வியாழன், 15 ஜனவரி, 2015

ஐ! காணும் பொங்கல் ..... காணாமல் போகுமா?

1982 பொங்கல் நாட்கள். இளங்கலை இறுதி வருடம். முதல்  இரண்டு வருடங்களில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாமால் அந்த அரியர்ஸ்  என்ற கூடுதல் சுமையையும் தூக்கி கொண்டு மூன்றாவது வருடத்து பாடத்தையும் படித்து கொண்டு..


முதல் இரண்டு வருடம் தேர்ச்சி பெறாவிட்டால் பரவாயில்லை. அந்த விஷயம் வீட்டிற்கு தெரியாது. ஆனால் மூன்றாம் வருடம் ஏதாவது பாடத்தில் தவறி விட்டோம் என்றால், பிரச்சனை தான். அந்த செய்தி உலகம் முழுவதும் பரவி விடும்.


ரெண்டாம் வருட நேரத்தில் "அரியர்ஸ் இல்லாத மனிதன் அரை மனிதன்" என்று சிரித்து கொண்டு இருந்த நாங்கள் இந்த மூன்றாம் வருடத்தில் "கருமமே கண்ணாயிரம்" என்று அறையை விட்டு வெளியேறாமல்  படித்து வந்த காலம் அது.



பரீட்சை ஏப்ரல் இறுதியில் தானே  விசு , என்ன ஜனவரியில் விழுந்து விழுந்து படித்து கொண்டு இருக்கின்றாய் ? என் மகளும் இளங்கலை இறுதி ஆண்டு தான் படிக்கின்றாள், இன்னமும் சீரியசாக படிக்க ஆரம்பிக்க வில்லை .....


நொந்து கொண்டே சொன்னார் , அடுத்த ஆத்து "சேதுராம் " மாமா !

மாமா, உங்கள் மகள் எழுத வேண்டியது நாலே பரீட்சை, எனக்கு தான் இங்கே கிட்ட தட்ட ஒரு டசன் இருக்கே .. என்று சொல்லவா முடியும் .அப்படியே சொன்னாலும் அருகே உள்ளே மகளிர் கல்லூரியில் என் பெயரும் புகழும் கெட்டு விடுமே ....


அதனால்...


"நான் இந்த வருட பரீட்சை மட்டும் அல்லாமல் அதன் கூடவே  CA வும் செய்கிறேன்",
என்று சொல்ல ..அவர் முகம் மாறி ...
எங்கே அவள் "?
என்று சத்தம் போட்டு கொண்டே மறைந்தார்.


இவரிடம் இருந்து தப்பித்தோம் என்று மீண்டும் நான் படிக்க ஆரம்பிக்கையில், என்னைவிட ஒரு பாடம் கூடுதலாக அரியர்ஸ் வைத்துள்ள குமார் வந்து சேர்ந்தான்.


விசு என்னமா சமாளிக்கிற .. நீ , CA படிக்கிற .. ? இந்த பொய் அவசியமா விசு ?


குமாரு ... நான் எங்க பொய் சொன்னேன், உண்மைய தான் சொன்னேன் .


அப்ப நீ உண்மையாகவே  CA  படிக்கிறியா? சொல்லவே இல்லை,

டேய் நான் மட்டும் இல்ல, நீயும் தான் CA படிக்கிற!


என்ன சொல்ற விசு ..?


நம்ம மொழியில்  CA க்கு அர்த்தம்  "Clearing Arrears",  அதை "சேதுராம்" மாமா தப்பா புரிந்து கொண்டால்,  நான் ஒரு பொய்க்காரன்  ஆகிவிடுவேனா? என்னடா நியாயம் இது.


பேஷா சமாளிச்ச போ! இன்றைக்கு வீட்டில் போய் அவர் மகளை எண்ணை  ஊத்தாம்ம தாளிக்க போறார்! சரி விசு, இப்ப தான் வருமான வரி டியூஷன் வாத்தியாரிடம் இருந்து செய்தி வந்தது. அடுத்த வாரம் கும்பகோணம் போறாராம். அதனால் அடுத்த வார வகுப்பை எல்லாம் பொங்கல் விடுமுறையில் முடித்து விட வேண்டுமாம். நாளைக்கு காணும் பொங்கல் தானே. மதியம் 3-7 வரை வகுப்பிற்கு வர சொன்னார்.


அட பாவி .. இன்னும் பொங்கலுக்கு வந்த சினிமாவை கூட பார்த்து முடிக்கலே.. குமார்
விசு , சினிமா  முக்கியமா இல்லை , பரீட்சை முக்கியமா ?


குமார் , ரெண்டுமே தான் முக்கியம் .. சரி இப்படி பண்ணலாம் ..நம்ம தலைவர் படம் "பாயும் புலி" ரிலிஸ் ஆகி இருக்கு. இன்றைக்கு அதை பார்த்து விட்டு நாளைக்கு வகுப்பிற்கு போகலாம் . பொங்கல் விடுமுறையில்  ஒரு படம் கூட பார்க்காவிடில் அது நம்ம தமிழ் திரை உலகத்திற்கு செய்கிற துரோகம். .. ஓகே !


படம் முடிந்த பிறகு , வரும் வழியில்..


விசு, என்ன விசு ? கிட்ட தட்ட 4 மணி நேரம் வீண் போச்சே..


குமாரு, மெய்யப்ப செட்டியாரும், SP முத்துராமனும் சேர்ந்து நம்மளை எல்லாரையும் ஒட்டு மொத்தமா முட்டாள்கள் என்று முடிவு பண்ணி விட்டார்கள் போல் இருக்கு


அதுக்குன்னு இவ்வளவு மோசமாவா விசு?


டேய், இது "காற்றுள்ள போதே தூற்றி கொள்" நேரம் ! ரஜினியை வைத்து எப்படி எடுத்தாலும் படம் ஓடிடும் என்ற தைரியம். "மூன்று முகம்" சூப்பர் ஹிட் தானே, அந்த பேரை வச்சி இன்னும் கொஞ்சம் காசு பண்ணலாம்னு பார்த்து இருப்பாங்க.


விசு, கதை என்ன விசு?


இதில் கதை எங்கே இருந்தது குமார்?  For your Eyes Only - Enter The Dragon - 36th Chamber of Shoalin  மூணு படத்தையும் ஒரு டப்பாவில்   போட்டு  குலுக்கி எடுத்து ... என்னத்த சொல்றது..


இந்த ஜெய் சங்கருக்கு இது தேவையா விசு? அவரை ஒர் கராத்தே வீரரா காட்டுறது ... "Its an insult to our intelligence", விசு.


குமார், இந்த SP முத்துராமன் கே.பாலசந்தரின் முதன்மை சீடன், KB இந்த படத்த பார்த்தால் மவனே SPக்கு இன்னிக்கு பால் தான். என்னடா இது, தலைவர் படம் ஒரு நல்ல படம் பார்க்கலாம்னு வந்தா? போன வருஷம் கூட KB தயாரிப்பில் SP தலைவரை வைத்து "புது கவிதை" தந்தாரே, என்னமோ போ குமார், இந்த பொங்கல் வீணா போச்சி!




விசு இங்கே பாரு, பக்கத்துக்கு கிராமத்து சினிமா கொட்டகையில் பழைய KB படம் " அனுபவி ராஜா  அனுபவி"
images


ஆஹா, என்ன ஒரு படம் குமார், இந்த படத்த மட்டும் ஒரு 10 முறை பார்த்து இருப்பேன்.


நான் இன்னும் ஒரு முறை கூட பார்க்கவில்லை விசு ,


அட பாவி, வாழ்க்கையில் பாதி நாள வீணாகிட்டியே? "இன்றே இப்படம் கடைசி"  ன்னு போட்டு இருக்கு. நீ கொடுத்து வைக்கல.


விசு , இப்ப காலையில் 1 ஒரு மணி, இப்பதான் இந்த போஸ்டர் அடிச்சி இருக்காங்க, இன்றைக்கு தான் கடைசி நாள்.


டேய் அங்கே காலை - மதிய காட்சி இல்லை, மாலை 6 மணிக்கு தான் .. போகலாமா ?


போகலாம், ஆனால் அந்த டியூஷன் முடிந்து வர கிட்ட தட்ட 7 ஆகி விடுமே, ஆரம்பத்தில் கொஞ்சம் மிஸ் ஆகுமே பரவாயில்லையா ?


இல்ல குமார், இந்த படத்த பிலிம் போர்டு சேர்டிபிகட்டில் இருந்து பார்க்க வேண்டும்.


டியூஷன் மிஸ் பண்ண கூடாது , சினிமாவையும் முழுசா பார்க்க  வேண்டும் .. இப்ப என்ன பண்றது ...?




என்னிடம் சொல்லிட்ட இல்ல, கவலைய விடு ! நம்ம சாயங்காலம் டியூஷன் க்கு போறோம், அது முடிந்தவுடன் சினிமாவ ஆரம்பத்தில் இருந்து பாக்குறோம்.ஓகே!


புரியல விசு ..


டியூஷன் முடிந்த பின் சினிமா பார்க்க சைக்கிள் விரைந்தது.


குமார், இப்ப என்ன அவசரம? நிதானாமா போ !


சினிமா?


டேய் அது நம்ம போற வரைக்கும் ஆரம்பிக்காது.


கொட்டகையை அடைந்தவுடன் ...


என்ன விசு? எல்லாரும் வெளியே  இருக்காங்க ? படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை போல இருக்கு,   என்னவா இருக்கும் ?


வா அங்க போய்  விசாரிக்கலாம் ..


என்ன ஆச்சி ?


தியேட்டர்குள்ள "நல்ல பாம்பு" வந்ததுன்னு எவனோ புரளியை கிளப்பிவிட்டானாம், அதை "செக் "பண்றாங்க,  என்று சொல்லி கொண்டே என் இன்னொரு நண்பன் ராஜ் வந்தான்!


சில நிமிடம் கழித்து 


டிக்கட் கொடுக்கும் மணி அடிக்க  .. உள்ளே சென்று அமர்ந்தோம் ...


அங்கே .. நாகேசும் முத்துராமனும் ... "அனுபவி ராஜா அனுபவி - நாம் வாழும் உலகம் கையில் வராமல் வாலிபம் எதற்காக "என்று பாடி கொண்டு இருந்தார்கள்








பின் குறிப்பு :


அட பாவி, ஒரு டசன் அரியர்ஸ் வைத்து கொண்டு எங்க அப்பாவிடம்  CA  படிக்கிறேன்னு சொல்லி இருக்கியே, (இந்த அரியர்ஸ் விஷயம் "சிதம்பர ரகசியம்" ஆயிற்றே, இந்த அம்மணிக்கு எப்படி தெரியும் என்று நான் ஒரு நிமிடம் பேய் அறைந்தவன் போல் ஆனேன். பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்)அவரும் அதை நம்பிட்டார்!


இப்ப உன்னை மாதிரியே நானும் சமத்தா படிக்கனும்ன்னு சொல்லி  B Sc Chemistry  படிக்கிற என்னை உடனே  CA  சேருன்னு டார்ச்சர்.


நல்லது தானே படி ..


விசு , நீ நல்ல பாம்பு மாதிரி, பேரு தான் நல்ல பாம்பு, ஆனால் விட்டா ஊரையே  ஓட விடுவ?


அடே  டே, இந்த வசனம் நல்ல இருக்கே !




www.visuawesome.com



நண்பர்களே,
என்னுடைய பதிவுகளும் மற்ற படைப்புகளும் www.visuawesome.com  என்ற தளத்திற்கு மாற்ற பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த  Blog Spot  ல் அடியேன் இருக்க மாட்டேன். என் எழுத்துக்கள் தங்களுக்கு பிடித்து இருந்தால் www.visuawesome.com  என்ற தளத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர் பார்த்து..







4 கருத்துகள்:

  1. CA க்கு அர்த்தம் "Clearing Arrears"//

    haahaahaa ennamaa yosikkuringa sir.
    pathivu super.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    நல்ல உரையாடல் அருமையாக உள்ளது இறுதியில் சொல்லி முடித்த விதம் நன்று.பகிர்வுக்கு நன்றி. த.ம2
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. அருமை சகோ.

    வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்,
    http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_5.html

    பதிலளிநீக்கு