ஞாயிறு, 19 ஜூலை, 2020

சொல்லாத கதையுமுண்டு ....

இன்றுவரை கணக்கு போட்டால் ஏறக்குறைய 750 பதிவுகளை எழுதி இருப்பேன். இந்த பதிவுகளில் 90 % க்கும் மேல் என் வாழ்வின் நடந்த நடக்கின்ற இன்னும் நடக்கும் என்று நான் யூகிக்கின்ற பதிவுகள்.

சிறு வயது ஆரம்ப பள்ளி கதைகள்.. சொந்த கதை சோகக்கதை போல் இருந்தாலும் ஒவ்வொரு பதிவிலும் நான் வாழ்க்கையில் கற்று கொண்ட ஒரு பாடமே.

உயர் நிலை பள்ளி கதைகள் சற்று சோகத்தை தவிர்த்து கொஞ்சம் அடாவடி தனத்தை காட்டி இருக்கும்.

கல்லூரி நாட்கள் பதிவுக்கு இங்கே அதிக இருக்காது. கல்லூரி நாட்களில் நான் படிப்பில் தானே கவனம் செலுத்தினோம். அதனால் இங்கே சொல்லும் படி எதுவம் இல்லை.

அடுத்து வேலைக்கு சேர்ந்த 

பெங்களுர் நாட்கள்... அட பாவத்த என்று நினைக்க சொல்லும்.

தொடர்ந்து பாம்பே நாட்கள்.. இவனுக்குன்னு வந்து  வாய்க்குது பாரு என்று சொல்ல தூண்டும்

அடுத்து தென் அமெரிக்க நாட்கள் ... ரீல் விடுறான். இது சத்தியமா நம்பும் படியா இல்லை..

அடுத்து வளைகுடா நாட்கள்.. இவன் ஆத்தா சத்தியமா எதோ புண்ணியம் பண்ணி இருக்கணும்..

அடுத்து திருமணம் ...  அது என்னமோ சரிதான், இந்த கேரக்டருக்கு இந்தியாவில்  பொண்ணுக்கு எங்கே போறது? யாழ்ப்பாணம் தான் சரி.!

அடுத்து பிள்ளைகள். இரண்டு பொண்ணுங்க.. இனிமேல் கொஞ்சம் அடங்குவான்.

அமெரிக்காவில் இல்லற வாழ்க்க்கை  பரவாயில்லை, வூட்டுக்காரியோட சமத்துல சமாளிச்சிட்டான் .

பதினெட்டு வருடம் ஒரே வேலை - வேற எவன் இவன்னுக்கு வேலை தருவான் என்று ஒரு சாராரும், புளியம்கொம்ப  பிடிச்சி இருப்பான் என்று இன்னொரு சாராரும்.

என்னுடைய அம்மாவை பற்றி. புண்ணியவதி என்று சிலரும், அந்த அம்மாவின் பையனா இதுன்னு பலரும்..

மற்றும்.. தோட்டத்தை பற்றி, சமையலை பற்றி, விளையாட்டை பற்றி ஏன் , எனக்கே எரிச்சலூட்டும் அரசியலை பற்றியும் சில பதிவுகள்.

அம்புட்டையும் எழுத்து முடிச்சாச்சு இன்னும் எதுவும் எழுதறதுக்கு இல்லையேன்னு நேற்று நினைக்கையில்.. 

அட பாவி அந்த "வெயில்- தேங்காய் - மீன் " வாழ்க்கையில் முக்கியமான பாடமாச்சே, அதை எழுதாம விட்டுட்டியேன்னு, எழுத...

அதை படிச்ச அம்மணி ஒருத்தங்க..

"அட பாவி.. இதை படிச்சவுடன் அழுதே புட்டேன்னு" 

ஒப்பாரி வைக்க,  நானோ.

"என்னமோ ஏதோன்னு எழுதினேன். அது உங்களை இவ்வளவு பாதிச்சிச்சா ? "

என்று வினவ..

அவர்களும், 

"சத்தியமா, எவ்வளவு பெரிய விஷயம் அது, தொடர்ந்து எழுது!!"

என்று சொல்ல,

"என்னத்த எழுதுறது? படிக்க ஆளே இல்லை!!"

"ஏன் நாங்க எல்லாம் ஆளுங்க இல்லையா?, விட்டுடாத!!"

"என்னமோ போங்க!!!" 

என்று அவர்களிடம் இருந்து விடை பெற, சில நொடிகளில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார்கள். 

படித்தேன், எவ்வளவு பெரிய உண்மை, 

சொல்லாத கதையொன்று உள்ளத்தில்  வெறுமனே  உறங்கிக்கிடப்பதை விட கொடுமை வேறு எதுவம் இல்லை.

- மாயா ஏஞ்சலு


எழுதி கொண்டே இருப்போம். கதையோ கற்பனையோ நினைவோ  நிஜமோ !


2 கருத்துகள்:

  1. எழுத்தும் ஒரு மருந்து தான்...!

    நமக்காவது குணப்படுத்தும்...(!)

    பதிலளிநீக்கு
  2. விசு சார்,

    தொடர்ச்சியாக பதிவுகள் எழுதும் போது இது போன்று அவ்வப்போது சலிப்பும்; சோர்வும் எட்டிப்பார்ப்பது சகஜம்தான்.
    அதிலும் இப்போ காமெண்டும்; பேஜ்வ்யூசும் ரொம்ப ரொம்ப கம்மி ஆகிடுச்சு.

    அதனால உங்கலுக்கு இப்படி தோனுரது சகஜம்தான்.

    வாசர்கர்கலான எங்கலுக்கு உங்கள் பதிவுகள் எல்லாம் எனர்ஜி பூஸ்டர்.
    ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் சாரின் இண்ட்ரொடக்‌ஷன் பதிவில் இருந்து தங்கலை தொடர்ந்து
    வாசித்து வருகிரேன்.


    நல்லா எழுதுரீங்க;
    என்ன இப்போ வாசிக்கிரதுக்குதான் வாசகர்கள் இல்ல.

    இது ஒட்டு மொத்த பதிவுலக பிரச்சனையே...

    USA ல இருந்து ஐந்துக்கும் மேர்பட்ட தமிழ் யூட்யூப் சேனல்கள் நான் பார்த்து வருகிரேன்.
    ஒவ்வொரு விடியோவுக்கும்;
    எப்படியும் குரைந்தது பத்தாயிரம் பேஜ்வ்யூஸ் வந்திடும்.

    காமெண்ட்ஸ் அது நூத்துல...

    so for a change நீங்கலும் ஒரு யூட்யூப் சேனல் ஆரம்பித்து
    வீடியோக்கள் வெளியிடலாம் சார்.
    தோனுரப்போ பதிவுகள் எழுதுங்க.


    அப்பரம் தங்கலின்

    விசுவாசமின் சகவாசம் புத்தகம் amazon kindle ல பப்லீஷ் பன்னவும்.





    இது வரைக்கும் எழுதிய 750 பதிவுகலில் தேர்ந்தெடுத்து

    ஒவ்வொரு தொகுப்பா kindle ல பப்லீஷ் பன்னவும்.


    எதோ இந்த பதிவை வாசிச்சதும் உங்க கிட்ட சொல்லனும்னு தோனியதை சொன்னேன் சார்.



    பதிலளிநீக்கு