வியாழன், 6 ஏப்ரல், 2017

அடுத்த வாரிசு - விமர்சனம்


பெட்ரோலுக்கு  காசு கொடுத்தேனே.. மறக்காமல் பாக்கெட்டில் வைத்து கொள்...

மதியம் லஞ்சு டப்பாவை மறந்துடாத..

நேரத்துக்கு வந்துடு..

யாருகிட்டயும்  சண்டை போடாத...

சினிமா கினிமா போகாத ..

தண்ணி நிறைய குடி...

ஒழுங்கா பேராசியர் சொல்றத கவனி..


மதியம் மறக்காம சாப்பிடு.. கொடுத்து அனுப்புனத அப்படியே எடுத்துன்னு வராதா.

வகுப்பில் இருக்கும் பொண்ணுங்களிடம் மரியாதையா இரு..


இது எல்லாம்... நான் முதுகலை படிக்கும் போது என் இல்லத்தில் தினந்தோறும்  கேட்ட வார்த்தைகள். முதுகலை முதல் வருடம் ஆரம்பிக்கையில் அடியேனுக்கு  20  வயது. வீட்டில் இருந்து தினமும் கிளம்புகையில் இவ்வளவு அன்பு தொல்லையும் தாண்டி வர வேண்டும்...

அது அன்று...

இன்றோ...

நேற்று தான் தோளில் உறங்கியவள்.. இன்று கல்லூரி.. நம் வாழ்க்கையே  தலைக்கீழாக மாறுவது போல் ஒரு  உணர்வு.. 

மகள் பள்ளிப்படிப்பை இந்த வருடம் முடித்து கொண்டு கல்லூரி செல்ல தயாராகிறாள். இங்கே பொதுவாகவே 11 ம்   வகுப்பு முடிக்கும் போதே  நம் பிள்ளைகள் எந்த கல்லூரிக்கு போக வேண்டும் என்பதை முடிவு செய்து விடுவார்கள்.

நிறைய கல்லூரியை   நான் ஆராய்ந்து கொண்டு இருக்கையில்...

அவளாகவே ஐந்து கல்லூரியின் பெயரை எதிரில் வைத்து.. இதில் ஏதாவது ஒன்றுக்கு  தான் போக போகிறேன் என்றாள்..

சரி ராசாத்தி.. என்று சொல்லிவிட்டு .. நோட்டமிட்டேன்..

முதல் கல்லூரி .. பாஸ்டன் நகரில்...எங்கள் இல்லத்தில் இருந்து நேரடி விமானம் எடுத்தால் கூட கிட்டத்தட்ட 6  மணி நேர பயணம்..

வேண்டாம் மகள்...

ஏன் டாடா? இட்ஸ் எ கிரேட் ஸ்கூல் ( இங்கே நடைமுறை பேச்சில் கல்லூரியை கூட பள்ளி என்று தான் அழைப்பார்கள்) ..

ராசாத்தி.. நீ வளர்ந்த இடம் கலிபோர்னியா...இங்கே பனி தொந்தரவு இல்லாமல் வளர்ந்து விட்டாய்...

அதுக்கு.. ?   ஐ லைக் ஸ்நொவ்..

மகள்.. யு லைக் ஸ்நொவ், பிகாஸ் யு டோன்ட் ஹவ் இட் ஹியர். அது ரொம்ப தொந்தரவு.. இங்கே வாழ்ந்து பழக்க பட்டவர்கள் அங்கே வாழ முடியாது. ரொம்ப பெரிய மாறுதல்..

வாட்  அபௌட் சேலம்?

சேலம்?

சேலம்?

எஸ்.. சேலம்!. ஏன் திரும்ப திரும்ப கேக்குறீங்க...

சேலம், எங்கள் ஊரில் இருந்து 1000  மைலுக்கு அப்பால். நம்ம தமிழக சேலம் போல் இங்கே வெயில் இருக்காது. வருடத்தில் 8   மாதம் மழை.

மகள் வேண்டாம் ராசாத்தி...

ஒய் நாட்?

அங்கே ரொம்ப மழை மகள்..

அதுக்கு...

அடியே.. நான் பெத்தவளே ... கல்லூரிக்காக கோல்ப் ஆடணும்னு சின்ன வயதில் இருந்து ஒரு எண்ணத்தோட வளர்ந்த..

தே ஹவ் கிரேட் கோல்ப் ப்ரோக்ராம் டாட்...

அது எல்லாம் சரி.. இருந்தாலும்.. நீ மழையில் ஆடி பழகினவள் இல்லையே.. வேண்டாம் மகள்...


ஓகே.. வாட் அபௌட் சியாட்டல்...

அதுக்கு சேலமே பரவாயில்லை..

ஏன்..

சேலத்திலாவது  வருடத்தில் 8  மாதம் தான் மழை.. இந்த ஊரில் 12  மாதமும் மழை.. நாட் ஐடியல் பார் கோல்ப்.

சரி... ஆஸ்டின்..

ஆஸ்டின் டெக்ஸ்சாஸ் மாகாணத்தில்... எங்கள் இல்லத்தில் இருந்து 2000  மைலுக்கு அப்பால்..

வேண்டாம் மகள்..

டாட்.. இங்கே பனியும் இல்ல மழையும் இல்ல.. இட் ஐஸ் மோர் லைக் கலிபோர்னியா..

வேண்டாம் மக....

டெல் மீ ஒய் ?

அங்கே.. அங்கே.. ரொம்ப வெயிலாம்..

டாட் .. யு ஆர் மேக்கிங் எக்ஸ்குயூஸஸ் ... நான் வெளியூரில் போய் படிக்கிறது உங்களுக்கு விருப்பம் இல்லையா?

அப்படி இல்லை...

டாட்.. ஐ டோன்ட் வாண்ட் டு கோ டு காலேஜ் பிரேம் ஹோம்.

டேய்.. டு பி வெரி ஹானஸ்ட்.. ஐ டோன்ட் வாண்ட் யு டு கோ டு காலேஜ் பிரம் ஹோம்.  போ...  விடுதியில் தங்கி படி.. ஜாக்கிரதையா இரு... நல்லா படி..

பட் யு செட் நோ டு ஆல் தி காலெஜ்ஸ்..

நாலு தானே பார்த்தோம்.. அஞ்சாவது எங்கே...

லாஸ் ஏஞ்சல்ஸ்..

இந்த கல்லூரி  எங்கள் இல்லத்தில் இருந்து 100  மைல் மட்டுமே.

அப்படி  போடு... நல்ல ஊரு.. அருமையான வெதர்...

சும்மா சொல்லாந்திங்க .. அது நம்ம வீட்டுக்கு பக்கத்துல .. அதுனால தான் ..

இல்ல ராசாத்தி.. இந்த காலேஜ்.. நல்ல காலேஜுன்னு கேள்வி பட்டு இருக்கேன்.

அம்மா என்ன சொல்வாங்க..

அவங்களும் இதை தான் சொல்லுவாங்க..

வீட்டுக்கும் 100  மைல் தொலைவு ..விடுதியில்   தங்கி படி. வீக்கெண்டுக்கு நாங்க சாப்பாடு எடுத்துனுவருவோம். அவரசரம்னா நீ கூட வீட்டுக்கு வரலாம்..

இட் மேக்ஸ் சென்ஸ்.

என்று பேச்சு முடிய....

சரி.. நான் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அடுத்த வாரம் போய் பார்த்துட்டு வரேன்...

மகள்.. நாங்களும் வரோம்.

டாட்.. காலேஜ் போகும் போது பெற்றோர்களோடு போனா அவங்க என்னை நினைப்பார்கள்..

அவங்க என்ன நினைச்சா என்ன.. ? நாங்களும் வரணும்னு நானும் அம்மணியும் அடம்பிடிக்க....

சரி வரலாம்.. அங்கே வந்து கூட கூட பேசக்கூடாது.. என்ற உத்திரவாதத்தை வாங்கி கொண்டு அனுமதித்தாள்.

என்னே ஒரு வித்தியாசம்... வாழ்க்கை முறையில் தான்..

பஸ்சுக்கு காசில் இருந்து மத்திய சாப்பாடு வரை எல்லாமே நமக்கு பெற்றோர்கள் தான். ஆனால் இந்த காலத்து பிள்ளைகளுக்கோ...

நேற்று தான் தோளின் மேல் உறங்கி கொண்டு இருந்தாள் போல் இருக்கின்றது.. இன்று..

பின் குறிப்பு :

அந்த கல்லூரிக்கு சென்றோம்.. அனைத்துமே ஒரு சுகமான அனுபவம்.. ஒவ்வொன்றாக எழுதுகிறேன்.

9 கருத்துகள்:

  1. செலவுக்குக் காசு நீங்கள்தான் கொடுப்பீர்களா, அவர்களே சம்பாதித்துத்தான் செலவு செய்யவேண்டுமா? கல்லூரிக்கு செமிஸ்டர் கட்டணம் யார் செலுத்துவது? -என்பதையும் விரிவாக எழுதி விடுங்கள். உங்கள் மகளுக்கு நல்ல கல்லூரி அமைந்து அவள் எதிர்பார்த்த படிப்பு நிறைவேற எமது ஆசிகள்!

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசத்தை வித்தியாசமாக
    விளக்கிய விதம் மனம் கவர்ந்தது
    கல்விச் சாலைகள் குறித்துத் தங்கள்
    தொடர்பதிவுகளில் அதிகம் தெரிந்து கொள்ளும்
    ஆவலுடன்...

    ராசாத்தியின் கல்லூரி வாழ்க்கை
    சிறந்து விளங்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  3. இந்தியாவில் அப்பாக்கள் பெண்களை கட்டிக் கொடுக்கும் போதுதான் கவலைப்படுவார்கள் ஆனால் இங்கு கல்லூரிக்கு அனுப்பும் போதே கவலை தொடங்கி விடுகிறது..குழந்தைகளை பொருத்தவரை இதை ஈஸியாக எடுத்து கொள்கிறார்கள் ஆனால் பெற்றோர்களை பொருத்தவரை மிக எளிதாக எடுத்து கொள்ள முடியாது

    பதிலளிநீக்கு
  4. ஹலோ நீயூயார்க் நீயூஜெர்ஸியிலும் நல்ல காலேஜ் இரூகுங்க அதுமட்டுமல்ல ஆல்பிரட்,கவிதா, மற்றும் மதுரை தமிழனாகிய நாங்கள் இருக்கிறோம் அதுநானால தைரியமாக இங்கே அனுப்புங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுர , தங்களின் அன்பிற்கு நன்றி..

      எங்க வூட்டு ராசாத்தி கிழக்கு சீமையில் ஒரு வாரம் தாக்கு பிடிக்க மாட்டா..இங்கேயே இருக்கட்டும்.

      நீக்கு
  5. விசு! ஹஹஹ் இப்போது என் மகனும் மருத்துவப் படிப்புக்கு அப்ளை செய்கிறான். அவனைக் கேரளத்திலேயே சேர்க்கத்தான் கூடிய வரை முயற்சி செய்கிறோம்...என்ட்ரன்ஸ் எழுதிக் கிடைக்க வேண்டும். அது போல நீங்கள் சொல்லியிருப்பது போல நாங்கள் மாதம் ஒரு முறை சாப்பாடு கட்டி எடுத்துக் கோண்டு போவது அல்லது அவன் வீட்டிற்கு வரும் விதத்தில் இருந்தால் நல்லது என்றும் ஆசை...கிடைக்கணுமே..பெற்றோர்களின் ஆசை அப்படித்தான் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்..

    கீதா: விசு நானும் இப்படி தலைமுறை என்ற தலைப்பில் என் அப்பா என்னை அப்போது ஏன் இப்போதும் அட்வைஸ் மழை பொழிந்து விரட்டுவது, நான் என் மகனை இப்போதும் வாட்சப்பில் அட்வைஸ் மழை பொழிவது இந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப......மகன் நாளை தன் வாரிசை நாளை அந்தக் காலகட்டத்தில் எப்படிச் செய்வானாக இருக்கும் என்று ஒரு கணிப்பில் எழுதி வைத்திருக்கிறேன்..என்ன மாறினாலும் அடிப்படை ஒன்றுதான் என்று முடித்து வைத்து வெளியிடாமல் பல மாதங்கள் எடிட்டிங்கிற்காக வெயிட்டிங்க்.....உங்கள் பதிவைக் கண்டதும்....க்ரேட் மைன்ட்ஸ் திங்க் அலைக் என்று சும்மானாலும் சொல்லிக்கிட்டேன்..ஹஹஹ்...

    பதிலளிநீக்கு
  6. என் மகனைப் பார்க்க முடியாமல் பார்க்க வேண்டும் போல் பல சமயங்களில் தோன்றத்தான் செய்கிறது. இந்தியாவிற்குள் என்றால் எப்படியேனும் ஈசியாகச் சென்றுவிடலாம் இது வெளிநடாயிற்றே....

    கீதா

    பதிலளிநீக்கு
  7. எங்கள் இருவரின் மனமார்ந்த வாழ்த்துகள்! தங்கள் ராசாத்திக்கு நல்ல கல்லூரி அமைந்து சிறந்து விளங்கிட!

    பதிலளிநீக்கு
  8. என் பொண்னுக்கு இப்பத்தான் 4 வயது, உங்கள் கதைய படிக்கும் போதே இவள் பெரியவள் ஆகி நிற்பது போன்ற உணர்வு வந்து ஒரு அழுத்தம் மனதில் தோன்றுகிறது. தொடர்ந்து எழுதுங்கள், படிக்க மிக ஆர்வமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...