ஞாயிறு, 25 ஜனவரி, 2015

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ....

டாடி, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்கீங்களே..

என்னாடி ராசாத்தி.. நீயும் உங்க அம்மா மாதிரியே பேச ஆரம்பித்து விட்டாய்?
கதைய மாத்தாதிங்க டாடி, நான் ரொம்ப சீரியஸா பேசுறேன் ...இப்ப வந்து ஜோக் பண்ணிக்கிட்டு.

இப்ப என்ன ஆச்சி? இப்படி பதறுற?

எனக்கு எப்ப வண்டி ஓட்ட சொல்லி தர போறீங்க?

ஏன் மகள்? உனக்கு 6 வயது இருக்கும் போதே சொல்லி கொடுத்தேனே? மறந்துட்டியா?

6 வயதில் .. எனக்கு... என்ன சொல்றிங்க?

ஆமாடா ராசாத்தி, உனக்கு 6 வயது இருக்கும் போது தலைக்கு ஹெல்மெட், முட்டிகால் ரெண்டுக்கும் ஒரு பாதுகாப்பு கவசம் .. எல்லாம் வாங்கி நல்ல ஒரு சைக்கிள் வாங்கி சொல்லி கொடுத்தேனே..

டாடி... ரொம்ப நன்றி.. இப்ப எனக்கு 15 வயசு ..

வண்டி ஒட்டுறத, மறந்துட்டியா? கவலையே படாத, எடு, உன் சைக்கிளை, இன்னொரு முறை சொல்லி தரேன்.

டாடி.. நான் சொல்றது சைக்கிள் இல்ல ..

பின்ன என்ன ?

டாடி, எனக்கு 15 வயசு ஆகிவிட்டது. ஐ நீட் டு ஸ்டார்ட் டிரைவிங் கார்.

மகள் இதை சொன்னது தான், சற்று அதிர்ந்தே விட்டேன். நேற்று தான் என் தோள்பட்டையில் அமர்ந்து கொண்டு, விளையாடிக்கொண்டு இருந்தவள், இன்று கார் ஓட்ட தயார் ஆகிவிட்டாளா ? காலம் தான் எவ்வளவு சீக்கிரம் ஓடுகிறது.

15 வயது தானே ஆகிறது மகளே, 18 போல் பார்த்து கொள்ளலாம்.

டாடி.. அடுத்த வருடம் நான் 11ம் வகுப்பு போக போகிறேன். 11ம் வகுப்பு படிக்கும் எந்த பிள்ளையும் அவங்க அப்பா அம்மா வண்டியில் வந்தால் மொத்த பள்ளிக்கூடமே சிரிக்கும்.

ஏன் ராசாத்தி?

என்ன கேள்வி இது டாடி. இன்னும் நீ என்ன குழந்தையா என்று கிண்டல் பண்ணுவார்கள்.

சரி, இப்ப நான் என்ன பண்ண வேண்டும்.

வண்டி ஓட்டுனர் பள்ளிக்கு போன் போட்டு எனக்கு சொல்லி கொடுக்க ஏற்பாடு பண்ணுங்கள்.

ஹலோ ..

ஹலோ, டிரைவிங் பள்ளி கூடம்...

என் மகளுக்கு 15 வயது ஆகிவிட்டது, வண்டி ஓட்ட கற்று கொள்ளவேண்டும் என்று ஆசை படுகின்றாள், அதற்கான  விதி முறைகளை சொல்ல முடியுமா ?

ரொம்ப சந்தோசம். முதலில் ஆன்லைனில் போய் உங்க மகள் பெயரை ரெஜிஸ்டர் செய்யுங்கள் .. பிறகு எங்களை கூப்பிடுங்கள்.

ஆன்லைனில்.. மகளை பற்றிய காரியங்களை ஒப்படைத்தேன். வகுப்பு - மற்றும் வெளியே ஓட்டும் பயிற்சி எல்லாம் சேர்ந்து கிட்ட தட்ட 500 டாலர்  என்று கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் கேட்டார்கள்.

அதையும் கட்டி விட்டு ... மகளிடம் ...

இந்த ஒரு சின்ன விஷயத்திற்காக எனக்கு பொறுப்பே இல்லை என்று உங்க அம்மா போல் சொல்லிவிட்டாயே.. என்று செல்லமாக கோவித்து கொண்டே இருக்கையில்...

ரொம்ப தேங்க்ஸ் டாடி.. இப்ப இன்னொரு முக்கியமான விஷயம் பத்தி பேச வேண்டும்.

சொல்லு மகள்..

எனக்கு என்ன கார் வாங்கி தர போறீங்க ?

மீண்டும் அதிர்ந்தேன்.சில நிமிடங்கள் கழித்து கொஞ்சம் சுதாரித்து கொண்டு ...

இப்ப காருக்கு என்ன அவசியம்?

காருக்கு என்ன அவசியமா ? அப்ப லைசென்ச வாங்கி என்ன பண்ண சொல்றிங்க?

லைசன்ஸ் வாங்கி கொள், உங்க அம்மா காரை அப்ப இப்ப கடன் வாங்கி ஒட்டிக்கோ.

( உள்ளே இருந்து அசரீரி ...) என் காரை சுத்தமா மறந்துடுங்க. அதை நான் யாருக்கும் தர மாட்டேன். வேண்டும் என்றால் உங்க காரை கொடுங்க.

என் கார் என் அலுவலகத்திற்கு சொந்தமானது, அதை வேறு யாரும் ஓட்ட கூடாதே ..

அப்ப வேற ஏதாவது பிளான் பண்ணுங்கோ .

மகள் , உனக்கு எப்ப எப்ப வேணுமோ அப்ப வாடகை வண்டி எடுத்து கொள்ளலாம் ...

கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமால் பேசுறிங்களே.. 15வயது பிள்ளைக்கு  வாடகை வண்டி யாரும் தர மாட்டார்கள்.

இப்ப என்னதான் செய்வது?

கொஞ்சம் நண்பர்கள் நாலு பேரிடம் விசாரியுங்கள்...

நண்பர்களிடம் விசாரித்ததில்..

புது கார் வாங்கினால், இன்சுரன்ஸ் மட்டும் மாதத்திற்கு 250 டாலர் கட்ட வேண்டுமாம்.

இரண்டு - மூன்று வருட பழைய கார் வாங்கினால் இன்சுரன்ஸ் 125 டாலர்  வருமாம்.

பிள்ளை படிப்பில் கெட்டிகாரி என்றால் 10 % தள்ளு படி.

பிள்ளை ஏதாவது ஒரு பள்ளிகூட விளையாட்டில் சிறந்தவர்களாக இருந்தால் இன்னொரு 10% தள்ளு படி.

வண்டி ஓட்ட ஆரம்பித்து 6 மாதத்திற்குள், அளவுக்கும் மீறிய வேகமாக, அலை பேசியில் பேசி கொண்டே ஒட்டியோ, அல்லது டெக்ஸ்ட் பண்ணி கொண்டே ஒட்டியோ, பிடிபட்டால் இன்சூரன்ஸ் 50% மேலே போகும்.

18 வயதிற்கும் கீழே உள்ளவர்கள் இரவு 11 மணிமுதல் காலை 4 வரை எக்காரணத்தை முன்னிட்டும் வண்டி ஓட்ட கூடாது.

ஓட்ட ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு இவர்கள் தனியாக ஓட்டகூடாது. அவர்கள் வண்டியில் லைசென்ஸ் பெற்றுள்ள வேறு ஒரு நபர் அமர்ந்து இருக்க வேண்டும்.

18 வயது வரை, 18 வயதிற்கும் கீழே உள்ளவர்களை இவர்கள் வைத்து ஓட்ட கூடாது (தன உடன் பிறந்த சகோதர சகோதரிகளை தவிர)..

இவ்வாறான பல சட்டங்கள்..

இவற்றை பற்றி யோசித்து  கொண்டு இருக்கும்  போது..

டாடி.. நீங்கள் எப்படி லைசன்ஸ் வாங்கினீர்கள்?

தெரியவில்லை ராசாத்தி, மறந்து விட்டேன்.

ஓகே, குட் நைட் டாடி..

குட் நைட்.

பின் குறிப்பு ;
இந்தியாவில் எப்படி லைசென்ஸ் வாங்கினேன் என்பது நன்றாக நினைவில் உள்ளது. ஆனால் அதை அவளிடம் சொல்ல முடியாதே...
நண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி .. நான் எப்படி லைசென்ஸ் “வாங்கி”னேன் என்பதை இங்கே பதிவிட்டுள்ளேன்.அதை படிக்க இங்கே சொடுக்கவும் ...”எழுத படிக்க கொத்தில்லா …


www.visuawesome.com
நண்பர்களே,
என்னுடைய பதிவுகளும் மற்ற படைப்புகளும் www.visuawesome.com  என்ற தளத்திற்கு மாற்ற பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த  Blog Spot  ல் அடியேன் இருக்க மாட்டேன்.என்எழுத்துக்கள் தங்களுக்கு பிடித்து இருந்தால் www.visuawesome.com  என்ற தளத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர் பார்த்து..

4 கருத்துகள்:

  1. இந்தியாவில் எப்படி லைசென்ஸ் வாங்கினேன் என்பது நன்றாக நினைவில் உள்ளது. ஆனால் அதை அவளிடம் சொல்ல முடியாதே...////
    engalidam sollungalen sir....
    pathivai rasichen.

    amam oru santhekam sir.
    ellarathu vittilum car irukkuma anga?
    anga panakkarar elai enra etra talvu irukkathaa?

    பதிலளிநீக்கு
  2. இதற்கெனவே பல டாலர்கள் ஒதுக்க வேண்டி வருமே...!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்

    ஆகா...ஆகா...
    நல்ல முறையில் சாரதி அனுமதிப்பத்திரம் எடுத்திருந்தால் சொல்லிருக்கலாம்... மற்ற வழிதானே...
    பகிர்வுக்கு நன்றி.த.ம 3
    இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. துட்டு கொடுத்தா ,இங்கே எட்டு கூட போட வேணாம் லைசென்ஸ் வாங்கி விடலாமே :)
    த ம 4

    பதிலளிநீக்கு