வியாழன், 9 அக்டோபர், 2014

இவங்க தான் "அம்மா" மற்ற எல்லாரும் "சும்மா"!

கடந்த சில நாட்களாக எங்கே பார்த்தாலும் "அம்மா - அம்மா" என்ற சத்தம். நம் அனைவருக்கும் தெரிந்த தமிழகத்தின் அம்மையாருக்காக எழுந்த சத்தம் இது. இந்த அம்மையார் வருமானத்திற்கும் அதிகமாக  சொத்து சேர்த்த வழக்கில், குற்றம் நிரூபிக்க பட்டு இன்று சிறையில் இருக்கின்றார்.  இந்த தண்டனை இவர் செய்த தவறுக்காக.

சரி, இந்த சிறை தண்டனை மட்டும் அல்லாமால், இவர் உடனடியாக  சட்ட சபை உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து நீக்க பட்டதும் அனைவரும் அறிந்ததே. அதற்கும் மேலே ஒரு படியாக இவர் இன்னும் 10 வருடத்திற்கு தேர்தலில் நிற்க கூடாது என்று  நீதிபதி  ஒரு ஆணை இட்டார்.



செப் 27 அன்று இந்தசொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததும் காவல் துறையினர் அம்மையாரை டெல்லியில் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். உங்களில் சில பேர், இந்த வழக்கு பெங்களூரில் அல்லவா நடந்தது? அம்மையாரை பெங்களூரில் தானே சிறையில் வைத்தார்கள் என்று யோசிப்பது புரிகின்றது. கொஞ்சம் பொறுமை.

நான் சொல்வது சிறைக்கு சென்ற அம்மாவை அல்ல. இந்த தண்டனையை பெற்றது மூலம் முதல்வதர் பதவியை இழந்தார்கள் அல்லவா, அந்த காரியத்திற்கு பொறுப்பான டெல்லிவாசி அம்மையார் "லில்லி தாமஸ்" அவர்களை.

Miss. Lily Thomas

இந்த அம்மையார் கேரளாவில் பிறந்தவர். சட்டம் படித்தவர். தன் வக்கீல் வாழ்க்கையில் பல நியாயத்திற்காக போராடியவர்.  நம்மில் ஒருவர் தானே, நம்மை சுற்றி அராஜகம் பண்ணும் அரசியல்வாதிகளை பார்த்து நொந்து போனவர். இந்த நாட்டுக்கு ஏதாவது ஒரு நன்மையை செய்ய வேண்டும் என்று நினைத்தார். இவர் தான் சட்ட நிபுணர் ஆயிற்றே. கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்க்கு அலைவானேன்.

ஒரு அரசியல்வாதி எந்த ஒரு நீதிமன்றதிலாவது குற்றவாளி என்று நிரூபிக்கபட்டு 2 வருடத்திற்கும் மேல் சிறை தண்டை பெற்றால், அந்த அரசியல்வாதியை  உடனடியாக அவரின் சட்டமன்ற-நாடாளுமன்ற மற்றும் அதை சார்ந்த எந்த பதவியும்  (அமைச்சர் -முதல்வர் -பிரதமர் உட்பட)  நீக்க வேண்டும் என்று ஒரு சட்டம் இருந்தால் இந்நாட்டிற்கு எவ்வளவு பயனாக இருக்கும் என்று யோசித்தார்.

இப்படி யோசித்த இவர் இந்த நல்ல காரியத்தை தம் நட்புகளோடு பகிர்ந்து கொண்டார். இவர் சுப்ரீம் கோர்டில வழக்கு போட்டு  போராடினார். ஜூலை 10, 2013  அன்று தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பின் பெயரே "லில்லி தாமஸ்" தீர்ப்பு. இவர் கோரியதை போலவே, இரண்டு வருடத்திற்கும் மேல் சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் உடனடியாக பதவி நீக்கம் செய்ய படவேண்டும் என்று. இந்தியா வரலாற்றிலேயே பொன் எழுத்தினால் பொறிக்க வேண்டிய நாள் இது.

தம்மை  விட பெயர் பெற்ற பணக்கார சட்ட நிபுணர்கள் இருக்கையில் தமக்கு எப்படி இதை செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு இவர் கொடுத்த பதில்.

நான் சிறிய வயதில் இருந்தே இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பின்பற்றுபவள். விவிலியத்தை மீண்டும் மீண்டும் படித்தவள். அது மட்டும் இல்லாமல் மகாபாரதத்தையும் நன்கு படித்தவள்.

மகாபாரதத்தில் அர்ஜுன் கேட்ட, "நான் எதற்கு போருக்கு போக வேண்டும்"? என்ற கேள்வியை இயேசு கிறிஸ்துவிடம் கேட்டு இருந்தால், இயேசு கிறிஸ்து என்ன பதில் சொல்லி இருப்பார் என்று நினைத்தேன்,

அதற்கான பதில் விவிலியத்தில் கிடைத்தது. அந்த பதில் "கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல" என்றார்'

என் கலப்பை சட்டம் தானே, அதை படித்து அறிந்து அதை வைத்து சமூதாயர்த்திர்க்கு நல்லது செய்யாவிடில் அதுவும் பின்னிட்டு பார்ப்பது தானே, அதனால் தான் இந்த காரியத்தை செய்தேன் என்றார்.
இவரின் புண்ணியத்தினால் இந்த சட்டத்தில் தொடர்ந்து அரசியல்வாதிகள் தங்கள் பதவியை இழந்து வருகின்றனர். இவர்களில்  (லொ) லல்லு  பிரசாத் மற்றும் ஜெயலலிதா அவர்களும் உட்படுவார்கள்.

இன்னும் வரும் காலத்தில் நிறைய பேர் இந்த சட்டத்தின் மூலம் தங்கள் பதவியை இழப்பார்கள் என்று என்னும் போதே நெஞ்சு மகிழ்கின்றது.

இந்த சட்டம் மட்டும் இல்லாவிடின் தமிழ்நாட்டின் நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள். அம்மையார் உள்ளே சிறையில் இருந்து கொண்டே ஆட்சி நடத்தி கொண்டு இருப்பார். அது ஓர் மாநிலத்திற்கு என்ன ஒரு அவமானம்.

இதனால் தான் நான் சொல்கிறேன், "லில்லி தாமஸ்' அவர்கள் தான் அம்மா, மற்றவர்கள் எல்லாம் "சும்மா" .

இந்த பதிவிற்கு மற்றொரு பெயரும் வைக்கலாம்,

சொல்லியடித்த லி(கி)ல்லி தாமஸ் அம்மையார்.

பின் குறிப்பு;

இந்த மாதிரியான மேன்மக்களை மற்றவர்களுக்கு அறிமுகபடுத்துவது நம் கடமை ஆகும். தங்களால் முடிந்தால் இந்த பதிவை பகிருங்கள். அதற்கும் மேல், இந்த அம்மாவை பற்றி தங்களுக்கு தெரிந்த விஷயங்களை இங்கே நீங்களும் பதிவு செய்யுங்கள்..

வாய்மையே வெல்லும்.

www.visuawesome.com


7 கருத்துகள்:

  1. வணக்கம்
    அண்ணா.
    தேன் தொட்டவன் கையை ஒருக்கா ருசித்துப்பார்ப்பது வழக்கம்.. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேன் எடுப்பவனாயிருந்தாலும் ருசி பார்க்க கூட்டாது. அது தான் மனசாட்சி. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. ""அதற்கான பதில் விவிலியத்தில் கிடைத்தது. அந்த பதில் "கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல" என்றார்'""

    அருமையான வசனம் சார்.. உண்மையிலேயே அவர் கில்லி தாமஸ் தான்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான அர்த்தங்கள் கொண்ட வாக்கியம். அதை புரிந்து கொண்டு நடந்தார்களே, அங்கே தான் இவர்கள் ... "லில்லி தாமஸ்" "கில்லி தாமஸ்" மற்றும் பலருக்கு "வில்லி தாமஸ்" ஆனார்கள். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. இந்த செல்விக்கு ஆப்பு வைத்ததும் அந்த செல்விதானா )
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மையார் "லில்லி தாமஸ்" அவர்கள் "செல்விக்கு" எதிராக இதை செய்யவில்லை. செல்வத்தின் மேல் பேராசையுள்ளவர்களுக்கு எதிராக செய்தது இது. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. பொதுவாக பல நாடுகளில் வாழ்க்கை தரம் நன்றாக இருக்க காரணம் சட்டம்.
    நம் நாட்டில் சட்டம் சிறப்பாக இருந்தாலும் நீதிபதிகள் கண்டிப்பு காட்டுவதில்லை.
    பின் அதை நடை முறை படுத்தும் அதிகாரிகள் அலட்சியம் மிக கேடு செய்கிறது.
    நீதிபதிகள் அலட்சிய படுத்தும் அதிகாரிகளுக்கு பட்ச தண்டனை கொடுத்து வந்திருந்தால் சட்டத்தின் மேல் ஒரு மதிப்பு வந்திருக்கும் மக்களுக்கு.
    ஒரு முறை சிங்கப்பூரில் வாகனத்தை வேகத்தில் ஒட்டியதற்கு அபராதம் கட்டினேன். முதல் தடவை என்பதால் கருணை காட்டுமாறு கேட்டபோது நீங்கள் வேகமாக சென்று உள்ளீர்கள். இதை சகிக்க முடியாது. குற்றம் செய்தால் தண்டனை உண்டு, அதில் சமரசம் , கருணை கிடையாது என்று சொல்லிவிட்டார்கள்.
    ஒரு அரசின் முக்கிய கடமை மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்க செய்ய வேண்டும்.
    நம் நாட்டில் கண்டிப்பு காட்டாமல் இருப்பதால் விருப்பம் போல் இழுத்ததடித்து , பண பலம் மூலம் நீதியை வளைத்து விடுகிறார்கள். சட்டம், நீதி சரியானால் இந்தியா வல்லரசு ஆவது உண்மை.
    வல்லரசு என்றால் மக்கள் எதிர் கருத்தை ஏற்று கொள்ளும் பக்குவம் பெற்று தங்களுக்கு நன்மை தரும் செயல்களை கட்சி பேதம் பார்க்காமல் ஏற்று, மக்கள் அனைவருக்கும் உழைத்து வாழ வேலை கிடைத்து ஏற்ற தாழ்வு குறைந்து இருப்பது. வெளி நாடுகளில் சாதாரண மனிதனுக்கும் எல்லா வசதிகளும் உதவிகளும் கிடைப்பது போல் நம்நாட்டில் கிடைக்கும் போது இந்தியா முன்னேறி விட்டதாக சொல்ல முடியும்.
    இதை செய்ய சட்டம், நீதி மன்றம் தேவையான மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

    பதிலளிநீக்கு