வியாழன், 12 நவம்பர், 2015

"நான் சமைச்சா தீராவலி "

ரிங் ..ரிங் ... ரிங்...அலை பேசி அலறியது...

விஷ் ஸ்பீக்கிங்...

வாத்தியாரே தண்டம் பேசுறேன்...

தண்டம் பேசுறியா ? தண்டமா பேசுறியா?

என்ன வாத்தியாரே.. நக்கலா?

இல்ல தண்டம்.. இது கிண்டல்...

வாத்தியாரே, அவசரமா  ஒரு விஷயம் பேசணும் . அம்மணிக்கு தெரியாம! உடனே போனே எடுத்துன்னு பாத்ரூம் போ.

டேய். முந்தி எல்லாம் அவசரத்துக்கு தான் பாத்ரூம் போவோம். இப்ப உன் புண்ணியம் அவசரமான போன்க்கு கூட பாத்ரூம் போக வேண்டி இருக்கு..ஒரு நிமிஷம் இரு.. அம்மணி ஒர கண்ணால் பாக்குறாங்க..

ரொம்ப நாளா ஒரு விஷயம் கேக்கனும்னு யோசித்தேன்.

நீ என்ன கேக்க போறேன்னு நானே சொல்லட்டா...


 எங்க சொல்லு?

நக்கலுக்கும் கிண்டலுக்கும் என்ன வித்தியாசம்? அதுதானே..

அட்டகாசம் வாத்தியாரே.... எப்படி இப்படி 234 தொகுதியையும் பிரிச்சு வைச்சி இருக்க? சரி விஷயத்துக்கு வா? நக்கலுக்கும் கிண்டலுக்கும் என்ன வித்தியாசம்?

தண்டம்.. சொந்த செலவில் சூனியம் வைக்கிற மாதிரி நம்ம அடுத்தவனுக்கு கலாய்க்க இடம் கொடுத்தா " நக்கல்..." அடுத்தவனே அவனா வந்து நம்மை கலாய்த்தா அது "கிண்டல்"

என்ன வாத்தியாரே? கிண்டலா ?

இல்ல, இப்ப நான் பண்றது "நக்கல்" ஏன்னா நீயா போன் போட்டு வாங்கி கட்டிக்கிற இல்ல .. அதனால்.. சரி, என்ன விஷயம் .. காலங்காத்தால போன்?

தீராவலிக்கு என்ன பண்ற?

என்னத்த பண்ணுவேன்? விக்ஸ் தடவிட்டு ... போயே போச்சின்னு கனடாவில் மாட்டலாடிட்டு தூங்க போய்டுவேன். அது சரி.. எனக்கு தோள் பட்டையில் வலின்னு உனக்கு எப்படி தெரியும்?

என்ன வாத்தியாரே? என்னனமோ உளறுற ?

டேய்.. நீ தானே தீராவலிக்கு என்ன பண்ணுவேன்னு கேட்ட..

வாத்தியாரே.. உன் காதுல பித்தளைய ஊத்த..

தண்டம்.. அது பித்தளை இல்ல.. ஈயம்..

ரொம்ப முக்கியம்?

சரி விஷயத்த சொல்லு ? எனக்கு தீராவலின்னு உனக்கு யார் சொன்னா?

வாத்தியாரே.. நான் தீபாவளிக்கு என்ன பண்றேன்னு கேட்டேன்.

சாரி பாணி , எனக்கு தீராவலின்னு கேட்டுடிச்சி..

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய், வாத்தியாரே..

டேய்.. அந்த பழமொழி இப்ப ஏன் சொல்ற? இடம் பொருள் ஏவல்  உதைக்குதே.

ஏதோ ப்ளோவில் வந்துடிச்சி.. சரி.. தீபாவளிக்கு என்ன பண்ற?

என்னத்த பண்ணுவேன்? செவ்வாயும் அதுவுமா வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து "வேகாததை தின்னுட்டு .. விதி வந்தா ...."

வாத்தியாரே.. அது வெந்ததை தின்னுட்டு ..

பாணி .. வெந்ததை தின்றது எல்லாம் அந்த காலம்.. இப்ப எங்க வேக வைக்கிறாங்க...நாலு அஞ்சு "குரோடன்ஸ்" இலையை தட்டில் பரப்பி வச்சி மேஞ்சுட்டு போன்னு தானே சொல்றாங்க..

விஷயத்துக்கு வா, வாத்தியாரே.. தீபாவளிக்கு என்ன பண்ற?

ஒன்னும் இல்ல... உங்கள் பிளான் என்ன?

இந்த சனி சாயங்காலம் நீ, பிள்ளை, சாரதி, சன் டீகோ சந்தானம், அப்சர் பாய் இன்னும் ரெண்டு குடும்பத்த கூப்பிட்டு ஒரு டின்னெர் வைக்கலாம்னு இருக்கேன்.

நல்ல பிளான். அப்ப சனி பார்க்கலாம்.

வாத்தியாரே.. என்ன "வார்ம் வாட்டர" காலில் ஊத்துன மாதிரி பேசுற..

"வார்ம் வாட்டர்".. சோக்கா பேசுற தண்டம்.. சரி சனி பார்க்கலாம்..

வாத்தியாரே .. ஒரு நிமிஷம்..

சொல்லு..

இந்த வாரம் முழுக்க சுந்தரிக்கு தீராவலி..

டேய், இந்த வாரம் எல்லாருக்கும் தான் தீபாவளி .. சுந்தரிக்கு மட்டும் இல்ல..

வாத்தியாரே.. உன் காதில் .. பித்...ஈயத்த காச்சி ஊத்த..நான் சொன்னது
சுந்தரிக்கு இடது கையில் தீராவலி.

சாரி ... தண்டம்.. தீபாவளின்னு கேட்டுச்சி. இடது கை வலி .. நல்லது இல்ல தண்டம்.. ஹாஸ்பிடல் போனீங்களா ?

போனோம்.. என்னமோ தசை பிடிப்பாம்?

தண்டம், அது சதை பிடிப்பு.. உடனே ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு கேக்காத ..

அதுவா முக்கியம்.. சதை பிடிப்பு.. ஒரு வாரத்துக்கு வீட்டில் எந்த வேலையும் செய்ய கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு.

அடே.. நல்ல டாக்டர் தண்டம்.. உனக்கும் எனக்கும் இந்த மாதிரி நோயும் வரமாட்டுது.. அப்படி வந்தாலும் "ஒரு வாரத்துக்கு வீட்டில் வேலை செய்யகூடாது" என்ற ட்ரீட்மன்ட்டும்" கிடையாது.

என்னத்த சொல்வேன் வாத்தியரே.  அதுக்கு எல்லாம் கொடுப்பானை வேணும்

டேய்.. இந்த நேரத்தில் நீ ஏன் சனியும் அதுவுமா டின்னர் பிளான்..

அங்கே தான் நீ வர வாத்தியாரே..

நான் எப்ப அங்கே வந்தேன்?

கொஞ்சம் பொறு. தீபாவளி மூடில் உணர்ச்சிவசபட்டு இவங்க எல்லாரையும் சனி வர சொல்லிட்டேன்.. இப்ப சுந்தரிக்கு சமைக்க முடியாது. எனக்கோ சமையல் சுத்தி போட்டா கூட வராது!

ஒ.. இங்கே தான் நான் வரேனா?

இங்கேதான்.. வாத்தியாரே. ஒரு ஆறு குடும்பத்திற்கு உன்னால முடிஞ்சா சமையல் செஞ்சு எடுத்துன்னு வாயேன்..

பாணி.. நம்ம வீட்டு அம்மணி கதை உனக்கு தெரியும் இல்ல. இந்த திடு திப்பு பிளான் எல்லாம் அவங்களுக்கு பிடிக்காது.

நீ ஏன்.. அவங்கள தொந்தரவு படுத்துற? நீ தான் சமைப்பியே.

அவங்க கேட்டா?

பாவம் சுந்தரிக்கு முடியில்லன்னு சொல்லு. ஒன்னும் சொல்ல மாட்டாங்க..

டேய்.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். சுந்தரிக்கு உண்மையாகவே முடியிலயா? இல்ல என்ன வைச்சி புருஷன் பொண்டாட்டி ரெண்டு பெரும் காமடி ஏதாவது பண்றிங்களா?

வாத்தியாரே.. உன்னை வச்சி.. நாங்க காமடி.. நல்ல காமடி.. சரி... என்ன உதவ முடியுமா, முடியாதா?

சரி.. முயற்சி பண்றேன்..? என்ன மெனு ?

சிம்பிள் மெனு தான் வாத்தியாரே! தேங்காய் சோறு , கொஞ்சம் பெப்பர் சிக்கன், "பெரிய" கபாப், நெத்திலி வறுவல், இறால் கூட்டு, அதர்சம், அரிசி பாயாசம் ..

டேய் .. இது சிம்பிள் மெனுவா ?

வாத்தியாரே.. என்ன ரொம்ப தயங்குற.. இப்ப என்ன பிரியாணியா கேட்டேன்?

அதை கேட்டு இருந்தா தான் சுலபமா பண்ணி இருபேன்னே.. இதுக்கு ரொம்ப வேலை பாணி.

வாத்தியாரே.. இதே கிறிஸ்துமஸ்க்கு உங்க அம்மணிக்கு முடியிலனா .. நீ இதையெல்லாம் பண்ணி இருக்க மாட்ட?

டேய், அது என் அம்மணி .. பண்ணி தான் ஆகனும்.

சரி, பிரிச்சி பேசாத வாத்தியாரே...

என்று தண்டம் சொல்லும் போதே .. அப்சர் பாயின்  குரலும் கேட்டது..

ஷேக் விசு... கைசா ஹாய் ?

பாய்! நீ எப்படி இந்த காலில் , எப்ப ஜாய்ன் பண்ண?

முதலில் இருந்தே இருக்கேன். சுந்தரிக்கு முடியில்லன்னு தண்டபாணி சொன்னவுடனே  உனக்கு போன் போட சொன்னதே நான் தான்.

நல்ல நண்பன் பாய் ... நீ..சரி சனி கிழமை பார்க்கலாம்..

ஷேக் ..ஒரு நிமிஷம்..

போலோ பாய்..

அரிசி பாயசத்தில் நீ ஜவ்வரிசி போடுவியா?

ரொம்ப முக்கியம்? ஏன்..

இல்ல எங்கவீட்டு அம்மணிக்கு ஜவ்வரிசி ஒத்துக்காது. அதை போடுறதுக்கு முன்னால் ஒரு ரெண்டு "கப்" தனியா எடுத்து வச்சிடு..

அட பாவீங்களே .. அவனவன் வீட்டு அம்மணிக்கு என்னை அண்ணன் ஆக்கிட்டீங்களே..

ஷேக்.. போன ரம்ஜானுக்கு நான் வச்ச "பார்ட்டிய" மறந்துட்டியா.. கொஞ்சம் நன்றி, விசுவாசம் வேண்டாமா..

அப்படி அப்சர் வாய் தவறி சொல்ல.. தண்டபாணியோ..

என்னது..? போன ரம்சானுக்கு அப்சர் பார்ட்டி வச்சினா? வாத்தியாரே.. நீ கூட சொல்லவே இல்லையே..

என்று கதற..

நானோ.. ஹலோ ..சரியா.. கேக்..வில்லை....நோ டவர் என்று அலைபேசியை அணைத்தேன்!

பின் குறிப்பு :

இந்த மாதிரியான பண்டிகை நாட்களில் இங்கே நாங்கள் அனைவரும் "சாதி மதம் மொழி" வித்தியாசம் இல்லாமல் "பாரத விலாஸ்" பாணியில் வைத்து தாக்குவோம். இந்தியாவில் இந்த முறை இன்னும் இருக்கின்றதா ? பின்னோட்டத்தில் சொல்லவும் !

 மற்றும், ,இந்த பதிவை எழுத தூண்டிய பேராசிரியர் "தருமி" அவர்களுக்கு கோடி நன்றி.

28 கருத்துகள்:

  1. ஆஹா பார்ட்டில கலந்துக்கனும் போலருக்கே....அதுவும் நீங்க சமைக்கிறீங்கன்னா.....நல்ல நகைச்சுவையான நடை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் சொல்கிறேன்.. நான் மட்டும் கணக்கு பிள்ளையாகாமல் இருந்து இருந்தேன் என்றால் .. சமையல் காரன் தான் .

      நீக்கு
  2. சிரிச்சி... சிரிச்சி... வயிற்றுக்கு "தீராவலி"...

    பதிலளிநீக்கு

  3. நாங்க பாரதவிலாஸ் டைப்ல தீபாவளிக்கு கடந்த சனிக்கிழமையும் நேற்றும் 2 பார்ட்டிகள் கொண்டாடினோம், சனிக்கிழமை நடந்தது டாக்டர் வீட்டில் தமிழ்(2) ,மலையாளம்,(2)குஜராத்தி,தெலுங்கு,(3)மாராட்டி,(1)பஞ்சாபி(1) குடும்பங்கள் கலந்து கொண்டோம். என் வீட்டு பார்டியில் சரக்கு கண்டிப்பாக உண்டு அது போல இந்த டாக்டர் வீட்டிலும் உண்டு. நான் நன்றாக குடித்துவிட்டு கார் ஒட்டமுடியாததால் எனது வீட்டிற்கு நடந்தே சென்றேன்( கார் ஒட்ட முடியாததற்கு காரணம் நான் அடித்த சரக்கு அல்ல அந்த வீடு என் வீட்டிற்கு அடுத்த வீடு என்பதால்தான்) நேற்று நடந்த பார்டில் சரக்கு இல்ல அதனால் பார்ட்டி நல்லாவே இல்ல ஹும்ம் சர்க்கு இல்லாமல் இனிமேல் எவனாவது பார்ட்டிக்கு கூப்பிட்ட அவனை தொலைச்சுபுடுவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரக்கு இருக்கோ இல்லையோ.. பக்கத்து வீட்டுக்காரன் கூப்பிட்டால் போய் தானே ஆகவேண்டும். சாப்பாடாவது நன்றாக இருந்ததா?
      அது என்னமோ தெரியல தமிழா.. இனம் இனத்தோடு சேரும் என்பதை போல் எங்கள் நனர்கள் வட்டாரத்தில் யாரும் மருந்துக்கு கூட மதுவை எடுப்பது இல்லை. அதுவும் ஒரு பாக்கியம் தான்.

      நீக்கு
  4. உங்க பார்ட்டி அனுபவத்தை படித்து சிரிக்கவும் செய்தேன் காரணம் சின்ன புள்ளைங்களின் பார்ட்டி அனுபவம் சிரிக்க வைத்தது( சரக்கு இல்லாத பார்ட்டின்னா அது சின்ன புள்ளைங்க நடத்தும் பார்ட்டிதானே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரக்கு அடித்து விட்டு அரசாங்கம் தரும் இலவசத்தை பெற நாங்கள் என்ன தமிழ் நாட்டிலா இருகின்றோம்? இங்கே உழைத்தால் தான் கஞ்சி....

      நீக்கு
  5. ahaaa sirichu sirichu...
    super.




    மீண்டும் சொல்கிறேன்.. நான் மட்டும் கணக்கு பிள்ளையாகாமல் இருந்து இருந்தேன் என்றால் .. சமையல் காரன் தான் .//

    ahaa I like your reply sir.

    பதிலளிநீக்கு
  6. இனிக்கும் தீபாவளி தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  7. மிகவும் இரசித்துச் சிரித்தேன்
    இப்போதெல்லாம் உங்கள் பதிவுகளை
    நாகேஷ் டோனில் ஸ்பீடில் படிக்கப் பழகி விட்டேன்
    அந்த ஸ்பீடில் படித்தால்தான் அதிகச் சுவை
    (அந்த சிம்பிள் மெனு சூப்பர் )

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. வாங்க ரமணி ஐய்யா ..

    அடேங்கப்பா ... இந்த விசயம் இவ்வளவு நாள் எனக்கு தெரியாமல் போச்சே. நாகேஷ் டோனில் படித்தால் இது இன்னொரு சுவையில் அல்லவா இருக்கு. இருங்க.. என்னுடைய மற்ற சில பதிவுகளையும் அதே டோனில் படித்து விட்டு உங்களுக்கு பதில் இடுகிறேன்.

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் அங்கிள் நான் சக்தி...( சுவாதி,செல்வா மகள்...ராகசூர்யாவின் அக்கா...உங்கள் புத்தகம் படித்தேன்...ரசித்தேன்..சிரித்தேன்...நடை அற்புதம்...தீபாவளியின் தீராவலி அடடா...அடடா...சொல்ல வார்த்தைகள் இல்லை என் வலை பக்கமும் வாருங்களேன்...நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வா ராசாத்தி.. நானே உங்க அப்பாவிடம் உன் தளத்தை பற்றி கேட்க்க வேண்டும் என்று இருந்தேன். குடும்பமே எழுத்தாளர்கள்.. நல்லதோர் குடும்பம் .. பல்கலை கழகம். ரொம்ப சந்தோசம். கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது அங்கே செல்வேன் ....

      நீக்கு
  10. ஆஹா ஒவ்வொரு பண்டிகைக்கும் வித விதமா சாப்பாடா ?
    அதுவும் நள பாகம், தம்பி விசு எனக்கு அங்க ஏதாவது வேலை கிடைக்குமா ?
    இங்க தீபாவளி தீராவலி ஆனது மட்டுமில்ல , பொங்கல் கூட கொஞ்சம் மங்கலாத் தான் இருக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணே, உங்க நக்கலுக்கு ஒரு அளவே இல்லையா. கிழக்கு சீமையில் இல்லாத ஆட்டமா பாட்டமா, கொஞ்சம் மேலே போய் மதுரை தமிழனின் பின்னூட்டத்த படிங்க..
      நள பாகம் மட்டும் இல்லாமல், கூடவே சோம பானம்.. சுறா பானம்ன்னு... டாஸ்மாக் இல்லாத குறைய எப்படி சமாளிக்கிறாங்க..
      வருகைக்கு நன்றி அண்ணே..

      நீக்கு
    2. தம்பி விசு உனக்குத்தான் தெரியுமே இந்த சோம பானம் காம பானம் எல்லாம் என் உடம்புக்கு ஆகாதுன்னு

      நீக்கு
    3. சோம பானம் சரி.. அது என்ன காம பானம்..

      நீக்கு
    4. அதெல்லாம் வைரமுத்துவிடம் கேளுங்கள் .

      நீக்கு
    5. இறந்து போன ஜெயகாந்தன் அனுப்பிய மடலுக்கே வைரமுத்துவிற்கு பதில் கொடுக்க நேரம் இல்லை.. நமக்கு பதில் சொல்ல எங்கே இருக்கும். அவரே பாவம்.. சிறுகதைகளை எழுதி அந்த புத்த விற்ப்பனையில் மூழ்கி இருகின்றார் என கேள்வி..

      நீக்கு
  11. சிறந்த ரசிகன்தான் நல்ல எழுத்தாளராய் ஆகமுடியும் என்பதை தருமி அவர்கள் இங்கே மீண்டும் நிரூபித்து ,எங்கள் அபிமான தண்டபாணியை திரும்ப கொண்டு வந்ததற்காக தண்டபாணி தலைமை ரசிகர் மன்றம் , நியூயார்க் கிளை சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றிகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா பாராட்டையும் தண்டதிர்க்கே கொடுத்துவிட்டால் எப்படி.. எனக்கும் ஒரு மன்றம் வையுங்கோ.. சாமியோவ்...

      நீக்கு
    2. தண்டபாணியால்தானே விசுவே அறியப்பட்டார்...நன்றி மறந்துராதீங்கோ சாமியோவ்...ஹஹஹஹ் (நாங்க அப்படித்தான்....தண்டபாணிதான் இங்கு எங்களைக் கொண்டுவந்தது....)

      கீதா

      நீக்கு
  12. இத இதத்தான் எதிர்பார்த்தோம்...ஹப்பா மீண்டும் தண்டபாணி! அவரு வந்தாதான கலகலப்பு...ஜமா இங்க! நாங்க சொன்னோம்ல....உங்க ஸ்டைல மாத்தாதீங்கனு.....அரசியலையும் கலாய்ங்க....ஆனா தண்டபாணி தண்ட"பாணி"தான்....ஹஹ...

    பதிலளிநீக்கு
  13. பாரதவிலாஸ் போன்று அம்மா வீட்டில் இருந்தவரைக் கொண்டாடினோம் விசு. இங்கே ஒன்றுமில்லை...
    உங்க பார்டிக்குக் கூப்பிட்டவுடன் வந்துவிடுவேன், மதுரைத்தமிழன் சகோ பார்டிக்குக் கூப்பிட்டா நான் சாக்கு சொல்லிடுவேன், இந்த இரகசியத்தை அவரிடம் சொல்லிவிடாதிர்கள். :) ஷ்ஷ்ஷ்.....வரார் வரார் :)))

    பதிலளிநீக்கு
  14. //மருந்துக்கு கூட மதுவை எடுப்பது இல்லை///

    நானும் கூட தான். மருந்துக்கு மது எடுப்பதில்லை. தனியாகத் தான் ...!

    பதிலளிநீக்கு