புதன், 11 நவம்பர், 2015

புகழ்ச்சி வஞ்ச அணி ""இல்லத்து உறவு"

வஞ்சப்புகழ்ச்சி அணி என்பதை நாம் அனைவரும் ஆரம்ப பள்ளியில் திருக்குறளை கற்று கொண்டு இருக்கையில் அறிந்தோம். இது என்ன புகழ்ச்சி வஞ்ச அணி ?

இதோ சொல்கிறேன்...கேளுங்கள் .

முதலில் வஞ்சப்புகழ்ச்சி அணியை பற்றி சற்று பார்ப்போம்.

வஞ்சப்புகழ்ச்சி அணி என்பது "புகழ்வது போல் இகழ்தல்" அம்புட்டுதேன் ...


உதாரணத்திற்கு 

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான் - 
திருக்குறள் - திருவள்ளுவர்

"கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்" என்பது இக்குறட்பாவின் பொருள்.

கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)

(மேலே உள்ள சிவப்பு வார்த்தைகள் கூகிள் செய்து எடுக்க பட்டவை. )

இப்போது இன்றைக்கான தலைப்பிற்கு வருவோம்.

புகழ்ச்சி வஞ்ச அணி.. இதன் அர்த்தம் .. "இகழ்வது போல் புகழ்தல்". இது பொதுவாக கணவன் மனைவி உறவை நகைச்சுவையாக வெளி உலகத்திற்கு மற்றும் பொது மேடையில் பேசும் போது நான் கையாலாடும் முறை.

என் முந்திய பதிவில் சிங்கப்பூர் நாட்டில் பேராசிரியர் பாப்பையா அவர்கள் தலைமையில்  நடந்த ஒரு பட்டிமன்றத்தில் "இன்றைய வாழ்வின் நிம்மதி தருவது சொத்து சுகமே  - சொந்த பந்தமே " என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் எனக்கு பிடிக்காத விடயங்களை பற்றி கூறி இருந்தேன்.

அந்த நிகழ்ச்சியில் பல விரும்பதகாத விடயங்கள் இருந்தாலும் அதில் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தது , " சொத்து சுகமே " என்ற அணியில் இரண்டாவதாக பேசிய புலவரின் பேச்சு தான். தமக்கு ஒதுக்க பட்ட நேரத்தில் 90%த்தை மனைவி என்ற ஒரு ஸ்தானத்தை மிக்க கொச்ச படுத்திவிட்டார். இவர் ஏன் இப்படி பேசுகின்றார் என்று நினைக்கையில், சமீப காலத்தில் எனக்கு நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது.

"விசுவாசமின் சகவாசம்" என்ற பெயரில் இந்த வருட ஆரம்பத்தில் என் புத்தகம் ஒன்று வெளிவந்தது. அந்த புத்தகத்தில் ஏறக்குறைய 75% என் இல்லத்தில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை  உப்பு என்ற நகைசுவையை" கவனமாக அளவாக ஏற்றி தான் எழுதினேன்.

அதை படித்த நண்பர் ஒருவர், என்ன விசு .. மனைவியை இப்படி காலாய்க்கின்றீர்களே, என்று என் மனைவியின் எதிரில் போட்டு தள்ள, நான்  எழுதிய என் புத்தகத்தை பரிசோதிக்க  இன்னொரு முறை படிக்க ஆரம்பித்தேன்.

அப்படி படிக்கையில் , என் மூத்த ராசாத்தி என்னிடம்..

டாடி .. எழுதியதே நீங்கள்.. அதை என்ன இவ்வவளவு மும்முரம்மாக படிக்கின்றீர்கள்?

ஒன்னும் இல்லடியம்மா.. இதில் எங்கேயாவது உங்கள் அம்மாவை தவறாக குறிகாட்டி இருகின்றேனா என்று பார்க்கின்றேன்.

எங்கே ஒரு நிகழ்ச்சியை எனக்கு  படித்து காட்டுங்கள்...நான் சொல்கிறேன்..

என்று சொல்ல, அவளையே நீயே ஒரு பக்கத்தை திற என்று சொல்ல ..

அவளோ பிரட்டி பிரட்டி பார்த்து நானும் அவள் தாயாரும் உள்ளதை போல் படத்தை கொண்ட ஒரு பக்கத்தை எடுத்து என்னை விவரிக்க சொன்னால்.
அவள் எடுத்து கொடுத்த பக்கத்தை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

துப்பறியும் வீம்பு:: பெண்களிடம் எனக்கு பிடித்தது


மொத்த கதையையும் படித்த பின்.. அவளிடம்..

என்ன மகள்.. இதை பற்றி என்ன நினைக்கின்றாய்?

நல்ல சிரிப்பாக இருந்தது டாடி..

சிரிப்பை விடு.. வேறு என்ன ?

நீங்கள் உங்களை ஒரு அப்பாவியை போல் காட்டி கொண்டீர்கள்..

இதில் காட்டுவதற்கு என்ன? நான் உண்மையாகவே அப்பாவி தானே..உங்கள் அம்மாவை நான் எப்படி சித்தரித்து இருக்கின்றேன்..?

அம்மாவை மிகவும் ஒரு கண்டிப்பான பெண்ணாக காட்டி இருக்கின்றீர்கள் .

இதில் காட்டுவதற்கு என்ன? அம்மா ஒரு கண்டிப்பான பெண்மணி தானே..அவர்களை நான் எந்த விதத்திலாவது தவறாக சித்தரித்து உள்ளேனா ?

இல்லை டாடி.. நீங்க ரொம்ப ஸ்மார்ட்.. அம்மாவை தவறாக பேசுவது போல் காட்டி அவர்களை ரொம்ப ஸ்மார்ட் பெண்மணியாக காட்டிவிட்டீர்கள்.

எப்படி..?

டாடி.. காலையில் எழுந்ததில் இருந்து அம்மா உங்களிடம் தொடர்ந்து தவறுகள் கண்டு பிடிப்பது போல் எழுதி இருந்தீர்கள். இருந்தாலும் ஒரு அறிவான பெண்மணி, ஒரு அன்பான பெண் ஒரு சிறந்த குடும்ப தலைவியால்  தான் இவ்வளவு அறிவாக கண்டு பிடிக்கமுடியும் என்று எழுதி உள்ளீர்கள்.

இதை படித்தால் அம்மா கோபப்படுவார்களா?

அம்மா இதை படித்தால் கோவத்தை விட சந்தோசம் தான் வரும்.

ரொம்ப நன்றி மகள்.. என் வயிற்றில் பாலை ...

நான் ரொம்ப பிசி.. இப்ப காப்பி போட்டு தர நேரம் இல்லை.. உங்க ரெண்டாவது ராசத்தியிடம் கேளுங்கள். 

என்று சொல்லி கொண்டே இடத்தை காலி செய்தாள்.

அந்த பதிவை மீண்டும் படித்தேன். அதில் எனக்கு புரிந்தது.. புகழ்ச்சி வஞ்சகமே..இதை படிக்கும் ஒவ்வொரு கணவனும்..

"மனைவியிடம் வசமா மாட்டினான் விசு என்று நகைக்க வேண்டும், அதேநேரத்தில், இப்படி ஒரு மனைவி நமக்கு வாய்க்கவில்லையே  என்று ஏங்க வேண்டும்".

அந்த ஒரு உணர்வை மற்றவர்கள் மீது ஏற்படுத்தும் வகையில் நம் இல்லத்து உறவை நகைச்சுவையாக பேசலாம். இப்படி இல்லாவிடில் அது அந்த உறவை கொச்சை படுத்தும், இந்த பட்டிமன்றத்தில் நடந்ததை போல்.

பின் குறிப்பு :
சரி, அந்த பதிவில் விசு அப்படி என்ன எழுதினார் என்று பரிசோதிக்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்.
துப்பறியும் வீம்பு:: பெண்களிடம் எனக்கு பிடித்தது

16 கருத்துகள்:

  1. ஏக்கம் தான் - "இப்படி எழுத முடியவில்லையே" என்றும் கூட...!

    பதிலளிநீக்கு
  2. என்ன பண்ணித்தொலைக்க....நானெல்லாம் எழுத வந்ததற்கு அவரும்(?)ஒரு காரணம்..என் மனைவியைப்பற்றி நானெழுதாமல் யாரெழுத?
    அவர்கள் நம்மைத்தான் தேர்ந்தெடுத்தார்கள்...நாமல்ல....சரி நம்மை அவர்கள் எழுத ஆரம்பித்தால் ஒன்றும் செய்ய முடியாது தானே...?
    அதெல்லாம் ஒன்றும் கவலைப்பாடாதீர்கள் விசு சார்...நம் எழுத்தின் முதல் வாசகர்கள் அவர்கள் தான்...அது கொஞ்சம்(?)நன்றாக இருந்தால் ..அதைவிட கொஞ்சமாய் ஒரு சிரிப்பு சிரிப்பார்களே. அதற்கு வஞ்சக சிரிப்பணி என்று எதுவும் இருக்கிறதா...ஒரு யோசனை தான். இனி பட்டிமன்றங்கள் பார்க்காதீர்கள்....பார்த்தீர்களா...குடும்பம் வரை வந்துவிட்டார்கள்...

    பதிலளிநீக்கு
  3. நண்பர் விசு அவர்களுக்கு வணக்கம். நானும் பட்டிமன்றம் பேசியவன்தான். (இப்ப தனிப்பேச்சாகப் பேச அழைக்கப் படுவதையே விரும்பி ஏற்கிறேன்) அப்போதும் சரி, இப்போதும் சரி, மனைவிபற்றிப்பேசுவதிலலை பொதுவாகப் பெண்களைப் பற்றிப் பேசநேர்ந்தபோதெல்லாம் என்பேச்சில் -உங்களைப்போல- பெருமைப்படுத்தும் கிண்டலாகப்பேசியிருக்கிறேனே தவிர இழிவுபடுத்திப் பேசியதே இல்லை என்று உறுதியாகச் சொல்வேன். சிரமப்படாமல் பெண்களைக் கிண்டல்பண்ணிப் பேசுவதும் பாடுவதும் தமிழ்நாட்டில் நல்லநகைச்சுவையாக ஏற்கப்படுவதே ஒரு சமூகஇழிவு என்று நினைப்பு வராத வரை இவர்களின் பிழைப்பு நடக்கத்தான் செய்யும். இதுபற்றி நான் ஒரு தனிப்பதிவே போடலாம் என்று இருக்கிறேன். அதில் உங்கள் நூலையும் இந்தப் பதிவையும் எடுத்துக் காட்டலாம்தானே? தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஐயா.. இது ஒரு சமூகஇழிவு என்று நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.
      உங்கள் பதிவில் என் நூலைப்பற்றிய குறிப்பா? கரும்பு தின்ன கூலியா... சந்தோசமாக எடுத்து காட்டுங்கள்.
      மற்றும் .. நீங்கள் சொல்லிய திருத்தத்தை செய்து விட்டேன். சுட்டி காட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  4. இன்னொரு சிறு திருத்தம். அதன் பெயர் வஞ்சப்புகழ்ச்சி அணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லிய திருத்தத்தை செய்து விட்டேன். சுட்டி காட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  5. இப்படிலாம் பேச, எழுத உங்களுக்கு அனுமதி உண்டா?!

    பதிலளிநீக்கு
  6. //டாடி.. நீங்க ரொம்ப ஸ்மார்ட்.. அம்மாவை தவறாக பேசுவது போல் காட்டி அவர்களை ரொம்ப ஸ்மார்ட் பெண்மணியாக காட்டிவிட்டீர்கள்//

    இந்த பார்முலாவில் தான் பல குடும்பங்கள் சந்தோசமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    கதை அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள்.... த.ம 4
    நம்ம பக்கமும் வாருங்கள் வந்து பாருங்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான்! மனைவியை கிண்டலடிக்கும் நகைச்சுவைகள் எழுதினாலும் அது புண்படுத்தா வண்ணம் அமைய வேண்டும் என்று எனக்கும் பாடம் படித்தது பதிவு. உங்களின் நூல் எனக்கு வேண்டும். எங்கு கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
  9. மேடைகளில், தன் நிறம் பற்றியும், தன் குறைகள் பற்றியும், கிண்டல் அடித்துப் பேசுவதைத் தான் விரும்புகிறார்கள் என்று நினைத்து புகுத்துகிறார்கள். என்ன செய்வது> அந்த காலத்தில், பேச்சாளர்கள் தமிழை வளர்த்தார்கள். இன்றோ..எல்லாவற்றையும் சிதைக்கிறார்கள்...திரைப்படம் போலவே இங்கும் பாடல்கள் வேறு.அதுவும் நான்காம் தரப்பாடல்கள். இது ஒரு மன நோய் .நோயாளிகளைக் கண்டு நாம் கலங்க வேண்டியதில்லை

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோ இப்படியும் சொல்லலாமோ...உங்கள கில்லர்ஜி தொடங்கியுள்ள கடவுளைக்கண்டேன் தொடரில் இணைத்துள்ளேன் கருணையுடன் தொடர்க..நன்றி சார்..காண்க..http://velunatchiyar.blogspot.com/2015/11/2.html

    பதிலளிநீக்கு
  11. May I have a copy of the book "விசுவாசமின் சகவாசம்" My address is SeeYes Bee 202 Maurya Enclave 3rd Avenue Ashok Nagar Chennai 600083 INDIA
    I shall bear the cost if any

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hi there... thanks for dropping by. Its always a pleasant shock when someone asks for a copy of my book. I have already asked Geetha (thlillaiyagathu Chronicles logger)- Chennai) to forward you a copy. She is been helping me from the beginning with our book. Thanks for dropping by again.

      நீக்கு
    2. Hi there... thanks for dropping by. Its always a pleasant shock when someone asks for a copy of my book. I have already asked Geetha (thlillaiyagathu Chronicles logger)- Chennai) to forward you a copy. She is been helping me from the beginning with our book. Thanks for dropping by again.

      நீக்கு