ஞாயிறு, 13 டிசம்பர், 2015

அண்ணே… இவங்க நிஜமாவே முட்டாளுங்க தான் அண்ணே…

மே 7ம் தேதி நான் எழுதி வெளியிட்ட பதிவு... நெஞ்சு பொறுக்குதிலையே...
"கூத்தாடி முட்டாள்” சல்மான் கானிற்கு ஐந்து வருடம் சிறை தண்டனை என்ற செய்தி வந்தவுடன் இந்த கூத்தாடி முட்டாளின் சகாக்கள் இவருக்காக பேசுவதையும் இவரை சந்தித்து “கட்டிபுடி வைத்தியம்” பண்ணுவதையும் பார்த்தால் … இவர்கள் நடிக்கவில்லை, உண்மையாகவே முட்டாள்கள் என்று உறுதியாகி விட்டது, இவர்கள் செய்வதை எல்லாம் பார்த்தால் ஏதோ நாட்டின் பாதுகாப்புக்காக தன்னையே அர்பணித்த ஒருவரை அநியாமாக திட்டமிட்டு அனைவரும் சதி செய்து சிறைக்கு அனுப்ப திட்டம் போல் நினைக்க தோன்றுகின்றது.
இந்த சல்மான் “சனியன்” , பதிமூன்று வருடங்கள் கழித்து வண்டியை ஒட்டியது தான் இல்லை தன் தகப்பனின் டிரைவர் என்று ஒரு பலிகடாவை முன் நிறுத்தினார் .
கடந்த பதிமூன்று வருடங்களில் இந்த கூத்தாடி முட்டாள் செய்த பித்தலாட்டங்கள் … இந்திய சட்டம் மற்றும் நீதி துறையை பார்த்து … “நான் எதை வேணுமானாலும் செய்வேன், உங்களால ஒரு ஆணிய கூட புடுங்க முடியாது” என்று சொல்வது போல் உள்ளது.
இந்த கூத்தாடி முட்டாளின் சாகாக்கள் சொல்லும் சில காரணங்கள் …
.
இவர் Being Human என்ற ஒரு நிறுவனம் அமைத்து பொது மக்களுக்கு நிறைய நல்ல காரியம் செய்தார், அதனால் இவரை சிறைக்கு அனுப்ப கூடாது …
அட அப்ரண்டிஸ்…இது எல்லாம் ஒரு கண்துடைப்பு .. தன் வாகனத்தில் தாறுமாறாக ஒட்டி அதை மற்றவர்கள் மேல் ஏற்றி அந்த வண்டி அவர்கள் மேலே இருக்கும் போதே தன்னை காப்பாற்றி கொள்ள அந்த இடத்தை விட்டு ஓடி ..நேற்று வரை பொய் மேல் பொய் சொல்லி வந்த சல்மான் கான் ஒரு நல்ல மனிதனாக இருக்க முடியாது . மற்றவர்களின் உயிரின் மேல் இவருக்கு ஒரு போதும் அக்கறை கிடையாது என்பது இதில் இருந்தே தெரிகின்றது.
இன்னொரு அப்ரண்டிஸ் இவருக்காக பரிந்து பேசும் போது .. இவரை நம்பி 200 கோடி முதலீடு இருக்கின்றது, அதனை மனதில் வைத்து இவரை சிறையில் அடைக்க கூடாது …
அம்பி…. இவர் மேல் 200 கோடி என்ன ? 20,000 கோடி இருக்கட்டும். அது ஒரு விஷயமே இல்லை. ஒரு சக மனிதனை தன் குடி வெறியால் கொன்றவர், இந்த பதிமூன்று வருடங்கள் தொடர்ந்து பொய் சொல்லி வந்தவர், இந்த 13 வருடத்தில் அந்த பாதிக்க பட்ட குடும்பங்கள் என்ன என்ன கஷ்ட பட்டு இருக்கும்.
இந்த “கூத்தாடி முட்டாளின்” வக்கீலின் வாதம் இன்னும் மோசம். இந்த நபர் வண்டி ஏறி சாகவில்லை. இந்த வண்டியை அங்கே இருந்து அகற்ற வந்த கிரேன் (Crane) அந்த வண்டியை அங்கே இருந்து அகற்ற முயல்கையில் அந்த வண்டி அவர் மேல் விழுந்ததால் தான் அவர் இறந்தார்.
அட பாவிங்களே… எங்கள வைச்சி காமடி பண்ண ஒரு அளவே இல்லையா ?
அடுத்து … இன்னொருவர்..எனக்கு சல்மான் கான் குடும்பத்தை 7 வருடமாக தெரியும் .இந்த வருடத்தில் அவர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் அறிந்து கொண்டேன் . இவ்வளவு நல்ல மனிதரை எப்படி சிறையில் வைக்கலாம் . உடனே அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்.
அட அறிவு கொழுந்தே… உனக்கு இவரை தெரிந்த 7 வருடத்தில் இந்த “கூத்தாடி முட்டாள்” இந்த வழக்கை பற்றி சொன்னது எல்லாம் போய். இவர் எப்படி ஒரு சிறந்த மனிதனாக இருக்க முடியும்.
இந்த வழக்கு இத்தோடு முடியாது. மேல் முறையீடு அதற்கும் மேல் முறையீடு என்று இன்னும் ஒரு 10 வருடத்தை இழுத்து அடித்து அதன் பின் இவருக்கு 60 வயது ஆகிவிட்டது, இவரை இனிமேல் சிறையில் வைப்பது செத்த பாம்பை அடிப்பது போல், அதனால் அவரை விடுவிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள் …
நெஞ்சு பொறுக்குதிலையே …
பின் குறிப்பு :
சரி, சல்மான் கானை சிறையில் வைக்க கூடாது என்பதர்க்கு நான் வைக்கும் வாதம். சல்மான்கானிற்கு சிறுவயதிலே வழுக்கை விழுந்துவிட்டது. அதனால் அவர் ஒரு சராசரி மனிதன் போல் தலை முடி இல்லாமல் வழுக்கை தலையால் அவதிபட்டார். பிறகு நிறைய பணம் செலவு செய்து ஒரு விக் (Wig ) வைத்து வாழ்க்கையையும் சினிமாவையும் நடத்தி வந்தார், இப்போது இவரை சிறைக்கு அனுப்பினால் இவரால் இந்த டோப்பாவை இனிமேல் அணிய முடியாது .அதனால் இவரை சிறைக்கு அனுப்ப கூடாது .

10 கருத்துகள்:

  1. சட்டத்தில் நிறைய ஓட்ட இருக்குன்னு சொல்றதவிட ஒட்டையிலதான் சட்டமே இருக்குன்னு சொல்லலாம்

    பதிலளிநீக்கு
  2. யோசிக்காமல் பேசும் நிலைகெட்ட மாந்தரை... நெஞ்சு பொறுக்குதில்லையே என்று புலம்புவதைத் தவிர வேறென்ன செய்ய முடிகிறது?

    பதிலளிநீக்கு
  3. பணம் இருந்தால் என்னவேண்டுமானாலும் பண்ணலாம் இந்த நாட்டில்.
    த ம 3

    பதிலளிநீக்கு
  4. நாட்டில் நீதித் துறையின் மீதான மதிப்பு
    வெகுவேகமாக சரிந்து கொண்டிருக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அங்கிள்..அப்படித்தான்..அவ்ளோதான்..( டாடி உங்களைப் பற்றி எழுதிருக்கார் நீங்க பாக்கலையா???)

    பதிலளிநீக்கு
  6. இது ஒன்றும் புதுசு இல்லையே, நிர்வாக திறமை மிக்க மோடி ஓர் இரவில் கொன்று குவித்த கொலைகளை ஞாயப்படுத்தும் மக்கள் சொல்வது. காஞ்சி சங்கரர் மீது சொல்லப்பட்டதும் அப்படி தான். அப்போ எப்படி சங்கர் இராமன் கொலையானார் என்று கேட்டதற்கு கண்டுபிடியுங்கள் என்று நம்மை சொல்கிறார்கள்.

    இது இந்தியாவில் மட்டும் கிடையாது அமெரிக்காவிலும் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான் கீழே உள்ள தொடுப்பில் படிக்கவும்.

    http://articles.chicagotribune.com/2002-12-04/news/0212040345_1_first-degree-murder-mental-health-treatment-guilty


    அண்ணா சொன்னது போல் சட்டம் ஒரு இருட்டு அறை அதில் வக்கிலின் வாதம் ஒரு விளக்கு அது இல்லாதவர்களுக்கு எட்டாதவிளக்கு எந்த காலத்திற்கும் பொருந்தும் வாசகம்.

    பதிலளிநீக்கு
  7. இத்தனை ஆண்டுகாலம் கழித்து சரியான நிரூபணம் இல்லை
    எனச் சொன்ன நீதிபதி வேறு ஒரு நீதிபதியை
    நினைவில் நிறுத்திப் போகிறார்
    வாழ்க நீதி ...பெருகுக நீதி மன்றங்கள்..

    பதிலளிநீக்கு
  8. ஒரே வார்த்தை "நோ லா என்ஃபோர்ஸ்மென்ட்"

    பதிலளிநீக்கு