சனி, 4 ஜூன், 2016

"கச்சா" விலையும் "அச்சா" தினமும்..

காவேரி தண்ணீர் கொடுக்கவிலையே என்று கர்நாடகாவை பற்றி நான் கோபமாக எழுதியதை எல்லாம் வாபஸ் வாங்கி கொள்கிறேன். தமிழனை போல் பேராசை பிடித்தவன் இல்லை.. தமிழனை போல் மோசமானவன் இல்லை, தமிழனை போல் தன்மானம் இல்லாதவன் இல்லை, தமிழனை போல் திருடன் இல்லை என்று மற்ற மாநில புண்ணியவான்கள் ஏசி கொண்டு இருக்கையில்..

இல்லை.. இல்லை.. நாங்களும் அவர்களுக்கு நிகர் என்று  கேவலத்தை பகிர்ந்தர்க்காக ......

ரெட்டி... குமாரசாமி... இடையூரப்பா.... மல்லையா..... ராஜ்யசபா தேர்தல்..

நன்றி..கர்நாடக.. மனமார்ந்த நன்றி...

ராஜ்ய சபா தேர்தலுக்கு  வருவோம்..

ஒரு சீட்டுக்கு 100 கோடியாம். எங்கே இருந்து இந்த பணம் வருகின்றது? எங்கே இந்த பணம்  செல்கின்றது?

வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீது வருவது இருக்கட்டும். இந்த மாதிரி காரியங்களை நம் '56 இன்ச்" கட்டு படுத்தலாமே.

சென்ற வாரம் இந்த வாரம் இங்கே அமெரிக்காவில் நான் ஒரு கலோன் பெற்றோலுக்கு கிட்ட தட்ட 4 டாலர் கொடுத்தேன். தற்போது $2.30. கச்சா என்னை விலை குறைந்தது.மூல பொருளின் விலை குறைந்தால் முடிவு பொருளின் விலையும் குறையும் அல்லவா. அது தானே இயல்பு. அது இங்கே.

அங்கே..

"அச்சா தின்" மட்டும் வரமாட்டேன்குது.


சேவை வரி உயர்வு தவறே இல்லை. இந்த வரி எங்கே யாருக்கு செலவிடபடுகின்றது. கேட்ப்பார்  அற்ற நாதி இல்லா ஜந்துகள் ஆகிவிட்டோமே.

நேற்று இன்னபொரு செய்தி.

பீகார் மாநிலத்தில் பள்ளிகூட தேர்தலில் முதலாவதாக வந்த  மாணவிக்கு தான் முதல் மதிப்பெண் பெற்ற பாடத்தின் பெயர் கூட தெரியவில்லை.

'வந்தே மாதரம்" டு "அந்த மாணவி '...

கடைசியா இன்னோர் மேட்டர்

சென்ற வாரம், ஒரு நாள் நண்பரிடம்  இருந்து ஒரு அலை பேசி அழைப்பு...

விசு.. ஐ பி எல் கிரிக்கெட் பைனல்ஸ் எங்கே பாக்குற?

ஐ பி எல் .. நான் அந்த கருமத்தை பார்ப்பது இல்லை. நீ கூட நேரத்தை வீணாக்காதே..

சும்மா டைம் பாஸ் தான்.

என்னாது டைம் பாஸா? டைம் இஸ் மணின்னு தானே கேள்வி பட்டு இருக்கேன். யுவர் டைம் இஸ் அவங்க மணி.. மறுபடியும் சொல்றேன்.. ஐ பி எல்

பாக்குறேன்னு உன்னையே நீடே முட்டாள் ஆக்கிகாத.

விசு.. பைனல்ஸ் .யார் ஆடுறாங்க தெரியுமா?

தெரியாது.

சன் ரைசெர்ஸ்...மற்றும் பெங்களூர் அணி.

ஐயோ.. அந்த 9000 கோடிக்கு ஆட்டைய போட்டுட்டு கோமணத்தோடு செல்பி  கொடுப்பாரே.. விஜய் மலையா.. அவர் அணி தானே பெங்களூர் அணி..

ஆமா.

அட பாவி.. அந்த ஆளோட அணிய பாத்து கை தட்ட உனக்கு வெக்கம் இல்ல?
விடு,  விசு..சின்ன சின்ன விஷயத்துக்கு கோவ படுற..

என்ன ? இது சின்ன விஷயமா?

பின்ன..

டேய்.. அந்த 9000 கோடி...உன் பணம் என் பணம்.. அதை அப்படியே தாரை வார்த்துட்டு..  பி எப் நிதிக்கு வரி.. சேவை வரி.. பெட்ரோல் உயர்வு.. பருப்பு விலைன்னு நாய் படாத பாடு படுருமே.. அது சின்ன விஷயமா.

சரி அந்த அணிய விடு..சன் ரைசர்ஸ்...அவங்களுக்காக பாரு..

சன் ரைசெர்ஸ்...பெயரை கேட்டாலே.. எங்கேயோ இடிக்குதே..இது யாருடைய டீம்...?

இது.. இது.. இது...

டேய்.. இது யாரோட டீம்..

நம்ம மாறன் பிரதர்ஸ்..

வைடா  போனை..

மீண்டும் சொல்கிறேன்...

நெஞ்சு பொறுக்குதில்லையே....


2 கருத்துகள்:

  1. பதிவு மிகவும் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  2. கச்சா வாது அச்சா வாது...இங்க எல்லாமே கச்சடா தான். நாங்கல்லாம் ரொம்ப நல்லவங்க. விலை உயர்வுக்கு, கச்சா குறைஞ்சா பெட்ரோல் விலை குறையணுமே அப்ப்டினு எல்லாம் கேள்வி கேக்க மாட்டோம். போராட மாட்டோம். இதுவும் கடந்து போகும்னு சொல்ற எப்பேர்ப்பட்டத் தத்துவ நாடு இது..நீங்க வேற..

    கீதா

    பதிலளிநீக்கு