சனி, 3 அக்டோபர், 2015

“கர்ம தங்கடம்”… சாரி.. “தர்ம சங்கடம்” …

இன்று முகநூலில் சென்னையில் இருந்து வந்த ஒரு குறிப்பில் " உங்கள் கர்ம தங்கடம் .. தர்ம சங்கடம் " படித்தேன் .. அழுதேவிட்டேன் என்று எழுதி இருந்தார்கள். ஏன் அலுத்து இருப்பார்கள் என்று நானும் போய் படித்தேன் . புரியவில்லை. நீங்களும் ஒரு முறை படித்து சொல்லுங்களேன்..

டாடி… இன்னைக்கு என்ன பிளான்…?
என்ன? உங்க அம்மா பேசுறத மாதிரி பேசுற , ராசாத்தி …?
கேட்ட கேள்விக்கு பதில்.. ப்ளீஸ் ..
என்ன? எங்க அம்மா பேசுற மாதிரி பேசுற, ராசாத்தி ?
எப்பவுமே உங்களுக்கு தமாசுதான் டாடி…என்ன பிளான் …?

உனக்கு என்ன வேணும் அதை சொல்லு ..?
உங்க பிளான் என்ன ?
உனக்கு என்ன வேணும்.. அதை முதலில் சொல்லு, அது வைத்து தான் என்னுடைய பிளான் சொல்ல முடியும்..
ஓடி ஓடி உழைக்கனும் ...
என்னை மதியம் 11:30க்கு வந்து பிக் பண்ணி வீட்டில் விட வேண்டும்..
ராசாத்தி.. உனக்கு ஆயிரம் முறை சொல்லி இருக்கேன் .. இந்த திடீர் பிளான் எல்லாம் எனக்கு வொர்க் அவுட் ஆகாது. ஐ ஹவ் எ மீட்டிங் அட் தட் டைம் …ஐ அம் சாரி .
நான் என்ன பண்றது டாடி.. இன்றைக்கு பள்ளி கூடம் 11:30க்கு முடியுது … நீங்க எப்ப தான் வர முடியும் ?
ஒரு மணி போல் வரேன் .. சரியா?
என்னை ஒன்றை மணி நேரம் என்ன பண்ணசொல்றிங்க ?
அங்கே பள்ளியில் நூலகம் இருக்கு இல்ல .. அங்கே போய் அமர்ந்து உன் வீட்டு பாட வேலையை முடி …
டாடி.. முழு பள்ளிக்கூடம் மூடி இருக்கும் …
சரி.. நீ அங்கேயே இரு.. நான் ஒரு மணி போல வரேன்…
ப்ளீஸ் .. டாடி.. சீக்கிரம் வர முயற்சி பண்ணுங்க …
ஒ கே… சரி.. பள்ளிகூடத்திற்கு நேரமாகுது சீக்கிரம் போய் கிளம்பு..
ராசாத்தி அங்கே இருந்து அவள் அறைக்கு செல்ல…அம்மணியின் அசரீரி ஒலித்தது …
ஏங்க …இன்னைக்கு என்ன பிளான் …?
என்ன?… உன் மூத்த ராசாத்தி போல பேசுறே…
கேட்ட கேள்விக்கு பதில்…
என்ன, உன் மாமியார் போல் பேசுற ?
சரி.. விஷயத்துக்கு வாங்க… இன்னைக்கு என்ன பிளான்?
உனக்கு என்ன வேணும்.. அதை பொருத்து தான் என் பிளான்..
என் கார்  சர்விஸ் போகுது.. ஒரு 11:30 மணி போல் என்னை வீட்டில் டிராப் பண்ண முடியுமா ?
11;30… நோ ப்ராப்ளம்.. ஐ வில் சி யு அட் 11:30 அட் தி ஷாப் …
மூத்த ராசாத்தி வண்டியில் ஏற …
என்ன மகள்.. ? முகமே சோகமா இருக்கு ..
ஒன்னும் இல்ல…
ராசாத்தி … உன் நினைவுகளை நான் அறிவேன் …என்ன விஷயம்… நான் 11:30 மணிக்கு வர முடியல்ல ..1 மணி போல வரேன்னு சொன்னேன்னே அதுவா ?
கிட்ட தட்ட .. அது தான் ..
என்ன பண்ணுவேன் மகளே.. நாய் வேஷம் போட்டுட்டேன் … குறைச்சி தானே ஆகணும்.. நான் தான் சொன்னேன்னே மீட்டிங் இருக்குன்னு …
டாடி.. எனக்கு தான் மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்க ..
புரியல…
நீங்களும் அம்மாவும் பேசினத நான் கேட்டேன் ..
நான் எங்க பேசினேன்.. ? உங்க அம்மா என்னிடம் பேசினதை நீ கேட்டு இருப்ப ..
ஸ்டாப் ஜோக்கிங் டாடி.. நீங்க பேசினதை நான் கேட்டேன் ..
அதுக்கு இப்ப என்ன ? அப்படி என்ன தப்பா பேசிட்டேன்..?
எனக்கு 11:30 க்கு மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்க .. ஆனால் அதே 11:30 க்கு அம்மா கேட்க்கும் போது.. உடனே “நோ ப்ரோப்ளம்…. சி யு அட் தி ஷாப் அட் 11:30″ . அம்மாவிற்கு யு ஆல்வேஸ் கிவ் இம்பார்டன்ஸ் …
அது அப்படி இல்ல ராசாத்தி…
அப்படி இல்லாட்டி உங்க மீட்டிங் என்ன ஆச்சி..எனக்கு மட்டும் மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்க இல்ல, அம்மாவிற்கு ஏன் அப்படி சொல்லல …
இல்லடி மகள்.. அம்மா அங்க வெயிட் பண்ண கூடாது இல்ல, அது தான் …
அப்ப நான் வெயிட் பண்றது மட்டும் ஓகே வா ?
இல்ல மகள்.. உனக்கு நான் சொல்ல வருவது புரியல …
என்ன புரியல…
ராசாத்தி.. நீ என் பொண்ணு …என் கஷ்டம் நஷ்டத்தை புரிஞ்சிப்ப .. . நம்மக்குள்ள ஆயிரம் இருக்கும் ...ஆனால் அம்மா அப்படி இல்லையே..
புரியல …
நீ நான் பெத்த பொண்ணு .. ஆனால் அம்மா வேற யாரோ பெத்த பெண் ஆச்சே .. நம்ம மூணு பேரை தான் நம்பி இருக்காங்க… சோ ஷி நீட்ஸ் டு பீ ட்ரீடட் ஸ்பெஷல் .
ஒ, தட் மேக்ஸ் சென்ஸ் … டாடி…
ஒ கே.. … சி யு அட் 11;45..
ஒரு மணிக்கு தானே வருவேன்னு சொன்னீங்க …
இப்ப தான் உங்க அம்மாவிற்காக மீட்டிங் கான்செல் ஆயிடிச்சி இல்ல … ஐ வில் டிராப் மம்மி அட் ஹோம் அண்ட் பிக் யு அப்.. ஹவ் எ கிரேட் டே..
யு டூ டாடி.. பை..

3 கருத்துகள்:

  1. நல்லாவே சமாளிக்கீறீங்க! உங்க கிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

    பதிலளிநீக்கு
  2. எனக்கு ஒன்னுமே புரியல,,,
    நல்லா சுத்தி சுத்தி,,,,,
    வாழ்த்துக்கள்,,,,, இதே போல் தொடர,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. உங்களுடைய சமாளிப்பு அட்டகாசம். ராசாத்தியை எப்படியோ உங்க வாய் ஜாலத்தால கட்டி போட்டுட்டீங்க

    பதிலளிநீக்கு