திங்கள், 18 ஜூன், 2018

ரஜினி சொன்னது போலவே சமூக விரோதிகளா நாம்?

இன்று முகநூலில் இங்கே அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஒருவரின் பதிவை காண நேர்ந்தது.

அதில் .. அவர் சேலத்திற்கான எட்டு வழி சாலையை எதிர்ப்பவர்களை / ஆதரிப்பவர்களை பற்றிய சில கருத்துக்களை வைத்தார். இறுதியில் அவரின் கருத்து ..

எதற்கெடுத்தாலும் போராடினால்  நாடு எவ்வாறு முன்னேறும் என்று கூறியவர் அனைத்து சாலைகளும் ஒரு காலத்தில் விவசாய நிலமாக தான் இருந்தது என்ற ஒரு நல்ல வாதத்தையும் எடுத்து வைத்தார்.

அது மட்டும் இல்லாமல், அமெரிக்காவில் இல்லாத சாலைகளா?

அவரிடம் நான்.. இந்த சேலம் சாலையை பற்றி சேலத்தை சார்ந்த யாரிடமாவது பேசி இருக்கின்றீர்களா ? அவர்களின் கருத்து என்ன என்று அறிந்திருக்கீர்களா என்றேன். அப்படி இருந்தால் சொல்லுங்கள், எனக்கு தெரிந்த சேலத்து நண்பர்களை வைத்து ஒரு நல்ல விவாதம் நடத்தலாம் என்று கூறினேன்.

கண்டிப்பாக கேட்டு சொல்கிறேன் என்றார். அந்த விவாதத்தை அடுத்த வாரம் போல் முகநூலில் லைவ் போட்டு ஒளிபரப்பலாம் என்று ஒரு எண்ணம்.

நூதன திருடர்கள் - சாக்கிரதை! (இறுதி பாகம்)

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

முந்தைய பதிவை  படிக்க இங்கே சொடுக்கவும்.

செக் எங்கிருந்து அனுப்ப பட்டு என்று பார்த்தால் சிக்காகோ நகரில் ஒரு ஹோட்டல் விலாசத்தில் இருந்து. அனுப்பியவர் பெயர் அறை எண்  என்று எந்த விவரமும் இல்லை.

சரி.. செக் தான் வந்து இருக்குதே.. அதுவும் கம்பெனி செக். வங்கியில் போட்டு வேலைய பார் என்று பொதுவாக நினைக்க தோன்றினாலும்... கொஞ்சம் அலசினேன்.

இவர்களின்  திட்டம்.

வீடு வாடகைக்கு என்று ஏதாவது ஒரு விளம்பரம் வந்தால், அதற்கு உடனடியாக தொடர்பு கொண்டு நாம் விரும்பும் படி பேசுவது. பிறகு ஏதாவது ஒரு கள்ள செக் அனுப்பி அதில் கேட்பதற்கும் அதிகமாக பணம்  அனுப்புவது. அனுப்பிய செக்கை நம் வங்கியில் போட சொல்லிவிட்டு அதில் இருந்து அதிகமாக அனுப்பிய பகுதியை இன்னொரு வங்கிக்கு மாற்றி விட சொல்வது.

நாமும் வங்கியில் செக்கை போட்டவுடன் அந்த பணம் நம் கணக்கில் க்ரெடிட் செய்யபடும். உடனே அவர்கள் சொன்னது போல் இந்த பணத்தை நாம் எடுத்து அவர்களுக்கு அனுப்பிவிடுவோம். பிறகு நான்கு நாட்களுக்கு பிறகு  அந்த செக் பௌண்ஸ் ஆகிவிடும். நம் கையில் உள்ள பணம் ஸ்வாஹா.

ஞாயிறு, 17 ஜூன், 2018

நூதன திருடர்கள் - சாக்கிரதை! (தொடர்ச்சி 3)

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

முந்தைய பதிவை  படிக்க இங்கே சொடுக்கவும்.


இன்னாது ... 1600 டாலர் அதிகமா அனுப்பி இருக்கேன்.. அதை உங்களுக்கு அனுப்பனுமா?

அட பாவி..

தர்மத்தின் வாழுவதனை சூத்து கவ்வும் பின்னர் தர்மமே...
முற்பகல் செய்வது பிற்பகல் நமக்கு..

இந்த மாதிரி ஏதாவது நடக்கபோதா என்று நினைக்கையில்...

மனமோ .... பிளாஷ் பேக் சென்றது..

என்ன விசு... பாட்டை இவ்வளவு சத்தமா வச்சி இருக்கியே...பக்கத்து வீட்டில் கோப படமாட்டார்களா?

வா செந்தில் .. வா... பக்கத்து வீட்டில் யாரும் இல்லையே.. அடுத்த பக்கத்தில் வீடே இல்லை. அதனால் கவலையில்லை.

என்னாது பக்கத்து வீட்டில் யாருமே இல்லையா.. போன வாரம் கூட அந்த ஸ்டேட் பேங்க் மானேஜர் குடும்பத்தோடு இருந்தாரே.. என்ன ஆச்சி..

அவருக்கு ட்ரான்ஸ்பெர் .... வீடை காலி பண்ணிட்டு கிளம்பிட்டாரு.
சாவியை என்னிடம் தான் கொடுத்து இருக்கார். வாடகைக்கு நல்ல குடும்பமா வந்தா கொடுத்துட சொன்னார். மாசம் 150  ருபாய்.


உனக்கு எவ்வளவு..

நல்லா கேட்ட போ..அந்த ஆள் எச்சி கையில் காக்க ஓட்டுறத விடு  .. எச்சி கையில் ஜன்னலில் நீட்டி அதுல இருக்க சோத்து பருக்க காக்கா சாப்பிட வந்தா  அதை பிடிச்சி கொழம்பு வச்சி சாப்பிடுவான்.. அவனாவது எனக்கு ஏதாவது தரதாவது..

அப்புறம் ஏன் இந்த சாவியை வாங்கினே..

சனி, 16 ஜூன், 2018

நூதன திருடர்கள் - சாக்கிரதை! (தொடர்ச்சி 2)

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

முந்தைய பதிவை  படிக்க இங்கே சொடுக்கவும்.

என்னடா இது? கும்புட போன தெய்வம் குறுக்கால வந்த மாதிரி.. இம்புட்டு பெரிய கல்லூரியில் பெரிய பெரிய படிப்பு படிக்கும் அம்மணி நம்ம பிள்ளையோடு தங்க போறாங்க..அவங்களிடம் இருந்து நம்ம பிள்ளை நிறைய விஷயம் கத்துக்கலாம்.

மகளுக்கு படிப்பும் ஆச்சி..
நமக்கு வாடகையும் ஆச்சி..ன்னு  ஒரு புன் முறுவலோடு..

மாச மாசம் வர வாடகையை ஒரு உண்டியலில் போடுறது போல தனியா ஒரு வங்கி கணக்கு ஆரம்பிச்சி.. அதை வைச்சி இன்னொரு வீடு வாங்கி.. அண்ணாமலை ரஜினி மாதிரி ஒரே பாட்டில் கோடீஸ்வரனாகிடலாம்னு

ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான்...அனுப ....

என்று பாடுகையில்..

ஒரு டெக்ஸ்ட் வந்தது....

ஒரு சின்ன பிரச்சனை.. என்னுடைய கார் டிரான்ஸ்போர்ட் பணத்தை டெலிவரி சமயத்தில் தான் தரணுமாம். இப்ப தர முடியாதாம். நான் முதல் மாத வாடகை மற்றும் டெபாசிட் கூட இன்னும் ஒரு 1600  டாலர் சேர்த்து அனுப்புறேன். அந்த கார் டெலிவரி வரும் போது தயவு செய்து அதை அவர்களிடம் பணமாகவோ அல்ல காசோலையாகவோ கொடுத்துடுங்க. நன்றி.

வெள்ளி, 15 ஜூன், 2018

நூதன திருடர்கள் - சாக்கிரதை! (தொடர்ச்சி 1)


நானும் விலாசம் அனுப்பினேன்.

உடனடியாக பணமும்  வந்தது ...

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

முந்தைய பதிவை  படிக்க இங்கே சொடுக்கவும்.


பணம் வருமுன்.. சில டெக்ட்ஸ் பரிமாற்றங்கள்.

செக் அனுப்ப போகின்றார்கள் என்று நான் என்னுடைய விலாசத்தை அனுப்ப .. சில நிமிடங்களில்...

விலாசத்திற்கு நன்றி.. அதை என் அப்பாவிற்கு அனுப்பிவிட்டேன். அவர் உங்களுக்கு பணத்தை அனுப்பிவைப்பார்.  தாம் எனக்கு அந்த அறையை வாடகைக்கு விடுவதற்கு நன்றி ... என்ற செய்தி வர...

அம்மணியோ..

அந்த பொண்ணு எந்த கல்லூரிக்கு படிக்க போறான்னு கேளுங்க..

நீங்கள் எந்த கல்லூரிக்கு போக போறீங்க..?

உங்க மகள் போற கல்லூரிக்கு தான்..

என்ற பதிலை பார்த்து என் மனமோ..

என்ன விசு.. இப்படி பிரிச்சி போட்டு தாக்குறியே ..

என்று பாராட்டிக்கொள்ள..

வியாழன், 14 ஜூன், 2018

நூதன திருடர்கள் - சாக்கிரதை!

மூத்தவள் முதல் வருடம் கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் முடிய, நம்மில் அனைவருக்கும் உள்ள அதே பிரச்சனை அடியேனுக்கும் வந்தது.,

இங்கே பொதுவாகவே முதல் வருடம் விடுதியில் தங்கி படித்தாலும் இரண்டாம் வருடத்தில் இருந்து வெளியே தங்க வேண்டிய நிர்பந்தம் வரும்.
சில கல்லூரிகளில் அவர்களே இடம் இல்லை, கல்லூரி விதி முறைகள் அவ்வாறு என்பார்கள். மற்றும் சில இடங்களில் கல்லூரியில் இடம் இருந்தாலும் பிள்ளைகள் தமக்கு விடுதியில் இருக்க பிடிக்கவில்லை என்று அடம் பிடிப்பார்கள்.

நம் மூத்தவள் தான் அடம் பிடிப்பதில் முனைவர் பட்டம் பெற்றவளாயிற்றே. நான் வெளியே தான் இருப்பேன் என்று அடம் பிடிக்க..

இரண்டு மாதத்திற்க்கு முன் அவளுக்கு வீடு தேடும் படலம் ஆரம்பித்தது. தனியாக ஒரு பெட் ரூம்  கொண்ட அபார்ட்மெண்டிற்கு கிட்டத்தட்ட 1200$ ல் இருந்து 1800 $ வரை என்று அறிந்த நான் பேய் அறைந்தவன் போல் ஆனேன் என்பதை சொல்லவும் வேண்டுமா?

டைட்டானிக் கப்பலில் மாமியாரை அனுப்பிவைத்த மருமகன் போல் அமர்ந்து இருந்த என்னிடம் அம்மணி..

என்னங்க.. டைட்டானிக் கப்பலில் ஒன் வே டிக்கட் எடுத்த மாதிரி சோகமா இருக்கீங்க?

இல்ல.. இவ விடுதியில் இருந்து வெளியே வரேன்னு சொல்றா?

அதுக்கு..


செவ்வாய், 5 ஜூன், 2018

மஞ்சள் நிறத்தில் நிலத்தில் ஓர் பொட்டு!

கடிகாரம்
இல்லா
கால நேரம்.

ஆறரைக்கு
எழும் அவசியம்
அலாரம்
இல்லா காலம்.

மண்ணுக்கும்
விண்ணுக்கும்
நடுவே
தென்னைகூரை.

சேவல் கூவி
தூக்கம்
கலைந்த பின்னரும்
படுக்கையில்
இருந்து எழாமல்..
பூனை தூக்கம்.

பளீச்
என்ற வெளிச்சம்
நெற்றியில் துவங்கி
கண்ணுக்குள்
நுழைந்தாய்.
















அன்று தான் அறிந்தேன்..
இனி நமக்கெதற்கு
கடிகாரம் என்று.

படுக்கையில்
இருக்கும் என்
நெற்றியை
தொட்டால்
எழ வேண்டும்.

அனைத்தையும்
தாண்டி நீ
சமையலறை சென்றால்
நேரமும்
காலமும்
ஏழரை...