ஞாயிறு, 4 அக்டோபர், 2015

TR & சிம்பு : நீங்கள் தமிழன் என்றால் நாங்கள் என்ன ஆங்கிலேயரா ?

அன்புள்ள சிம்புவின் அப்பா ..

நான் சொல்லவருவதை நீங்க எடுக்ககூடாது தப்பா ..!

கடந்த பல வருடங்களாக தம்மை கவனித்துவரும் ஒருவனாக இந்த பதிவை  எழுதுகிறேன்.

திறமையில் உங்கள் குடம் "நிறை"
அதில் நாங்கள் பார்க்கவில்லை "குறை'

பின்ன இந்த பதிவு எதற்கா ?.

இதோ சொல்கிறேன், கேளுங்கள்!

எப்போது எங்கே போனாலும் ...


நான் தமிழன் .. நான் தமிழன் .. என்று ஒப்பாரி வைப்பதை நிறுத்தி கொள்ளுங்கள். நாங்கள் யாரும் உங்களை ஆங்கிலேயன் என்று சொல்லவில்லையே. நீங்கள் தமிழன் தான். அதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. நீங்கள் மீண்டும் மீண்டும் " நான் தமிழன்" - "நான் தமிழன்" என்று கூவுவது பார்க்க சகிக்க முடியவில்லை.

இதை எழுதும் நானும் தமிழன் தான். தமிழன் என்பதில் பெருமை தான். எந்த ஒரு மனிதனும் தன் இனத்தை பற்றி பாராட்டி தான் பேசுவான். விட்டு கொடுக்க மாட்டான்.

உங்களுக்கு யார் மேல் என்ன பிரச்சனை என்றாலும் உடனே.. " நான் தமிழனடா ... நான் தமிழனடா "...

இந்த பழக்கம் உங்கள் அருமை மகன் சிம்புவிடமும் வந்துள்ளது. அவரும்  எங்கே சென்றாலும் .. நான் தமிழன். நான் தமிழன் என்று சொல்லிக்கொண்டு இருகின்றார்.

நீங்க ரெண்டு பேரும் "தமிழன் தான்" நாங்க ஒத்து கொள்கின்றோம். இனிமேல் மீண்டும் மீண்டும் இப்படி பேசி கொண்டு இருந்தால், ஒருவேளை " எங்க அப்பா குதுருக்குள் இல்லை" என்ற சந்தேகம் வருகின்றது.

இந்த வியாதி உங்கள் இருவரிடம் இருந்து சற்று வெளியே வேறு வந்து உள்ளது.

வரும் நடிகர் சங்க தேர்தலில் சிம்பு அவர்கள் சரத்குமார் அணியின் சார்பில் போட்டி இருக்கின்றார். இதை பற்றி கேட்கையில் ..சரத்குமார் அவர்கள்..

சிம்பு ஒரு உண்மையான தமிழன், பிரச்சனை என்றவுடன் எங்களுடன்  சேர்ந்துவிட்டார்.

என்ன இது.. ?

இவர்கள் பக்கம் சேர்ந்தால் உடனே சிம்பு "உண்மை தமிழன்" . அப்போது எதிர் அணியில் இருப்பவர்கள் எல்லாம் " ஆங்கிலேயர்களா" ? என்ன ஒரு அர்த்தமற்ற கூற்று?

நீங்கள் தமிழர்கள் தான், அதில் சந்தேகம் இல்லை. ஆனால் நீங்கள் இருவர் மட்டும் தான் தமிழர் என்பதை போல் பேசிக்கொண்டு இருப்பது, ஒரு தமிழனுக்கு அழகில்லை.

புரிந்தால் சரி!

அது சரி, இதை எல்லாம் நான் ஏன் சொல்றேனா ?

நானும் தமிழன்.. அதுதான்...

பின் குறிப்பு :

நடிகை ராதிகா அவர்களுக்கு,

சில பேட்டிகளில் விஷால் அவர்கள் " பேசுவது புரியவில்லை" அவருக்கு தமிழ் தெரியுமா ? என்று கேட்டு கொண்டு, நடிகர் சங்கத்து பிரச்னையை
திசை திருப்ப பார்க்கின்றீர்கள். அது தவறு.

அது மட்டும் அல்லாமல், கிழக்கே போகும் ரயில்" படத்திற்காக தங்களை காண இயக்குனர் பாரதிராஜா தங்கள் இல்லத்திற்கு வந்த போது, தங்கள் இல்லத்தில் பேசப்பட்ட மொழி "சிங்களம்". இதை பாரதிராஜா  அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்.

ஒருவேளை பாரதிராஜா  மட்டும் அன்று..
அய்யய்யோ.. இந்த பிள்ளை சிங்களம் பேசுகின்றது. தமிழ் புரியாது என்று நடையை கட்டி இருந்தால் ...?

இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், நடிகர் சங்கத்தின் பிரச்சனையை விவாதியுங்கள். மொழி, சாதி, மதம் எல்லாம் இங்கே தேவை இல்லை.



10 கருத்துகள்:

  1. செம பதிவு! முக்கால் வாசி தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் இப்படிச் சொல்லியே 99% நேரத்தையும், காலத்தையும் ஓட்டிடறாங்க......

    பதிலளிநீக்கு
  2. இவங்களுக்கெல்லாம் சொன்னா விளங்குமா?

    பதிலளிநீக்கு
  3. நம்ம தமிழன்விசு சாரையை கோபபட வைச்சிட்டாங்க இந்த சரத்குமார் அணி. அப்ப அவங்க டப்பா காலிதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை தமிழா! ஒரே ஒரு குடும்பமா சேர்ந்து வருடக்கணக்கில் உட்க்கார்த்ந்து கொண்டு.
      அது மட்டும் இல்லாமல், கோடி கணக்கில் ஊழல் என்று புகார் வந்துள்ளது, அதை பத்தி ஒரு பதிலும் தராமல். ..கேட்டால்.. நலிந்த நாடக உறுபினர்கள் என்று ஒரு பதில். நலிந்த அவர்கலுக்கு தான் இவர்கள் தலைக்கு இதனை கோடி என்று கேட்டார்களோ...
      இதை நான் சொல்லவில்லை. இவர்கள் யாரிடம் கேட்டார்களோ அவர் தான் சொல்லி இருகின்றார்.
      18ம் தேதி தேர்தல், அதுவரை என்னால் முடிந்தவரை எழுதி இந்த குடும்பத்தை சங்கத்தின் தலைமையில் இருந்து நீக்க முயல்வேன்.

      நீக்கு
  4. Watched Vishal media interview and the debate in thanthi TV. He spoke with utmost clarity, made an better communication. I have got surprised to see his good communication skills.

    பதிலளிநீக்கு
  5. TR & சிம்பு மாதிரி நானும் தமிழன் தான்! நானும் தமிழன் தான்!
    தமிழன் தான்!. தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்!

    எங்க மூன்று பேரைத்தவிர எவனும் தமிழன் இல்லீங்கோ! இல்லீங்கோ! இல்லீங்கோ! இல்லீங்கோ!

    பதிலளிநீக்கு
  6. இது தோல்விபயத்தில் எல்லோரும் செய்வதுதான். ரஜினியை நேரடியாக வெல்லமுடியாத பலர் அவ்வப்போது செய்வதுதான்.

    "தமிழச்சி பால் குடித்தவண்டா" என்று பாடியவர்தானே நமது உலக நாயகன். அந்தப் பாடல் ஏதோ ஒரு ஆங்கிலேயைப் பார்த்து பாடப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. ஒரு தமிழக கிராமத்தில் சித்தரிக்கப்படிருக்கும் காட்சிக்கு இப்படி ஒரு பாட்டு. இவருக்கும் ஒரு உப்பு பாட்டில் ப்ளீஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Annamalayil
      "Yennai vaala vechadhu
      tamil paalunu" english kaaran kitta padura
      maadhiri irukkaa!!!

      நீக்கு
  7. Dmk was removed from Tamilnadu election due to their atrocities and their corruption
    and Radha ravi team also shoulld be removed from TAMIL NADU nadigar sangam
    because they have looted a trust property and they never gave satisfactory answers to the people who questioned them

    பதிலளிநீக்கு
  8. vishal a product from loyola college chennai..... he would still be a VERY MATURED PERSON ....you can see that

    பதிலளிநீக்கு