வியாழன், 2 ஜூன், 2016

இனத்தை அழிக்க வேண்டுமா... அவன் கலாசாரத்தை அழி...

May 31, 1981
June 1, 1981

இந்தியன் உனக்கு "தனி ஈழம்"  ஏன் என்றாள், உனக்காக என்றேன்.
எனக்கும்  உனக்கும் என்ன சம்மந்தம் என்றாள், தமிழ் என்றேன்.
நமக்கும் நம் தமிழுக்கும்என்ன சம்மந்தம் என்றாள், குலம் என்றேன்.
குலம் என்றால் கோத்திரமும் ஒன்று தானே என்றாள், ஆம் என்றேன்.

பின், நான்"வீர நடை" போடுகையில், உனக்கு என்ன "புறமுதுகு" என்றாள்,
அவமானத்தில் சிரசை தாழ்த்தினேன்,  இனி இவள் வியர்வை, என் இரத்தம்.
"தனி ஈழம்"  பிச்சை கேட்க நான் ஒன்னும்  ஈன தமிழன், அல்ல, தன்மான  தமிழன்,
"தனி ஈழம்" எங்களுக்கு  தர நீ யாரடா?

கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்யை தேடி நான் அலைய,
கம்பிகளோடு இருக்கும் சிறை கதவை அவள் கலைய,
 மறுபக்கம் உள்ள ஏணியில் ஏற அவள் துணிய,
மேலே நின்று கையை நீட்டினேன், கெட்டியாக பிடித்து கொண்டாள்.

அது அன்று... இன்றோ!

எனக்கு  ஓர் "தனி ஈழம்" , நானே அமைத்து கொண்டேன்.
காணி நிலம்  கூட அங்கே உனக்கு இல்லையே என்றா சொன்னாய்.
கழுத்தில் தாலி இருக்கையில் எவனுக்கு வேணும் காணி.
கெட்டி மேளம்  சொல்லாமலே, கட்டினேன் தாலியையும்,அவளையும்.

இன்று, என் இல்லத்தில் இரண்டு ராசாத்திகளுக்கு  அவள்  தாய்,
என் "தனி ஈழத்தில்" அவள் தான்  பட்டத்துராணி.
ராசாத்திக்கள் சரி, ராணியும் சரி, நீ யார் என்றா கேட்டாய்
"தனி ஈழம்" என்று பிச்சை கேட்க   நான் ஒன்னும் ஈன தமிழன் அல்ல, அதை உரிமையோடு அமைத்து கொண்டு கொண்டாடும் தன்மான தமிழன்.


பின்குறிப்பு:

ஜூன் மாதம் முதல் வாரத்தை எப்படி மறக்க இயலும். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் கலாச்சாரத்தை தான் அழிப்பார்கள். ஆசியாவிலே பெரிய நூலகம், 97,000 புத்தகங்கள், பல்லாயிரம் சுவடிகள்... அனைத்தும் அடங்கிய யாழ்ப்பாண நூலகத்தை ஒரே இரவில் எரித்து அழித்தார்களே.. மறக்க இயலுமா... 


உடை - உயிர் - உரிமை அனைத்தையும் இழந்தார்களே.... மறுக்க இயுலுமா.. இல்லை மறக்கத்தான் இயலுமா..

7 கருத்துகள்:

  1. உண்மைதான் ஒரு இனத்தை அழிக்க அவர்களின் கலாச்சாரத்தை அழித்தால் மட்டும் போதும்!!!

    பதிலளிநீக்கு
  2. மறக்க முடியாத சம்பவம்தான்

    பதிலளிநீக்கு
  3. நண்பரே உங்க பதிவு அருமை, என் வாழ்கையை போல இருந்தது உங்க பதிவு.. உங்க பதிவை என் மனைவியிடம் காண்பித்தேன். அவள் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.. நானும் ஈழத்து பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டேன். எங்க வாழ்கை அருமைய சந்தோசமா வாழ்கிறது மலேசியாவில். நான் ஒரு மலேசியன்..

    பதிலளிநீக்கு
  4. அது தான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது. பற்பல மைந்தர்கள் கண்மூடி தனமாக சுய இன லாபம் காரணமாக தமிழர்களை இழித்தும் பழித்தும் பேசி ஆட்சியில் ஏறி விட்டார்கள். இனி அல்லல் படுவது தமிழினமே..

    பதிலளிநீக்கு
  5. விசு வேதனையிலும் அருமை அருமை!! எங்கேயோ போய்விட்டீர்கள். மறக்க முடியாத நிகழ்வுகள்!!

    பதிலளிநீக்கு
  6. நூலகத்தை எரித்தது கொடுமையான செயல்! தனி ஈழம் அமைத்த தங்களின் தைரியம் பாராட்டுக்குரியது! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு