வெள்ளி, 18 டிசம்பர், 2015

சிந்திப்போம்...சந்திப்போம்...

இனியும் தாமதித்தால் நம் பிள்ளைகளின் எதிர்காலமும் இந்த பிணந்தின்னி பிறவிகளிடம் அடகு வைக்க படும். இதுவரை ஏமாந்தது போதும். விழிக்கும் நேரம் அல்லவா இது. இனிமேலும் நாம் சுதாரிக்காவிடில், நமக்கு ஐயோ..

யோசித்து பார்போம்.


பள்ளி படிப்பிற்கு பணம் .. என்ன அநியாயம் இது. அரசு பள்ளியை ஒழுங்காக நடத்துவதை விட்டு விட்டு அமைச்சர்கள் எல்லாம் தனியார் பள்ளி ஆரம்பித்ததினால் தானே..

இந்த காலாசாரத்தை ஒழிக்க வேண்டாமா? நாம் வரியாக கட்டும் ஒவ்வொரு பைசாவும் இந்த அரசு பள்ளிக்கும் செலவு செய்ய போகின்றது. சற்றே சிந்தித்து பாருங்கள். ஏதாவது ஒரு அரசு பள்ளி ஒரு சராசரி குடும்பம் போகும் படி உள்ளதா? எங்கே சென்றது நம் பணம்.

மற்றும் ஒன்று .. அரசு பள்ளி இலவசம் என்பதே பெரிய பொய். நாம் வியர்வை சிந்தி கட்டும் பணத்தினால் தான் இயங்குகின்றது இந்த பள்ளிகள். அரசு பள்ளியின் ஆசிரியர்களுக்கு போதுமான சம்பளம். இவர்கள் சம்பளம் பொதுவாக தனியார் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களை விட அதிகம்.

 பின்னர் ஏன் நம் பிள்ளைகள் இந்த பள்ளியில் படிப்பதில்லை.
இங்கே நாம் ஆசிரியர்களை குறை சொல்ல முடியாது. ஏன் என்றால் அவர்களின் பிள்ளைகளே தனியார் பள்ளிக்கு தான் செல்கின்றார்கள்.
 இதை நாம் திருத்த வேண்டாமா?

சற்றே சிந்திபோம்..இந்த அரசு பள்ளிகள் ஒழுங்காக இயங்கினால் நம் அனைவருக்கும் பள்ளிகூட கட்டணத்தில் தான் எவ்வளவு மிச்சம்?  ஐந்து வருடத்திற்கு ஒரு முறை இவர்கள் போடும் பிச்சை காசை ஒரே மாதத்தில் மிச்ச படுத்தலாமே.

சாலைகள்.. சற்றே சிந்திபோம்..

ஏதாவது ஒரு சாலை நாம் பயணிக்கும் போல் உள்ளதா? எங்கே பார்த்தாலும் குழி. காலையில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது.. மீண்டும் வீடு வருவோமா என்ற உத்திரவாதம் இல்லை.  இந்த சாலையில் நம் வாகனங்கள் படும் பாடு.. பத்து வருடத்திற்கு ஓட வேண்டிய ஒரு வாகனம் இந்த கீழ்த்தரமான சாலைகளினால் ஐந்து வருடம் கூட தாக்கு பிடிப்பதில்லை.  இந்த கீழ் தர சாலையினால் வரும் போக்கு வரத்து நெரிசல்.. ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு போக வேண்டிய இடத்திற்கு இரண்டு லிட்டர் பெட்ரோல் செலவு. இன்னும் எத்தனை நாள் தான் ஏமாறுவோம்.

அடுத்து போக்கு வரத்து வாகனங்கள். அரசு வாகனங்கள் இருக்கும் நிலையை கண்டீர்களா? இந்த வாகனங்களை பார்க்கையில்.. நம்மை நாமே பிச்சை காரர்கள்  ஆகிவிட்டோமே என்ற எண்ணம் தான் வருகின்றது. இந்த வாகனங்களுக்கு தான் எவ்வளவு பராமரிப்பு செலவு.. அந்த பணம் எல்லாம் எங்கே போனது. சிந்திபோம்.

அடுத்து.. உணவு விலை. உயர உயர பறந்து கொண்டு இருகின்றது. வெங்காயம் முதல் பருப்பு வரை.. என்ன செய்வோம். ஏன் இந்த விலை.. ஏன் தட்டு பாடு. எல்லாம் ஒரு சிலரின் நன்மைக்காக வடிவமைக்க பட்டது. சற்றே சிந்திபோம்.

ஒரு குழந்தையின் பிறப்பில் இருந்து அந்த குழந்தையின் ஒவ்வொரு காரியத்திற்கும் லஞ்சம். நாம் தான் இந்த லஞ்ச பிசாசின் கையில் அகபட்டோம். அடுத்த சந்ததிக்காவது ஒரு நல்வாழ்க்கை அமைத்து தருவோம்.

மாற்றம் தேவை.. நமது சந்ததிகளுக்காக.. சிந்திப்போம்,,சந்திபோம்.

4 கருத்துகள்:

  1. ஆம் எல்லாமே வியாபாரமாகிவிட்டது
    வலுத்ததே காட்டில் வாழ முடியும் என்பதைப்போல்
    பணம் கொழுத்தவனே இங்கு வாழ முடியும்
    எழுத்தில் எரியும் நெருப்பு அனைவருக்குள்ளும் எரியட்டும்
    வாழ்த்துக்களுடன்.....

    பதிலளிநீக்கு
  2. அருமையான கருத்தை முன்வைத்தமைக்கு மிக்க நன்றி விசு. நாங்களும் பல சமயங்களில் சொல்லிவருவது. எல்லாமே நம் நாட்டில் எதற்குப் போராட வேண்டுமோ அதற்குக் குரல் கொடுக்காமல் எதற்கெல்லாமோ குரல் கொடுத்துக் கொண்டிருப்பதும் ஒவ்வொரு பிரச்சனையும் இருகோடுகள் தத்துவம் போல ஆவதும் தான் நடக்கின்றது. என்ன சொல்ல...அடிப்படை உரிமைகளுக்குக் குரல் கொடுப்பது என்பதே இல்லாமல் போனது. எந்தப் போராட்டமும் முழுமை அடைவதில்லை. நல்ல பதிவு விசு. மக்கள் இதற்கெல்லாம் போராடுவதே இல்லை என்பது வேதனை..

    பதிலளிநீக்கு
  3. கண்டிப்பாக மாற்றம் தேவைதான்! 2016ல் வரும் என எதிர்பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  4. "ஒரு குழந்தையின் பிறப்பில் இருந்து அந்த குழந்தையின் ஒவ்வொரு காரியத்திற்கும் லஞ்சம். நாம் தான் இந்த லஞ்ச பிசாசின் கையில் அகபட்டோம். அடுத்த சந்ததிக்காவது ஒரு நல்வாழ்க்கை அமைத்து தருவோம்." என்ற
    உண்மையை
    எல்லோரும் ஏற்றுக்கொண்டால்
    மாற்றம் காண முயன்றால்
    நன்றே நாளை விடியும்!

    பதிலளிநீக்கு