சனி, 30 செப்டம்பர், 2017

கெளதம் மேனன்.. நீ ஆம்பிளை I mean You are a Fine Gentleman!

சில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான்  எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. அதே வேகத்தில் நல்ல காரியங்களை பார்க்கும் போது பாராட்ட தவறி விடுகின்றேன்.

அதற்காக தான் இந்த பதிவு.. இதை பல மாதங்களுக்கு (சில வருடங்களுக்கு? ) முன் எழுதி இருக்க வேண்டும். "Shame on me" எழுத தவறி விட்டேன். Then again, its better to be late than never.


பல மாதங்களுக்கு முன் ஒரு திரைப்பட நிகழ்ச்சி. அதில் இயக்குனர் கெளதம் மேனன் , பாடலாசிரியர் தாமரை இன்னும் அநேகர் மேடையில் அமர்ந்து இருந்தனர்.

தன்ஷிகாவின் கண்ணீர்...

அடியேனுக்கு இரண்டு ராசாத்திக்கள். மூத்தவளுக்கு 18  வயது கல்லூரியில் முதலாமாண்டு  படிக்கிறாள். இளையவள் 15  வயது பள்ளியில் பத்தாவது படித்து வருகிறாள்.

இருவருமே கோல்ப் (Golf ) ஆடுபவர்கள்.மூத்தவள் கல்லூரிக்காகவும் இளையவள் பள்ளிக்காகவும் ஆடுவாள்.
கேடு கெட்டவனின் காலை தொட்டு.. 

அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்த  விஷ்யங்களில் ஒன்று பள்ளிக்கூடங்களும் விளையாட்டு மைதானங்களும். விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளியை பார்க்கவே முடியாது ( off course there are exceptions, but exceptions cant be examples). சரி அதை பற்றி இன்னொரு பதிவில் பாப்போம். இப்போ தலைப்பிற்கு வரலாம்.

மூத்தவள் கல்லூரி அடியேனின் இல்லத்தில் இருந்து 100  மைல் தொலைவு.  அங்கேயே விடுதியில் தங்கி படித்து வருகின்றாள். அவள் கோல்ப் போட்டி ஆட்டத்தை பார்க்க முடியாத சூழ்நிலை.

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

என் இனிய BJP நண்பர்களுக்கு ....


என் இனிய BJP நண்பர்களுக்கு ....

நம் நாட்டின் தற்போதைய  பொருளாதார நிலைமை உண்மையாகவே பயமா தான் இருக்கு. எந்த புள்ளி விவரத்தை எடுத்து பார்த்தாலும் சரியான அடிவாங்கி இருக்கோம்.  இது உங்கள் அனைவருக்கும் தெரியும்.


இப்போது தான் நாம் கொஞ்சம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும். மத்தியில் உள்ள அரசு is on denial.  தாங்கள் நல்ல நோக்கோடு செய்த சில காரியங்கள் எதிர்பார்த்த முடிவை தரவில்லை. அதனால் இந்த இழப்பு என்பதை ஒத்து கொள்ள வேண்டும்.

ஆனால் இதுவரை மத்திய அரசு இந்த இழப்பு பெரிய இழப்பு இல்லை என்றும் .. சிறிய இழப்பே என்றும் அதுவும் தற்காலிகமானதே என்று சொல்லி கொண்டு வருகின்றார்கள்.

இந்த அணுகுமுறை நம் நாட்டை சீரழித்து விடும். BJP கட்சியை சார்ந்த பொருளாதார நிபுணர்கள் உடனடியாக தங்கள் சுயநலத்தை விட்டு வெளியே வரவேண்டும். தற்போதைய பொருளாதார நிலைமையை பற்றி தங்கள் ஆட்சிக்காரர்களுக்கு எடுத்து சொல்லவேண்டும்.

இப்படியே அமைதியாக.. பொருளாதார நிலைமை தானாகவே சரியாகிவிடும் என்று இருந்தால், அது இவர்கள் நம் நாட்டிற்கு செய்த துரோகமாகிவிடும்.

கடைசி ஆறு குவாட்டர்களில் GDP குறைந்து கொண்டே வருகின்றது. GDP குறைவதை ஏற்று கொள்ளாமல் அதை கணக்கிடும் விதத்தை மாற்றி வைத்து  GDP எதுவும் குறையவில்லை என்று நம்மை நாமே ஏமாற்றி கொள்ளக்கூடாது.

மத்திய அரசு வெளியே, சமாளித்து கொண்டு உள்ளே "இதுவும் கடந்து போகும் " என்று இருந்தால் அதை விட பெரிய தவறு வேறு எதுவும் இல்லை.

இது எல்லாவற்றிக்கும் மேலாக..

ஒருத்தன் டாக்டர்.. கால் வலி தாங்க முடியல டாக்டர் என்று அலறினானாம். உடனே அந்த டாக்டர் அருகில் இருந்த சுத்தியை எடுத்து அவன் மண்டையில் ஓங்கி அடித்து... கால் வலி எப்படி இருக்கு என்று கேட்க்கையில் அவனோ..
காலை விடுங்க டாக்டர்.. மண்டை வலி தாங்க முடியல என்றானாம்.

இப்படி எதுவுமாகிவிட கூடாது. இந்த அரசாங்கம் இந்த இழப்பை மறுத்து கொண்டு கொஞ்ச நாள் மறைக்கலாம் . ஆனால் அது  விதையை மண்ணிலும்  விந்தை மடியிலும் மறைப்பதற்கு சமம்.

என் பயம் ஒன்றே ஒன்று தான். இந்த பொருளாதார இழப்பை மக்கள் பேசாமல் இருக்க அந்த டாக்டர் சுத்தியால் மண்டையில் அடித்ததை போல் மக்களை அடித்து விட கூடாது. அது மதம் - ஜாட்ஜி - மொழி சார்ந்த வன்முறையாக இருந்து விட கூடாது.

மற்றும், இந்தியாவில் சிறந்த பொருளாதார நிபுணர்கள் இருக்கின்றார்கள். கட்சி மதம் தாண்டி அவர்களின்  புத்தியை உபயோகித்து கொள்ளவேண்டும்.
அப்படி செய்தால் இதுவும் கடந்து போகும். அதை விட்டுவிட்டு.. இது ஒரு இழப்பே இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தால்... நந்தவனத்தில் ஒரு ஆண்டி கதை தான்.

உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கை.... Stop the Bleeding! இரத்த கசிவை  உடனடியாக நிறுத்த வேண்டும்.  புல்லட் ரயில் போன்ற திட்டங்கள் நல்லது தான். ஆனால் அது தற்போது தேவை இல்லை.  முதலில் இருப்பதை திருத்த வேண்டும்.

60  வருட காங்கிரஸ் ஆட்சியானல் தான் என்று சொல்லி கொண்டு உதாசீன படுத்திவிட முடியாது. அப்படியே உதாசீன படுத்தினால்... அந்த 60  வருடம் காங்கிரஸ் ஆட்சி 100  வருட ஆட்சியாக மாறிவிடும்.


இதை படிக்கும் BJP ஆட்கள் சற்று சிந்திக்கவும். Let your People know that we need to block this hole. Otherwise we all are going to sink.

BJP யின் தமிழக பேச்சாளர்கள் நாராயணன் - ராகவன் மற்றும்  தலைவர்கள் தமிழிசை போன்றோருக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. இவர்கள் மூவரும் அவரர் துறையில் சிறந்தவர்களாக இருக்கலாம் ஆனால் இவர்கள் பொருளாதாரத்தை பற்றி பேசும் போது  நாட்டு மக்களின் பொது அறிவை கேவலப்படுத்துவது போல் உள்ளது. They really insult our intelligence!

இவர்கள் பேசும் பேச்சை கேட்டால்  கடந்த மூன்று ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளாதாரம் ஒரு உன்னத நிலைமையை அடைந்தது போல் இருக்கும். நிதி அமைச்சர் ஜட்லீ நம் தற்போதைய  நிலைமையை நன்கு அறிந்து இருக்கின்றார். அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. அதனால் இந்த இழப்பு தாற்காலிமாகமானது என்று சொல்லி வருகின்றார்.

ஆனால் நம்மூர் BJP பேச்சாளர்களோ இங்கே இழப்பு எதுவும் இல்லை என்கின்றார்கள்.

இதில் ஒருவர் கூறுகிறார்.. GDP 2  % தான் இறங்கிவிட்டதாம். அவருக்கு ஐயோ. GDP ஒரு சதவீதம் இறங்கினால் அது ஒன்னரை லட்சம் கோடி நட்டம். இரண்டு சதவீதம் என்றால் அது மூன்று லட்சம் கோடி நட்டம்.

தயவு செய்து தவறான கருத்துக்களை பகிராதீர்கள். நட்டம் நம் அனைவருக்குமே.

உங்கள் பாணியிலே முடிக்கின்றேன்..

பாரத் மாதாக்கி ஜே..


டி ஆர் & சன் ..சொன்னா வெக்க கேடு சொல்லாக்கட்டி..

சிம்புவின் ஒவ்வொரு நடவடிக்கையை பார்க்கும் போதும் எனக்குள் வரும் ஒரு நினைப்பு

"இவன் வீட்டுல பொண்ணுங்களே இல்லையா? அம்மா - சகோதரி கூடத்தான் வாழறான் ... பின்ன எப்படி இம்புட்டு நாதாரித்தனமா இருக்கான்னு"

 என்ற சந்தேகம் தான்.

அதே போல்.. இவனுடைய அப்பாவை பார்த்தால் ஒரு கேள்வி வரும். தற்பெருமை என்ற கேவலமான  உணர்வை "தன்னம்பிக்கை " என்ற ஒரு  சிறப்பான மனிததன்மையோடு குழப்பி குட்டையில் மட்டை போட்டு வந்தார்.

ஆண்டவனின் அருளால் TR அவர்கள் பல சிறந்த தாலந்துகளை பெற்றவர் என்பது உண்மை தான். இருந்தாலும் .. தானே அனைத்திலும் சிறந்தவன் என்றும் தன்னை விட்டால் வேறு எவனும் இல்லை என்றும் இவர் பேசும் பேச்சு.

இப்போதெல்லாம். இவர் பேச்சை பாருங்கள் .தலை முடியை தடவி கொண்டு .. என் மயிரை பாருங்கள்.. என் மயிர் உண்மையான மயிர்.. என் மயிரை போல எவனுக்கும் இல்லை என்ற அளவிற்கு தான் பேச்சு.

விஷயம் என்னவென்றால்..

வியாழன், 28 செப்டம்பர், 2017

அந்நியனிடம் கற்று கொள்ளவேண்டிய ரகசியம்...

இது சனநாயகம் .. இது கலாச்சாரம்.இது வாழும் முறை.. இது தலைவனுக்கு அடையாளம் !

இந்த ஒரு  படத்தை பாருங்கள் எம்புட்டு விஷயம் சொல்லுது.

பில் கிளின்டன் :

பில் கிளின்டன் டெமோகிராட் கட்சியில் இருந்து ஜனாதிபதியான தேர்ந்தெடுக்க பட்டவர். இவரால் தோற்க அடி க்கப்பட்டவர் அன்றை அதிபர் ஜார்ஜ் புஷ் ( ஜார்ஜ் W புஷ் , நடுவில் இருப்பவரின் தகப்பனார்).  இந்த தேர்தல் 1992 ல் நடந்தது. அதுவரை நடந்த தேர்தல்களை விட மிக அதிகமாக ஜனாதிபதி வேட்ப்பாளர்கள் ஒருவரை ஒருவர் தனிமையில் தாக்கி கொண்ட தேர்தல்.

இந்த பிரசாரத்தின் போது அதிபர் புஷ், கிளிண்ட்டனிற்கு வெளிநாட்டு விவகாரத்தில்   தன் வீட்டில் உள்ள நாய்க்கு  தெரியும் விஷயம் கூட தெரியாது என்றார்.


புதன், 27 செப்டம்பர், 2017

மனைவி அறியா ரகசியமா?

"ஏங்க..!"

"சொல்லு..."

"அடுப்புல டீ வைச்சி இருக்கேன்.. அஞ்சி நிமிஷம் பக்கத்துல கடை வரை போயிட்டு வரேன்... சரியா எடுத்துடுங்க..."

"ஓகே ..!!!"

"திரும்பவும் சொல்றேன்.. கவனமா எடுத்துடுங்க..."

"எனக்கு ஒரு முறை சொன்னா நூறு முறை சொன்ன மாதிரி.. கவலையை விடு..."

"ஜாக்கிரதை.. மறந்துடாந்திங்க..!!"

"அம்மா தாயே.. !நீ கிளம்பு.. நான் அடுத்த அடுப்புல ஏறி உக்கார்ந்து எப்ப கொதிக்குதன்னு பார்த்துனே இருக்கேன்!

"இல்லைங்க.. அது கொதிச்சி கீழே  ஊத்துனா..?!"

"ஊத்துனா.. ?"

"அடுப்பு முழுக்க போயிடும். அதை சுத்தம் பண்றது ரொம்ப கஷ்டம். அப்புறம் வீடு முழுக்க தீஞ்ச வாசனை.."

"வேற..!"

"பாத்திரம் வெளியே எல்லாம் டீ தூள். கொஞ்ச எக்ஸ்டரா நேரம் விட்டீங்கனா
.. மொத்த பாத்திரமும் டேமேஜ்."

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கொள்ளைக்காரி ஜெயாவின் மரணம் - கணியன் பூங்குன்றனாரின் கேள்வி?

கொலைகாரி ஜெயாவின் மரணத்தில் பல திடுக்கிடும்
 தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இதில் கணியன் கேட்க்கும் சில கேள்வி...

டாக்டர் பீலே.. யார் அவர்? அவர் தான் டாக்டர் பீலே என்று யார் அறிவார்கள்?

இறந்த பிணத்தை பதப்படுத்தும் சிறப்பு நிபுணருக்கு இங்கே என்ன வேலை?

ஜெயலலிதாவிற்கு அவர் என்ன சிகிச்சை அளித்தார்?

மிக முக்கியமான கேள்வி..

ஜெயலலிதாவிற்கு தான் அவர் சிகிச்சை அளித்தாரா? இவர் தான் ஜெயலலிதா என்று அவருக்கு கூறியது யார்?

 இறுதி சடங்கை செய்த  அந்த  ஆசாமி மருத்துவமனையில் சேர்ந்த இரண்டாம் நாளில் அங்கே என்ன ஆணி புடுங்க வந்தார்?

ZED பிரிவு பாதுகாப்பை அகற்றியது யார்? அகற்ற சொன்னது யார்?

அவர்கள் மருத்துவமனையில் இருக்கையில் மூன்றே நாள் தான் சுய நினைவோடு இருந்தார்களாம். அப்படி இருக்கையில் இடை தேர்தலுக்கான வேட்பாளர்களுக்கு அவரின் கட்டை விரலை உருட்டியது யார்?

இறந்த அவர் பூதஉடலில் கட்டை விரல் இருந்ததா? ( அதை மறைக்க தான் காலை வெட்டினார்கள் என்ற செய்தியை வேண்டுமென்றே வெளியிட்டார்கள? )

அவர் முகத்தில் இருந்த மூன்று புள்ளிகள் எதற்காக ... யாரால்?

75  நாட்களில் இரண்டு இட்டிலி மட்டும் சாப்பிட்ட அவர் ... எப்படி கொஞ்சமும் மெலியாமல் அப்படியே.. .

மருத்துவமனையில் இவர் இருக்கையில் வேறு என்ன என்ன கோப்புகளில் இவரின் கட்டை விரல் வைக்க பட்டுள்ளது? அதனால் பயன் பெற்றோர் யார் யார்?

இவர் இட்லி சாப்பிட்டார் என்று சரசக்காவிற்கு சொன்னது யார்?

அங்கேயே இருந்த வெங்கையா நாயுடுவை விசாரித்தார்களா?

ஒருவரை கேட்டால் அந்த கட்டிடத்தில் ஜெயா இருந்த முழு அடுக்கிலும் வேறு யாரும் இல்லை  என்கிறார். மற்றொருவர் அங்கே மற்ற நோயாளிகளும் இருந்தார்கள் என்கிறார். இதில் எது உண்மை.


பின் குறிப்பு :

இது அனைத்தும் கணியனின் கேள்வி.. அடியேனின் கேள்வி ஒன்றும் உள்ளது.. ஜெயா சாப்பிட்டது இட்லியா? அல்ல இட்லி உப்புமாவா?

அறிந்தவர்கள் கூறவும் .

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

கொள்ளைக்காரி ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றி.

அண்ணா நான் மிகவும் மதிக்க கூடியவர். தமிழ் (திராவிடமும் தான்) சமுதாயத்திற்கு அவர் செய்த தொண்டுகள் சொல்லி மாள முடியாது. அவர் புத்திசாலித்தனத்தை பார்த்து யேல் பல்கலைக்கழகமே எழுந்து நின்று கை தட்டி பாராட்டியது.

இப்படி மிகவும் அறிவார்ந்த அண்ணா அவர்கள் தமிழனுக்கு ஒரு மன்னிக்க முடியாத தவறை செய்து விட்டார்.
பட உபயம் : கூகிள் 

அது என்ன?

கூத்தாடிகளை அரசியலில் கோர்த்து விட்டது தான்.

”ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை காய்த்துக் கனிகிற நெல்லிக்கனி தான் எம்.ஜி.ஆர். அந்தக் கனி யார் மடியில் விழும் என்று எல்லா அரசியல்வாதிகளும் காத்திருந்தார்கள். அது என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். பல லட்ச ரூபாய் தேர்தல் நிதி தருவதாகச் சொன்னார் எம்.ஜி.ஆர். பணம் முக்கியமல்ல. அவர் முகத்தைக் காட்டினாலே முப்பதாயிரம் ஓட்டு கிடைக்கும்"

சனி, 23 செப்டம்பர், 2017

ட்ரைலர் பார்த்தாலே முறுக்கேறுது.. வச்சி செஞ்சி இருக்காங்க.

நீ எந்த சாதியா இருந்தாலும் சரி.. எந்த மதமா இருந்தாலும் சரி.. பணக்காரன் ஏழை.. எந்த நிறமா இருந்தாலும் சரி.. வாழ்க்கையில் ஒரு முறையாவது உனக்கு அநீதி இழைக்க பட்டு இருக்குனு நினைக்கிறியா? இந்த ஒரு ட்ரைலரை பாரு..

படத்து பெரு.. மார்ஷல் (Marshall) Oct 13, 2017 க்கு ரிலீஸ் ஆகுது.. என்ன ஒரு ட்ரைலர்...

பன்ச் டயலாக்கில் சில..

"If you Want Freedom... You gotta fight for it"!

"Theres only thirteen million Negroes depending on you"

"Does any of you have any confidence in me...?
I say, you have confidence for us all"

"What you've got here..? Cement...!?
Guns..  No Books, Mr. Freeman.. Books..."

"You lied to the Sworn State ...why would you do that...
Because the truth  would get me killed..."

"It takes Hero to make a Hero"

மவனே,  ட்ரைலர் பாக்கும் போதே.. முறுக்கேறுது...வச்சி செஞ்சி இருக்கான் .. ஹாலிவுட் காரன்

கடைசியா ஒரு பன்ச்..

"The only way to get through the Biggest Door is to break it down"!

வாங்க...

"Witness the Rise of the Man Who Changed America"

இதோ அந்த ட்ரைலர் ..

                                                                   மார்ஷல் (Marshall)


Cant wait for Oct 13th...

வியாழன், 21 செப்டம்பர், 2017

திருமணம் வெற்றி பெற சில ரகசியங்கள்....

அலை பேசி அலறியது...

சொல்லு சாரதி..

என்னத்த சொல்றது...சித்தப்பூ..

பின்ன எதுக்கு கூப்பிட்ட...?

சொல்றதுக்கு தான்...

சரி சொல்லு...

ஆபிசில் ஒரு பிரச்சனை...?

கன்டினியூ..

கூட வேளை செய்யுற ஒரு மெக்சிக்கன் அம்மணி என்னிடம்  "டீ  அமோ " ன்னு சொல்லிடிச்சி...

டீ வேணுமான்னு அவங்க மொழியில் கேட்டு இருப்பாங்க... வேணாம்னு சொல்லிடு..

சித்தப்பூ... பி சீரியஸ்... "டீ அமோ " னா "ஐ லவ் யு" ன்னு அர்த்தம்.

எங்க கம்பெனியில் 500 க்கும்   மேலே மெக்சிகன் தான் ..நானும் சொல்ல கேள்வி பட்டு  இருக்கேன்,

சித்தப்பூ... சொல்லவே இல்லையே.. இந்த விஷயம் அண்ணிக்கு
தெரியுமா?

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

MP பென்ஷன் வேண்டாம் - நடிகர் சரத்குமார் !


நெஞ்சு பொறுக்குதில்லையே..

இந்த வாரம் ஒரு செய்தி படித்தேன்.

//எம்பிக்கான பென்ஷன் எனக்கு வேண்டாம்.. ராஜ்யசபா செயலருக்கு சரத்குமார் கடிதம்//

இந்த நடிகர் சரத்குமார் 2006 ம் ஆண்டு M P பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். 2006 ல் இருந்து இன்று வரை நம் வரி பணத்தில் இருந்து ஓய்வூதியம் கொடுக்க பட்டுள்ளது.

சரி.. ஓய்வூதியம் என்பது ஒரு சராசரி ஆள் வயதான காலத்தில் இனிமேல் தன்னால் உழைக்க முடியாது என்ற நிலை வரும் போது இத்தனை
 நாள் செய்த பணிக்காக தரப்படுவது.

திங்கள், 18 செப்டம்பர், 2017

H ராஜா - அமித் ஷா உரையாடல்.(உபயம் விக்கி லீக்)

ஹலோ... அமித்ஷாவா .. ஓவர் ..

அமித்ஷா தான்.. சாரண இயக்க தலைவர் ராஜாவா? ஓவர்..

ராஜா தான் .. ஆனா.. சாரண இயக்கத்த விடுங்க.. சாதாரண இயக்கத்துக்கு கூட தலைவர் ஆக முடியாது போல இருக்கு .. ஓவர்..

பின்ன எதுக்கு கூப்பிட்ட ஓவர்..

அவசரமா பேசணும்.. இல்லாட்டி BJP நிலைமை தமிழ் நாட்டில் ஓவர் .. ஓவர்..

என்னமோ சொல்ல வந்த .. ஆனா அதை சொல்றதுக்கு முன்னாடி ஓவர் ஓவர் ன்னு ரெண்டு முறை சொன்ன ஓவர்..

துப்பறிவாளன் - இரண்டாம் பாகம் ( அத்தியாயம் 2 )

அத்தியாயம் ஒன்றை படிக்க இங்கே சொடுக்குங்கள்..

துப்பறிவாளன் - இரண்டாம் பாகம்! (அத்தியாயம் 1)


மஹேந்திர விளக்கில்லாமலே கிளம்ப.. சுவற்றின் இடுக்கில் மல்லிகாவை புதைத்த இடம் தெரிந்தது...

உன்னை யாரடி வாழ்க்கையில் என்னை சந்திக்க சொன்னது... மனதில் கோபமாக அவளை திட்டினான்..

கனி..

சொல்லு....

சொந்த மகள் ஒருத்தனை காதலிச்சதுக்காக எந்த அப்பனாவது கொலை செய்ய துணிவானா.. என்னால நம்பவே முடியல..

மனோ.. நீ யாரையாவது... லவ் பண்ணி இருக்கியா?

இல்லை...

உன்னை யாராவது?

தெரியல.. ஏன் கேக்குற?

இல்லடா.. மல்லிகா என் மேல விருப்பமா இருந்து இருக்கானு உனக்கு தெரியுது எனக்கு தெரியலை பாரு...

நமக்கு வாழ தெரியல போல இருக்கு கனி...

பேசி கொண்டே வண்டி அண்ணா சாலை வழியாக பாரிஸ் கார்னரை நோக்கி நகர்ந்தது...

மணி 12 போலாக... சாலையோரத்தில் இருந்த கையேந்தி பவனில் ஆளுக்கொரு  முட்டை  தோசை சாப்பிட்டு... வண்டியை பிராட்வே  பகுதியில் நுழைத்தனர் .

இங்கே எங்க வீடு கனி..

பிடாரியார் கோயில் தெரு... வீட்டு நம்பர் 18

நெருப்பெட்டிகள் போல் பல வீடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்க.. 18ம் எண் வீடு மட்டும், வசதியாக காணப்பட்டது.

வீட்டின் எதிரில் பெரிய கேட்.. அதை ஒட்டி ஒரு வாட்ச்மன் அறை .சுடுகாட்டில் பார்த்த அந்த வெளிநாட்டு காரும் உள்ளே இருந்தது.

சனி, 16 செப்டம்பர், 2017

துப்பறிவாளன் - இரண்டாம் பாகம்! ( அத்தியாயம் 1)

ஒரு நாய்க்குட்டியை சுட்டது யார் என்பதை துப்பறிக்க சென்று... ஒரு பெரிய கொள்ளை -  கொலைகார கும்பலை ...

இவ்வளவு துப்பறியும் திறன் இருந்தும்.. "உனக்கு வேண்டிய ஒருவரை சாகடிப்பேன்" என்ற மெசேஜ் வந்தும் அது மல்லிகாவாகவும் இருக்கலாம் என்று அறியாமல் இருந்தேனே...

தன்னை தானே ... வெறுத்து கொண்டான்..

அவ பாட்டுக்கு பிக்பாக்கெட் அடிச்சிட்டு வாழ்ந்து இருந்தா.. என்னை சந்தித்த ஒரே காரணத்தினால் .....

கதவு திறக்க பட.. மனோகர் நுழைந்தான்..

இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படியே வீட்டை விட்டு வெளியே வராம இருக்க போற?

தெரியல மனோ.. பெரிய தப்பு பன்னிட்டான்டா.. அவளிடம் ஒருமுறை கூட அன்பா இருந்தது இல்ல... ஒரு வார்த்தை நல்லா பேசினது இல்ல. நம்ம கூட இருந்த ஒரே காரணம்.. அந்த ஒரே காரணம் அவ இன்னைக்கு இல்லனு நினைக்கும் போது...

சரி .. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு...இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்க போற..

அவ சாகும் போது... என்ன மனோ நினைச்சு இருப்பா? ஏன்டா இங்கே வந்தோம்னு, இவனை ஏண்டா சந்திச்சோம்ன்னு...ஏன் மனோ.. ஒரு சின்ன பொண்ணு, அவ மனசை ஏன்டா நம்மனால புரிஞ்சிக்க முடியல..

நம்மனாலேன்னு சொல்லாத.. உன்னாலே.. மல்லிகா உன்னை பார்க்கும் போதே அவ பார்வை வைச்சே அவளுக்கு உன் மேல் கொள்ளை பிரியம்ன்னு எனக்கு தெரியும்.

ஏன்டா சொல்லல.. அது எப்படி உனக்கு தெரியும்?

கனி .. அவ கொடுத்த கிறீன் டீயை நீ கழுதை மூத்திரம்ன்னு திட்டி கொடுத்த இல்ல.. அதை கூட அவ மூணு நாளா வைச்சி குடிச்சின்னு இருந்தா..

ஏன்டா எனக்கு அப்பவே சொல்லல..

அது உன் மண்டைக்கு அது புரியாது.. சொன்னா உடனே அவளை வீட்டை விட்டு அனுப்பிடுவன்னு பயந்து தான் சொல்லல ...

எப்படி மனோ.. அந்த வயசு பொண்ணை கொலை பண்ண ஒருத்தனுக்கு மனசு வருது..

கனி.. நான் சொல்லி உனக்கு தெரியணும்னு அவசியம் இல்ல.. கொலை பண்றது ஒரு மன  வியாதி .....சரி, கிளம்பு வெளிய போய் சாப்பிட்டு வரலாம்.

வேணா விடு... எனக்கு பசி இல்லை..