அதிகாலை உறங்குகையில்....
அப்பா என்று அலறி அடித்து..
அயர்ன் பண்ணி வையுங்கள் என்று
அதட்டி நீ சொல்லும் போது.
அய்யகோ .. இப்ப தானே
அஞ்சு மணி ஆச்சி...
அதுக்குள்ள எழுப்பிட்டாளே..
அநியாயத்தை கேக்க யாருமில்லையா...
அம்மணியோ..
அவளை கெடுத்து வைச்சி..
அப்புறம் ஏன் இந்த
அங்கலாய்ப்பு என்றாள்..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqDVEKMyqaBmeM81NDATfueQMvDMqrcMDdptw2-fNBJo7s3zchEpNgAfr6JpdFnumDmAIuwt5vkVY6osr4CxkKmPuP3quEHKWKxtTzfkj0ReqRqlVq1-1kRSb2B-bdbw9zkQ-TP3Idlss/s400/w16+a.jpg)
அவசரம் என்று ஒரு டெக்ஸ்ட்..
ஆபிஸ் கிட்ட தான் இருக்கேன்..
அதுக்கு?
அதிக பசி...
அருகில் உள்ள ஹோட்டலுக்கு போறேன்..
அநேக வேலை எனக்கிருக்கு..
அத ஏன் என்னுட்டசொல்லுற ....
அது ஒன்னும் இல்ல..
அங்கே தனியா போர்
அடிக்கும், அதனால
அரை மணி நேரம் வாங்களேன்...
ஆஹா..
அலுவலை ஓரம்கட்டி..
அடித்து பிடித்து ஓடி..
ஆர்டர் சில சொல்லி..
அனுபவித்த தருணம்.
அடித்தாய் ஒரு "கோல்ப்"ஷாட்.
அங்கிருந்த தண்ணீரில் விழ.
அழாத குறையாய்
அடியேனை நோக்க..
அதுவும் கடந்து போகும் என்று
ஆறுதல் கண்ணால் சொல்ல ...
அடுத்த ஊருக்கு படிப்பிற்காய்
அகன்று சென்றாய்...உன்
அறைக்கு சென்று
அம்மா அடுக்கி வைத்து இருந்த
அழகை எல்லாம் கலைத்து போட்டு...
அடியே .. நீ திருந்தவே மாட்டாயா? என்று
அதட்டினேன்..
அகம்பாவமாய்..
அசதி வர ..
அயர்ந்து தூங்கினேன்.
அதிகாலை ஐந்து இன்று..
அடுத்தவள்..
அப்பா...
அயர்ன் பண்ணி வையுங்கள் என்று.
அதட்டி குளியலறை செல்ல..
அடித்து பிடித்து சிரித்து எழுந்தேன்..
அம்மணி அலறினாள்..
அக்கா அழைக்கையில்
அதட்டினாயே அன்று ...
அதுவும் சரி தான்..
அன்று தற்காலிகம் தான் என்று
அறியாமல் இருந்தேன் இன்றோ..
அரிது என்று உணர்ந்தேன்...
என்னமோ போ.. Cant wait for Thanksgiving!
Missing ராசாத்தி..? அப்பாவின் அன்பு அருமை
பதிலளிநீக்குஇஷ்டப்பட்டு கஷ்டப்படுவதால்தான் , கவிதை கொட்டுது .இந்த பெண்களை பெற்ற அப்பாக்களுக்குத்தான் எவ்வளுவு இளகிய மனசு.
பதிலளிநீக்குநண்பர் alfy அவர்களே -- ஏதோ சுயபெருமை மாதிரி தெரியுது :)
நீக்குஏன் ஒரு பெண்ணை பெற்ற அப்பாக்களுக்கு இளகிய மனசு இல்லையா?
(Mind Voice - நம்மளையும் சேர்த்துப்போம் )
உங்களுக்கும் இருக்கும்தான், ஆனால் எங்களுக்கு இரு மடங்கு இருக்கும் நண்பா.
நீக்குஉங்கள மாதிரி பெரியவங்க சொன்னா மறுக்க முடியுமா?
நீக்குஅருமை .உங்கள் ராசாத்திகள் கொடுத்து வைத்தவர்கள் .இப்படிப்பட்ட அப்பா கிடைப்பதற்கு
பதிலளிநீக்குசெம விசு! உங்கள் ராசாத்திகள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
பதிலளிநீக்குஎனக்கு ஒரே ராசாத்தி, இரு ஆண் பிள்ளைகள்..என்றாலும் அந்த ராசாத்தியை நான் எங்கும் அனுப்புவதற்கு அப்படித் தயங்குவேன். இப்போ அவள் +1 வந்தாச்சு இன்னும் இரு வருடங்கள் தான்...அப்புறம் அவளும் மேற்படிப்பு எங்கு அமையப் போகிறதோ! இறைவன் சித்தம்.
துளசி..
ம்ம்ம்ம் பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் எல்லோரும் கொடுத்துவைத்தவர்கள்!!! அப்பா மகள் உறவு, அம்மா மகள் உறவு பொதுவெளியில் பேசப்படுவது போல் அம்மா மகன் உறவு, அப்பா மகன் உறவு ஏனோ பேசப்படுவதில்லை என்ற எண்ணம் எனக்குத் தோன்றுவதுண்டு.....
கீதா
படம் ரொம்ப அழகா இருக்கு விசு!
பதிலளிநீக்குஅவளுக்கென்ன ... !?...
பதிலளிநீக்குஅதிஷ்டசாலிகள் .....