வெள்ளி, 15 ஜூன், 2018

நூதன திருடர்கள் - சாக்கிரதை! (தொடர்ச்சி 1)


நானும் விலாசம் அனுப்பினேன்.

உடனடியாக பணமும்  வந்தது ...

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

முந்தைய பதிவை  படிக்க இங்கே சொடுக்கவும்.


பணம் வருமுன்.. சில டெக்ட்ஸ் பரிமாற்றங்கள்.

செக் அனுப்ப போகின்றார்கள் என்று நான் என்னுடைய விலாசத்தை அனுப்ப .. சில நிமிடங்களில்...

விலாசத்திற்கு நன்றி.. அதை என் அப்பாவிற்கு அனுப்பிவிட்டேன். அவர் உங்களுக்கு பணத்தை அனுப்பிவைப்பார்.  தாம் எனக்கு அந்த அறையை வாடகைக்கு விடுவதற்கு நன்றி ... என்ற செய்தி வர...

அம்மணியோ..

அந்த பொண்ணு எந்த கல்லூரிக்கு படிக்க போறான்னு கேளுங்க..

நீங்கள் எந்த கல்லூரிக்கு போக போறீங்க..?

உங்க மகள் போற கல்லூரிக்கு தான்..

என்ற பதிலை பார்த்து என் மனமோ..

என்ன விசு.. இப்படி பிரிச்சி போட்டு தாக்குறியே ..

என்று பாராட்டிக்கொள்ள..


அடுத்த டெக்ஸ்ட் வந்தது..

நான் ஜூன் 20 ம் தேதி அங்கே வருவேன், அதற்கு முன் என் கார் அங்கே வந்தாக வேண்டும். அதை அனுப்பி வைக்கிறேன். தங்களால் அல்லது தங்களின் மகளினால் அந்த காரின் டெலிவெரியை ஏற்று கொள்ள முடியுமா? அவர்கள் காரை நேராக வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். நீங்கள் கை எழுத்து மட்டும் போட்டு ஏற்பட்டு கொண்டால் போதும்..

இது என்ன பிரமாதம்.. நாங்கள் ஏற்று கொள்கிறோம் என்று பதிலை அனுப்ப..

மகளோ..

டாடா .. கொஞ்சம் அவசர படுறீங்க... ஒரு நிமிஷம் இருங்க என்று சொல்லி..அந்த எண்ணுக்கு

உங்க சோசியல் மீடியா முகநூல் , ட்விட்டர் , இன்ஸ்டக்ராம் போன்ற ஏதாவது தர முடியுமா?

ஐயோ.. மன்னிக்கவும்.. எனக்கு கல்லூரியில் படிக்கவே நேரம் இல்லை.. இந்த சோசியல் மீடியா எனக்கு பிடிக்காது..

என்ற பதில் வர..

நானோ..

மகள்.. என்ன ஒரு நல்ல மாணவி . இந்த காலத்திலும் சோசியல் மீடியா எதுவும் இல்லாமல் படிப்பில் கவனம்.. நீங்களும் இப்படி இருங்க...

டாடா.. உங்களுக்கு அந்த பொண்ணை பத்தி ஒண்ணுமே தெரியாது.. She is too good to be true.. and if something is too good to be true.. it is too good to be true என்று சொல்லிவிட்டு.. அந்த எண்ணுக்கு இன்னொரு செய்தி அனுப்பினாள் ...

உங்களுடைய அடையாள அட்டை ஏதாவது கிடைக்குமா?

பதில் வந்தது..

ஒரு ஆசிய பெண்மணியின் பெயரோடு டிரைவிங் லைசன்ஸ் நகல் வந்தது.

அந்த பெயரை வைத்து கூகிள் செய்ய.. பாஸ்டன் நகரில் ஒரு பெரிய மருத்துவமனையில் ஆராய்ச்சி கூடத்தில் பணிபுரியும் பெண் என்ற தகவலும் வர..

மனதோ.. அடே அடே.. ஆண்டவன் இருக்கான்யா.. இளையவள் அந்த மாதிரி ஒரு கல்லூரிக்கு தான் போகணும்ன்னு சொல்லின்னு   இருக்கா.. இந்த பொண்ணை வைச்சி அந்த கல்லூரியை பத்திய அம்புட்டு விஷயத்தையும்  கத்துக்கலாம்னு இருந்த என் கள்ளம்    கபட  இல்லா மனசுக்கு அடுத்து வர போற ஆப்பை  பத்தி தெரியாதே.

தொடரும் ..


அடுத்த பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும் 

2 கருத்துகள்:

  1. அட ராமா.நானும் உங்களைப் போலவே நல்லா போகுதே என அல்லவா நினைத்தேன்.அது என்ன ஆப்பு.அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... இது என்ன கூத்து? இவ்வளவு விரைவாக இப்படி நற்செய்தி என்றாலே அது மொள்ளமாரி தனம் என்றுதானே அர்த்தம்!
    Craiglist இல் சாதாரண Garmin gpsஐ விற்க நான் போட்ட விளம்பரத்தில் இந்த விஷயத்தை புரிந்துக்கொண்டேன்! அதன் பின்னர் பல முறை இதுபோன்ற திருட்டு கும்பலிடமிருந்து மின்னஞ்சல் வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு