திங்கள், 20 ஜூலை, 2020

ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!

"என்னங்க?"

காலையில் எழுந்தவுடன் அம்மணி.. 

"நேத்து மளிகை கடைக்கு போய் மளிகை சாமான் வாங்க சொன்னேனே. இன்னும் வாங்கலையா!?"

"இல்ல, இன்னைக்கு வாங்குறேன்!"

"மறந்துடாதீங்க, இப்ப எல்லாம் கொஞ்சம் மறதி அதிகம் தான் உங்களுக்கு!"

அதை கேட்டு இளையவள் அலறினாள்...

"அடுத்த வருஷம் எங்கேயோ கார் ரேஸ் கூட்டின்னு போறேன்னு சொன்னீங்களே, விமான டிக்கட் வாங்கிட்டிங்களா ?"

"இல்ல இந்த வாரம் வாங்குறேன் "

மூத்தவள் அலை பேசியில்...

" சமைக்க மூடேஇல்லை, ஏதாவது ஆர்டர் பண்ணலாம்னு இருக்கேன்"

" என்ன வேணும்னு சொல்லு, நான் ஆர்டர் பண்றேன்"

"இவரு என்ன இம்புட்டு பெரிய தயாள பிரபு ஆயிட்டாருன்னு"

என்று மூத்தவள்  கேட்க..

இளையவளோ..

"என்னனே தெரியல, ரெண்டு வாரமா என்ன கேட்டாலும் கொஞ்ச நாள் பொறு கொஞ்ச நாள் பொருன்னு தள்ளி போட்டுனே இருக்கார்"

மூத்தவள்..

" என் கார் சர்வீஸுக்கு போது, "ரெண்ட் எ கார்"  ஒன்னு வேணும்"

"தேதியை மட்டும் சொல்லு, நான் ஆர்டர் பண்றேன்"

"என்னங்க, சம்பளம் கொஞ்சம் கம்மியா க்ரெடிட் ஆகி இருக்கு?"

" ரிட்டயர்மெண்ட் கணக்குல போய் இருக்கும்."

"அதுக்கு தான் லிமிட் இருக்கே, மேலே எப்படி போகும்?"

"சொல்றேன்"

இவங்க மூணு பேரை விடுங்க. உங்களில் பலருக்கு என்ன நடக்குது இங்கேன்னு ஒரு பெரிய கேள்வி வந்தால் தப்பே இல்லை.

இல்லத்தில் தொடர்ந்து..

"நான் Costco வரை போயிட்டு வரேன், ஏதாவது வேணும்மா?"

"இப்ப போகாதீங்க, காலையில் 11 மணி வரை, சீனியர் சிட்டிசன்ஸ்" மட்டும் தான் போகமுடியும்"

"அப்படினா!!?"

"55 வயசு ஆகி இருக்கணும், அட பாவத்த. "பிறந்த நாள் வாழ்த்துக்கள்".Many more happy returns of the day!"

மூவரும் சேர்ந்து ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

இனிமேல்..

"மளிகை, டிக்கட், கார் சர்விஸ் , பெட்ரோல், ஹோட்டல், பார்க்கிங், ஸ்போர்ட்ஸ், கான்சர்ட்ஸ், ஹாஸ்பிடல் விசிட், ஐஸ் க்ரீம், வால்மார்ட் இப்படி எல்லாத்துக்கும் இவரையே அனுப்பலாம், நல்ல டிஸ் கவுன்ட்"

மனதில்..

"ஆமா, அம்புட்டு நாள் வரை வேற யாரை அனுப்புனீங்க.. நானே தான்!"

பெற்றெடுத்த அன்னைக்கும்..
கற்றெடுத்த அம்மணிக்கும்..
நட்டெடுத்த  ராசாதிக்களுக்கும்...
 தத்தெடுத்த ஆண்டவனுக்கும்
ஆயிரம் கோடி நன்றிகள்!

பதிவிற்காக சற்று கூடுதல் கற்பனை! 

விடியுமுன்பே மூன்று  தலைமுறை அம்மணிகளும் வாழ்த்தினார்கள்!  


 

9 கருத்துகள்:



  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசு..... அடுத்த தலைமுறையும் கூடிய சீக்கிரத்தில் வாழ்த்தட்டும்....

    பதிலளிநீக்கு
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.  என் இளையவனுக்கும் இன்றுதான் பிறந்த நாள்.

    பதிலளிநீக்கு
  3. ஆமாம்...  60 ஆனால்தானே சீனியர் சிட்டிஸன்?  55 எப்படி?  அங்கே அப்படியா?

    பதிலளிநீக்கு
  4. அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசு.

    அது என்ன?கற்றெடுத்த, நட்டெடுத்த...வயசாயிடுச்சி…. சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உமக்கு தெரியாது அல்ல "கோ"

      வாழ்வின் லட்சியமே, தூங்கிட்டு எழுந்தவுடன் அடுத்த நாளைக்கு பற்ற வைக்க சிகரட் இருந்தா போதும்ன்னு வாழ்ந்தவனுக்கு வாழ்வில் எவ்வளவோ இருக்குன்னு கற்றெடுத்த அம்மணி..

      ஆயிரத்தில் ஒரு நெல்மணியாக சேற்றில் வீசப்பட்ட நான் நாற்றாக இருக்கையில் தகப்பன் என்று இடத்திற்கு என்னை நட்டெடுத்த ராசாத்திக்கள்.

      மற்ற படி வயசாகி விட்டது என்னமோ உண்மை தான்.

      பின் குறிப்பு :
      உம்மை போல விளக்காமலே விளங்கும் கவிதை எழுத எனக்கும் ஆசை தான். ஆனாலும் சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்!

      நீக்கு
  6. பிலேட்டட் பிறந்தநாள் வாழ்த்துகள் விசு!

    துளசிதரன்

    கீதா

    எல்லா நாளுமே நீங்க உங்க அம்மணிக்கிட்ட, ராசாத்திகள்கிட்ட கத்துக்கிட்டு புதுசா பிறக்கறீங்கதானே அதனாலே எல்லா நாளுமே பிறந்த நாள்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு