புதன், 1 அக்டோபர், 2014

நான் ஒரு முட்டாளுங்க....


ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட பின் நம் தமிழ் சினிமாகாரர்கள், ஜெயலலிதாவிற்கு ஆதரவாக பேசி கொண்டு வருவது, " நான் ஒரு முட்டாளுங்க" என்று அவர்களை பற்றி அவர்களே பாடி கொண்டு வருவது போல் தெரிகிறது.



இந்த ஆதரவை காட்டுவதற்காக இவர்கள் ஒரு உண்ணாவிரதம்  இருந்தார்கள் என்பதை கேள்வி பட்டதும், மனதில் ஒரு சிறிய வேதனை. மக்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கும் திரைப்பட துறையில் இருக்கும் இவர்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லையா?

தங்களின் சுயநலத்திற்க்காக எதுவும் செய்ய தயார் ஆக இருக்கின்றார்களே என்று நினைத்து... சரி என்னதான் செய்கின்றார்கள் என்று சற்று தளம் சென்று விசாரித்தேன்.

முதல் கோணல்... முற்றும் கோணல் என்ற சொல்லுக்கேற்ப.... இந்த உண்ணாவிரதம் போகும் வழியில் " ஒரு மனிதன் தெய்வத்திற்கு எப்படி தண்டனை தர முடியும்"? என்ற சுவரொட்டி. சரி,  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் என்று நினைத்து வேறு என்ன என்ன முட்டாள்தனங்கள் நடகின்றது என்று நோட்டமிட்டேன்.

அங்கே உண்ணாவிரதத்தில் சில தெரிந்த முகங்கள் இருந்தன. இதில் பெரிய முட்டாள் ஒரு துணை நடிகர் (பெயர் தெரியவில்லை, ஆனால் இவர் படையப்பா படத்தில்.. படையப்பா...புத்துல கை விட்டியே , பாம்பு கடிக்கல, என்று கேட்ப்பார்). இந்த நடிகரை யாராவது உடனடியாக மனநிலைய மருத்துவமனைக்கு அழைத்து செல்வது நலம். இவர் இந்த தீர்ப்பை "கள்ளதீர்ப்பு" என்கிறார்.

நீதிமன்றத்தின் - நீதிபதியின் தீர்ப்பை யாராவது ஏளனம் செய்தால், இந்திய சட்ட திட்டத்தின் படி அது குற்றம் என்று இவருக்கு யாராவது எடுத்து சொல்லுங்கள். சுப்பிரமணி சுவாமி மட்டும் இந்த நிகழ்ச்சியை பார்த்து இருந்தால், இங்கே அமர்ந்து இருந்த பாதி பேர் இன்னும் சில நாட்களில் கம்பி என்ன கூடும்.

பிறகு நடிகர் விவேக். சின்ன கலைவாணர் என்ற பெயர் எடுத்தவர். இவரை புகழின் உச்சிக்கு எடுத்து சென்றதே இவரின், பகுத்தறிவு நிறைந்த நகைச்சுவை. இந்த நிகழ்ச்சியிலும் சரி, இதற்க்கு முன்பாக நடந்த சில நிகழ்ச்சியிலும் சரி, இவர் ஜெயலலிதா அவர்களை போற்றுவதை பார்த்தல், முகம் சுளிக்கும் படி உள்ளது.
 

(இந்த உண்ணாவிரதத்தை பற்றி முன் கூட்டியே தெரிந்து இருந்தால் நான் இந்த கருப்பு T-Shirt ஐ  இவர்கள் எல்லாருக்கும் அனுப்பி வைத்து இருப்பேன்.)

மற்றும் சிலர், சிறிது விஷயம் தெரிந்தவர்கள். இவர்கள் கூறியது:
"நாங்கள் இங்கே தீர்ப்பை எதிர்த்து அமரவில்லை, எங்கள் வருத்தத்தை காட்டி கொள்ள தான் அமர்ந்து உள்ளோம்".  பிழைக்க  தெரிந்த பிள்ளைகள். அம்மையார்  வெளிய வந்தா அதற்க்கு ஒரு பாராட்டு விழா என்று தயார் பண்ணி உங்க கஷ்டத்தில் நாங்களும் உங்களோடு இருந்தோம்னு காட்டிக்கலாம். இவங்க வெளிய வராவிட்டால், அவர்கள் பண்ணது தப்பா - சரியா என்று எங்களுக்கு தெரியாது, ஆனால் எங்கள் வருத்தத்தை தான் காட்டிகொண்டோம், என்று அடுத்த தலைவர்கள் காலில் விழுந்து விடுவோம்   .

அட முட்டாள்களே, வருத்தத்தை காட்டி கொள்ள இங்கே என்ன " படிக்காத மேதை காமராஜையா" கைது பண்ணி உள்ளார்கள். அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததற்காக தானே இந்த அம்மையாரை கைது செய்து இருகின்றார்கள்.

அடுத்த முட்டாள்கள் கூறுவது நம்மை , உண்மையாகவே  இவர்கள் இவ்வளவு பெரிய முட்டாள்களா, இல்லை முட்டாள்கள் போல நடிக்கின்றார்களா என்று நினைக்க தூண்டும். இவர்கள் கூறுவது:

ஜெயலலிதா அவர்கள் அரசியல் வருவதற்கு முன்னால் எவ்வளவு பெரிய நடிகை. அரசியல் உள்ளே வருவதற்கு முன்பே அவர்களிடம்  கோடி கணக்கில் சொத்து இருந்தது. இது எல்லாம் பொய் வழக்கு!

அட அப்பரண்டிஸ்களே, இந்த அம்மையார் அரசியல் உள்ளே நுழைந்து , முதல் முதலாக வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அதில் இவர்கள் சொத்து விவரத்தை பார்த்தீர்கள் என்றால், அதில் கொஞ்சம் பணமும், கொஞ்சம் கடனும் தான் காட்ட பட்டு இருக்கின்றது. அதையெல்லாம் பார்த்து விட்டு தான் சுவாமி இந்த வழக்கை  போட்டார் (எப்போதுமே சுப்பிரமணி சுவாமியிடம் நண்பனாக இருப்பது நல்லது, அவரை முறைத்து கொண்டால் நமக்கு பால் தான்). அதனால் இது முன்னே இருந்த பணம் என்று சொல்வது எல்லாம், உங்களை மிக பெரிய முட்டாள் என்று காட்டும்.

உங்கள் வேலை சினிமா எடுப்பது. அதை ஒழுங்காக எடுங்கள்,
கூரை ஏறி கோழி புடிக்க வக்கு இல்ல....

பின்குறிப்பு:
1993  வரை தமிழ் சினிமாவை ரசித்து பார்த்து வந்தவன் நான். அதற்க்கு பின் 4 அல்லது 5 படம் தான் பார்த்து இருப்பேன். சில நேரங்களில், என்னை நானே, என்ன விசு...? இவ்வளவு தீவிர ரசிகனாகிய நீ என் இந்த படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டாய் என்ற கேள்வி கேட்டு, பதில் தேடி அலைவேன். ஒரு வேலை இது தான் பதிலோ..

சட்டியில் இருப்பது  அகப்பையிலே...

www.visuawesome.com

2 கருத்துகள்:

  1. நடிகர்கல் எல்லாம் செம்ம்மையா நடிக்குராய்ங்க:-))).
    இருக்குர பேரையும் இப்படி எல்லாம் போராட்டம் செய்து கெடுத்துக்கரீங்கலே.

    ***

    நீதிமன்றத்தின் - நீதிபதியின் தீர்ப்பை யாராவது ஏளனம் செய்தால், இந்திய சட்ட திட்டத்தின் படி அது குற்றம் என்று இவருக்கு யாராவது எடுத்து சொல்லுங்கள். சுப்பிரமணி சுவாமி மட்டும் இந்த நிகழ்ச்சியை பார்த்து இருந்தால், இங்கே அமர்ந்து இருந்த பாதி பேர் இன்னும் சில நாட்களில் கம்பி என்ன கூடும்.// ஹாஹா செம

    பதிலளிநீக்கு