சனி, 3 அக்டோபர், 2015

காசு மேலே, காசு வந்து...(புது கோட்டையில் இருந்து )

வாத்தியாரே.. என்ன லாட்டரி ஏதாவது விழுந்ததா? என்ன இவ்வளவு சந்தோசம்?

சொல்லிக்கொண்டே நுழைந்தான் நண்பன் தண்டபாணி.

சந்தோசம் சரி தான், பாணி.. அது எப்படி லாட்டரி விழுந்ததுன்னு கண்டுபிடிச்ச?

சரஸ்வதி காணாமல் போய் லட்சுமி உன் முகத்தில் தாண்டவம் ஆடுறாங்களே அதை சொன்னேன்.

டேய்.. புரியிற மாதிரி சொல்லு..

அது இருக்கட்டும் ? எவ்வளவு தேறுச்சி?

கிட்டத்தட்ட 10,000 ருபாய் பாணி.


எப்படி வாத்தியாரே..

எல்லாம் பதிவுனால தான்.

வாத்தியாரே.. ஒழுங்கு மரியாதையா பாதி காசு எனக்கு சேரனும் ..

டேய், எழுதுனது நான்.. உனக்கு ஏன் தரனும்?

உன் பாதி பதிவில் என்னை பத்தி  தானே எழுதி இருக்க ? அதுதான் ?

அது சரி.. இந்த  பதிவுல  உன்ன பத்தி எழுதலியே?

நான் இல்லாமல் ஒரு பதிவா? எப்படி..

இது ஒரு போட்டிக்கு எழுதிய கவிதை பாணி.

என்ன போட்டி?

புதுகோட்டையில் அண்ணன் முத்துநிலவன் தலைமையில் பல நல உள்ளங்கள் சேர்ந்து வலைபதிவர் சங்கம் சந்திப்பு இந்த 11ம் தேதி.. அதற்க்கான போட்டி..

வாத்தியாரே.. அடுத்த வாரம் புதுகோட்டை போறியா?

போலாம்னு தான் இருந்தேன்.. எவன் கண்ணோ பட்டுடிச்சி..

சரி.. நீ என்ன கவிதை எழுதன..?

அதை இங்க படி...விசுawesomeமின் "புதுமை பெண்"

தலைப்பு வித்தியாசம் வாத்தியார்.. உன் ராசாதிகளை பத்தி எழுதினியா?

என் ராசாதிக்கள் மட்டும் இல்ல பாணி.. எல்லா ராசாதிக்களும் எப்படி
இருக்கனும்னு எழுதி இருக்கேன்.

சரி , அதுக்கு எப்படி பணம்..?

முதல் பரிசு 5,000....

அது எப்படி உனக்குத்தான் முதல் பரிசுன்னு முடிவு பண்ண? வேற யாராவது வெற்றி பெற்றால்..

அட பாவி.. போய் வாய கழுவு.

இல்ல வாத்தியாரே..யாரவது உன் கவிதையில் குற்றம் கண்டுபிடித்தால் ..?

அதை தான் கவிதையின் பின்  குருப்பில் போட்டுடனே தண்டம். குறை இருப்பின், அந்த குறைக்கான தொகையை குறைத்து கொண்டு மீதியை அனுப்பி வைக்க வேண்டும் என்று.



சரி, இது மிச்சம் மிச்சம் போனா 5000 ரூபாய், நீ ஏன் 10000ம்னு சொன்ன?

நல்ல கேள்வி. இந்த போட்டியில்  யார் வெற்றி பெருவாங்கன்னு யூகித்து சொன்னதுக்கு 5000.

புரியல ?

எனக்கும் முதலில் புரியல.. நீ இங்க படிச்சு பாரு..புரியும்.

வாசகர்க்கான விமரிசனப் போட்டி! யாவரும் கலந்துகொள்ளலாம்! பரிசு ரூ.10,000


சரி.. இந்த 5000 எப்படி உனக்கு வரும் ?

தண்டம்.. முதல் 5000 நான் எழுதுன கவிதைக்கு ..ரெண்டாம் 5000 நான் எழுதிய கவிதை தான் வெற்றி பெரும்ன்னு சொன்னதுக்கு..

புரியல வாத்தியாரே.

என்ன புரியல..?

அப்ப கவிதைக்கு மொத்தமா எவ்வளவு?

5000....

அப்ப எப்படி 10000 வந்தது..?

அதுதான் கவிதைக்கு..

கவிதைக்கு தான் 5000ம்னு சொன்னியே.. இப்ப எப்படி 10000 வந்தது...

அதுதான்டா இது...

இது தான் எது ?

தண்டம் , நீ ரொம்ப குழம்பி போய் இருக்க.. எப்படி வந்தது என்பதா முக்கியம்..
அதை வீட்டில் அம்மணிக்கு சொல்லாமல் எப்படி செலவு செய்யபோகின்றோம்  என்பது தான் முக்கியம்..

நீ சும்மா பேச்சு தான் வாத்தியாரே..

என்னடா சொல்ற ?

இந்த மாதிரி தான் வீட்டு அம்மணிக்கு  தெரியாமல்  எப்படி செலவு செய்யணும்னு சொல்லுவ ? ஆனா பணம் வந்தவுடன்.. நாக்கை தொங்க போட்டுக்குனு வீட்டில் போய் அம்மணியிடம் கொடுத்துவ ..?

நீ மட்டும் என்னாவாம் ?

பின் குறிப்பு ;
என்ன தண்டம். என்னமோ ..நினைப்பு தான் பிழைப்பை கெடுதுச்சின்னு ஏதோ சொல்ற ...

5 கருத்துகள்:

  1. ஆஹா நல்லாருக்கே....உங்களுக்கே கிடைக்கட்டும் 1ரூ0000 மும்,...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா.. வணக்கம். இந்த சந்திப்புக்காக நீங்கள் அனைவரும் கடினமாக உழைகின்றீர்கள் என்று கேள்வி பட்டேன். சந்திப்பு மிக பெரிய வற்றி பெற வாழ்த்துக்கள் !

      நீக்கு
  2. உங்களுக்கே கிடைக்க வாழ்த்துக்கள்,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. சொக்கா! பரிசுப்பணம் எவ்வளவு? அத்தனையும் அவ்வளவும் நமக்கா? ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
  4. அய்யா... சும்மா என்ன எழுதியிருக்கீங்கனு பாத்துட்டுப் போகலாம்னு எட்டிப்பாத்தா... மனுசன் பின்னி பெடலெடுத்துட்டீங்க போங்க.. சிரிச்சு சிரிச்சு எங்க வீடடம்மா என்ன என்னனு ஓடிவந்துட்டாங்க.. நல்லாருக்கு !

    பதிலளிநீக்கு