திங்கள், 18 ஜூன், 2018

ரஜினி சொன்னது போலவே சமூக விரோதிகளா நாம்?

இன்று முகநூலில் இங்கே அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஒருவரின் பதிவை காண நேர்ந்தது.

அதில் .. அவர் சேலத்திற்கான எட்டு வழி சாலையை எதிர்ப்பவர்களை / ஆதரிப்பவர்களை பற்றிய சில கருத்துக்களை வைத்தார். இறுதியில் அவரின் கருத்து ..

எதற்கெடுத்தாலும் போராடினால்  நாடு எவ்வாறு முன்னேறும் என்று கூறியவர் அனைத்து சாலைகளும் ஒரு காலத்தில் விவசாய நிலமாக தான் இருந்தது என்ற ஒரு நல்ல வாதத்தையும் எடுத்து வைத்தார்.

அது மட்டும் இல்லாமல், அமெரிக்காவில் இல்லாத சாலைகளா?

அவரிடம் நான்.. இந்த சேலம் சாலையை பற்றி சேலத்தை சார்ந்த யாரிடமாவது பேசி இருக்கின்றீர்களா ? அவர்களின் கருத்து என்ன என்று அறிந்திருக்கீர்களா என்றேன். அப்படி இருந்தால் சொல்லுங்கள், எனக்கு தெரிந்த சேலத்து நண்பர்களை வைத்து ஒரு நல்ல விவாதம் நடத்தலாம் என்று கூறினேன்.

கண்டிப்பாக கேட்டு சொல்கிறேன் என்றார். அந்த விவாதத்தை அடுத்த வாரம் போல் முகநூலில் லைவ் போட்டு ஒளிபரப்பலாம் என்று ஒரு எண்ணம்.



இதற்கிடையில்.. எனக்குள் சில கேள்வி.

தமிழகத்தில் ஏன் இவ்வளவு போராட்டம்.

இதற்கு ஒரே பதில்.

நமக்கு வாய்த்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். ஆற்காடு மாவட்ட வேலூர் ஆம்பூர் பகுதியில் கல்லூரி நாட்களை செலவிட்டவன் நான்.

1980  என்று நினைக்கின்றேன். சென்னை பெங்களூரு சாலையில் ஆம்பூர் அருகில் அமைந்துள்ள பச்சை குப்பம் என்ற பகுதியில் பாலாற்றை ஒற்றி ஒரு  தோல் பதனிடும் தொழிற்சாலை கட்டப்பட்டது.

பிரமாண்டமான  அமைப்பு. வண்ண வண்ண நிறத்தில் காம்பௌண்ட் சுவற்றை வைத்து கட்டிய தொழிற் சாலை. வாசலில் வாட்ச்மேன். மற்றும் வெளிநாட்டு வாகனங்கள். ஊரில் உள்ள பலருக்கு வேலை வாய்ப்பு என்று ஊரே உற்சாகமாய் இருந்தது.

இரண்டே வருடத்தில் இந்த தொழிற்சாலை பெரும் லாபம் ஈட்டுவதை கண்ட மற்ற பணக்காரர்கள் ஆளுக்கொரு தொழிற்சாலை ஆரம்பித்தார்கள்.

அடுத்த இரண்டு வருடம் ... அந்த ஊரில் நாம் அறிந்த ஒவ்வொரு குடும்பத்தில்  இருந்தும் இந்த தொழிற்சாலையில் வேலைக்கு சென்றார்கள். மாத சம்பளம். மற்றும்  9  - 5  வேலை. விவசாயத்தை மெல்ல மெல்ல நிராகரித்து இவர்கள் அனைவரும் தொழிற்சாலைக்கு செல்ல அந்த முதலாளிகளுக்கு கொள்ளை லாபம்.

1986  போல் என்று நினைக்கின்றேன்.  ஆம்பூர் செல்லும் போது... ஊர் முழுக்க ஒரு துரு நாற்றம். என்னவென்று விசாரிக்கையில் ... தோல் பதநீட்டின் கழிவு என்று சொன்னார்கள்.

அந்த இரவு சரியான மழை . காலையில் எழுந்து ஆற்றை பார்த்த நான் அலறியே விட்டேன். ஆறுமுழுக்க மிட்டாய் பிங்க் நிற  தண்ணீர். மீன்கள் செத்து கிடந்தன.

அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்சத்தை கொடுத்த இந்த முதலாளிகள் ஒரு சிறிய விதியை கூட  கடைபிடிக்கவில்லை.

ஆற்றோரம் தொழிற்சாலை அமைந்து இருந்ததால் அந்த கழிவை அப்படியே ஆற்றுக்குள் திருப்பி விட்டு.. பல கோடி இலாபம் பார்த்தார்கள்.

இவர்கள் செய்த இந்த வேலைக்கு எந்த ஒரு எதிர்ப்பும் இல்லை என்று தான் சொல்லவேண்டும் . அதற்கு அறியாண்மையே காரணம். இந்த  முதலாளிகள் செய்த வேலை, பெற்ற  தாயை ஊருக்கு நடுவில் நிர்வாணமாக்கி  கூட்டு கற்பழிப்பு சமம்.

இளநீர் போல் சுவைத்து கொண்டு இருந்த பாலாற்று நீர் சில வருடங்களில் உப்பு நீராக மாற.. ஊர் முழுக்க தண்ணீர் பஞ்சம், நோய் நொடி  வேறு. மாத கடைசியில் வாங்கிய சம்பளம் இதற்கே செலவானது.

சரி, இந்த தொழிலே வேண்டாம் விவசாயத்திற்க்கே தி ரும்ப போகலாம் என்றால் அதற்கும் வழி இல்லை. மா வாழை கருப்பு சோளம் நெல் தென்னை  பனை என்று இருந்த நிலம் இப்போது மலடியானது.

அன்று மட்டும் போராட்டம் இருந்து இருந்தால்...

போராட்டம் முக்கியம் நண்பர்களே.

அது ஏன் இந்தியாவில் எங்கேயுமே இல்லாத போராட்டம் தமிழகத்தில் மட்டும். நல்ல கேள்வி?

யாராவது ஒருவர் முன் நடத்திதானே ஆக வேண்டும். இந்தியாவிற்கு முன்னோடியாக திகழ்வது தானே தமிழனின் பங்கு. After all, தமிழகத்தில் மட்டும் தானே நம் பெயரில் ஜாதி கூட இடம் பெறவில்லை.  நாம் முன்னேறியவர்கள். அதனால் நாம் தான் இதர இந்தியாவை வழி நடத்த வேண்டும்.

சரி, இப்போது சேலத்து சாலைக்கு வருவோம். எனக்கு இந்த சாலையை பற்றி  அவ்வ்ளவு தெரியாது. மற்றும் சேலத்திற்கு எத்தனை சாலைகள் உள்ளது எங்கு இருந்து எங்கு என்று கூட தெரியாது.

இந்த சாலை விவகாரம் கேள்வி பட்டவுடன், சேலத்தில் பிறந்து வளர்ந்து இன்று சென்னையில் பணி புரியும் நண்பர் ஒருவரை அழைத்தேன்..

நேரடியாக ஒரு கேள்வி என்று கூறி..

சேலத்திற்கு எட்டு வழி பாதை அமைப்பதை பற்றி தங்களின் கருத்து என்னவென்று கேட்க.. நண்பர் அழாத குறைதான்.

அவர் கூறிய சில கருத்துக்கள்.

இந்த சாலை தற்போது நமக்கு தேவையற்ற ஒன்று, தேவையான
காரியங்கள் நிறைய உள்ளன.

மரங்கள் ஆயிரகணக்கில் வெட்டப்படும். (என்று அவர் சொல்ல, நானோ .. மரத்தை நடலாம்... என்று கூற..அவரோ பதிலுக்கு.. சரி.. முதலில் கடந்த பத்து ஆண்டுகளில் சாலை போட வெட்டிய மரங்களுக்கு பதிலாக  நட்டு வைத்துவிட்டு வாருங்கள் என்றார்)

விவசாய நிலம் பறிபோகும்.

முதலில் இருக்கும் சாலையை சரி செய்யுங்கள் புதிய சாலையை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

இந்த சாலை நாளை வர இருக்கும் தனியார் கம்பெனிகள் இயற்க்கை வளத்தை கொள்ளை அடிக்கவே. இன்று இது ஒரு சாலை.. நாளை இது தான் நமக்கு தூக்கு கயிறு.

ஊழல் . இந்த சாலை போடுகிறோம் என்று சொல்லி பல்லாயிரக்கோடி ஊழல்கள் நிறைவேறும்.

இப்படி மேலும் மேலும் அடுக்கினார்.

என்ன நண்பரே.. மாதம் ஒருமுறை சென்னையில் இருந்து சேலம் செல்லுகின்றீர்களே.. உங்களை போன்ற ஆட்களுக்கு இது நல்ல விஷயம் அல்லவா.. பயணநேரம் சில மணிகள் குறையாத என்று கூறிய என்னை வசை பாடி விட்டு...

அப்படி ரெண்டு மணிநேரத்து சேர்த்து வைச்சி எந்த ஆணிய புடுங்க போறோம் என்றவர்...

விசு .. நீ ஆம்பூர் பக்கம் இருந்தவன் தானே.. சுருக்கமா சொல்றேன் கேட்டுக்கோ.. இந்த சாலை வந்தால்... ஆம்பூர் எப்படி சில வருடங்களில் நரகமானதோ.. அது சேலத்திற்கு சில மாதங்களிலே நடக்கும் என்றார்.

நண்பரை இன்று அழைத்து விவாதத்திற்கு வரும்படி கேட்க போகிறேன். முகநூல் நண்பரும் இந்த சாலை வேண்டும் என்று சேலத்து நண்பர்களை அழைப்பார் என்ற நம்பிக்கையோடு.


இந்த பதிவை படித்த தோழி புவனா  தன்கருத்துக்களை பகிர்ந்தார். அதையும் பதிவிலேயே இணைக்கின்றேன். நன்றி புவனா.

விசு 
உங்களின் இந்தப் பதிவு மிகவும் அவசியமானது. 

சிறப்பாக பல முக்கிய தகவல்களை உரையாடலாக எளிய நடையில் பகிர்ந்துள்ளீர். In between your questions as if devils advocate clarified some points very nicely. First of all thank you,

-விவாசாய நிலங்கள் மலடானால் மீட்டெடுப்பது மிகக் கடினம் என்பது நாம் அறிந்த ஒன்று. ஏற்கெனவே பல உணவுப் பொருட்கள் /விதைகள் இறக்குமதி செய்து உண்ணுகிறோம். இனி இப்படிப்பட்ட தொடர் திட்டங்களால் தமிழ்நாடு என்னாகும் என யோசித்தால் தலை சுற்றுகிறது. 

இந்த சாலையால் பல கிராமத்து குறுநில மற்றும் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்யும் விவாசாயிகள் பாதிக்கப் படுகிறார்கள் என சொல்லப்படுகிறது. 

சில நேரடிக் காணொளிகளும் வெளிவந்துள்ளன. பூர்வீக நிலைத்தௌ விற்க மறுத்தால் சிறை என்பது அராஜகம் இல்லையா? 

இந்தியாவில் எந்த தொழிற்சாலையுமே ரசாயனக் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுவதில்லை 
என்பதே சரி. அரசாங்க பலத்துடன் வெகு எளிதாக மாசு கட்டுப்பாட்டுத்துறையை இவர்கள் கையாள்கிறார்கள் எனக் கேள்வி. 

சேலம்-சென்னை ஏற்கெனவே 3 சாலைகள் உள்ளன 
மேலும் மக்கள் பயணிக்க ரயில் வசதியும் உண்டு - Bluemountain express, kovai express etc 

இந்த 8 வழிச் சாலை ஏழைஎளிய, நடுத்தர வர்க்க மக்களுக்கு எப்படி பயன்படும்? அவர்கள் சென்னை எத்தனை முறை பயணிப்பார்கள்? எதற்காக பயணிப்பார்கள்?

தமிழ் நாட்டு இயற்கை வளங்கள் மேல் வளர்ச்சி என்றப் பெயரில் கை வைக்கும் நிறுவனங்கள் யாருக்கு சொந்தமானவை? இந்த நிறுவனங்கள் எந்த வங்கிகளில் எளிதாகக் கடன் வாங்குகிறது ?
இவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் என்ன உறவு இருக்க முடியும் என்று தமிழ் நாட்டு மக்கள் சிந்தித்தால்/ கேட்டால் நிறைய புரிதல் ஏற்படும். 

அடுத்து பேராசைப் பேய்களிடம் காசு வாங்காமல் இனி ஓட்டுப் போட வேண்டும். அப்படி ஓட்டுப் போடுங்க என்று சொல்ல ஓரளவு நேர்மையான ஒரு கட்சிக்கூட இல்லை என்பதே இன்றைய தமிழ்நாட்டின் நிலை .

13 கருத்துகள்:



  1. சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்காகத்தான் இந்த் எட்டு வழி ரோடுகள் போடப்படுகின்றன என் அ அரசு சார்பில் சொல்லப்படுகிறது அது உண்மையானால் வளர்ச்சிக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பதில் தவ்று ஏதும் இல்லை.. ஆனால் சட்டசபையில் அமைச்சர் செல்லா நோட்டுப் பிரச்சனையாலும் ஜி.எஸ்டியாலும் 50,000 சிறுகுறு நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டதால் தமிழகத்தில் 5,00,000 பேர் வேலை பறிபோயிருக்கிறது அப்படி இருக்கும் போது இந்த மாவட்டத்தில் என்ன தொழில் வளர்ச்சி ஏற்படப் போகிறது அதற்கான திட்டங்கள் என்ன? அடுத்த 5 வருடங்களில் இங்கே தொழி துவங்க யார் முன் வருகிறார்கள் என்னென்ன தொழில்கள் ஆரம்பிக்கப்படுகின்றன அனைத்து தொழில்களும் உள்நாட்டு முதலீட்டில் ஆரம்பிக்கப்படப் போகின்றனவா அல்லது வெளிநாட்டு முதலில் ஆரம்பிக்கப்படுகின்றனவா என்று வெளிப்படையாக அறிவித்தால் மக்கள் அந்த திட்டங்கள் உண்மையானவை நமக்கு மாவட்டத்திற்கு பலன் அளிக்கும் என்றால் தங்கள் சொத்துக்களை இலவசமாக கூடி கொடுக்க முன் வருவார்கள் தானே

    எடப்பாடி அதை முறைப்படி விளக்குவாறா இல்லை எடப்பாடி எட்டையப்பாவாக் மாறி தமிழகத்தை தனது சுயநலத்திற்காக அழிப்பாரா? அதிகாரம் எப்போதும் ஒரு போது நிரந்தரமாக இருப்பதில்லை இது வரலாறு நமக்கு கற்று தந்தபாடம். அதையாவது அவர் தெரிந்திருக்கிறாரா?

    பதிலளிநீக்கு
  2. பிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள் https://avargal-unmaigal.blogspot.com/2018/06/big-boss-2020-chennai-to-run-out-of.html

    பதிலளிநீக்கு
  3. எளிய நடையில், முக்கிய விஷயங்களுடன், தங்கள் வழக்கமான பாணியில் அருமையாக தொகுத்துள்ளீர்கள்.

    மரங்கள் வெட்டப்படுவது, விவசாய நிலங்கள் அழிக்கப்படுவது, மக்கள் நலனுக்கு கேடு விளைவிப்பது எந்த காலத்திலும் ஏற்க முடியாத ஒன்று, அதில் மாற்றுக்கருத்து இல்லை.

    //தமிழகம் தான் இதர இந்தியாவை வழி நடத்த வேண்டும்// - ஆம் மற்ற மாநிலங்கள் நம்மைவிட பல விஷயங்களில் பின் தங்கியவர்கள். தொழில் வளர்ச்சி, பொது அறிவு, கல்வியறிவு மற்றும் பல.

    //இரண்டு மணிநேரம் விரைந்து சென்று என்ன செய்யப்போகிரோம்// இது ஒரு வேடிக்கையான கேள்வி, இதற்கு நேரலையில் பதிலலிக்கிறேன்.

    எனது விவாதத்தின் சாராம்சம் இதுதான் -

    1. புதிய சாலைத்திட்டம் அமைப்பதை (இதுவானாலும் சரி, வேறு புதிய திட்டமானாலும் சரி) நிச்சயம் தவிர்க்க முடியாது.

    2. புதிய சாலைத்திட்டத்தை எதிர்ப்பதால் இந்த அரசையோ அவர்களின் ஊழலையோ ஆதரிப்பதாக அர்த்தம் கிடையாது.

    3. ஓசூர் - ஆம்பூர் - சென்னை: இந்த சாலை விஷயத்துக்கு நேரலையில் பதில்லிக்கிறேன்.

    4. போராட்டம்: இதற்கு நேரலையில் பதில்லிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. Hello Visu,

    I'm from Salem. We already have 4 different routes to reach Chennai. 2 National Hwy & 2 State Hwy. Many trains every day . 1 flight every day..

    Please see my friend Sundararajan's speech about new road proposals

    https://www.youtube.com/watch?v=EZm_U8Gvdig

    Thanks,
    Sasikumar

    பதிலளிநீக்கு
  5. dear Visu
    Happened to see your blogs through tamilmanam. Went through your old posts , Simple and laced with humour reminded me of Series like Home improvement and Kevin can wait etc

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks Sarav. Appreciate your thoughts. Really appreciate it. I have watched lotsa "Home Improvements" years ago, and my writings might have its influence unknowingly. I remember watching couple of episodes of "Kevin can wait" but found it boring. My favorite is "Everbody Loves Raymond" and the fav character is Rays' Dad (Frank?). I am glad that you found my writing humorous and I love to see people laugh. Keep in touch! Do you write?

      நீக்கு
    2. Visu ,

      Deepest condolences for the passing away of your brother

      I tried writing , 7 years before but not frequently then one day my blog got stolen and it stopped. Besides i am a couch potato spending my free time in watching movies and English serials

      i didnt expect that you will reply to my comment. i dont normally comment but when i post a comment , the blogger dont reply but it was a pleasant surprise to see ur reply

      thanks for that. will be waiting for your next post , mean while will go through all your previous posts chronologically

      நீக்கு
  6. விசு: இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு. தங்கள் சகோதரர் பற்றி கேள்விப்பட்டேன். வருத்தமாக இருந்தது. :(

    எதுக்கெடுத்தாலும் போராட்டம்னுதான் போயிட்டு இருக்கு. ஏன் இப்படி இருக்கோம்? னு கேட்டால்.. நாம்தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் எல்லாவற்றிலும் இருக்கிறோம்னு பெருமை வேற அடிக்கிறானுக. இந்தியாவை எல்லாரும் தேர்ட் வேல்ட்னு சொல்றதெல்லாம் இவனுகளுக்கு தெரியாது போல.

    சாலைகள் தேவை, மின்சாரம் தேவை, என்கிற காலம் போயி, சாலைகள் வேண்டாம், மின்சாரம் தயாரித்தால் பொல்லுஷன் வருது, எல்லா ரோட்டையும் மூடிட்டு நம்ம மாட்டுவண்டில போயி விவசாயம் பார்ப்போம். ஆடு மேய்ப்போம். மாடு வளர்ப்போம், கலப்பை வைத்து உழுவோம், அப்படித்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்னு சொல்றானுக.

    ஸ்டெர்லைட்டில் வரும் பொல்லுஷனைவிட அனல் மின்சாரம் தயாரிப்பில் அதிக பொல்லுஷன் வருதுனு சொல்றாங்க. அதெல்லாம் இவனுகலுக்கு எதுவும் புரிகிற மாதிரித் தெரியலை. ஜல்லிக்கட்டுனு வேற போயி சாகிறானுக, குஞ்சுல அடிப்பட்டு ஆண்மை இழக்கிறானுக. கேட்டால், வீரம்னு என்னவோ சொல்றானுக. மாட்டுட்ட என்ன வீரம், புலி சிங்க்த்துட்ட காட்டுங்கடானா, அதெல்லாம் மாட்டோம்னு சொல்றானுக. புலி பயந்து ஓடிடுமாம் இவனுக வீரத்தைப் பார்த்தால்.:)

    ஆக, எல்லா இண்டஸ்ட்ரியையும் மூடிட்டு, எல்லாருமா விவசாயம் பார்க்கலாம்தான், ஆனால் மழை இல்லை, கிணற்றில் தண்ணீர் இல்லைனு ஆகும்போதுதான் பிரச்ச்னை ஆகிறது. தமிழ்நாடு ட்ரை ஆகிக்கிட்டே போகுது. மக்கள் தொகை அதிகமாகிக்கொண்டே போவதால், குளிக்க, குடிக்க முன்பைவிட மூன்று மடங்கு தேவைப்படுது. ஆனால் மூனு மடங்கு மழை இல்லை. அதனால் எது சரி எது தப்புனு விளங்கவில்லை எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வருண். அண்ணன்சில மாதங்களாக படுக்கையில் இருந்து மார்ச் மாதம் தவறினார். தங்களின் ஆறுதலுக்கு நன்றி.

      என்னை பொறுத்தவரை தமிழக போராட்டத்தின் முக்கிய காரணமே மக்கள் நம் அரசை நம்பல் இருப்பது தான். எது எடுத்தாலும் கொள்ளை கொலை லஞ்சம் என்று ஒரு வேலையையும் உருப்படியாக செய்யாமல்..

      //அதனால் எது சரி எது தப்புனு விளங்கவில்லை எனக்கு// எனக்கும் தான் !

      On a different note... உலக கால்பந்து பார்கின்றீர்களா?

      நீக்கு
  7. Yes, I am watching. I am a "nazi" when it comes to FIFA world cup. Germany was beaten by Mexico in the first game. :( I get Fox sports channel. So I watch most of them.

    who is your favorite, visu? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I tend to go with Underdogs. Would love to see Ronaldo go all the way to Finals and play against Mexico. But then again, its just my wish. I cant stand Germans game. Hate their with Passion for reasons unknown. My favorite is anyone but Germans!Daughters bought me the HULU package for the whole tournament. Having a ball, watching it!

      நீக்கு
  8. எந்த வகையில் இந்த சாலை அவசியம் என்பதை அரசு விளக்க வேண்டும். எனக்குத் தெரிந்து நேரம் நிச்சயம் குறையாது. மிக வேகமாக வந்து பூந்தமல்லிக்கு முன்பே ட்ராபிக் ஜாம் ஆகி சென்னைக்குள் நுழைய இரண்டு மணி நேரம் கூடுதலாகத்தான் ஆகும்.

    பதிலளிநீக்கு