புதன், 7 ஜனவரி, 2015

ஒரு வார்த்தை சொன்னா .....!

சென்ற பதிவில் எங்கள் இல்லது காரில் DVD மற்றும் TV ஏன் இல்லை என்பதை பார்த்தோம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒரு முக்கியமான காரணம் "இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கொருவர் பேசலாமே" என்பது தான்.

சரி இந்த பதிவில் அப்படி என்னதான் நானும் என் மூத்த ராசாத்தியும் பள்ளி கூடம் போகும் வழியில் பேசுகின்றோம் என்று பார்ப்போமா?

ராசாத்தி... நான் 10வது படிக்கும் போது எங்க பள்ளிக்கூடம் எதிரில் ஒரு சின்ன கடை இருந்தது. வீட்டில் இருந்து கிடைக்கும் சில்லறைகளை நாங்கள் எல்லாம் எடுத்து கொண்டு பள்ளி மணி அடிப்பதற்கு முன்னால் அந்த கடைக்கு சென்று.. கமர்கட், தேன்  மிட்டாய்- முறுக்கு - சீடை மற்றும் பல வகையறாக்களை வாங்கி ரசித்து உண்போம். உங்கள் பள்ளியில் நீங்களும் இப்படி ஏதாவது வாங்கி சந்தோசமாக உண்பீர்களா?

"No "

என்ன மகள்? ஒரு அரை மணி நேரமா நான் எப்படியெல்லாம் என்ஜாய் பண்ணி வாழ்ந்தேன் என்று சொன்னேன், நீ ஒரே ஒரு வார்த்தையில் "நோ" என்று சொல்லிவிட்டாயே.. அது மட்டும் இல்ல ராசாத்தி. அந்த கடைக்கும் பக்கத்துக்கு கடையில் காலண்டர் மாதிரி ஒன்னு தொங்கும். அது ஒரு லாட்டரி ஸ்டைலில் நடக்கும் போட்டி மாதிரி. அதில் முதல் பரிசு.. 5 ருபாய் - ரெண்டாம் பரிசு 2 ருபாய் மற்றும் கூலிங் கிளாஸ், பிளாஸ்டிக் சோப்பு டப்பா , விசில்  அந்த மாதிரி நிறைய பரிசு இருக்கும் , நம்ம ஒரு ஐந்து காசு கொடுத்தா அந்த கலண்டரில் இருக்கும் ஒரு சின்ன இடத்தை கிழித்து பார்த்தோம் என்றால் அதில் பரிசு அல்லது நோ பரிசு என்று இருக்கும். நாங்க எல்லாரும் ரொம்ப ஆவலா இதை செய்வோம். சில நேரங்களில் மற்றவர்கள் எல்லாரும் முறுக்கு அல்லது மற்ற ஏதாவதையாவது வாங்கி சாப்பிடும் போது நான் என்னிடம் உள்ள காசை இந்த ஆட்டத்தில் தோற்று விட்டு அவங்க வாய பார்த்து கொண்டு நிற்ப்பேன். இந்த மாதிரி உங்கள் பள்ளியின் எதிரில் இருந்தால் நீயும் இப்படி செய்து இருப்பாயா?

"Maybe"

ஹ்ம்ம்... அந்த காலத்தில் டிவி எல்லாம் கிடையாது ராசாத்தி. எனக்கு நல்ல நினைவு இருக்கு. கபில்தேவ் என்ற ஒரு  கிரிக்கெட் பிளேயர் அப்ப தன் அறிமுகம் ஆனாரு. அதுவரை தயிர்வடை போல் இருந்த பந்து வீச்சாளர்களை பார்த்து வந்த எங்களுக்கு இவர் வந்து வேகமா பந்து வீசியது ஒரு வரபிரசாதம் போல். சில நேரத்தில் நான் என்  டீச்சரிடம் பாத்ரூம்னு பொய் சொல்லிட்டு நேரா வெளிய போய்  அங்கே இருக்கும் டைலர் கடையில் கிரிக்கட் ஸ்கோர் கேட்டு விட்டு ஓடி வருவேன்.  இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்திற்கு உங் டீச்சரிடம் பொய் சொல்லுவிங்களா ?

 "Sometimes"

எங்க பள்ளிகூடத்தில் எல்லாரும் சீருடை அணியவேண்டும், உயர்வு தாழ்வு, ஏழை பணக்காரன் என்ற எந்த ஒரு வித்தியாசமும் வரகூடாதுன்னு அந்த மாதிரி ஒரு பாலிசி. இங்க உங்களுக்கு எல்லாம் அந்த மாதிரி இல்ல. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் அணியலாம். ஒருவேளை இங்கேயும் சீருடை இருந்தா அது உனக்கு ஒ கே வா?

 "Probably"



 என்ன ராசாத்தி? என்னுடைய ஒவ்வொரு கேள்வியும் கிட்ட தட்ட அரை மணி நேரம் போது ஆனால் உன் பதில் வெறும் ஒரே ஒரு வார்த்தையில் முடியுதே?  Everything is alright, with you?

"Yes".

 இப்படி பேசி கொண்டே போகையில் ....பள்ளி கூடம்  வந்து விட்டது.

OK டாடி.. ஒரு 10 டாலர்ஸ் கொடுங்க....

"Why "

டாடி.. சீக்கிரம் நேரம் ஆகுது...

ராசாத்தி, சும்மா 10 டாலர்ன்னு கேட்டா எப்படி. ஏன் -  எதற்கு என்று சொல்ல வேண்டும்.

எனக்கு செலவிற்கு வேண்டும்.

மகள்.. நான் என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்ட..10 டாலர் வேண்டும்  என்று கேக்குற.. எதுக்கு என்றால் செலவு என்று சொல்ற? இது என்ன தமிழ் நாடா? இங்கே என்ன திராவிடர் கழக ஆட்சியா நடக்குது.. எல்லாத்தையும் ஒன்னும் கேட்க்காம இலவசமா கொடுக்க...அதனால்.. உன் ஸ்டைலில் ஒரு பதில் ..."No"

டாடி..

இந்தா புடி ஐந்து டாலர் ...

நான் பத்து கேட்ட ஐந்து தரீங்களே..

நீ என்னிடம் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு டாலர்.

பின் குறிப்பு : சிறு வயதில் நான் பள்ளிகூடத்தில் வளரும் போது எவ்வளவு பேசுவேன். ஆடி பாடி மகிழ்வேன். இந்த காலத்து பிள்ளைகள் என்ன கேட்டாலும் ஒரே வார்த்தையில் தானே பதில் சொல்கின்றார்கள். இது இங்கே என் இல்லத்தில் மட்டுமா?  இல்ல எல்லா இல்லதிலேயுமா?
கண்புயுசன் ...

8 கருத்துகள்:

  1. பொதுவாக தாய் தந்தை அதிகமாகப் பேசுபவராக இருந்தால் குழந்தைகளும் அதிகமாகப் பேசுவார்கள். ஒருவேளை உங்க அம்மணி கொஞ்சமாகப் பேசுவார்களோ?

    பதிலளிநீக்கு

  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு
  3. சிலசமயம் என் மகள் வேத ஜனனி டீவியில் போகோ பார்த்து ரசித்துக்கொண்டு நான் கேட்பதற்கு பதில் சொல்லாமலே இருப்பாள்! அவ்வளவு லயிப்பு!

    பதிலளிநீக்கு
  4. சிலசமயம் என் மகள் வேத ஜனனி டீவியில் போகோ பார்த்து ரசித்துக்கொண்டு நான் கேட்பதற்கு பதில் சொல்லாமலே இருப்பாள்! அவ்வளவு லயிப்பு!

    பதிலளிநீக்கு
  5. எல்லா வீட்டிலும் இதுதான் நிலைமை
    நான் பத்து நிமிடம் பேசினால், எனது மகன் ஒரே நொடியில் பதில் கூறுவார்

    பதிலளிநீக்கு
  6. பேச்சு குறைந்தால் செயல் அதிகமாகும்...!

    பதிலளிநீக்கு