வெள்ளி, 29 செப்டம்பர், 2017

டி ஆர் & சன் ..சொன்னா வெக்க கேடு சொல்லாக்கட்டி..

சிம்புவின் ஒவ்வொரு நடவடிக்கையை பார்க்கும் போதும் எனக்குள் வரும் ஒரு நினைப்பு

"இவன் வீட்டுல பொண்ணுங்களே இல்லையா? அம்மா - சகோதரி கூடத்தான் வாழறான் ... பின்ன எப்படி இம்புட்டு நாதாரித்தனமா இருக்கான்னு"

 என்ற சந்தேகம் தான்.

அதே போல்.. இவனுடைய அப்பாவை பார்த்தால் ஒரு கேள்வி வரும். தற்பெருமை என்ற கேவலமான  உணர்வை "தன்னம்பிக்கை " என்ற ஒரு  சிறப்பான மனிததன்மையோடு குழப்பி குட்டையில் மட்டை போட்டு வந்தார்.

ஆண்டவனின் அருளால் TR அவர்கள் பல சிறந்த தாலந்துகளை பெற்றவர் என்பது உண்மை தான். இருந்தாலும் .. தானே அனைத்திலும் சிறந்தவன் என்றும் தன்னை விட்டால் வேறு எவனும் இல்லை என்றும் இவர் பேசும் பேச்சு.

இப்போதெல்லாம். இவர் பேச்சை பாருங்கள் .தலை முடியை தடவி கொண்டு .. என் மயிரை பாருங்கள்.. என் மயிர் உண்மையான மயிர்.. என் மயிரை போல எவனுக்கும் இல்லை என்ற அளவிற்கு தான் பேச்சு.

விஷயம் என்னவென்றால்..



அதையும் ஒரு அர்த்தம் இல்லா   எதுகை மோனையோடு சொல்வார்.. அதை கேட்டு கை தட்ட ஒரு அப்ரெண்டிஸ் கூட்டம் வேறு.

பாலில் உறை ஊத்தினா  தயிறு..
பாய்சன் சாப்பிட்டா போகும் உயிரு ..
என் தலையில் மட்டும் இருக்கு மயிறு..
தூக்கு போடவேணும் கயிறு...

என்று இவர் கூறினால்.. உடனே கை தட்டு. ஆரவாரம்.

இவரின் எந்த விடியோவை எடுத்து பாருங்கள். இப்படி ஒரு பேச்சு பேசிவிட்டால் அருகில்  உள்ளவர்களை பார்ப்பார்.. கை தட்டுங்கடா என்ற ஏக்கம் எப்போதும் இருக்கும்.

இவரின் பிள்ளை சிம்புவோ.. சொல்லி  மாளாது.. "பீப் சாங்" என்ற ஒரே உதாரணம் போதும்.

தற்போது நடந்த இந்த நிகழ்ச்சியில் .. அந்த நடிகை இவர் பெயரை மேடையில் சொல்ல மறந்துவிட்டாராம் .அதற்கு இவ்வளவு புலம்பல்.  இயல்பாக எதேச்சையாக நடந்த இந்த தவறை "உனக்கு மேடை நாகரீகம் தெரியவில்லை " என்று தரக்குறைவாக இவர் பேச அருகில் இருந்தவர்கள் கை தட்டல் ... மற்றும் சிரிப்பு.

அதை பார்க்கையில் எனக்கோ வயிற்றில் எவனோ எட்டி உதைத்தது போல் ஓர் வலி.  தன்  பெயரை மேடையில் சொல்லவில்லை என்பற்காகா ஒரு மனிதன் இவ்வளவு கேவலமாக போவானா?

இங்கே ஒரு விஷயம் கவனிக்க படவேண்டும். பொது மேடையிலே இந்த ஆசாமி இப்படி பேசுகின்றானே , அப்படியானால் நான்கு சுவற்றுக்குள் இவர் சக மனிதனுக்கு  எவ்வளவு மரியாதை தருவார்?

அந்த பெண்மணி மன்னிப்பு கேட்டதற்கு அதை பெருந்தன்மையாக எடுத்து கொள்ளாமல்..

நீ கட்டினு வரல சாரீ..
ஆனா இப்ப சொல்ற சாரி...

அதற்கு கை தட்டல் சிரிப்பு..

"உங்க மேலே நான் நிறைய மரியாதை வைத்து இருக்கேன்" என்று அந்த  பெண்மணி சொல்லும்போது..

உன் மரியாதையை நான் கொண்டு போய் எந்த மார்க்கெட்டில் விக்க முடியும்?

என்ற கேள்வி..

மரியாதையை கூட மார்க்கெட்டில் விற்க விரும்பும் இந்த மாதிரி ஆசாமிகளை நாம் ஒதுக்க வேண்டும்.

மற்றும்.. இவர் பேசுகையில்..

மரியாதை என்பது கேட்டு பெற்று கொள்ள கூடாதாம் , தானாக வரவேண்டுமாம். ..

அட பாவி.. உன் புலம்பலே அந்த அம்மணி மேடையில் உன் பெயரை சொல்லவில்லை என்பது தானே..

கடைசியாக ..

மேடை நாகரீகம் பற்றி பேசுகின்றார். ஓர் பள்ளி மாணவ - மாணவியருக்கு இருக்கும் மேடை நாகரீகம் கூட இல்லாத இந்த நபர் மேடை நாகரீகத்தை பற்றி பேசுவது விந்தை.

இவரின் பல வீடியோவை பார்த்தால் .. முதலில் மனதில்  வருவது..

இவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறாரே.. இவருக்கு வேண்டியவர்கள் இவருக்கு இவ்வளவு முட்டாள்தனமாக இருக்காதே என்று அறிவுரை செய்ய மாட்டார்களா? என்ற எண்ணம் தொடர்ந்து வரும்.

நம் வீட்டிலும் சரி.. வெளியிலும் சரி.. நாம் தவறாக நடந்து கொண்டால்.. அம்மணியும்  சரி.. ராசாதிக்களும் சரி.. நம்மை உடனே திருத்துவார்கள். அவருக்கு இப்படி எதுவும் வாய்க்கவில்லையா என்ற நினைப்பு  எப்போதும் வரும்.


பரம்பரை  பரம்பரையாக .. என்ன ஒரு கேவலமான குணம்.


நெஞ்சு பொறுக்குதில்லையே...

1 கருத்து:

  1. இவன் ஒரு அரைவேக்காட்டுக்கிறுக்கன். இவனின் நடிகிற மகன்
    ஒரு பன்னாடை, தெருப்பொறுக்கி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

    பதிலளிநீக்கு