வெள்ளி, 10 அக்டோபர், 2014

நெஞ்சு (வலி) பொறுக்குதில்லையே....இந்த...!


உடல் நலத்தை கருதி அம்மையாருக்கே ஜாமீன் கொடுக்க விண்ணப்பம்.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம், என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். அம்மையாராக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, ஒருவருக்கு உடல் நிலை சரி இல்லாவிடில் அது நாம் எல்லோரும் விசன பட வேண்டிய காரியம் தான்.

சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். சிறைசாலையில்  உள்ள அம்மையாருக்கு உடல் நிலை காரணமாக ஜாமீன் தர வேண்டும் என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி.

24 மணி நேரமும் ஒரு வேலையும் இல்லாமல் சிறையில் சும்மா இருக்கும் போதே  , உடல் நலம் குறைவாக இருக்கின்றார்களே, இவர்கள் இத்தனை நாட்களாய் எப்படி ஆட்சியை நடத்தினார்கள்.

உடல் நலம் குன்றிய ஒரு நபரால் எப்படி நல்ல முடிவுகள் எடுத்து நாட்டையும் அதன் மக்களையும் நல வழியில் கொண்டு செல்ல முடியும்.?

அப்படியே இவர்கள் வெளியே வந்தாலும், இவர்களால் தனக்கு என்று ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொள்வதே சிரமம், இதில் நாட்டு மக்களின் நலனை எப்படி இவர்களால் கவனிக்க இயலும்?

என்னை பொறுத்தவரை, அரசியல் வாதிகளுக்கு ஒரு வயது வரம்புவிதி  வைக்கவேண்டும். ஒரு சாதாரண நிறுவனத்திலோ அல்ல ஒரு அரசு பதவியிலோ இர்ப்பவர்களுக்கு ஏன் ஓய்வு கொடுத்து வீடிற்கு அனுப்புகின்றோம். ஒரு வயது தாண்டியவுடன் அவர்களால் சரியாக வேலை செய்ய முடியாது என்று தானே.பின் அரசியவாதிகளுக்கு மட்டும் ஏன் இந்த சட்டம் இல்லை.

ஒரு வேளை, அரசியல்வாதிகள் என்ன வேலை செய்து கிழிக்கின்றார்கள்? என்பதால் இருக்குமோ?

இங்கே இன்னொரு காரியம். சிறையில் அடைத்தவுடனே  நம்மூர் அரசியல்வாதிகளுக்கு உடனே வருவது "நெஞ்சு வலி". இந்த "நெஞ்சு வலி" வந்த அரசியல்வாதிகள் மீண்டும் எந்த தேர்தலிலும் நிற்க கூடாது என்று ஒரு சட்டம் வந்தால் இப்படி வரும் தற்காலிக "நெஞ்சு வலிகள்" போயே போச்சு என்று பறந்து விடும்.

நம் நாடு முன்னேற நிறைய மாற்றங்கள் வேண்டும். அதில் ஒன்று இந்த வயது பிரச்சனை. சில முன்னேறிய நாடுகளிலும் இந்த வயதிற்கான உச்சவரம்பு இல்லை. ஆனால் இந்த நாடுகளில், அந்த அரசியல்வாதிகள் தங்கள் உடல் நலம் காரணமாகவும்- வயது காராணமாகவும் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று சொல்லும் செய்திகள் அடிக்கடி வருவது உண்டு.

இந்த மாதிரி செய்திகளை நான் இதுவரை இந்தியாவில் கேட்டது இல்லை.
அப்படியே வயதாகி வேறு வலி இல்லாமல் இவ்வுலகை விட்டு பிரிய வரும் நேரத்தில் தம் பிள்ளைகளை நமக்கு பரிசாக அளித்து விட்டு போகின்றார்கள். பிள்ளைகள் பதவிக்கு வந்ததும், மீண்டும் "பழைய குருடி, கதவை திறடி" கதை தான்.

நெஞ்சு பொறுக்குதில்லையே...

பின் குறிப்பு;

எங்கேயோ எப்போதோ படித்ததில் பிடித்தது.

தலைவர்தான் கோர்ட்டு கேஸ் நடக்கும் போதே  3 மணி நேரமா "நெஞ்சு வலி - நெஞ்சு வலின்னு" கத்துனாராமே, அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருந்தால் பிழைத்து இருப்பார் அல்லவா? ஏன் அவரை அழைத்து செல்லவில்லை.

அவர் சத்தம் போட்டது என்னமோ உண்மை தான். ஆனால் வழக்கம் போல் "அக்டிங்" கொடுக்கின்றார் என்று அங்கு இருந்தவர்கள் நினைத்து விட்டார்கள்.

www.visuawesome.com

 

5 கருத்துகள்:

  1. கடைசி ஜோக் மிகவும் அருமை சார், என்ன அம்மா எதிர்ப்பு போஸ்டா போட்றீங்க....!! :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அம்மா எதிர்ப்பு பதிவுகள் அல்ல jeyaseelan. அநியாயத்திற்கு எதிர்ப்பான பதிவுகள் . இப்ப அம்மையாரை பற்றி தானே நிறைய செய்திகள் வருகின்றது. அதனால் தான் இப்படி எழுத வேண்டிய அவசியம். இன்னும் சில நாட்களில் செல்ல மருமகன் ராபர்ட் வாட்ரா, மற்றும் நம்மூரை சேர்ந்த சில அரசியவாதிகளை பற்றி எழுதவரும் என்று நினைக்கின்றேன் . வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. இதே காரணத்தை சொல்லி தற்போது ஜாமீன் வாங்கி வெளியே வந்த ஹரியானா அரசியல்வாதி ஓம்பிரகாஷ் சவுதாலா தேர்தல் பிரச்சாரம் செய்ததை கண்டு நீதிமன்றம் அவரைக் கண்டித்துடனல்லாது ஜெயிலுக்கு திரும்பி வரவும் உத்தரவிட்டுள்ளது

    பதிலளிநீக்கு
  3. பெண்ணிற்கு இரங்க வேண்டாமா? அவர்களுக்கு ஜாமீன் வேண்டும். அதற்கு இது ஒன்றுதான் காரணம். சட்டத்தில், அக்டோபரில் அடைத்தால் ஜாமீன் கேட்கலாம், தலை நரைக்கவில்லையெனில் ஜாமீன் கேட்கலாம், முகம் சிவப்பா இருந்தா ஜாமீன் கேட்கலாம் என்றெல்லாம் இருந்தால், அந்தக் காரணத்தைக் காட்டியிருப்பார்கள். என்ன இருந்தாலும், மக்கள் தேர்ந்தெடுத்த தலைவிக்கு விதி விலக்கு கொடுக்க வேண்டாமா?

    பதிலளிநீக்கு