புதன், 19 நவம்பர், 2014

"பாப்பையா" அவர்களின் மோதிரக்கை குட்டு பட்டோர் சங்கம் !

விசு, டிசெம்பர்  6ம் தேதி நீ ப்ரீயாக இருப்பியா?

அலை பேசியில் கேட்டார், அருமை அண்ணன் ஆல்பி (பரதேசி அட் நியூயார்க்) என்னும் பெயரில் பதிவுலகத்தில் பிரபலமான அண்ணன், அதுமட்டும் இல்லாமல் பதிவு உலகத்தில் என் குருவும் இவரே. இவர் கேட்டு நான் எப்படி பிசி என்பேன்).

கழுதை கெட்டால் குட்டி சுவர் அண்ணே, நான் என்னைக்கு பிசி ? ப்ரீ தான், விஷயத்த சொல்லுங்க.

இங்கே நியூ யார்க்கில் ஒரு பட்டிமன்றம், நீ வந்து கலந்து கொள்ள  முடியுமா?

கரும்பு தின்ன கூலியா? கண்டிப்பாக அண்ணே. நீங்க கேட்டு மறுப்பா? அது சரி யார் நடுவர் அண்ணே? இந்தியாவா இல்லை லோக்கலா?

இன்னும் முடிவு செய்யவில்லை . அந்த பொறுப்பையும் என்னிடம் தான் கொடுத்து உள்ளார்கள்.

பிரச்சனையே இல்லை . கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய் தேடி அலைவானேன், நீங்களே பேஷா நடத்துங்கள்.

நிறைய நண்பர்களும் அப்படிதான் சொல்கின்றார்கள் விசு, ஆனால் ... ஆனால் ...

இதில என்ன  ஆனா .. ஆவனா என்று? போட்டு தாக்குங்கள்  அண்ணே . அண்ணே மோதிர கையில் குட்டு பட்ட நீங்கள் யோசிக்க  கூடாது. நடுவரா அமர்ந்து ஜமாயுங்க.

மோதிர குட்டா ? என்ன சொல்ல வர ?

அண்ணே பேராசிரியர் பாப்பையாவின் மாணவனாயிற்றே நீங்கள், அதை தான் சொல்லுகிறேன், தயங்காமல் செய்யுங்கள் !

சரி விசு ..உங்கள் அனைவரின் நம்பிக்கையும் கண்டிப்பாக காப்பேன், நன்றி . நீ கண்டிப்பாக வருவ தானே ?

(மனதில் ... இங்கு இருந்து 6000 கிலோ மீட்டர் . டைரக்ட் விமானத்தில் போனால் கூட கிட்ட தட்ட 7 மணி நேரம் ஆகும். நமக்கு இந்த  குளிர் - பனி வேற ஒத்து வராது, என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்காமல் )

கண்டிப்பாக வரேன் அண்ணே .. அது சரி , உங்கள் ஊரில் கைதேர்ந்த பேச்சாளர்கள் இருப்பார்களே அவர்கள் எல்லாரையும் விட்டு விட்டு , என்னை போய் ...?

எங்க ஊர் ஆட்கள் 3 பேர்  பேசுகின்றார்கள் . ஒரு அணிக்கு 2 பேர், நீ தான் 4வது ஆள். வெளியூர்  ஆள் ஒருவர் இருந்தா இந்த ஊர் பேச்சாளர்களுக்கு கலாய்க்க  வசதியா இருக்கும், அது தான் உன்னை சேர்த்து கொண்டோம்.

அண்ணே , உங்களுக்கு தான் என்ன பெரிய மனசு அண்ணே !

மீதி  மூன்று பேர் யார் அண்ணே,

அதில் 2 பேர் உனக்கு தெரிஞ்சவங்க தான் விசு, முதல் நபர் வக்கீல் வரதராஜன்,

அட்றா சக்கை, அருமையான பேச்சாளர் ஆயிற்றே, அடுத்து ?

அடுத்த பேச்சாளர் சுபா, நல்ல பேச்சாளர்.

அண்ணே அவங்க இப்ப எல்லாம் TV -வானொலி நிகழ்ச்சியில் கலந்து நல்லா பேசி கொண்டுவருவதாக கேள்வி.

அருமை , அடுத்து?

பேச்சாளர் வான்மதி, அவங்க பேசி நீ கேட்டு இருக்கியா?

கானொளியில் கேட்டு இருக்கேன் அண்ணே!

கடைசி ஆள் நீ, நடுவர் நான், அம்புட்டுதான்.

சரி, தலைப்பு என்ன அண்ணே,

ஒரு மாதிரியா புதுசா இருக்கணும் அதே நேரத்தில் நகைச்சுவையா இருக்கவேண்டும்.அதை எல்லாம் மனதில் வைத்து ...

"நல்லது செய்திட பொய் சொல்லலாம் - சரியே, தவறே "

அருமையான தலைப்பு அண்ணே, நான் எதில் பேசவேண்டும் !

நீயும் சுபாவும் "சரியே" , அவங்க ரெண்டு பெரும் "தவறே" .. உனக்கு சம்மதமா?

தலைப்பை கேட்டவுடன் நான்  கூட  "சரி"யேன்னு  பேச வேண்டும்ன்னு தான் அண்ணே ஆசை பட்டேன்.

நீங்க பெரிய ஆள்  அண்ணே,

என்ன சொல்ல வர?

நீங்க தேர்ந்து எடுத்த எல்லா பேச்சாளரும் பேராசிரியர் பாப்பையா அவர்களின் தலைமையில் பேசியுள்ளார்கள். இதை ஒரு அடிப்படை தகுதியா வைத்து தேர்ந்து எடுத்தீர்களா?


வரதராஜன், வான் மதி, சுபா மற்றும் ஆல்பி தியாகராஜன்  அவர்கள்  : பேராசிரியரின் பட்டிமன்றத்தில் !

அப்படி இல்லை விசு , நீங்கள் அனைவருமே நான் அறிந்தவர்கள்,  நம்  அனைவரையும் தவிர மேலும் பல அருமையான  பேச்சாளர்கள் இங்கே உள்ளனர் . இந்த முறை நமக்கு , அடுத்த முறை அவர்களுக்கு வாய்ப்பு.

அடியேன், வெளியூர் ஆள் இல்லையா, அதினால் தான் தனி படம், பேராசிரியரோடு !
அண்ணே இந்த பட்டிமன்றத்தில் என் நெடுநாள் ஆசை ஒன்று நிறைவேருது அண்ணே ,

என்னா சொல்ற ?
ஒவ்வொரு பட்டிமன்றத்திலேயும் இந்தியாவில் இருந்து பேச்சாளர் வருவார்கள், இங்கே உள்ள பேச்சாளருக்கு வாய்ப்பே இல்லாமல் போகுதே  என்று நான் நிறைய விசன படுவேன் . இந்த முறை இங்கே   வாழும் தமிழரே எல்லாவற்றையும் எடுத்து செய்வது மனதிற்கு இதமாக இருக்கின்றது .

சரி விசு , நன்றாக தயார் பண்ணி கொண்டு   வா ..

வாய்ப்பிற்கு நன்றி  அண்ணே!


பின் குறிப்பு :
நண்பர்களே, இந்த நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துங்கள், எங்களை !

20 கருத்துகள்:

  1. மிகவும் மகிழ்ச்சி...

    பிரமாதமாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்திற்கு நன்றி தனபாலன், அவர்களே.

      நீக்கு
  2. மிகவும் மசிழ்ச்சியாக உள்ளது நண்பரே! கலக்குங்கள் உங்கள் பாணியில்! வாழ்த்துக்கள். உங்கள் எல்லோருக்குமே!

    தலைப்பு மிக அருமை. நாங்களும் சரி என்பதையே ஆதரிக்கின்றோம். வள்ளுவரும் அதைத்தான் சொல்லியிருக்காரு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வள்ளுவரே சொல்லி விட்டார், பின்னர் எங்கே அப்பீல். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. உங்க பக்கம் வெற்றி வாய்ப்பு அதிகம். இருந்தாலும் நன்றாக தயார் செய்து கொள்ளவும். மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக நன்றாக தயார் செய்து செல்வேன் நண்பரே. இந்த பட்டிமன்றத்தை காண வரும் ஓவ்வொருவரும் தங்கள் பொன்னான நேரத்தை எங்களிடம் தந்து உள்ளாதால், இதை சீராக செய்யவேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது. வரவிற்கு நன்றி.

      நீக்கு
  4. நிகழ்ச்சி சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் நண்பரே! பட்டிமன்றத்தில் கலக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் நண்பரே.

    நல்ல வேலை என்னை கூப்பிடவில்லை..
    (அப்படியே கூப்பிட்டு போய்விட்டாலும் நல்லா பேசிடுவ -- Mind Voice :) )

    பதிலளிநீக்கு
  7. நான் மட்டும் என்ன பேசிட போறேன்? வெளியூர் ஆளை கூப்பிட்டு கலாய்க்கலாம்ன்னு தான் என்னை கூப்பிட்டு இருக்காள். அந்த பகுதியில் இருந்தா வாங்கோ. பேஷா ஒரு காபி சாப்பிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் விசு, Already நீங்கள் பேசியதை உங்கள் வீடியோவில் கேட்டு ரசித்து சிரித்தேன்.. மிக மிக அருமையாக timing நகைச்சுவையாக இருந்தது..
      அதனால தான் என் Mind Voice அப்படி சொல்லிச்சு.. :-)

      நீக்கு
    2. அந்த பகுதியில் இருந்தா வாங்கோ. பேஷா ஒரு காபி சாப்பிடலாம்.

      நீக்கு
  8. நண்பர் விசு அவர்களே! அய்யா பாப்பையா அவர்கள் உயர்ந்த மனம் கொண்ட பண்பாளர். இளைஞர்களை ஊக்குவிப்பதில் வெகு இளைஞர். எங்கள் தலைவர் லியோனி அவர்களுடன் பேசும் முன் அவரது “அ்ய்யா“ என்று லியோனியே பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் அய்யா பாப்பையா அவர்களுடன் நானும் ஒருமுறை நாகப்பட்டினம் விழாவில் பேசியிருக்கிறேன். மனிதர் கொஞ்சமும் இயல்புமாறாமல், புதுக்கோட்டை வரை தன் மகிழ்வுந்தில் ஏற்றிவந்து விட்டுவிட்டுப் போனார்! என் வணக்கத்தைச் சொல்லுங்கள். நீங்களும் அய்யாவோடு பேசக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி நல்லாப் பேசுங்க நல்லதையே பேசுங்கய்யா... வாழ்த்துகள் நன்றி

    பதிலளிநீக்கு
  9. நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். சரி ..
    யாருக்கு நல்லது செய்ய பொய் சொல்லலாம்?

    பதிலளிநீக்கு
  10. எனது அனைத்து தோழர்களுக்கும் அன்பார்ந்த வாழ்த்துகள், நீங்கள் அத்துணை பேச்சாளர்களும் சளைத்தவர்கள் அல்ல, உகளது திறமைகளுக்கு மேலும் ஒரு சவால், வைரக்கல்லில் மேலும் ஒரு பட்டை, மிளிரட்டும் உங்கள் வாதம். வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி .இப்படை தோற்கின் எப்படி வெல்லும் ?

    பதிலளிநீக்கு