சனி, 11 ஜூலை, 2020

அஜித் சூர்யா விஜய் = அமர் அக்பர் அந்தோணி!

அமர் அக்பர் அந்தோணி என்று அந்த காலத்தில் ஒரு படம். இந்தியில் வெளி வந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. சிறு வயதில் அந்த படத்தின் தலைப்பை கேட்க்கும் போதே மனதில் ஒரு நிம்மதி. எதோ என்னையும் அறியாமல் ஒரு சந்தோசம். இந்தியாவின் இறையான்மையே இந்த ஒற்றுமையில் இருப்பது போல் ஓர் உணர்வு.

தமிழிலும் சங்கர் சலீம் சைமன் என்று ஒரு படம் மற்றும் தெலுங்கில்  ராம் ராபர்ட் ரஹீம் என்ற இன்னொரு படம் வந்தது. இந்த படங்களை பார்க்கும் போதே நம்மையும் அறியாமல் இப்படியும் ஒருமையாக இருக்கலாமே என்ற உணர்வு தொற்றி கொள்ளும்.

இந்த மத நல்லிணக்கம் ஒற்றுமை கடந்த சில வருடங்களில் சீர் குலைந்து சின்னா பின்னமாகி மட்டும் அல்லாமல் ஏறகுறைய பிணமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டம்.

தற்போதைய சூழ்நிலையில் இந்த மாதிரியான தலைப்பில் ஒரு படம் எடுக்க முடியுமா என்பதே ஓர் பெரிய கேள்வி தான். சரி படத்தை விடுங்கள், தலைப்பிற்கு போகலாம். 

"அஜித்  சூர்யா  விஜய்  = அமர் அக்பர் அந்தோணி "

அடே டே. இவர்கள் மூவரை வைத்து ஒரு மெகா தயாரிப்பு வர போகின்றதா?
இல்லை, அப்படி எதுவும் இல்லை.

இவர்கள் மூவரும் சரியான வயதில் விரும்பிய பெண்ணை காதலித்து மணந்து அருமையான இல்லற வாழ்க்கை வாழ்ந்து கொன்டு இருக்கின்றார்கள். 

இவர்களுக்கும் அமர் அக்பர் அந்தோணிக்கும் என்ன சம்பந்தம்?

இவர்களின் துணைவியார்கள் தான்.

அஜித்  - இந்து மாதத்தில் பிறந்தவர். அவர் திருமணம் செய்த அம்மணி கிறிஸ்துவத்தை சார்ந்தவர்.

சூர்யா - இந்து மதத்தை சார்ந்தவர். அவர் திருமணம் செய்த அம்மணி இஸ்லாமை சார்ந்தவர்.

விஜய்  - கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர். அவர் திருமணம் செய்த அம்மணி இந்து மதத்தை சார்ந்தவர்.

இப்படி இவர்கள் மூவரும் எம்மதமும் சம்மதம் என்று இல்லறம் நடத்தி கொண்டு 
 இருக்கையில், சில சமூக விரோதிகள் இவர்களின் திருமணத்தை குறித்து  அறிவுகெட்ட தனமாக பேசி கொண்டு இருக்கின்றார்கள்.

உதாரணத்திற்கு..

சூர்யாவின் அம்மணி ஜோதிகா கோயிலுக்கு பணம் நன்கொடை அளிப்பதை போல் மருத்துவமனைக்கும் அளியுங்கள் என்று சொன்னதை கேட்ட இந்த சனியன்கள்..

எப்படி சொல்லலாம்? இவர் இஸ்லாமியர், அதனால் தான் இப்படி பேசுகின்றார். சூர்யாவை இவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி விட்டார்கள். இப்படி ஒரு பேச்சு.
இவர்கள் இருவருமே ஆன்டி இந்தியன்ஸ், அர்பன் நக்ஸல்ஸ் என்று ஒரு ஒப்பாரி. 

அடுத்து, விஜய்.

இவர் விஜய் அல்ல ஜோசெப் விஜய் என்ற ஒரு நோபில் பரிசு கண்டுபிடிப்பை  உலகிற்கு சொல்லிவிட்டு இவர் ஒரு இந்து பெண்ணை மயக்கி கிருஸ்துவராக்கி திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு பேச்சு. இவர்கள் இருவரும் கிறிஸ்துவ மிசினரி கைக்கூலிகள் என்று ஒரு ஒப்பாரி. 

இப்படி பேசும்  இவர்கள் ..

அஜித் ஒரு கிறிஸ்துவ பெண்ணை மயக்கி இந்துவாக்கி திருமணம் செய்தார் என்று சொல்ல மாட்டார்கள். ஏன் என்றால் இவர்கள் இப்படி எழுதுவதே ஒரு மத நல்லிலக்கணத்தை சீரழித்து இந்து கிறிஸ்டியன் முஸ்லீம் என்று பகையை ஊட்டி அந்த நெருப்பில் தாங்கள் குளிர்காய வேண்டும் என்பதே. 

அறிவு கெட்ட முட்டாள்களே...

வாழ்கையையே செம்மையாக சிறப்பாக வாழ்ந்து வரும் இவர்களை போன்றோரை வாழ விடுங்கள். உங்களின் சில்லறை லாபத்திற்காக இனிமேலும்  இப்படி கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபடாதீர்கள். 

இவர்கள் போன்று சமூகத்தில் பிரபலமானவர்கள் கலப்பு திருமணம் செய்வது  மனித குலத்திற்கு நல்லது. 

நெஞ்சு பொறுக்குதில்லையே ...

2 கருத்துகள்: