திங்கள், 18 செப்டம்பர், 2017

H ராஜா - அமித் ஷா உரையாடல்.(உபயம் விக்கி லீக்)

ஹலோ... அமித்ஷாவா .. ஓவர் ..

அமித்ஷா தான்.. சாரண இயக்க தலைவர் ராஜாவா? ஓவர்..

ராஜா தான் .. ஆனா.. சாரண இயக்கத்த விடுங்க.. சாதாரண இயக்கத்துக்கு கூட தலைவர் ஆக முடியாது போல இருக்கு .. ஓவர்..

பின்ன எதுக்கு கூப்பிட்ட ஓவர்..

அவசரமா பேசணும்.. இல்லாட்டி BJP நிலைமை தமிழ் நாட்டில் ஓவர் .. ஓவர்..

என்னமோ சொல்ல வந்த .. ஆனா அதை சொல்றதுக்கு முன்னாடி ஓவர் ஓவர் ன்னு ரெண்டு முறை சொன்ன ஓவர்..


யோ ... முதல் ஓவர்... பிஜேபி நிலைமை ஓவர்.. ஓவர்..

இப்ப என்ன பண்ண சொல்ற ஓவர்...

அடுத்த ரெண்டு வருசத்துக்கு உள்ளாட்சி நகராட்சி .. வட்டம் சதுரம் செங்கோணம். எந்த தேர்தலும் தமிழ் நாட்டில் வைக்க வேண்டாம் ஓவர்..

எதுக்குங்கறேன்..ஓவர்..

280 பேர் இருக்க தேர்தலில் நமக்கு ஐம்பது வாக்கு தான் ஓவர்..

அந்த அடிமைகள் போடலையா... ஓவர்...

இந்த தேர்தலில் ஒட்டு போட்டவங்க எல்லாம் வாத்தியார்கள்.. கொஞ்சமாவது படிச்சி இருக்கணும்.. அறிவு இருக்கணும்.. ஓவர்...

கேட்ட கேள்விக்கு பதில்.. அந்த அடிமைகள் ஒட்டு போடலையா ஓவர்..

யோ.. அந்த அடிமைகளில் எவனுக்கு அறிவு இருக்கு.. எவன் படிச்சி இருக்கான்..ஓவர்..

அந்த தெர்மாகோல்....நிபுணர் கூடவா? ஓவர்..

அவன் ரெண்டாவதே தேறல ஓவர்...

அப்ப .. தமிழிசை .. .வெற்றி நமதே வெற்றி நமதேன்னு சொன்னாங்களே .. அது...

அது..நீங்க பாரத் பெட்ரோலியத்தில் இயக்குனர் பதவி தருவீங்கன்னு.. ஓவர் பில்ட் அப் கொடுத்தது.. ஓவர்...

இப்ப அடுத்த பார்லிமென்ட் தேர்தல்... வைச்சா என்னவாகும்..ஓவர்..

வேட்பாளரை நிக்க நாலு பேர் கிடைச்சாலே ரொம்ப ஓவர்.. ஓவர்..

ஒரு முறை மட்டும் ஓவர் சொல்லு ... ஓவர்..

ஓவர்..

என்ன ஓவர்..

நீ தானே ஓவர் சொல்ல சொன்ன ஓவர்..

இப்ப என்ன பண்றது... ஓவர்...

தேர்தல் ஜூம்லா ஏதாவது எடுத்து விடுங்க..ஓவர்

எல்லாத்தையும் தான் எடுத்து விட்டாச்சே.. ஓவர்..

இப்படி பண்ணுங்க.. இந்தியா முழுக்க தமிழர் தினம் கொண்டாடுறோம்.. ன்னு எடுத்து விடு .. ஓவர்..

1 கருத்து: