச்சி, சொன்னா தானே தெரியும்

ஒன்னும் இல்ல..

டேய், முகத்தின் வழியலில் அகமே தெரியுது , விஷயத்த சொல்லு!

நேத்து வீட்டில் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது.. என்னத்த சொல்வேன்?

டேய் ... ஒரு ஆம்பிளைக்கு கல்யாணமே ஒரு அசம்பாவிதம் மாதிரி தான்
தோணும், விவரமா சொல்லு. என்னால் முடிந்த வரை ஏதாவது செய்யுறேன் .
வேணா விடு சித்தப்பூ..

வியாழன், 22 ஜனவரி, 2015

தண்டபாணி என் நண்பன்டா...

சனியும் அதுவுமாக வீட்டு தொலை பேசி அலறியது....

ஹலோ.. திஸ் இஸ் விஷ்...

வாத்தியாரே...

சொல்லு தண்டம்,  என்ன தீடீர்ன்னு வீட்டு போன்ல கூப்பிடற? நீ எப்பவுமே அலை பேசியில் தானே அழைப்ப?

இல்ல வாத்தியாரே ... இப்ப தான் மாமியையும் ராசாதிக்களையும்  "சூப்பர் மார்க்கெட்டில்" பார்த்தேன். நீ எங்கேன்னு கேட்டேன், வீட்டில் தான் இருப்பதாக சொன்னார்கள். எப்படி வாத்தியாரே சனியும் அதுவுமா அவங்கள கழட்டி விட்டுநீ மட்டும் வீட்டில் தனியா?

புதன், 21 ஜனவரி, 2015

எனக்கு வர கோவத்துக்கு .....

"அவர்கள் உண்மைகள்" என்ற பெயரில் நண்பர் மதுரை தமிழன் எழுதி வரும் பதிவுகளை விரும்பி படிப்பவன் நான்.  பதிவுலகத்தில் நான் எழுத ஆரம்பித்த நாளில் இருந்தே என்னுடைய பதிவுகளையும் படித்து என்னை உற்சாக படுத்தி வருபவர் இந்த மதுரை தமிழன். நேற்று அவர் தளத்தில் மனதை மிகவும் பாதித்த ஒரு பதிவை கண்டேன்.
அதில் அமெரிக்க மாப்பிள்ளை (அமெரிக்கா மட்டும் இல்ல, வெளிநாட்டில் வாழும் எல்லா ஆண்களையும் தான் ) என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வந்த ஒரு கட்டுரையை பற்றி எழுதி இருந்தார்.

சனி, 17 ஜனவரி, 2015

அந்த நாள் ஞாபகம்... நண்பனே.. நண்பனே...

வார இறுதி...நேரமின்மை ... (எல்லாருக்கும் வார இறுதியில் தான் நேரம் இருக்கும், உன் நிலைமை வித்தியாசமா இருக்கே என்று நிறைய பேர் கேட்பது தெரிகின்றது. அதை பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன்)


அதனால் ஒரு மீள் பதிவு..

கீழ் மூச்சும் மேல் மூச்சும் மாறி மாறி விட்டு கொண்டே ஓடி வந்த தண்டபாணியை என்னப்பா ஆச்சின்னு கேட்டது தப்ப போச்சி.  வாத்தியாரே மோசம் போயிடிச்சேன்னு சொன்னான். விளக்கமா சொல்லு பாணி  என கேட்ட எனக்கு அவன் கொடுத்த பதில் ரொம்ப சாதாரணமா இருந்தது.

இன்னிக்கு என் பொண்டாட்டி பிறந்தநாளாம், நான் மறந்தே போயிட்டேன் என்றான். அட பாவி இதுக்கு போய் ஏன்டா இவ்வளவு பதறுற என்று கேட்டதிற்கு அவன் கொடுத்த பதில் என்னை அதிர வைத்தது.

வெள்ளி, 16 ஜனவரி, 2015

"ரஜினி-விசு- இளையராஜா" ...ஒரு தனி பந்தம்!

சென்ற வாரம் நான் இட்ட " ரஜினிகாந்த் அவர்களை பற்றி விமசரிக்க கூடாதா?" என்ற பதிவிற்கு சில பின்னோட்டங்கள் வந்து இருந்தன.

அதில் ஒன்று நண்பர் காரிகன் இட்ட :
 //இணையத்தில் பல எழுதப்படாத விதிகள் உள்ளன. அதில் ஒன்று ரஜினிகாந்த், இளையராஜா மற்றும் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களை யாரும் விமர்சித்துவிடக்கூடாது என்பது. இது ஒரு சர்வாதிகாரப் போக்கு. மேலும் இவ்வாறு விமர்சனங்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் உளவியல் ரீதியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளார்கள் என்று கருத இடமிருக்கிறது//

வியாழன், 15 ஜனவரி, 2015

ஐ! காணும் பொங்கல் ..... காணாமல் போகுமா?

1982 பொங்கல் நாட்கள். இளங்கலை இறுதி வருடம். முதல்  இரண்டு வருடங்களில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாமால் அந்த அரியர்ஸ்  என்ற கூடுதல் சுமையையும் தூக்கி கொண்டு மூன்றாவது வருடத்து பாடத்தையும் படித்து கொண்டு..


முதல் இரண்டு வருடம் தேர்ச்சி பெறாவிட்டால் பரவாயில்லை. அந்த விஷயம் வீட்டிற்கு தெரியாது. ஆனால் மூன்றாம் வருடம் ஏதாவது பாடத்தில் தவறி விட்டோம் என்றால், பிரச்சனை தான். அந்த செய்தி உலகம் முழுவதும் பரவி விடும்.


ரெண்டாம் வருட நேரத்தில் "அரியர்ஸ் இல்லாத மனிதன் அரை மனிதன்" என்று சிரித்து கொண்டு இருந்த நாங்கள் இந்த மூன்றாம் வருடத்தில் "கருமமே கண்ணாயிரம்" என்று அறையை விட்டு வெளியேறாமல்  படித்து வந்த காலம் அது.

புதன், 14 ஜனவரி, 2015

அடக்க போவது யாரு?

ரிங் ... ரிங் .. அலைபேசியில் நண்பனின் பெயரை தட்டினேன்... அதுவும் ரிங்கியது....

இந்த பாடல் உங்களுக்கு பிடித்து இருந்தால் நம்பர் 2 தட்டுங்கள், இந்த பாடலை நீங்கள் இலவசமாக பெறலாம் ..

"உன் பார்வையில் ஓர் ஆயிரம் கவிதைதான் எழுதுவேன் காற்றில் நானே ..."

அடே  டே...முதுகலை இரண்டாம் ஆண்டு வெளி வந்த பாடல் அல்லவா .. எப்படி மறக்க இயலும்?

 அலை பேசியோடு சேர்ந்து நானும் பாட ஆரம்பித்தேன்.

"தினமும் உன்னை நினைக்கின்றேன் ... நினைவினாலே மறக்கின்றேன்.. உன் பார்..."

ஹலோ திஸ் இஸ் தண்டபாணி ...

என்ன தண்டம்? நல்ல ரசித்து பாடும் போது சிவ பூஜையில் கரடி நுழைந்த மாதிரி நடுவில் வந்துட்ட?

வாத்தியாரே .. ஒரு விஷயம் கேட்பேன், தவறாக நினைக்க மாட்டியே ?

நீ என்ன கேட்க்க போகின்றாய் என்று எனக்கு தெரியும், நானே சொல்லுட்டா?

எங்கே சொல்லு?

செவ்வாய், 13 ஜனவரி, 2015

பொங்கலோ பொங்கல் டு யு டாடி..

டாடி...

சொல்லு மகள்..

இவ்வளவு நாளா நீங்க வெளி நாட்டில் இருந்தாலும் உங்களுக்கு இன்னும் சரியா ஆங்கிலத்தில் பேச தெரியவில்லை.

என்ன ராசாத்தி, வைச்சிக்கினா இல்லன்னு சொல்றேன். வளர்ந்தது இந்தியாவில், தாய் மொழி தமிழ். ஆங்கிலம் பேச ஆரம்பித்ததே உயர் நிலை பள்ளியில் தானே மகள்.. அதனால் அங்கே இங்கே கொஞ்சம் தடுமாறும்.. அதை நீ கண்டுக்காத!

திங்கள், 12 ஜனவரி, 2015

ஹலோ மிஸ்.. ஹலோ மிஸ்..எங்கே போனுங்க...?

என்னடா உலகம் இது? ஒரு வார இறுதியும் அதுவுமா நிம்மதியா கொஞ்சம் இருக்கலாம்னா, இந்த அலை பேசியானால் ஒரு புது பிரச்சனை.

ஒரு 30 வருஷத்திற்கு முன்னால் போன் என்பது ஒரு பெரிய விஷயம். என்னை பெற்ற ராசாத்தி எங்க அம்மா நல்லா படிச்சவங்க, ஒரு நல்ல பதவியில் இருந்தாங்க, அதனால் 70'ல் எங்க வீட்டில் போன் இருந்தது.  அந்த நம்பர் கூட ரெண்டே எண் தான்.

மாசத்திற்கு ஒரு 4 அழைப்பு வந்தாலே பெரிய காரியம். அந்த போன் அடிக்க ஆரம்பித்தால் வீட்டில் உள்ள அனைவரும் அதன் அருகே போய்  நிற்ப்போம். அம்மா அதை எடுத்து...ஹலோ...33 இந்தியா என்பார்கள்.

வெள்ளி, 9 ஜனவரி, 2015

ரஜினிகாந்த் அவர்களை பற்றி விமசரிக்க கூடாதா?

சென்ற வாரம் ” லிங்கா ரஜினியின் கடைசி படமா? ” என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டு இருந்தேன். அறிந்த பதிவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தி, ஒரு பதிவு பல வாசகர்களை பெற வேண்டும் என்றால் அதற்கு தேர்ந்த தலைப்பு இருக்க வேண்டும், என்ற உண்மை.
நிறைய பேர் படிக்க வேண்டும் என்று தலைப்பை தேர்ந்து எடுத்தாலும் நம் பதிவிற்கும் அந்த தலைப்பிற்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் யோசிப்பேன். இந்த தலைப்பு ஒரு கேள்வி குறியாக இருந்தாலும், அந்த பதிவை முடிக்கையில், தன் வயதுக்கு தகுந்தாற்போல் இல்லாத படங்களில் ரஜினி காந்த் நடித்தது இதுவே கடைசி என்று தான் இந்த பதிவை முடித்தேன்.

வியாழன், 8 ஜனவரி, 2015

ஐஸ் ப்ரூட்.. ஐஸ் ப்ரூட்...

டாடி...கொஞ்சம் வந்து காரை எடுங்க..

ஏன் ராசாத்தி ?

பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கட் போய் கொஞ்சம் ஐஸ் கிரீம் வாங்கணும்.

ஐஸ் க்ரீம்மா? இதோ கிளம்புறேன். ஒரு ஐந்து நிமிடம் கொடு மகளே...

கிளம்ப தயாராகி கொண்டு இருக்கும் வேளையில் அடுத்த அறையில் இரண்டு பிள்ளைகளும் சிரிக்கும் சத்தம் கேட்டது... காதை அந்த பக்கம் விட்டேன்.

புதன், 7 ஜனவரி, 2015

ஒரு வார்த்தை சொன்னா .....!

சென்ற பதிவில் எங்கள் இல்லது காரில் DVD மற்றும் TV ஏன் இல்லை என்பதை பார்த்தோம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒரு முக்கியமான காரணம் "இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கொருவர் பேசலாமே" என்பது தான்.

சரி இந்த பதிவில் அப்படி என்னதான் நானும் என் மூத்த ராசாத்தியும் பள்ளி கூடம் போகும் வழியில் பேசுகின்றோம் என்று பார்ப்போமா?

ராசாத்தி... நான் 10வது படிக்கும் போது எங்க பள்ளிக்கூடம் எதிரில் ஒரு சின்ன கடை இருந்தது. வீட்டில் இருந்து கிடைக்கும் சில்லறைகளை நாங்கள் எல்லாம் எடுத்து கொண்டு பள்ளி மணி அடிப்பதற்கு முன்னால் அந்த கடைக்கு சென்று.. கமர்கட், தேன்  மிட்டாய்- முறுக்கு - சீடை மற்றும் பல வகையறாக்களை வாங்கி ரசித்து உண்போம். உங்கள் பள்ளியில் நீங்களும் இப்படி ஏதாவது வாங்கி சந்தோசமாக உண்பீர்களா?

"No "

என்ன மகள்? ஒரு அரை மணி நேரமா நான் எப்படியெல்லாம் என்ஜாய் பண்ணி வாழ்ந்தேன் என்று சொன்னேன், நீ ஒரே ஒரு வார்த்தையில் "நோ" என்று சொல்லிவிட்டாயே.. அது மட்டும் இல்ல ராசாத்தி. அந்த கடைக்கும் பக்கத்துக்கு கடையில் காலண்டர் மாதிரி ஒன்னு தொங்கும். அது ஒரு லாட்டரி ஸ்டைலில் நடக்கும் போட்டி மாதிரி. அதில் முதல் பரிசு.. 5 ருபாய் - ரெண்டாம் பரிசு 2 ருபாய் மற்றும் கூலிங் கிளாஸ், பிளாஸ்டிக் சோப்பு டப்பா , விசில்  அந்த மாதிரி நிறைய பரிசு இருக்கும் , நம்ம ஒரு ஐந்து காசு கொடுத்தா அந்த கலண்டரில் இருக்கும் ஒரு சின்ன இடத்தை கிழித்து பார்த்தோம் என்றால் அதில் பரிசு அல்லது நோ பரிசு என்று இருக்கும். நாங்க எல்லாரும் ரொம்ப ஆவலா இதை செய்வோம். சில நேரங்களில் மற்றவர்கள் எல்லாரும் முறுக்கு அல்லது மற்ற ஏதாவதையாவது வாங்கி சாப்பிடும் போது நான் என்னிடம் உள்ள காசை இந்த ஆட்டத்தில் தோற்று விட்டு அவங்க வாய பார்த்து கொண்டு நிற்ப்பேன். இந்த மாதிரி உங்கள் பள்ளியின் எதிரில் இருந்தால் நீயும் இப்படி செய்து இருப்பாயா?

"Maybe"

ஹ்ம்ம்... அந்த காலத்தில் டிவி எல்லாம் கிடையாது ராசாத்தி. எனக்கு நல்ல நினைவு இருக்கு. கபில்தேவ் என்ற ஒரு  கிரிக்கெட் பிளேயர் அப்ப தன் அறிமுகம் ஆனாரு. அதுவரை தயிர்வடை போல் இருந்த பந்து வீச்சாளர்களை பார்த்து வந்த எங்களுக்கு இவர் வந்து வேகமா பந்து வீசியது ஒரு வரபிரசாதம் போல். சில நேரத்தில் நான் என்  டீச்சரிடம் பாத்ரூம்னு பொய் சொல்லிட்டு நேரா வெளிய போய்  அங்கே இருக்கும் டைலர் கடையில் கிரிக்கட் ஸ்கோர் கேட்டு விட்டு ஓடி வருவேன்.  இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்திற்கு உங் டீச்சரிடம் பொய் சொல்லுவிங்களா ?

 "Sometimes"

எங்க பள்ளிகூடத்தில் எல்லாரும் சீருடை அணியவேண்டும், உயர்வு தாழ்வு, ஏழை பணக்காரன் என்ற எந்த ஒரு வித்தியாசமும் வரகூடாதுன்னு அந்த மாதிரி ஒரு பாலிசி. இங்க உங்களுக்கு எல்லாம் அந்த மாதிரி இல்ல. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் அணியலாம். ஒருவேளை இங்கேயும் சீருடை இருந்தா அது உனக்கு ஒ கே வா?

 "Probably"

செவ்வாய், 6 ஜனவரி, 2015

என்ன சத்தம் இந்த நேரம்...?

ஏற்கனவே சில பதிவுகளில் கூறியது போல், தினந்தோறும் காலை 6 மணிக்கு நானும் என் மூத்த ராசாத்தியும் வீட்டை விட்டு கிளம்பிவிடுவோம். ராசாத்தியை பள்ளியில் இறக்கி விட்டு அதே தெருவில் உள்ள அமைந்துள்ள என் அலுவலகத்திற்கு நான் சென்று விடுவேன்.

திங்கள், 5 ஜனவரி, 2015

."விசுAwesomeமின்துணிக்கைகள்" இன்றோடு முடிந்தது.

என் இனிய தமிழ் மக்களே...

அனைவருக்கும்  எங்கள் குடும்பத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
எங்கள் குடும்பம்
சும்மா கிடந்த சங்கை ஊத்தி கெடுத்த கதை போல்.. "ஆலை இல்லாத ஊரில் இலுப்பப்பூ  சர்க்கரை"  என்று குண்டு சட்டியில் குதிரை ஒட்டி கொண்டு இருந்த என்னை .. அன்பு அண்ணன் பரதேசி @ நியூ யார்க் என்ற பெயரில் பதிவு எழுதி வரும் ஆல்ப்ரெட் .. விசு .. நீங்க கண்டிப்பாக எழுத வேண்டும் என்று சொன்னார்.

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

புடவைக்கு ஒரு பூவா - தலையா ...!

சென்ற பதிவில் "புடவை அழகா இருக்கே?!" என்ற தலைப்பில் நண்பன் தண்டபாணியும் அடியேனும் பட்ட அவதி பற்றி எழுதி இருந்தேன். இந்த பதிவு அதன் தொடர்ச்சி. இந்த பதிவை படிப்பதற்கு முன் சென்ற பதிவை ஒரு முறை படித்து விட்டு வரும் படி கேட்டு கொள்கிறேன் (இங்கே சொடுக்கவும்) .

சரி.. இன்றைக்கான பதிவிற்கு வருவோம்.  சென்ற பதிவை முடிக்கும் போது ... மாட்டி கொண்டோமா .. மாட்டி கொண்டோமா? என்று தான் முடித்தேன்.

சனி, 3 ஜனவரி, 2015

புடவை அழகா இருக்கே..?!

சென்ற வார பதிவில் நான் 2015ல் என் குடும்பத்தினரிடம் இன்னும் அதிகமான நேரம் செலவிடவேண்டும் என்று எழுதி இருந்தேன். நேரம் செலவு செய்வது என்பது என்ன அவ்வளவு சுலபமா? நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு .."நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை" என்று பாடி கொண்டே காலத்தை கடத்த முடியுமா? ஏதாவது பேசலாமே என்று நினைத்து ...மனைவியிடம் ..

வெள்ளி, 2 ஜனவரி, 2015

லிங்கா ரஜினியின் கடைசி படமா?

எனக்கு தேவையா இந்த பதிவு, என்ற கேள்வி சற்று என்னை உறுத்த தான் செய்கின்றது. வளரும் நாட்களில் ரஜினியின் பரம விசிறி ஆயிற்றே நான், என்ன செய்வது?

பரட்டை ஆரம்பித்து படையப்பா வரை ரஜினியை ரசித்தவன் ஆயிற்றே. இந்த ரஜினி -ரசிகன் உறவு கிட்ட தட்ட 30 வருடங்கள் தாண்டி ஓடி கொண்டு இருக்கின்றது.
இது எப்படி இருக்கு?
நான் ஏற்கனவே பல பதிவுகளில் எழுதியது போல் ரஜினி படங்களில் நான் பார்த்த கடைசி படம் படையப்பாதான். பாபா என்ற படத்தை பார்க்க சென்றேன் ஆனால் படம் துவங்கி 20 நிமிடத்தில் துண்டை காணோம் துணியை காணோம் என்று எழுந்து ஓடி வந்து விட்டேன்.

அதற்கு பின் ரஜினியின் எந்த படத்தையும் பார்க்கவில்லை (சந்திரமுகியின் முதல் ஐந்து நிமிடத்தை தவிர) . ஏன்? ரஜினி அவர்கள் தனது வயதிற்கு தகுந்தது  போலான பாத்திரங்களில் நடிக்காதாதால்.

இருந்தாலும் ரஜினியின் ரசிகன் ஆயிற்றே, அதனால் எனக்கு நேரம் கிடைக்கும் போது  ரஜினியின் பழைய படங்களை போட்டு பார்த்து ரசிப்பேன். மீண்டும் மீண்டும் பார்ப்பேன் .

அந்த காலங்களில் ரஜினி நடித்து வெளி வந்த படங்களை ரசித்து பார்ப்பேன்.  " கழுகு  என்ற ஒரு படம், அருமையான இசை அட்டகாசமான பாடல்கள்... எனக்கு பிடித்த கதை அமைப்பும் கூட. படம் ஒரு சில  நாட்கள் கூட ஓட வில்லை, இருந்தாலும் இன்றும் கூட நான் அந்த படத்தை ரசித்து பார்ப்பேன்.


சரி .. இப்போது தலைப்பிற்கு வருவோம்.

"லிங்கா"  அநேகமாக  ரஜினி அவர்கள் தன பேத்தி போன்றவர்களோடு ஆடி பாடி நடிக்கும் கடைசி படமாக இருக்கும். இனி வரும் ரஜினி படங்கள் அவர் வயதிற்கு  ஏற்றார் போல் அமைந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ரஜினி மீண்டும் தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாக இன்னொரு வலம் வர வேண்டும் என்றால் வயதுக்கேற்ற பாத்திரமாக நடிக்க வேண்டும்.

இன்னும் சொல்ல போனால்,  தன் திரை உலக வாழ்க்கையை வில்லனாக ஆரம்பித்த ரஜினி அவர்கள்,  மீண்டும் ஒரு நல்ல வில்லனாக  வரவேண்டும் என்பதே என் ஆசை .

வருவாரா ?

பின் குறிப்பு:
ஒன்றும் பெரிதாக இல்லை. இனிமேல் வரும் ரஜினியின் ஒரு படத்தையாவது  பார்க்கவேண்டும் என்ற நப்பாசையால் எழுதிய பதிவு இது.