செவ்வாய், 6 ஜனவரி, 2015

என்ன சத்தம் இந்த நேரம்...?

ஏற்கனவே சில பதிவுகளில் கூறியது போல், தினந்தோறும் காலை 6 மணிக்கு நானும் என் மூத்த ராசாத்தியும் வீட்டை விட்டு கிளம்பிவிடுவோம். ராசாத்தியை பள்ளியில் இறக்கி விட்டு அதே தெருவில் உள்ள அமைந்துள்ள என் அலுவலகத்திற்கு நான் சென்று விடுவேன்.



பின்னர் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மாலை நேரத்தில் ரெண்டு பெரும் வீட்டிற்கு வந்து விடுவோம். இளைய ராசாத்தி வேறு ஒரு பள்ளிக்கூடம் போவதால் அந்த பள்ளியின் நேரம் வித்தியாசம். அவளை என் மனைவி பார்த்து கொள்வார்கள்.

என் மூத்த ராசாத்தியின் பள்ளியும் என் அலுவலகமும் ஒரே தெருவில் அமைந்து உள்ளது எங்களுக்கு மிக வசதி. எங்கள் இல்லத்தில் இருந்து ஒரு 15 நிமிடத்தில் போய் விட முடியும்.

சிறிய வயதில் இருந்தே ரெண்டு ராசத்திக்களும் எங்கள் கார்களில் DVD மற்றும் TV வசதி இல்லை என்று அழுவார்கள். தங்கள் தோழர் - தோழிகள் எல்லார் காரிலும் இருக்கின்றது, எங்கள் காரில் மட்டும் இல்லையே என்று எப்போது ஒப்பாரி. நானும் என் மனைவியும் இந்த இடத்தில் விட்டு கொடுக்கவில்லை.

எல்லார் காரிலும் இருக்கும் இது ஏன் நம் காரில் மட்டும் இல்லை, என்று அவர்கள் நச்சரிக்க, அம்மணிக்கு  கோபம் வந்து அதட்டினார்கள். நான் நடுவில் புகுந்து சமாதானம் செய்ய போகையில், இந்த காரியம் ஏன் நம் வண்டியில் இல்லை என்பதை நீங்களே பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் என்றார்கள்.

அடே டே, இவ்வளவு பொறுப்பான காரியத்தை நம்மை நம்பி கொடுத்து இருகின்றார்களே என்று எனக்குள்ளே ஒரு சிறிய பெருமை பட்டு கொண்டு என் உரையாடலை ஆரம்பித்தேன்.

என் இனிய ராசாதிக்களே, வாகனத்தில் போகும் நேரத்தில் நாம் ஒருவருக்கொருவர் பேசி கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நம்மை சுற்றி நடப்பவைகளை பார்த்து கற்று கொள்ள எவ்வளவோ விஷயம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் இப்போதில் இருந்தே நீங்கள் உங்கள கவனத்தை பெற்றோர் வண்டி எப்படி ஒட்டுகின்றார்கள், மற்றும் நண்பர்கள் உறவினர்கள் இல்லங்கள்  இருக்கும் இடம். முக்கியமான கடைகள் மற்றும் அரசு அலுவலகங்கள், காவல் நிலையம் போன்ற முக்கியமான இடங்களை அறிந்து கொள்ள இந்த மாதிரியான DVD மற்றும் TV தடங்கலாக இருக்கும்.

மேலும்  இந்த வாகனம் ஓட்டும் நேரத்தில் தான் நம்மை பற்றி ஒருவருக்கொருவர் பேசி ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள முடியும் . நமக்குள் வரும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகளை இங்கே பேசி தீர்த்து கொள்ளலாம். ஒருவருக்கொருவரை  லேசாக கலாய்த்து கொள்ளலாம். இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் பின் இருக்கையில் அமர்ந்து ஏதாவது பார்த்து கொண்டு இருந்தால், முன்னாள் அமர்ந்து வண்டி ஒட்டி கொண்டு இருக்கும் அப்பாவும் அம்மாவும் ஒரு டிரைவர் போல் ஆகிவிடுவோமே..

அதனால் தான் இந்த DVD மறும் TV நம் வண்டியில் இல்லை.
டாடி.. நீங்க சொல்லும் காரியம் சரியாக தோன்றினாலும் எங்களுக்கு என்னவோ, எங்கள் நட்ப்புக்களை பார்த்தல் பொறாமையாக தோன்றுகின்றது. இருந்தாலும்,நீங்கள் சொல்வதால் இந்த "வசதி இல்லாத காரில்" செல்லும் தியாகத்தை நாங்கள் செய்ய போகிறோம்.

நன்றி ராசாதிக்களே, நீங்கள் வளர்ந்த பின் ஒரு நாள் இதன் பலனை புரிந்து கொள்வீர்கள்.

லவ் யு டாடி...

அன்று மாலை: நானும் மனைவியும் தனியாக வாகனத்தில் செல்லும் போது!

ஏங்க, கல்யாணம் ஆனதில் இருந்து நீங்க ரொம்ப சமத்து ஆகிவிட்டீர்கள்.

ஆமா இல்லை. கல்யாணத்திற்கு முன் நான் கல்யாணராமன் போல தானே இருந்தேன்..

அடே, இந்த ஜோக் நல்ல இருக்கே,

சரி சொல்ல வந்த விஷயத்தை சொல்லு.

அது ஒன்னும் இல்லீங்க.

ஒன்னும் இல்லையா, நான் என்னமோ ஏதோன்னு நினைத்தேன்..

கொஞ்சம் சும்மா இருக்கீங்களா ?

நான் சும்மாதானே இருந்தேன்.. நீ தானே.. கல்யாணராமன் - பம்மல் K சம்மந்தம்ன்னு எதோ பேச வந்த..

இல்லைங்க.. அந்த DVD - TV விஷயத்தை ரொம்ப அழகா பிள்ளைகளிடம் எடுத்து சொன்னீங்க. ஐ அம் வெரி ப்ரௌட் ஆப் யு..

தேங்க் யு..

அது சரிங்க..நீங்க.." இந்த வாகனம் ஓட்டும் நேரத்தில் தான் நம்மை பற்றி ஒருவருக்கொருவர் பேசி ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள முடியும் . நமக்குள் வரும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகளை இங்கே பேசி தீர்த்து கொள்ளலாம்" அப்படி சொல்லும் போது நான் ரொம்ப பீலிங் ஆயிட்டேன்.

ரியலி? இந்த மாதிரி விஷயத்தை வேலி மேல போட்ட சேலையை எடுக்குற மாதிரி நிதானமா எடுக்கணும்..

வாழை பழத்தில் ஊசி ஏத்துற மாதிரிங்களா?

இந்த வாழை பழத்தில் ஊசி ஏத்துற பழமொழி ஒரு அர்த்தம் கெட்ட பழமொழி!எந்த முட்டா பையன் வாழ பழத்தில் ஊசி ஏத்துவான்?

அதுவா இப்ப முக்கியம் ?

சரி என்ன சொல்ல வர?

இனிமேல் நம்ப ரெண்டு பேர் கூட காரில் போகும் போது நம்மில் இருக்கிற சின்ன சின்ன சண்டை சச்சரவுகளை தீர்த்து கொள்ளலாமா?

நீ இப்ப "கொள்ளலாமான்னு" சொன்னியா இல்லை "கொல்லலாமான்னு" சொன்னியா?

நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு தப்பா தான் தெரியுது. போன வாரம் கூட...

அம்மா தாயே.. போனவார கதை இப்ப தேவையா?

அப்ப ஏன் .. பிள்ளைகளிடம் காரில் போகும் போது இப்படி பேசி தீர்த்து கொள்ளலாம்னு சொன்னிங்க?

அது பிள்ளைகளுக்கு மா.

அப்ப என்னை என்னா பண்ண சொல்றிங்க?


நம்ம ரெண்டு பெரும் காரில் தனியா போகும் போது... தியானம் பண்ண வேண்டும்.அம்புடுதேன்!

www.visuawesome.com


9 கருத்துகள்:

  1. வணக்கம்
    சொல்லிச்சென்று முடித்த விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. ஒரு போட்டோ ஒரு கணவனின் விருப்பதை அனைத்தையும் சொல்லி விட்டது. ;)

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை
    பிள்ளைகளுக்கு ஒரு நீதி
    மனைவிக்கு ஒரு நீதியா

    பதிலளிநீக்கு
  4. ஹ்ஹாஹ்ஹ்..கடைசில கார்ல சண்டைச் சச்சரவுக்குத் தீர்வு இல்லாம தொடர்கதையாகிடுச்சு போல.....நீங்க படம் போட்டுருக்கற மாதிரிதான் ஒரு பெல்ட் வந்துருக்காமே!!!! அதாவது காரை ஓட்டுபவரின் பக்கத்து சீட் பெல்டுடன் வாயைப் பொத்திக் கட்டுவது போல் பெல்டாமே!! மெய்யாலுமா?!!!! நீங்க அந்த பெல்ட போட்டுட்டீங்க போல..அஹஹ்ஹ்

    பதிலளிநீக்கு
  5. .காம் குறித்துக் கொண்டோம் நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. நம்ம ரெண்டு பெரும் காரில் தனியா போகும் போது... தியானம் பண்ண வேண்டும்.அம்புடுதேன்!///

    haahaahaa

    பதிலளிநீக்கு