செவ்வாய், 10 நவம்பர், 2015

பாப்பையா அவர்களின் சிங்கப்பூர் தீபாவளி பட்டிமன்றம்...."அரைத்த மாவே"

தீபாவளி அன்று வேலைக்கு சென்று மீண்டும் இல்லத்திற்கு திரும்பி வந்து சேரும் போது மனமும் உடலும் சோர்ந்து விட்டது.  ராசாதிக்கள் இருவருக்கும் நாளை விடுமுறை (தீபாவளிக்கு அல்ல ... ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தினம்  Veterans Day). இருவருக்கும் வீட்டுபாடம் இல்லாததால் சீக்கிரம் உறங்க செல்ல, நானோ கணினியை தட்டி தீபாவளி பட்டிமன்றம் பார்க்கலாம் என்று அமர்ந்தேன்.

முதலில் எதிரில் வந்தது...பாப்பையா அவர்களின் சிங்கப்பூர் பட்டிமன்றம் , தலைப்போ .. இன்றைய வாழ்வில் பெரிதும் நிம்மதி தருவது "சொத்து சுகமே - சொந்த பந்தமே".


தலைப்பை பார்த்தவுடன் ஒரு சிறிய ஏமாற்றம் என்று தான் சொல்லுவேன்.
இந்தியர்கள் அதுவும் தமிழர்கள் நாம் எப்போதும் நம் கலாசாரத்தை பாராட்டி பேசுபவர்கள். நம் கலாசாரத்தில் போற்றி பாதுக்காக்க வைக்க படவேண்டிய முக்கியமான ஒன்று தான் " சொந்த பந்தம்". இதை நாம் கடைபிடிப்பதில்லை என்பதும் உண்மை. ஆனால் மேடை பேச்சிலும் சரி, பொது இடங்களிலும் சரி, எந்த ஒரு மனிதனும் தனக்கு நிம்மதி தருவது "சொத்து சுகமே" என்று சொல்ல தயங்குவான்.

இந்த பட்டி மன்றத்தின் தீர்ப்பை நான் பார்க்கவில்லை (முடியும் முன் நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ள பட்டேன்). இருந்தாலும் தீர்ப்பு "சொந்த பந்தமே " என்று தான் இருக்கும் என்பதில் எனக்கு சிறு ஐயமும் இல்லை.

சரி, இப்போது அணிகளுக்கு வருவோம். "சொத்து சுகமே" என்ற அணியில் பேச மூன்று ஆண் பேச்சாளர்கள். சொந்தம் பந்தம் என்று பேச வந்த மூவரும் மகளிர். இதில் இருந்தே ஒரு விஷயம் தெரிந்து விட்டது.  என்னதான் சொத்து சுகத்தின் மேல் ஆசை இருந்தாலும் ஒரு தமிழ் பெண்மணி அவையரங்கில் பார்வையாளர்கள் எதிரில் அதை ஒத்து கொள்ளமாட்டார்கள்.

"சொத்து சுகமே" என்று பேசிய மூவரும் நகைச்சுவை என்ற ஒரே நோக்கை வைத்து பேசினார்கள். இரண்டாவதாக பேசிய புலவர் ஐயா அவர்கள் தம் பேச்சில் ஏறக்குறைய எண்பது சதவீத நேரத்தை மனைவியை கிண்டல் பண்ணுவதை பற்றியே பேசினார்.

மனைவியை நகைச்சுவைக்காக  கிண்டல் செய்வது என்பது சாப்பாட்டில் போடும் உப்பு போல். அதை மிகவும் அளவாக சேர்க்கவேண்டும். புலவர் ஐய்யா.. தேர்ந்தெடுத்த பேச்சாளர். அவர் எப்படி தவறினார் என்பது புரியாத புதிர்.

ராஜா அவர்களுக்கு பட்டிமன்ற உலகில் தனி பெயர் உண்டு. ஆரம்ப காலத்தில் நன்றாக எதிர் அணிக்கு நகைச்சுவையாக பதில் கொடுத்து தனக்கென்று ஒரு பெயரை ஏற்படுத்தி கொண்டார்.  அனால் கடந்த சில நிகழ்ச்சிகளில்.. இவரை நிறைய இடங்களில் நடுவராக நிறுத்திவிட்டதால் அவரின் போட்டி பேச்சில் சுவராஸ்யம் குறைந்து விட்டது.

பெண் பேச்சாளர்கள் இந்த தலைப்பில் இன்னும் நன்றாக பேசி இருக்கலாம்.  இன்னும் தயார் செய்து வந்து இருக்கலாம் என்று தோன்றுகின்றது.

பாரதி பாஸ்கர் அவர்கள் இப்போது எல்லாம் பட்டி மன்றத்திற்கு தயார் செய்து வரவேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு முறையும் ராஜா அவர்கள் பேசியவுடன் வந்து பேசுவதால், இவர்கள் ராஜாவை பற்றி சிறிது கிண்டல் செய்து விட்டால் போதும். பலத்த கைதட்டல் .

சுருக்கமாக சொல்லபோனால் , இந்நிகழ்ச்சி ஒரு அரைத்த மாவை அரைத்ததை போல தான் இருந்தது. உதாரணத்திற்கு சொல்ல போனால்.. தூத்துக்குடியில் முத்து எடுப்பவன் மச்சானிடம் கயிறை கொடுப்பது. இந்த உதாரணத்தை பலமுறை பல பட்டிமன்றங்களில் கேட்டுவிட்டோம்.
இதற்கு ராஜா அவர்கள் கூறிய " அவன் இறந்தால் இவள் இவன் வீட்டிற்கு வந்து விடுவான் " பதிலும் பல இடங்களில் கேள்வி பட்டது தான்.

மேடையில் இருந்த அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். பட்டிமன்றம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அதை பராமரிக்க வேண்டும். நகைச்சுவை என்ற உப்பை மட்டும் அள்ளி கொட்டி பிணமாக்காதீர்கள்.

இந்த பட்டிமன்றம் நிறைய மக்களால் பார்க்க படுகின்றது. இது ஒரு சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தை சரியாக உபயோக படுத்தி, இந்த தலைப்பிற்கு ஏற்ற ... சில "திருக்குறள்' சில " பழமொழிகள்" "அவ்வை பாட்டுக்கள்" "பாரதியின் கவிதைகள்" போன்றவற்றை பூ போல் தெளித்து இருக்கலாம்.

மேலே கூறிய இந்த விடயங்களில் ஒன்றையும் (நான் கேட்க்க தவறி விட்டேனோ ) இந்த பட்டிமன்றத்தில் நான் கேட்கவில்லை என்று தான் நினைக்கின்றேன்.

பாரதியின் "காணி நிலம் " துவங்கி.. அவ்வையின் ... "சாண் வயிறு" வரை எவ்வளவு காரியங்களை அட்டகாசமாக பகிர்ந்து இருக்கலாம்.


நிறைய மக்களின் நல்ல அபிப்ராயத்தை சம்பாரிப்பது ஒரு அரிதான காரியம். இந்த மேடையில் அமர்ந்து இருந்த அனைவரும் அதை சம்பாரித்த பாக்கியவான்கள். இந்த மேடையில் இவ்வாறான சந்தர்ப்பம் கிடைக்கும் போது ... இந்த பேச்சாளார்கள் நம் வளர்ப்பு முறை , பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு , வாழும் முறை, தமிழ் இலக்கியம் இவற்றையும் சற்று உப்போடு பரிமாறவேண்டும் என்று வேண்டுவோம்.

பல்லாயிரகணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஏற குறைய ஒரு மணி நேரம் செலவு செய்கின்றனர். இந்த நேரத்தை சான்றோர்கள் மதிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

அறிந்த ஆன்றோர்கள் தவறும் போது நம் வலி இரட்டிப்பாகின்றது.

பின்குறிப்பு :
மேலே நான் கூறியதை போல் பட்டிமன்றத்தை கடைசி வரை பார்க்க மனம் ஒத்துழைக்கவில்லை .உங்களில் யாராவது தீர்ப்பை பார்த்து இருந்தீர்கள் என்றால் பின்னூட்டத்தில் தெரிய படுத்தவும். நன்றி.

44 கருத்துகள்:

  1. நான் குன்றக்குடி அடிகளார் காலத்தில்
    இருந்து பட்டி மன்றங்களைக் கேட்கிற
    வாய்ப்புப்பெற்றவன்

    முதலில் இது மதுரையில் மட்டுமே நடக்கும்
    நிகழ்வாக இருந்தது.குறிப்பாக அரசமரம் பிள்ளையார்
    கோவிலில் வருடம் ஒருமுறை நடக்கும்

    அப்போது பேச்சாளர்கள் பேச்சில் இலக்கியம் குறித்த
    செய்திகளே அதிகம் இருக்கும்

    பின் இதை பாமரர்களிடம் கொண்டு செல்கிறோம்
    என்கிற பெயரில் பாமரத்தனமாகவே மாற்றி விட்டார்கள்

    தங்கள் ஆதங்கம் சரியானதே


    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐய்யா . பட்டிமன்றத்தை பாமர மக்களிடம் அழைத்து சென்றது பாராட்ட படவேண்டிய விசயமே. அங்கே இலக்கியம் பேச வேண்டிய அவசியமும் இல்லை தான். இருந்தாலும், இது ஓர் சந்தர்ப்பம் தானே. ஏறக்குறைய 90 நிமிடம் ... சொத்து சுகம் சொந்த பந்தம் பற்றி பேச இலக்கியத்தில் இருந்து ஒரு கூற்று கூட இவர்களுக்கு கிடைக்கவில்லையே என்பதை எண்ணுகையில் ....

      நீக்கு
  2. ஒருகாலத்தில் தூர்தர்ஷனில் சிறப்பு பட்டிமன்றங்கள் சுவாரஸ்யமாக பார்ப்பேன்! இப்போது சன் டீவியில் சாலமன் பாப்பையா தலைமையில் ஒரே அணி பேசுவதால் பார்க்க பிடிப்பது இல்லை! இந்த முறை மின்சாரமும் தன் பங்கிற்கு காலைவாரி காலையில் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்க விடவில்லை! நீங்கள் சொல்வது சரி இப்போதைய பட்டிமன்றங்கள் துணுக்குத்தோரணங்களாக மாறிவிட்டன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தளிர் .. பாப்பையா அவர்களின் பட்டிமன்றத்தை பார்த்து வளர்ந்தவன் தான் அடியேன். இன்னும் சொல்ல போனால் பாப்பையா அவர்களின் தலைமையில் நான் பேசிய ஒரு பட்டிமன்றத்தில் எனக்கு கிடைத்த அந்த பாத்து நிமிடத்தை என் வாழ்வின் பொற்காலமாகவும் கருதுகின்றேன்.
      ஏட்டுக்கு போட்டி என்று ராஜா அவர்களும் பாரதி பாஸ்கர் அவர்களும் ஒன்றுமே தயாரிக்காமல் பேசுவது ..... என்னத்த சொல்வேன்.

      நீக்கு
  3. இது பரவாயில்லை விசு சார்..இங்கெல்லாம் இன்னிசைப்பட்டிமன்றம் என்ற ஒன்று நடக்கிறது...அவர்களின் பேச்சும் நாடகமும்...சர்வசாதரணமாக ஆபாசத்தை தூவும் லாவகமும்...தேர்ந்தெடுக்கும் பாடல்களும்...அப்படித்தான் இருக்கிறது...
    பேராசான் ஜீவாவும்,ஜெயகாந்தனும்,அடிகளாரும். ஆ.சா.ஞா. வும் வளர்த்த பட்டிமன்றம் எனும் பாங்கு வீதிக்கு வந்துவிட்டது...என்ன அதில் பாப்பய்யாவும் சேர்ந்து கொண்டது தான் வேதனை...
    தலைப்புகள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது...பாவம் அவர்கள் நுனிப்புல்லை மேய்ந்துவிட்டு வருகிறார்கள்....ஊடகமும் அவர்களை அப்படித்தான் எதிர்பார்க்கிறது...
    நானும் கூட ஒரு கவிதை எழுதினேன்

    எல்லாம்
    செய்யத்தெரிந்த
    எங்கள் சாமிக்கு..
    நிறுத்த
    தெரியவில்லை
    அவர் திருவிழாவில்
    வருடம் தோறும்
    "பழைய பாடலா
    புதியபாடலா"
    பட்டிமன்றத்தை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க செல்வா....
      தங்கள் பாணியில் நச் என்று சொல்லிவிட்டீர்கள். ஆனைக்கும் அடி சறுக்கும் சரி. ஆனால் அது சறுக்கிய இடத்திலேயே விழுந்து கிடக்காது அல்லவா. பாப்பையா அவர்கள் .....? என்னத்த சொல்ல ...!

      நீக்கு
  4. இந்த பட்டிமன்றங்கள் முன்பே ஒத்திகை பார்க்கப்பட்டு நாடகம் போல் நடத்தப்படுகின்றனவோ என்ற ஐயம் எனக்கு உண்டு. பேராசிரியர்கள் அ.ச.ஞான சம்பந்தம், பேராசிரியர் இராதாகிருஷ்ணன், பேராசிரியர் சாலமன் பாப்பையா பேராசிரியர் சத்யசீலன் ஆகியோர் 70 களில் கலந்துகொண்டு முன்னேற்பாடின்றி (Extempore) நடத்திய பட்டிமன்றங்கள் போல் இனி வருமா என்ற ஏக்கம் தான் வருகிறது இன்றைய ப(வெ)ட்டிமன்றங்களை பார்க்கும்போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐய்யா .
      Extempore பாணி பட்டிமன்றங்கள் இனி கண்டிப்பாக வர முடியாது. இப்போது நடக்கும் பட்டிமன்றங்கள், நீ இதை சொல்லு.. அதை வைத்து நான் இப்படி சொல்கிறேன்.. அதை வைத்து இவர் இப்படி ஜோக் சொல்லுவார். முடிந்தவுடன் அனைவரும் அவரவரின் கணிசமான தொகையை பெற்று கொள்ளலாம்.. இப்படி தான் போகின்றது.

      நீக்கு
  5. Have you seen leoni's pattimanram? most of the time he and his team will make
    fun of Jayalalitha and aiadmk party, Except those conducted by Kamban kazagam
    in chennai all the pattimanram are sheer waste of time.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hi, thanks for dropping by. i used to watch Leoni's programs years ago, then i had to stop, thanks to a speaker called "Iniyavan" who was a disgrace to softer gender.

      நீக்கு
  6. //இந்நிகழ்ச்சி ஒரு அரைத்த மாவை அரைத்ததை போல தான் இருந்தது//

    அப்படியா?

    ரமணி சரியாக உண்மையைச் சொல்லி விட்டார். நீங்கள் சொல்வது போல் குறளையும் பாரதியையும் இங்கு சொல்லாமல் விட்டது நல்லது. அது ஒரு நல்ல தமிழ்ச்சேவை. அவைகளுக்கு இங்கு இடமில்லை. அவைகளின் தரத்தைக் குறைக்க வேண்டாமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா... அதன் தரத்தை குறைக்க வேண்டாமே.. அதுவும் சரிதான்.. என்னத்த சொல்ல ?

      நீக்கு
  7. ”தவறிப் போய்” முடிவுரையைக் கேட்குபடி ஆயிற்று. நீங்கள் சொன்ன முடிவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது .? முடிவு வரை பார்த்தீர்களா.. ஐயா உங்கள் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லையே கிடையாதா ?

      நீக்கு
    2. முடிவு மட்டும் பார்த்தேன். தலைவிதி .............

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  8. நான் அந்த கொடுமையைப்பார்த்தேன்..சொந்தபந்தமே என்று தான் முடித்தார்..அதிலும் இராஜா சார் இப்போதெல்லாம்...என்ன சொல்வது...பொழுது போக்குகின்றார்கள்..நம்மை மதித்து இத்தனை பேர்..மணிகணக்கில் செலவு செய்து அமர்ந்துள்ளார்களே அவர்களுக்கு ஏதும் பயன் உண்டா இதனால் என யோசிக்கவே மறுக்கின்றார்கள்...பெண்களைப்போற்றுகின்றோம் எனக்கூறிக்கொள்ளும் இந்தியாவில் தான் மனைவியைக்குறைக்கூறிக்கொண்டே ,ஆண்கள் வாழ்கின்றார்கள்....இருவரும் ஒருவரையொருவர் குறைக்கூறிக்கொள்வது என்னால் ஏற்க முடியாத ஒன்று..நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களை குறிப்பாக மனைவியை கிண்டல் செய்வது உப்பை போல் மட்டுமே. அதுவும். அதை புகழ்ச்சி வஞ்ச அணி போல் செய்யவேண்டும்.
      புகழ்ச்சி வஞ்ச அணியா.. என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. அதை பற்றி ஒரு பதிவை வரும் நாட்களில் இடுகின்றேன்.

      நீக்கு
  9. ///இந்த சந்தர்ப்பத்தை சரியாக உபயோக படுத்தி, இந்த தலைப்பிற்கு ஏற்ற ... சில "திருக்குறள்' சில " பழமொழிகள்" "அவ்வை பாட்டுக்கள்" "பாரதியின் கவிதைகள்" போன்றவற்றை பூ போல் தெளித்து இருக்கலாம்.///

    நீர் அந்த காலத்து ஆளாக இருப்பீர்போல இருக்கு அதனால்தான் மேலே சொன்னது போலசில "திருக்குறள்' சில " பழமொழிகள்" "அவ்வை பாட்டுக்கள்" "பாரதியின் கவிதைகள்" போன்றவற்றை பூ போல் தெளித்து இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறீர்கள். அதெல்லாம் இந்த காலத்திற்கு இத்து வராதய்யா வராது. இந்த காலதிற்கு எல்லாம் ரஜினி கமல் விவேக் வடிவேலு விஜய் அஜீத் போன்றவர்கள் சொன்ன தத்துவங்கள் பொன்மொழிகளைதான் மேற்கொள் போல சொல்ல வேண்டும். புரிஞ்சுச்சா இனிமே திருவள்ளுவர் பாராதியார் என்று சொல்லி வந்தீர் அவ்வளவுதான்..ஹும்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தமிழா...
      இந்த கால நகைச்சுவை நடிகர்களின் கூற்றை அங்கே இங்கே கூறுவது தவறு இல்லை தான். இருந்தாலும்... தமிழுக்கு அழகென்று பெயர் அல்லவா.. அதை காப்பாற்ற வேண்டுமே.. அதற்காகதான் அப்படி சொன்னேன்.

      நீக்கு
  10. ஐயோ இங்கேயும் ஒரு வலைப்பூவா ஆஆஆஆஆஆஆஆ !

    நான் தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகள் அதிகம் பார்ப்பதில்லையே பாவலரே
    தாங்கள் பார்த்ததை படம்போலவே காட்டிவிட்டீர்கள் நன்றி !
    பட்டிமன்றத்துக்கு எடுக்கும் தலைப்புகளுக்கும் சென்சார் இருக்குமோ இப்படி ஊதாரியா எடுக்கிறாங்க தலைப்பு !
    இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் சிறப்பானதாய் இருந்திருக்கும் தவற விட்டுவிட்டார்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சீராளன்...

      முதல் முறையாக தங்களை இங்கே கண்டுள்ளேன். சரியாக சொன்னீர்கள். தவற விட்டார்கள் என்று தான் நானும் சொல்வேன்.

      நீக்கு
  11. Yesterday, the same group's pattimandabam here. I avoided it. I started avoiding, in fact, many years ago. Their speeches are insult to intelligence. But I must agree it is necessary in society. Society comprises bewildering variety of social sections. Of which, only in a few I may belong, or you may. We cannot force our way on other groups. The other groups are in a majority. The organisers bear this in mind;l so they arrange pattimandabam as one of the mass entertainments. It is ok. But when the pattimandabam is slotted for a group like mine, what should happen?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hi, Thanks for dropping by. I do agree with you. Supply meets the demand and so is the quality. But to watch a lovely tradition going down the drain.... is painful.

      நீக்கு
  12. It happened thus. 2 years back, I went to a pattimandabam eagerly as it was advertised that the speakers were Tamil teachers of colleges and schools in Madurai city. It was arranged in the Club Hall adjoining Regal Theatre in Madurai. The topic was about cinema songs: are they decent or indecent? The audience compirsed only school children, teachers and not the general public which attend Pappaia;s The teacher-speakers sang the songs dancing and the songs were all from today cinemes: sexy and double entendres. (double meaning). I was surprised as I didn't expect such conduct from teachers. The audience was restive. Because after the pattimandabam, prize ceremony for children was due, and as such, children came with mothers.

    Next day, I wrote letter to the editor which was published about the shameful conduct of the speakers making the stage obscene.

    Next month, another pattimandabam there. I went. The organiser, who was also the Club Chairman (It is a club originated from British colonal era) spoke first. He said a complaint has come to him, and also published in media, about the obsencities made by speaker in Pattimandam here. I warn the speakers if I find any obscenity in the name of cinemena song or anything, I will stop it in the middle.

    Need to say it was a decent event that day.

    Moral of the story: Objections should be raised to stop this nonsense.

    பதிலளிநீக்கு
  13. பட்டிமன்றங்களில் வியாபாரமும் அரசியலும் புகுந்து பல மாமாங்கமாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராகுல்..

      இந்த காலத்தில் அரசியலும் வியாபாரமும் எல்லாவற்றிலும் புகுந்து விட்டன .. அதற்காக நம் தனி தன்மையை சான்றோர்கள் விட்டு கொடுப்பதை பார்த்தால்...

      நீக்கு
  14. உண்மைதான் நண்பரே, பட்டிமன்றங்கள் இப்போது அரைத்த மாவையே அரைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  15. வாங்க செந்தில்...

    ஒரு அருமையான கலாச்சாரம் அழிந்து போவதை பார்க்கையில் ....

    பதிலளிநீக்கு
  16. "இப்போதெல்லாம் ஆங்காங்கே நடை பெற்று கொண்டிருக்கும் பட்டி மன்றங்கள், பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சங்களாகவே இருப்பதால்தான் இதுபோன்ற தலைப்புக்கள் தேர்ந்தேடுக்கபடுவதாக நான் கருதுகின்றேன், மாறாக இவற்றால் எந்த சமூக நலனும் ஏற்படுவதாக எனக்கு தோன்ற வில்லை."

    இந்த வரிகள், விடுமுறையில் திரு ராஜா நடுவராக இருந்து நான் காண நேர்ந்து பாதியிலேயே எழுந்து வந்துவிட்ட பட்டிமன்றம் குறித்து "மனிதம் புனிதம்" எனும் பதிவில் நான் குறிப்பிட்டிருந்தவை.

    தம்பி விசுவிற்கு ஒரு செய்தி: அரைத்த மாவுகூட மேலும் அரைபட்டால் நல்லதுதான் ஆனால் இவர்கள் கையாலும் உவமானங்கள் - அவமானங்கள் , புளித்த மாவை மேலும் புளிப்படைய செய்து கேட்போரின் ரசனையை சலிப்படைய வைக்கிறது என்பதுதான் உண்மை.

    நல்ல விமர்சனம்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க .. கோ !
      கல்லூரி நாட்களில் நாம் பேசிய பட்டிமன்றங்கள் தான் நினைவிற்கு வருகின்றன. ஒவ்வொருவரும் நேரம் செலவழித்து ஆலோசித்து செயல்பட்ட நேரம் தானே அவை.

      மற்றும், திரு ராஜா அவர்களை எந்த தகுதியில் நடுவராக அலைகின்றார்கள் என்று புரியவில்லை. ஐந்து நிமிடம் அடுத்தவர் பேசுவதை எதிர்த்து கிண்டலடித்து பேசுவது அவருக்கு இயல்பாக வருகின்றது. அதில் மிக பெரிய வெற்றியும் பெற்றார். அதற்காக அவரை நடுவர் ஸ்தானத்தில் அமர்த்துவதா .. என்னத்த சொல்ல.. ?

      பாதி வரை அங்கே அரங்கத்தில் இருந்த தம் சகிப்பு தன்மையை பாராட்டியே ஆகா வேண்டும்.

      நீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. பட்டி மன்றம் என்பது தற்போது நேரத்தைக் கழிப்பதற்காகவும் ஏதோ ஒன்றைப் பேசி இருப்பவர்களைச் சிரிக்க வைப்பதற்காக மட்டுமே. சிந்திக்க அல்ல.

    பதிலளிநீக்கு
  19. name should be change from pattimantram to "group stand up comedy"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hi, Thanks for dropping by. As a matter of fact, last year I was watching a patimandram and an American colleague walked by and asked me whether it was some kind of " Group Stand Up".. and I did say . "Yep.. Sort of".

      நீக்கு
  20. ’கூட்டுக்கலாய்ப்பு” : சொத்தா சொந்தமா?
    கலாய்ப்புவித்தகர்கள் வழங்கும் ’கூட்டுக்கலாய்ப்பு” நிகழ்ச்சி ...இப்படி காலத்துக்கேற்ப பெயர் மாற்றவேண்டும்.

    பதிலளிநீக்கு
  21. வாங்க நண்பரே.. இது அருமையான யோசனை. "கூட்டு காலாய்ப்பு"

    பதிலளிநீக்கு
  22. பட்டிமன்றங்கள் சுவையாய் இருப்பதற்கும், மக்களைத் தங்கள் பக்கம் கவர்ந்து அவர்கள் கூறும் கருத்துகளைப் பதிய வைப்பதற்கும் சிறு சிறு நகைச்சுவைத் துளிகளைக் கலந்து தருவது தவறில்லை. மருந்தைத் தேன் தடவிக் கொடுப்பது போல்...

    ஆனால், வெரி சாரி டு ஸே திஸ் ....இப்போது பட்டிமன்றங்கள் பார்ப்பதில்லை. அதுவும் இந்தத் தீபாவளிக்கு நடந்த பட்டி மன்றத்தை சொந்தக்க்காரர் வீட்டிற்குச் சென்றதால் பார்க்க நேர்ந்து நொந்து நூடுல்ஸாகி, அவர்களிடம் நான் நாம் தனி அறைக்குச் சென்று பேசுவோம் என்று சொல்லி.....ஹும் பட்டிமன்றமா... வேஸ்ட் ஆஃப் டைம்...(இங்கு முதலில் நான் "பட்டி" என்று சொல்லிவிட்டு பின்னர் ஐயோ அந்த நாலுகால் செல்லத்தைக் கேவலப்படுத்தக் கூடாது என்று எடுத்துவிட்டேன்...)

    துளசி: எனக்குப் பார்க்கும் வாய்ப்பே இல்லை நண்பரே....ஹஹஹ் உங்கள் பதிவிலிருந்து தெரிந்தது தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய பட்டிமன்றங்கள் இப்போது குப்பை மன்றங்களாகிப் போயின என்பது. வேதனைதான்...

    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் அங்கிள்..என் கல்லூரியில் நான் தமிழ் படித்தவளாக அறியப்பட்டுள்ளதாலும், கலைஞர் தொலைக் காட்சியில் பேசியுள்ளதாலும் என்னைக் கூப்பிடுவார்கள்.சரி இதில் ஏதேனும் பார்த்து என் “ திறமையை” வளர்த்துக்கலாம்னு போனா....என் சொந்தத் திறமையும் போயிடும் போல...ஹையோ...ஹையோ...நன்றி அங்கிள்...என் தளம் வந்து என் புகைப்படங்களை பாராட்டியதற்கு. யாருமே அதனைப் பாராட்ட மாட்டார்கள். இன்னும் நிறைய எடுத்துள்ளேன்...இன்னும் நல்ல கேமராவாக இருந்தால் இன்னும் அழகாக எடுப்பேன்...நானே சம்பாதித்து வாங்கணும்...ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கு அங்கிள்

    பதிலளிநீக்கு
  24. Unfortunately I watched the pattimanram, They need not go to Singapore to dish out
    this stuff. I think Singapore tamils belong to a different forum like
    srilankan tamils. pappiah raja bharathi are repeating the same lines and anecdotes
    and are jaded. On the same day in kalaignar tv leoni pattimanram was there. speaker
    after speaker and mr leoni abused the present CM of Tamilnadu. I think there should
    be some censorship for pattimanrams also. They ridicule women under the garb of
    arguments.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Agreed. They all look jaded and are very repetitive. Its a shame that the office bearers of foreign soils spend thousands of dollars to bring them. They could instead identify local speakers and encourage them. God save Patti Pandrams.

      நீக்கு