வியாழன், 20 நவம்பர், 2014

தப்பி போன தொப்பி

சிறு வயதில் இருந்தே எனக்கு ஒரு பழக்கம்! வளரும் வயதில் ஹிந்தி நடிகர் தேவ் ஆனந்தை ரசித்து வளர்ந்தவன் ஆயிட்ரே. அவர் பொதுவாகவே அவர் படங்களில் தொப்பியை போட்டுகொண்டு வருவார், அதனால் நாமும் தொப்பி அணிந்தால் மனதில் ஒரு தேவ் ஆனந்த் என்ற ஒரு நினைப்பு வரும். அந்த சில்லறை ஆசை தான்.




தேவ் ஆனந்த்

அது முடிந்தவுடன், கிரிகெட் ஆட்டத்தில் ஜிம்மி என்று அழைக்கப்படும் மொஹிந்தர் அமர்நாத்தின் பரம விசிரியானேன். எவ்வளவோ பெரிய கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் இருக்கையில் இவர் ஏன்? நல்ல கேள்வி. கிரிகெட் சற்று சுத்தமாக இருந்த நாட்கள் அவை (இன்னமும் அப்படிதான் நினைக்கின்றேன்). இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளில் ஆட சென்று இருந்தது. மேற்கு இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர்களை யாருமே சந்திக்க தகுதி இல்லாத காலத்தில், ஒரு தலை கவசம் கூட அணியாமால் அமர்நாத் அவர்கள் விளாசி ஆடினார். அந்த ஒரு மரியாதை. அது மட்டும் அல்லாமல், உள்ளதை உள்ளது என்று சொல்வார். அந்த மரியாதை. இவரும் பொதுவாக தொப்பி அணிவார், அவரை பார்த்து வந்த பழக்கமும் கூட.

மொஹிந்தர் அமர்நாத்  
இந்த இருவரை பார்த்து வளர்ந்த பாதிப்பில் தொப்பி என்னோடு ஒட்டிகொண்டது.
மழையோ, வெயிலோ, வீட்டின் வெளியே, உள்ளே எங்கே இருந்தாலும் தொப்பி போட்டு கொண்டு பழகி விட்டது. திருமணம் ஆனவுடன் என் அம்மணிக்கு இந்த பழக்கம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. வீட்டில் நிம்மதி இருக்க வேண்டுமே, அதனால் தொப்பியை வாங்கி வாங்கி அடுக்கி வைத்து அம்மணி வெளியே சென்று இருக்கும் நேரத்தில் அவைகளை போட்டு பார்த்து ரசிப்பேன்.

பின்னாட்களில் கோல்ப் வீரரான Tiger Woods அவர்களின் தீவிர ரசிகனாகி அவர் போடும் தொப்பியின் அழகிற்கு அடிமையாகி, தொப்பி அணிவது வாழ்கையின் ஒரு அங்கம் ஆயிற்று.

Tiger Woods 



அடியேன் தான். அவர்  Tiger Woods... நானோ புளி விசுAwesome!

மூத்த மகள் 8 அல்லது 9 வயது இருக்கும் போது 

ஏன் டாடி.. இவ்வளவு தொப்பி வாங்கி வைத்து கொண்டு இருக்கிறீர்கள்?
.
அப்பாவிற்கு  தொப்பி போட ரொம்ப பிடிக்கும் மகள்.

நீங்க போட்டே நான் பார்த்தது இல்லை.

அம்மாவிற்கு பிடிக்காது, அதனால் தான், வாங்கி வாங்கி அடுக்கி வைத்து உள்ளேன். 

அப்படியா... சரி.

அன்று இரவு..

நான் தொப்பி போடா கூடாதுன்னு சொன்னேன்னு பிள்ளையிடம் 
சொன்னீர்களா?

அது வந்து.. வந்து...

உண்மைய சொல்லுங்க.

வந்து.. வந்து.. அவள் ரொம்ப விசனமா கேட்டா? அது தான் அப்படி சொன்னேன்.

அவள் விசனாமா கேட்டாளா ? இல்லை நீங்கள் விசனமா சொன்னீர்களா?

ரெண்டும் தான்.

சரி, நாளையில்இருந்து போட்டு கொள்ளுங்கள்.

அப்படியா.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்?

பிள்ளை ரொம்ப செல்லமா வந்து , அப்பா தொப்பி போடட்டும்  அம்மா, இது ஒரு தப்பா என்றாள். அது தான்.

அதை தான் நான் 8 வருஷமா கேட்டனே..அப்ப ஏன் மனதை மாற்றிக்கொள்ளவில்லை.

ஏங்க... மீண்டும் நான் தொப்பி போட கூடாதுன்னு சொல்றதுக்குள்ள இங்கே இருந்து இடத்தை காலி பண்ணுங்கள்
.
"தேங்க் யு" என்று சொல்லிவிட்டு மீண்டும் என் பழக்கத்தை ஆரம்பித்தேன்.

இங்கே அமெரிக்க நாட்டில் பொதுவாக ஒவ்வொருவரும் ஒரு விளையாட்டு அணியின் பரம ரசிகர்களாக இருப்பார்கள். நான் வாழும் இடத்தில்

"Lakers for Basket Ball, Chargers for Football & Angels for Baseball "

 இந்த மூன்றும் தான் மிகவும்  பெரிய அணி. இவர்கள் மூவரின் தொப்பியையும் வாங்கி அவர்கள் ஆடுகையில் தொப்பி போட்டு கொண்டு அழகு பார்ப்பேன்.

இப்படி நான் ஆச்சி, என் தொப்பி ஆச்சி என்று நான் இருக்கையில், என் மனைவியின் தோழிகளின் கணவர் ஒருவர் என்னை கலாய்க்க முயற்சி செய்தார். நான் அவரிடம் இரண்டு மூன்று முறை, என்னை கலாய்ப்பது உனக்கு வம்பில் முடியும் என்று எச்சரித்தேன், அவர் கேட்கவில்லை, தொடர்ந்து கலாய்க்க முயன்று கொண்டு இருந்தார்.

ஓர் நாள் நண்பர்கள் அனைவரும் ஒருவர் இல்லத்தில் அமர்ந்து ஆட்டமும் பாட்டுமாய் இருக்கையில், இவர் எல்லார் எதிரிலும் வந்து என்னை பார்த்து..

வீட்டின் உள்ளே தான் அமர்ந்து உள்ளாய்? இங்கே பனியும் இல்லை மழையும் இல்லை, வெயிலும் இல்லை... இது என்ன "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை பிடிப்பான்" கதை போல் இருகின்றதே.. என்றார்.

நான், அவரிடம்,... அற்பனாகவே இருந்தாலும் நடு இரவில் மழைவந்தால்  கொடை பிடித்து தானே ஆக வேண்டும் என்றேன்.

அவர் பதிலாக.. நீ ஏன் எப்ப பார்த்தாலும் தொப்பி போடுகின்றாய்?என்றார்

நான் பதிலாக, இது ஒரு விஷயமே இல்லை. " என் தலை என் தொப்பி" இதில் உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டேன்.

இப்போது அருகில் இருந்த நண்பர்கள் மற்றும் அவர்தம் மனைவிகளில் சிலர் இவருக்கும் சிலர் எனக்கும் சாதகமாக பேசினார்கள்.

அவர் கடைசியாக .. சரி.. என் மன ஆறுதலுக்காக கேட்கின்றேன்? நீ ஏன்  எந்நேரமும் தொப்பியோடு இருகின்றாய் என்றார்?

நண்பரே.. நான் தொப்பியோடு இருப்பதே தம்மை போன்றவர்களுக்கான மன அமைதிக்காக என்றேன்.

புரிய வில்லை, விளக்கமாக சொல் என்றார்.

நான் விளக்கமாக சொன்னால் நீ கோவித்து கொள்வாய், அதனால் உனக்கும் எனக்கும் பிரச்சனை வரும் என்றேன்.

நீ தொப்பி போடுவதில் நான் ஏன் கோவித்து கொள்வேன் ? ஒன்றும் பிரச்சனை வராது சொல் என்றார்.

நான் அருகில் இருந்த அனைவரிடமும், இவர் மீண்டும் மீண்டும் கேட்பதினால் தான் நான் சொல்ல போகிறேன். இதை கேட்டு கொண்டு இவர் கோப  பட்டால் நான் அதற்கு பொறுப்பு அல்ல என்றேன்.

அனைவரும் சரி என்று சொல்ல.. நான் நண்பரிடம்.. திருவிளையாடல் பாணியில் .. என்னை நன்றாக உற்று பார் என்று சொல்ல படியே .. என் தொப்பியை கழட்டினேன்.

வருடக்கணக்கில் தொப்பி போட்டு பாதுகாத்து வளர்த்த கூந்தல் அல்லவா.. கொத்தாக கூடையில் இருந்து ஓடி வரும் முயல் குட்டியை போல் தாவி குதித்து வெளியே வந்தது.

நான் அவரிடம் ..

இதை பார்த்தால் உன் மனது எவ்வளவு வேதனை படும்  (நண்பருக்கு இளமையிலே முழு வழுக்கை), அதனால் தான் நான் தொப்பி அணிகிறேன் என்றேன்.

நண்பர் மிகவும் கோபப்பட்டு , நீ என்னை மற்றவர்கள் எதிரில் கிண்டல் செய்தாய் என்றார்.

நானோ, அட பாவி, நான் தான் உன்னிடம் சொன்னேனே..  நீ கோப படக்கூடாது என்று! என்னை நீ  சீண்டி விட்டு இப்போது கோவித்து கொண்டால் என்ன அர்த்தம் என்று கேட்டேன்.

பின் குறிப்பு;

இங்கு நடந்த விஷயத்தை அவன் தன் மனைவியிடம் சொல்ல, அவளோ என் மனைவியிடம் சொல்ல, "நோ மோர் தொப்பி" என்ற சட்டம் மீண்டும் வர, நேற்று கூட வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தொப்பி ஒன்றை அணிந்து கண்ணாடியின் முன் நின்று அழகு பார்த்து கொண்டேன்.  

13 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாங்க தனபாலன், எந்த விஷயத்த சொல்றிங்க ? தொப்பி போடா ஆரம்பித்ததையா, இல்லை, தொப்பி போனதற்கு காரனத்தையா? அல்ல கண்ணாடி முன் நின்றதையா ?

      நீக்கு
  2. விசு தொப்பி போட அனுமதி கிடைத்து விட்டது. மகிழ்ச்சி. ஆனால் உங்களை கலாய்க்க வந்த நண்பர் உங்கள் மனைவியின் தோழியின் கணவர்தானே. ஏற்கனெவே அவரை தொப்பியை கழட்டி கூந்தலை காட்டி கிண்டல் செய்து விட்டீர்கள். :) 'தோழிகளின்' கணவர் என்று எழுதி அவரை மேலும் கிண்டல் செய்ய வேண்டுமா? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதிய நானே ரூம் போடவில்லை, அதை படித்த நீங்கள் ரூம் போட்டு யோசித்து உள்ளீர்கள். நீங்கள் சொன்ன கலாய்த்தல், தானாகவே தட்டு தடு மாறி வந்தது.
      வருகைக்கு நன்றி. விசு என்று அன்போடு அழைத்து பின்னோட்டம் இட்டுள்ளீர்கள், ஆனால் நீங்கள் யார் என்று தெரியாததால் ஒரு வருத்தம்.

      நீக்கு
  3. ரஜினிக்கு அப்புறம் நீங்க தான்
    தொப்பி தொப்பி... :)

    பதிலளிநீக்கு
  4. வாங்க நண்பா. நீங்க சொன்னதும் சரிதான்! தொப்பி தொப்பி தான்!

    பதிலளிநீக்கு
  5. எனக்கும் தேவ் ஆனந்த், அமர்நாத், favorites... தேவ் ஆனந்த் Dressing Style, mannerism.. 1983 World Cup Finals (VHS Cassette'la) பார்த்துவிட்டு அதே மாதிரி பாதி தூக்கதுல வந்து bowling போட்டு இருக்கேன்.

    நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது பாதி தூக்கத்தில் பந்து வீசுவீர்களா? ஐயா, அதற்க்கு பெயர்.. "மிலிடரி மீடியம் பேஸ்". என்னதான் சொல்லுங்க... அந்த வேகத்திலேயும் எப்படியோ அந்த பந்து வீசிலேயும் ஜெப்ரி துஜான் அவர்களை "கிளீன் போல்ட்" செய்தாரே.. அதை சொல்லுங்கோ...

      நீக்கு
    2. அதை தான் நானும் சொன்னேன்.. batsman என்னடா இப்படி வர்றான்னு நினைக்க வச்சு bowling போடுறது :-)
      (எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிருக்கும் Mind Voice)

      அந்த மாட்சில் அவர் எடுத்த எல்லா விக்கெட்டும் அருமை.. அதுவும் லாஸ்ட் விக்கெட், திரும்பி நின்னு அப்பீல் செஞ்சு ஓடி வரும் காட்சி சூப்பர்..

      நீக்கு
  6. வணக்கம்
    தொப்பி பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பெரும்பாலும் அணிவது ,இதுக்குத்தான்
    இளமையிலே முழு வழுக்கை), அதனால் தான் நான் தொப்பி அணிகிறேன் என்றேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. ஹலோ! நண்பரே !
    இன்று உலக ஹலோ தினம்.
    (21/11/2014)

    செய்தியை அறிய
    http://www.kuzhalinnisai.blogspot.com
    வருகை தந்து அறியவும்.
    நன்றி
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  8. எப்படி இந்தப் பதிவை மிஸ் பண்ணினோம்....,...

    நோ தொப்பி என்று....தொப்பிக் கனவு மீண்டும் உங்களுக்கு சொதப்பலான கதை அருமை! ஹாஹஹ்.....

    அது சரி என்ன நண்பரே! தொப்பி அணிந்து பேக் ஷாட்? ஃப்ரன்ட் ஷாட் ஏன் போடவில்லை.....தொப்பியோடு உங்கள் முதத்தைக் காட்டியிருக்கலாமே....அனுமதி கிடைக்கவில்லையா>?!!!!!ஹஹஹ்

    பதிலளிநீக்கு