வியாழன், 28 செப்டம்பர், 2017

அந்நியனிடம் கற்று கொள்ளவேண்டிய ரகசியம்...

இது சனநாயகம் .. இது கலாச்சாரம்.இது வாழும் முறை.. இது தலைவனுக்கு அடையாளம் !

இந்த ஒரு  படத்தை பாருங்கள் எம்புட்டு விஷயம் சொல்லுது.

பில் கிளின்டன் :

பில் கிளின்டன் டெமோகிராட் கட்சியில் இருந்து ஜனாதிபதியான தேர்ந்தெடுக்க பட்டவர். இவரால் தோற்க அடி க்கப்பட்டவர் அன்றை அதிபர் ஜார்ஜ் புஷ் ( ஜார்ஜ் W புஷ் , நடுவில் இருப்பவரின் தகப்பனார்).  இந்த தேர்தல் 1992 ல் நடந்தது. அதுவரை நடந்த தேர்தல்களை விட மிக அதிகமாக ஜனாதிபதி வேட்ப்பாளர்கள் ஒருவரை ஒருவர் தனிமையில் தாக்கி கொண்ட தேர்தல்.

இந்த பிரசாரத்தின் போது அதிபர் புஷ், கிளிண்ட்டனிற்கு வெளிநாட்டு விவகாரத்தில்   தன் வீட்டில் உள்ள நாய்க்கு  தெரியும் விஷயம் கூட தெரியாது என்றார்.




ஜார்ஜ்  W புஷ் :

தன் தகப்பனை தோற்கடித்த பில் கிளிண்டனின் துணை அதிபர் அல் கோரை தோற்கடித்து பதவிக்கு வந்தார். இவரின் தேர்தல் பிரசாரத்தின் போது பில் கிளிண்டனின் தனிப்பட்ட வாழ்க்கையை (பலான விஷயம் தான்)  கேவலமாக பேசினார்.  இவர் ரிபப்லிக்கன் கட்சியை சார்ந்தவர். ஆட்சியை பிடித்த இவர் எட்டு வருடம் அதிபராக இருந்தார்.

பராக் ஒபாமா

பராக் ஒபாமா டெமோக்ரடிக் கட்சியை சார்ந்தவர். இவர்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜார்ஜ் புஷ் அவர்களின் ஆட்சி திறமையை மிகவும் மோசமாக  சித்தரித்தார். ஜார்ஜ் புஷ் தனி ஒரு மனிதனாக அமெரிக்காவையே அழித்தார் என்ற ஒரு எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்தினார். ஜார்ஜ்  புஷையாவது விடுங்கள் எதிர் அணி.

இவர்  டெமோக்ரட் அணிக்கு அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட போது, இவருக்கு எதிராக போட்டியிட்டது கிளிண்டன் அவர்களின் மனைவி ஹிலாரி கிளிண்டன். க்ளிண்டனும் ஹிலாரியும் சேர்ந்து ஒபாமாவை கழுவி ஊற்றியதும் ஒபாமா கிளிண்டன் குடும்பத்தை கழுவி ஊற்றியதும் அனைவரும்  அறிந்த ஒன்று.

இப்போது இந்த படத்தை இன்னொரு முறை பாருங்கள். இவர்கள் மூவரும் ஒரு காலத்தில் ஒருவரையொருவர் இப்படி எதிர்த்தார்கள் என்று சொல்ல முடியுமா?
அங்கே தான் நிற்கின்றான் அமெரிக்கன்.


மூவரும் ஆளுக்கு எட்டு வருடம் அமெரிக்காவை ஆண்டவர்கள் .

மூவரின்  குறிக்கோளும் .. என் நாடு என் மக்கள்.

நாட்டிற்காக உழைத்தவர்கள்.  அது மட்டும் இல்லாமல் தாங்கள் மக்களால்  தேர்நதெடுக்கபட்டவர்கள் . தாங்கள் ஒற்றுமையாக   இல்லாவிடில் தாங்கள் இன்னும் சண்டை போட்டு கொண்டு இருந்தால் தங்கள் கட்சியை பின் பற்றும் தொண்டர்களும் அவ்வாறே செய்வார்கள் என்பதை அறிந்தவர்கள்.

மற்றும் , பண்பாளர்கள்.  அரசியல் பதவி என்பது தற்காலிகம். பதவியில்   இருந்தோம், பணியை செய்தோம் ..ஆனால் வாழ்க்கை என்பதோ வேறு என்று அறிந்தவர்கள்.

அது மட்டும் அல்ல. தனிபட்ட வாழ்க்கையில் மூவரும் திருமணமாகி பிள்ளை குட்டி பேரன் பேத்திகளோடு ( ஒபாமா இன்னும் தாத்தா ஆகல)  வாழ்பவர்கள். ஆளும் போதும் சரி இப்போதும் சரி.. ஒரு குடும்பத்திற்கான தேவைகளை அறிந்தவர்கள். பிரமச்சாரி - குமாரி  என்ற தனி கட்டை பிம்பத்தை தோற்றுவித்து நாட்டுக்காக தம்மையே அர்ப்பணித்தவர்கள் என்ற "பில்ட் அப்" இங்கே வேலைக்கு ஆகாது.

ஒரு வேளைஇங்கே அப்படி யாராவது வந்தால்.. ஒரு குடும்பத்தை கட்டி காக்க வழி தெரியாத நீ நாட்டை எப்படி காப்பாய் என்ற கேள்வி வரலாம் ( off course,  there could be exceptions, but remember exceptions cant be examples)

இந்த புகைப்படத்தை பார்த்தல் மனதில் அதிக சந்தோசம் வந்தாலும் நமக்கு  வாய்க்கவில்லையே என்ற பொறாமையும் வருகின்றது.

கடைசியாக... இந்நாட்டின்  சட்டதிட்டங்களை பாராட்டியாக வேண்டும். அதிபர்  பதவியில்  ஒருவர் அதிக பட்சமாக இரண்டு முறை ( எட்டு வருடம்) தான் இருக்க முடியும் . அதற்கு பிறகு ஓய்வு. அதனால்  தான் இந்த மூவரையும்  பார்க்க முடிகின்றது.

இங்கேயும் நம்மூர் சட்டத்தை போல் பாடையில் இறங்கும் வரை பதவி என்றால் ... இந்த படத்தில் ஒரு வேலை பில் கிளிண்டன் மட்டும் தான் நின்று கொண்டு இருப்பார்.

நம் நாட்டிலும் இந்த " இரண்டு முறை பதவி" சட்டம்  இருந்தால்.. எவ்வளவு  நன்றாக இருக்கும்?

1 கருத்து:

  1. இந்த லிமிடெட் பதவி முறை (அதிகபட்சம் 2 முறை) மிகவும் பாராட்டப்படக்கூடியது. என்ன மேஜிக் செய்யணுமோ அதை 8 வருடங்களுக்குள் செய்தால் போதும், அதுக்கு அடுத்து வேறு சிந்தனை உள்ள ஒருவர் வந்துகொள்ளட்டும் என்பது.

    இன்னொன்று, ஒரு முறை தோற்கடிக்கப்பட்டால் (அதிபர் பதவிக்கு நின்று), அத்துடன் அரசியலை விட்டு ஒதுங்கிவிடவேண்டும் என்ற கான்செப்ட், மிக மிகப் பாராட்டுதலுக்கு உரியது. நம்ம ஊரா இருந்தால், ஹிலாரி கிளின்டன், அதிபர் ஆவது வரை மாற்றி மாற்றி போட்டிபோட்டுக்கொண்டே இருந்திருப்பார்.

    அமெரிக்காவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

    உங்கள் இடுகைகளை வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு