சனி, 12 டிசம்பர், 2015

உப்புமாவிற்கு பச்சிடியா.. இதை கேக்க யாருமே இல்லையா?

வார இறுதி என்றாலே ஒரு குஷி தானே. இந்தயாவில் வாழும் வரை வார இறுதி என்பது ஒரு விஷயமே இல்லாமல் இருந்தது. பல வருடங்களுக்கு முன் வெளிநாடு வந்தவுடன் வந்த புதிய அனுபவங்களில் ஒன்று.

வார இறுதி.

வியாழகிழமை அன்றே.. வார இறுதிக்கு என்ன பிளான் என்று அனைவரும் விசாரிப்பார்கள். அது வெள்ளி மதியம் வரை போகும். வெள்ளி மதிய உணவு முடிந்த பின்னர் நண்பர், உறவினர், மற்றும் பார்க்கும் அனைவரும் சொல்வது..
 Have a Happy Weekend.
பிரமச்சாரி நாட்களில் வெள்ளி இரவு தூக்கம் இருக்காது . சனி காலைஐந்து போல் தூங்க போய் மதியம் 3-4 போல் எழுந்து மீண்டும் வெளியே சென்று சனி நள்ளிரவு போல் வந்து விட்டு பின் ஞாயிறு காலை கோயில். அது முடித்தவுடன் நல்ல ஓர் உணவு. மதியம் துணி துவைத்தல் அடுத்த வார துவக்கதிர்க்கான சில வேலைகள். 

மீண்டும் திங்கள் காலை அனைவரும் கேட்பது.
How was the weekend? 
செவ்வாய் வரை அது போகும். புதன் கடந்து போனவுடன் மீண்டும் வியாழன் .. வார இறுதி விசாரிப்பு.
பிரமச்சாரி வாழ்க்கை அப்படி. இப்போது அம்மணியும் கண்மணிகளும் இருக்கின்றார்களே. வாழ்க்கை விதம் சற்று மாறி விட்டது. வெள்ளி மாலை வந்தவுடன், வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு பிரேக். 
ராசாத்திக்கள் அன்று தங்களுக்கு பிடித்த பாட்டுகளை மற்றும் நிகழ்சிகளை தம் தம் அறையில் இரண்டு மணி நேரம் பார்ப்பார்கள். அடியேன் .." கழுதை கெட்டால் குட்டி சுவர்". பதிவு தான். அம்மணி சிலரை தொலை பேசியில் நலம் விசாரித்து கொண்டு , அல்ல கடை வீதிக்கு சென்று.
வெள்ளி இரவு 10க்கு எல்லாம் வீட்டின் விளக்கு அணைக்க படவேண்டும் என்பது சட்டம்.. ஏன் என்று சொல்லுகிறேன், கேளுங்கள்..
டாடி.. நாளைக்கு பள்ளி கூட இல்லை ஏன் சீக்கிரம் தூங்க சொல்றிங்க..
6க்கு எல்லாம் எந்திரிக்கனும் ராசாத்தி..

அது தான்  ஏன்.. தினமும் தான் 5:30 க்கு எழுருமே.. ஒரு நாலாவது..
அடியே.. நான் பெத்த இளையவளே.. வாரம் முழுவதும் நீ ஒரு மணிக்கு கூட தூங்க போ, 
எனக்கு பிரச்சனையே இல்ல.. வெள்ளி மட்டும் சீக்கிரமா போயிடனும்.
அது தான் ஏன் டாடி.

அம்மாடி.. வாரம் முழுக்க காலையில் எழுந்து நீங்க பள்ளி கூடம், நானும் அம்மாவும் வேலை. எல்லாம் முடிச்சிட்டு வந்து சேரும் போது உனக்கு பள்ளி கூட வீடு பாடம், அம்மாவிற்கு சமையல், எனக்கு கூட்டல் பெருக்கல் துவைத்தல் கழுவுதல் .. 
அதனால..
அதனால ஒருத்தருக்கு ஒருத்தர் பேசவே முடியிறது இல்ல.. 
அதுக்கு...
நமக்கு சனி மட்டும் தான் ஒண்ணா இருக்க வாய்ப்பு. நீங்க தாமதமா எழுந்து 11 மணிக்கு வந்தா.. வேலைக்கு ஆகாது.
ஒ.. அப்ப ஞாயிறு தாமதமா எழுலாம் இல்ல..

அதுவும் முடியாது. அன்றைக்கு காலையில் கோயிலுக்கு போகணும் இல்ல.. அதனால்.. நீங்க வெள்ளி சனி சீக்கிரம் தூங்க போங்க.. மற்ற நாளில் மூணு மணிக்கு கூட  தூங்க போங்க.
மூணு மணிக்கு தூங்க போனா பள்ளியில் போய் தூங்க வேண்டியது தான்.
அது உங்க பிரச்சனை. வாரம் முழுக்க உங்களுக்கு .. வார இறுதி நம்பளுக்கு..
ஆரம்பத்தில் இந்த சட்டம் ஒத்து வராவிட்டாலும் நாள் போக போக பழகி விட்டது.
இந்த வெள்ளி.. எட்டு மணி போல் .. "குட்டி சுவரில்" அமர்ந்து இருந்த என்னிடம் அம்மணி வந்து....

நாளைக்கு காலையில்  உப்புமா என்றார்கள்..

உப்புமா தான் நமக்கு ஆகாதே..

நாளைக்கு காலையில் தானே அதை ஏன் இப்ப சொல்ற என்று கொஞ்சம் பயந்து கொண்டே சத்தமாக கேட்க்க..

மூத்தவளோ.. வார இறுதியுமா அதுவுமா. நீங்க ரெண்டு பெரும் ஆரம்பிச்சிடிங்களா என்றாள்..

நான் ஒன்னும் ஆரம்பிக்கல..உங்க அம்மா தான் நாளைக்கு காலையில் உப்புமான்னு இப்பவே வெறுப்பு ஏத்துறாங்க..

இது ஒரு விஷயமா? "உப்புமா இஸ் நாட் பேட்.." இதுக்கு போய்.. "கோ டு ஸ்லீப் டாடி.." காலையில் நீங்க சீக்கிரமா எழ வேண்டும்,

என்று சொன்னவளை..

ஒரு நிமிஷம் இரு..உப்புமா இஸ் நாட் பேடா ? போன மாசம் அதை மேசையில் வைத்த போது மூன்றாம் உலகபோரே நீ ஆரம்பிச்ச.. இப்ப எப்படி இட் இஸ் நாட் பேட்? உப்புமானா என்ன தெரியுமா?

அதுதான் டாடி. "ரைஸ்ஸ" கொல கொல ன்னு வேக வைச்சு ப்ளக் பெப்பர் முழுசா போட்டு, தேங்காய் சட்டினியோட.. இட் இஸ் நாட் பேட்.

அடி, உங்க அப்பன் மவளே.. அது பொங்கல். இது உப்புமா..

என்று சொல்லும் போதே..சின்னவள் வந்து..

ஒ... "ஐ லைக் தி அதர் உப்புமா"

என்று சொல்ல..

அது என்ன அதர் உப்புமா..?

தி கலர்புல் உப்புமா.

அது என்னடி மா?

அது தான் டாடி.. உப்புமாவே வேற கலரில் இருக்குமே.. சேம் டேஸ்ட் பட் வித்தியாசமான கலர்.

அடியே.. அது கிச்சிடி..

நோ டாடி.. ஐ நோ கிச்சிடி.. மம்மி பிரியாணிக்கு தொட்டுக்க செய்வாங்க.. தயிர்
வெங்காயம் எல்லாம் வைச்சு.

அடியே.. அது பச்சிடி.

என்று விளக்குகையில்..

எந்த ஒரு மனுஷனாவது ஒரு உப்புமாவிற்கு இவ்வளவு நேரம் பேசுவானா என்று

அம்மணி வர..

நானோ.. சரி.. குட் நைட் என்று ஓடினேன்..

காலையில் உப்புமா..

சும்மா சொல்ல கூடாது. இளைய வயதில் வெறுத்தாலும் இப்ப என்னமோ நல்லாத்தான் இருக்கு...என்று நினைத்து கொண்டே அம்மணியிடம் இன்னும் ஒரு கரண்டி கொடு என்று சொல்ல..

அம்மணியோ... அப்பா என்னமோ கத்துநிங்க . இப்ப என்னமோ... கேக்குருங்க என்று வஞ்ச புகழ்ச்சியில் சொல்ல..

ராசாத்திக்களும் சாப்பிட்டு முடிக்கையில்.. அம்மணி அருகில் வந்து..

இன்றைக்கு மதியம் புட்டு செய்யலாம்னு இருக்கேன்.

பேஷ்.. பேஷ். ரொம்ப நாள் ஆச்சி.. செய்..

என்று சொல்லி நானும் பிள்ளைகளும் கோல்ப் ஆட சென்று திருப்புகையில் மணி ஒன்று.
டாடி .. மதிய உணவு என்ன?

புட்டு..

ஒ .. ஐ நொ தட்.. முறுக்கு மாதிரியே ஆனா வெள்ளையா சாப்டா மெதுவா இருக்கும் .

அடியே.. அது இடியாப்பம்.

என்னமோ .. தீஸ் நேம்ஸ் ஆர் கன்புயுசிங்க்.

இல்லத்தை வந்து சேர்ந்தவுடன்.. புட்டு வாசனை இல்லை.

மேசையில் அமர்ந்து..

என்ன புட்டு தயாரா?

ஆமாம். ஒரு நிமிஷம்..

என்ன வாசனையே காணோம்.

கேவுரு புட்டுக்கு எப்ப வாசனை வந்தது..

என்னாது.. கேவுரு புட்டா?

பின்ன என்ன சுறா புட்டா?

நான் சுறா புட்டுன்னு தான் நினைச்சு ஓகே சொன்னேன்.

நினைப்பு தான் புலப்ப கெடுதுச்சான் என்று அம்மணி அலற..

இளையவளோ.. டாடி.. அந்த கொள்ளுக்கட்டை பாட்டல்ல பாஸ் பண்ணுங்க..

கொள்ளுக்கட்டை பாட்டலா..?

அவ ஊறுகாய் கேக்குறா..

அவ கொள்ளுக்கட்டை கேக்குறா.. நீ ஊறுகாய் சொல்ற ..

இவள்க ரெண்டு பெரும் என் பிள்ளைகள்.. இவங்களுக்கேன்னா வேணும்னு இவங்க கேக்குறதுக்கு முன்னால எனக்கு தெரியும்;

உனக்கு புருசனா இருக்குறதுக்கு பதிலா புள்ளையா இருந்து இருந்தா இந்நேரம் நான் சுறா புட்டு சாப்பிடுன்னு இருப்பேன். 

சரி .. பேசமா சாப்பிடுங்க.. இதையே .. பதிவா போட்டுடாதிங்க..

11 கருத்துகள்:

  1. அம்மணி தானே சமைக்கறாங்க.. அதுக்கே கம்ப்ளைன்ட்டா..? பார்த்து அண்ணே.. அப்புறம் கரண்டி கை மாறிடப் போவுது..

    பதிலளிநீக்கு
  2. சிரிச்சு ஓயல.....எதுவும் எண்ட்ல வச்சீங்க பாருங்க ஒரு பஞ்ச் சரி .. பேசமா சாப்பிடுங்க.. இதையே .. பதிவா போட்டுடாதிங்க..ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  3. வீக்கெண்ட் கொண்டாட்டம் பற்றி நிறைய கேள்விப் பற்றிருக்கிறேன். அதன் உண்மையான வடிவத்தை உங்கள் பதிவின் மூலமே கண்டுகொண்டேன்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  4. இதையே பதிவா போட்டுடாதீங்க// ஓவர் டு மிஸஸ் விசு...எங்க சகோதரி..இங்க பாருங்க விசு பதிவாவே போட்டுட்டாரு. நாங்கல்லாம் வாசிச்சிக்கிட்டுருக்கோம் ஜாலியா சிரிச்சுக்கிட்டே....

    ..ஆமா அது என்ன கொள்ளுக்கட்டை பாட்டல்? ஊறுகாய்? மாவடு ஊறுகாயா?

    பதிலளிநீக்கு
  5. ஹாஹாஹா கடைசியில் ஒரு பன்ச் வச்சிங்க பாருங்க :)))
    இவ்வளவு குழப்பமா வீக் எண்ட்ல ஹாஹா

    பதிலளிநீக்கு
  6. //சரி .. பேசமா சாப்பிடுங்க.. இதையே .. பதிவா போட்டுடாதிங்க..// போட்டுட்டீங்களே பாஸ். இந்த வாரமும் உப்புமாதான்

    பதிலளிநீக்கு
  7. அங்கு வீக் என்ட் என்பதே ரொம்ப அருமையான விஷ்யம் விசு. நாங்கள் அங்கிருந்தபோது வீக் என்ட் ரொம்ப எஞ்சாய் செய்வோம். வெளியில் கடைக்குச் செல்வதே அதுவும் தேவையான பொருட்கள் வாங்கத்தான் அதுவே பிக்னிக் செல்வதைப் போல இருக்கும். மட்டுமல்ல அருகில் எங்கேனும் ரிலாக்சாடாகச் சென்று. நிறைய பொழுது இருந்து உருப்படியாகச் செய்தது போல இருந்தது என்றால் அது உண்மையே.

    அந்த ஒரு ஃபீல் இங்கில்லை என்பது.....உண்மைதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. விக்கெண்டில் உப்புமாவோ அல்லது ஏதாவது ஒன்றோ தட்டில் சூடாக போட்டு வந்து பறிமாறுபவர்களுக்கு கோயில் கட்டி கும்பிடமா இப்படியா குறை சொல்லுறது

    பதிலளிநீக்கு
  9. விக்கெண்டில் உப்புமாவோ அல்லது ஏதாவது ஒன்றோ தட்டில் சூடாக போட்டு வந்து கணவருக்கு பறிமாறுகிறார்களா? அண்ணே நிஜம்மாவா சொல்லுறீங்க... இப்படி எல்லாம் நடக்குமா? நிஜமாகவா? என்னால் நம்மவே முடியவில்லை நீங்க கொஞ்சம் கருப்பு கலரோ என்று நினைத்து இருந்தேன் இப்பதானே தெரியுது. உங்க உடம்பு பூராவும் அதிர்ஷ்ட மச்சம் இருக்குதுன்னு....

    பதிலளிநீக்கு