புதன், 1 அக்டோபர், 2014

மானஸ்தி சரிதாவும், மானங்கெட்ட தமிழ் அரசியல் வாதிகளும்...

கை குழந்தையை வீட்டில் விட்டு விட்டு கடும் பயிற்சியில் ஈடுபட்டேன். எதற்கு. ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கத்தை பெற்று என் நாட்டிற்கு பெருமை சேர்க்க. வருட கணக்கில் நான் செய்த அதனை தியாகங்களும் ஒரே ஒரு நிமிடத்தில் சில விளையாட்டு அதிகாரிகளின் சுயநலத்தினாலும் - தவறான எண்ணத்தினாலும் சுக்கு நூறாகிவிட்டது என்று சரிதா தேவி தேம்பி தேம்பி அழுவதை பார்த்தவுடன் நம் இமையிலும் ஈரம் வந்தது.



என்ன ஒரு பெண். 

ஆசிய விளையாட்டுகள் தென் கொரிய நாட்டில் நடக்கின்றது, இதில் குத்து சண்டையில் பங்கு பெற வருட கணக்கில் பல தியாகங்கள்  (இந்தியா விளையாட்டு வீராங்கனைகள் நம் விளையாட்டு துறை அதிகாரிகளிடம் படும் பாடு தான் நமக்கு தெரியுமே) செய்து, தன்குடும்பத்தையும், கை குழந்தையும் மறந்து இதில் பங்கேற்க சென்ற சரிதா தேவிக்கு நியாயம் கிடைக்கவில்லை.
என்ன ஒரு மானம்

அரை இறுதி போட்டியில் தென் கொரிய வீராங்கனையோடு மோதிய இவர், சிறப்பாக சண்டையிட்டு போட்டி முடிந்தவுடன் வெற்றி அறிவிப்பார்கள் என்று காத்து இருக்கையில், அந்த அறிவிப்பு இவருக்கு எதிராக வந்தது.  போட்டிகள் நடக்கும் இடம் தென் கொரியா அல்லவா? அதனால் நடுவர்கள் தென் கொரிய வீராங்கனையை வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள்.
                                                      என்ன ஒரு சுய மரியாதை
இந்த போட்டியை பார்த்த அனைத்து ரசிகர்கள் (தென் கொரியா ரசிகர்களையும் சேர்த்து தான்) இந்த முடிவை கேட்டவுடன் சத்தமிட்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து கொண்டார்கள். இந்த போட்டியை தொலை காட்சிக்காக வர்ணித்த நிபுணர், தாம் பார்த்த போட்டி வேறு, நடுவர்கள் பார்த்த போட்டி வேறு போல தெரிங்கின்றது என்றார். அந்த முடிவு அவ்வளவு அநியாயமாக இருந்தது.

                                                          என்ன ஒரு தேச பற்று 

இந்த முடிவு வந்ததும் சரிதா, இதை ஆட்சேபிக்க வேண்டும் என்று நம் "செல்ல குட்டி வெல்ல கட்டி இந்திய அதிகாரிகளிடம்" சொல்ல அவர்கள் அதில் தங்களுக்கு என்ன லாபமும் இல்லை என்று அறிந்து கொண்டு, வழக்கம் போல் கை விரித்து விட்டனர். அங்கே இருந்த மற்றொரு வீராங்கனை மேரியின் (மேரி பிறகு நடந்த ஆட்டத்தில் தங்கம் பெற்றார் என்பது குறிப்பிட தக்கது)  கணவரிடமும் மற்றும் ஒருவரிடமும் கடன் வாங்கி 500$ கட்டி இந்த முடிவை எதிர்த்து புகார் செய்தார். விளையாட்டு விதி முறை படி, ஒரு நாட்டின் விளையாட்டு சங்கம் தான் இந்த புகார் கொடுக்க முடியும், ஒரு தனி விளையாட்டு வீரர்-வீராங்கனை இதை செய்ய முடியாது என்று இவர் புகார் நிராகரிக்க பட்டது. என்னே ஒரு ஏமாற்று வேலை.


இதை தொடர்ந்து அரை இறுதியில் தோல்வி அடைந்ததால் சரிதாவிற்கு வெண்கல பதக்கம் என்று சொல்லி பரிசளிப்பு விழாவிற்கு இவர் அழைக்க பட்டார். அங்கே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கம் அளிக்க சில அதிகாரிகள் வந்தனர். இந்த முழு  நிகழ்ச்சியிலேயும் சரிதா அவர்கள் தேம்பி தேம்பி அழுது கொண்டு இருப்பதை பார்க்கையில் மனம் பதறியது.

வெண்கல பரிசு இந்தியாவின் சரிதாவிற்கு என்று ஒலி பெருக்கியில் ஒலிக்க, தென் கொரியா நாட்டை சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்த மெடலை சரிதாவின் கழுத்தில் அணிவிக்க வந்தார். அருகே வந்த அவரிடம் அதை தன் கழுத்தில் அணிய அனுமதிக்காமல் கையிலேயே பெற்று கொண்டு, தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். பிறகு, மற்றவர்களுக்கு பதக்கம் வழங்கிய பின் தங்கம் பெற்றவரின் தேசிய கீதம் தொடர்ந்தது.

அதன் பின் ....தான் சரிதா, தான் ஒரு மானஸ்தி என்பதை உலகிற்கு எடுத்து காட்டினார்.  எல்லாம் முடிந்தவுடன், நேராக தென் கொரியா வீராங்கனையிடம் சென்று, தன் கையில் இருந்த வெண்கல பதக்கத்தை, இதையும் நீயே வைத்து கொள் என்று அவர் கழுத்தில் மாட்டி விட்டு அழுது கொண்டே தன் இடத்தை நோக்கி சென்றார்.

 தன் கழுத்தில் இருந்த வெண்கலத்தை அந்த தென் கொரியா வீராங்கனை அவிழ்த்து மீண்டும் வந்த சரிதாவிடம் கொடுக்க அவர் அதை வாங்கி அங்கே அந்த பரிசு மேடையிலே வைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

இது முடிந்த சில மணி நேரங்களில் பல்வேறு விளையாட்டு துறைகள் இவர் செய்தது சரி இல்லை என்றும் இவரை சர்வதேச போட்டியில் இருந்து விளக்க வேண்டும் என்றும் அறிவிப்பு விட்டு கொண்டே இருக்கின்றன. இவ்வாறு செய்து விட்டீர்களே, இதன் பின் விளைவை கொஞ்சம் யோசித்து  பார்த்து இருக்கலாமே என்று ஒருவர் கேட்டதற்கு, சரிதா அவர்கள், பின் விளைவுகள் எனக்கு நன்றாக தெரியும். என் நாட்டை சேர்ந்த அதிகாரிகள் எனக்கு, தம்மில் ஒருவருக்கு இழைக்க பட்ட அநியாயத்தை தடி கேட்க்காவிடில், வேறு என்ன செய்ய முடியும், என்று அழுது கொண்டே சொன்னார். 

பிறகு,  ஒரு பெண்மைக்கே, தாய்மைக்கே உரிய பாணியில், நான் நேராக என் இல்லத்திற்கு சென்று  என் கை குழந்தையை தூக்கி கொஞ்சும் போது தான் இந்த கவலை, ஏமாற்றம் என்னிடம் இருந்து போகும் என்றார். 

என்ன ஒரு பெண். என்ன ஒரு சுய மரியாதை, என்ன ஒரு தேச பற்று , என்ன ஒரு மானம். 

இப்போது நம் தமிழ் அரசியல்வாதிகளிடம் வருவோம்....இங்கே சொல்வதற்கு ஒன்றும் இல்லை, படத்தை நீங்களே பாருங்கள்.


என்ன ஒரு ஆள் 

என்ன ஒரு மானம்

   என்ன ஒரு சுய மரியாதை

  என்ன ஒரு தேச பற்று 

வந்தே மாதரம்...

www.visuawesome.com

3 கருத்துகள்: