சனி, 11 ஜூலை, 2020

நடிகர் பொன்னம்பலம்! என்னதான் நடக்குது?

நேற்று நடிகர் பொன்னம்பலம் அவர்கள் உடல்நல குறைவினால் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காணொளி ஒன்று காண நேரிட்டது.

கூடுதல் தகவலாக இவரின் மொத்த மருத்துவ செலவுகளையும் அதுமட்டும்மல்லாமல் இவர் பிள்ளைகளின் படிப்பு செலவுகளையும் நடிகர் கமல்ஹாசன் ஏற்று கொண்டு இருக்கின்றார் என்ற செய்தியையும் படித்தேன்.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கமல்ஹாசன் அவர்களின் மனிதாபிமான உதவிக்கு மனமார்ந்த நன்றி.

இந்த பதிவை நான் எழுத சில காரணங்கள் உண்டு.

நடிகர் பொன்னம்பலத்தை பல முன்னணி நடிகர்கள் படத்தில் நான் பார்த்த நினைவுண்டு. இவரை பற்றி கொஞ்சம் ஆராய்ந்தால் இவர் நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்துள்ளார்.  நடிப்பு மட்டுமில்லாமல் சண்டை பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

இப்படி சினிமா துறையில் பல வருடங்களாக பணி புரிந்த இவருக்கு ஏன் இன்னொருவர் உதவி செய்து மருத்துவ சிகிச்சை பெரும் நிலை என்ற கேள்வி  உறுத்துகிறது.

ஒரு  தனி மனிதன் ஒரு துறையில் தான் வாழ்வின் முக்கிய அங்கமான 30  வருடங்களை  செலவழித்தும் அதற்க்கு பின்னர் தன்னை பரமாரித்துக்கொள்ள கூடிய அளவில் கூட சேமிப்பு  இல்லாமல் எப்படி இருந்தார்? இவர் உழைத்து பெற்ற பணம் எல்லாம் எங்கே போனது? 

அதுமட்டுமில்லாமல் பல கோடிகள் புழங்கும் சினிமா துறையில் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு போன்ற முக்கியமான விஷயங்கள் இல்லையா? 

என்ன தான் நடக்கின்றது இங்கே?

இவர் சினிமா மட்டும்மில்லாமல் சில அரசியல் காட்சிகளுக்காக "நட்சத்திர பேச்சாளராக" வளம் வந்தார். அதிமுக கட்சிக்காக தேர்தல் நேரத்தில் பேசுவதை பார்த்துள்ளேன்.  இந்த நட்சத்திர பேச்சாளர்களுக்கும்  ஒவ்வொரு மேடை பேச்சிற்கும் ஊதியம் தருவார்கள்.

பின்னர் அதிமுகவை விட்டு வெளியேற பிஜேபி கட்சியில் சேர்ந்தார். அங்கேயும்  அவர் பேச்சிற்காக ஊதியம் ஏதாவது கிடைத்து இருக்கும் .

இப்படி சினிமா மற்றும் அரசியலில் வளம் வந்தவ ஒருவரே அடுத்தவரின் உதவியோடு தான் மருத்துவ சிகிச்சை பெற  முடியுமென்றால், சராசரி மனிதர்களின் நிலைமை என்ன?

மிகவும் குழப்பமாய் இருக்கின்றது.

இதை படிக்கும் அனைவருக்கும் நான் சொல்ல வரும்  விடயம்.

காப்பீடு இல்லாதவர்கள் உடனடியாக காப்பீடு எடுக்கவும். மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு மிகவும் முக்கியம். தங்களின் செலவுகளை கொஞ்சம் அங்கே இங்கே கட்டுப்படுத்தி காப்பீடு எடுத்து கொள்ளுங்கள்.

ஒரு குடும்பத்தின் BREAD WINNER ஒருவருக்கு  திடீரென்று  மரணம் நிகழ்ந்தால் அந்த இறப்பு அந்த குடுமப்த்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.  மற்ற எல்லாவற்றையும் விட மிக பெரிய பின்னடைவு அவர் மறைவினால் வரும் வருமான இழப்பே. 

நாம் இறந்த பின்னரும் நம் குடும்பம் எதற்காகவும்  சிரமப்படக்கூடாது என்றால்  காப்பீடுகளை சரி பார்த்துக்கொள்ளவும்.

இது என்ன விசு ? இன்சூரன்ஸ் இன்சூரன்ஸ் என்று இப்படி கூவி கொண்டு இருக்கிறாரே , ஒரு வேலை இன்சூரன்ஸ் ஏஜெண்டா என்று யாராவது நினைத்தால்.. 

இல்லை, நமக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை. 

கண்ணுக்கெதிரில் நிறைய பேர் இப்படி திட்டமிடாமல் வாழ்ந்து தம் தம் குடும்பத்தை தவிக்க விட்டு செல்வதை பார்த்து இருக்கின்றேன். அதனால் தான் சொல்கிறேன். காப்பீடு மிகவும் அவசியம்.

இன்னொரு விஷயம்.

தமிழகத்தில் மிகவும் முக்கியமாக கருதபடும் இரண்டு விடயங்கள்.

ஒன்று சினிமா மற்றொன்று அரசியல்.

இரண்டிலும்  இருந்தவர் தான் இந்த பொன்னம்பலம். இந்த சினிமா மற்றும் அரசியல் இரண்டுமே இவருக்கு தற்போதைய நிலைமையில் எதுவும்  செய்யவில்லை. 

சினிமா மற்றும் அரசியல் மாயையே.

4 கருத்துகள்:

  1. இரண்டிலும் இருப்பவர்கள் நன்றாக இருக்கையில் இது இப்படியே போகும் என்கிற மனப்பான்மை கொள்வதனால்தான் இப்படி நிலைமை ...

    பதிலளிநீக்கு
  2. சமீபத்தில் நடந்த இந்தியன் படப்பிடிப்பு விபத்தில் கமலஹாசன் சினிமா கலைஞர்களுக்கு காப்பீடு செய்யபபடவேண்டும் என்று பேசி இருந்தார்.  இவர்கள் வருமானத்தை என்ன செய்தார்கள் என்கிற கேள்வி எனக்குள்ளும் இருக்கும்.  அகலக்கால் வைத்து செலவாகி இருக்கும்.  சிக்கனமாக இருந்திருக்க மாட்டார்கள்.  

    பதிலளிநீக்கு
  3. உடம்பையும் மனதையும் நல்வழியில் செலுத்துவதே நல்லதொரு முதல் காப்பீடு...

    பதிலளிநீக்கு